இந்தியா
இந்தியாவில் 94 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 41,810 பேர் பாதிப்பு!


இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கி வருவதாகத் தரவுகள் கூறுகின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,910 நபர்களுக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதுவரை இந்தியாவில் 93,92,919 நபர்களை கொரோனா தொற்று பாதித்துள்ளது. கொரோனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,36,696 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 496 நபர்கள் இறந்துள்ளனர்.
88,02,267 நபர்கள் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 4,43,956 நபர்கள் கொரோனா தொற்றுக்கு எதிரான சிகிச்சையைப் பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் சனிக்கிழமை 1,430 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரிஅ மொத்தம் 7,79,046 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. அதில் 4,70,670 ஆண்கள், 3,08,343 பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளவர்கள் எண்ணிக்கை 7,56,279 ஆக உள்ளது.
இந்தியா
கொரோனா தடுப்பூசி குறித்த இந்த 5 வதந்திகளை நம்பாதீர்கள்..!- அரசாங்கம்


கொரோனா தடுப்பூசி குறித்துப் பல விதமான வதந்திகளும் கட்டுக் கதைகளும் மக்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனும் சில விளக்கங்களை வெளியிட்டுள்ளார்.
- கொரோனா தடுப்பூசி என்பது மற்ற உலக நாடுகளை விட இந்தியாவில் மிகவும் செயல் திறன் குறைந்ததாகத் தான் உள்ளது எனக் கூறுவது கட்டுக்கதை. உண்மையில் இந்தியாவில் வழங்கப்பட உள்ள கொரோனா தடுப்பூசி மிகவும் வீரியமும் துல்லியமும் நிறைந்தது.
- புதிதாக இரண்டாம் கட்டமாகப் பரவும் கொரோனாவுக்கு கோவிட்-19 க்கு என தயார் செய்த தடுப்பூசி பயன் தராது எனச் சொல்வது கட்டுக்கதை. உண்மையில், கொரோனா தடுப்பூசி புதியதாகப் பரவும் கொரோனாவைக் கட்டுப்படுத்தாது என்பதற்கான எந்த ஆதரமும் கிடையாது.
- கொரோனா தடுப்பூசி ஒரு ஆண் அல்லது பெண்ணின் குழந்தை பிறக்க வைக்கும் திறனைக் குறைக்கும் என்பது கட்டுக்கதை. உண்மையில், அப்படி எதுவும் நடக்காது. கொரோனா தடுப்பூசி கருவுறுதலுக்கு எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாது.
- கொரோனா தடுப்பூசி போட்டால் மீண்டும் காய்ச்சல் வரும் என்பது கட்டுக்கதை. உண்மையில் கொரோனா தடுப்பூசி போட்டால் ஊசி போட்ட வலி வரும். பொதுவாக ஊசி போட்டாலே ஒரு சிலருக்கு காய்ச்சல் வரும். அது போன்ற காய்ச்சல் மட்டுமே கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கும் வரும்.
- கொரோனாவுக்கு எதிராகப் பணியாற்றியவர்களுக்கே முதலில் தடுப்பூசி வழங்கப்படும் என்பது இல்லை. உண்மையில் முதல் நிலை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை காட்டலாம் என்றே அரசு சொல்லியது.
இந்தியா
போலியோ சொட்டு மருந்து எப்போது வழங்கப்படும்? வெளியானது புதிய அறிவிப்பு!


நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31-ம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக ஜனவரி-17-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்க உள்ளதா, போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி 2021, ஜனவரி 31-ம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக ஜனவரி 30-ம் தேதி இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைக்கிறார் என்றும் தெரிவித்துள்ளனர்.
2018-ம் ஆண்டு வரை ஆண்டுக்கு இரண்டு முறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 2019-ம் ஆண்டு முதல் அது ஒரு முறையாகக் குறைக்கப்பட்டது. குறைப்புக்கு இந்தியா போலியா பதிப்பு இல்லாத நாடாக மாறி வருவதாகக் கூறுகின்றன.
இந்தியாவில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவசமாகப் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. கூடுதலாக வேண்டும் என்றால் தனியார் மருத்துவமனைகளில் கடனம் செலுத்தி போலியோ சொட்டு மருந்தைக் குழந்தைகளுக்குப் போட்டுக்கொள்ளலாம்.
இந்தியா
‘எம்.ஜி.ஆர் வழியில் ராகுல் காந்தி… மக்களோடு மக்களாக அமர்ந்து லன்ச்’- வைரலாகும் வீடியோ


மதுரையில் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களோடு மக்களாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பொங்கல் பண்டிகையின் போது ஆண்டாண்டு காலமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி மதுரை அவனியாபுரத்தில் தொடங்கியது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பார்ப்பதற்கு என்ற் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரும் கேரள எம்.பி-யுமான ராகுல் காந்தி இன்று மதுரை வந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் கண்டு ரசித்தார்.
Significant gesture by @RahulGandhi.. #PoliticalPongal #Pongal pic.twitter.com/kO9PSWDReM
— Pramod Madhav♠️ (@PramodMadhav6) January 14, 2021
காலை வேளை ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவு பெற்றவுடன் மதுரையில் உள்ள தென்பலஞ்சி பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். அங்கு பொங்கல் விழா முடிந்த உடன் அப்பகுதி மக்கள் உடன் இணைந்து மதிய உணவு சாப்பிட்டார். மதிய உணவை மக்களுடன் மக்களாக அமர்ந்து உணவு சாப்பிட்ட வீடியோ காட்சி சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விருந்தினராக வந்த ராகுலை தம் வீட்டு பொங்கல் விருந்துக்கு அழைத்திட்ட பெண்கள் கூட்டம்!
கோலாகலம் பூண்ட தென்பலஞ்சி கிராமம் #RahulinTamizhVanakkam #VanakkamRahulGandhi pic.twitter.com/tkZrGUss8r— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) January 14, 2021
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
-
ஆரோக்கியம்2 days ago
வெந்தய ‘டீ’ நன்மைகள் தெரியுமா?
-
விமர்சனம்2 days ago
நல்ல மார்க் வாங்கி இருக்க வேண்டிய மாஸ்டர் பார்டரில் பாஸ் ஆகியிருக்கிறார்… மாஸ்டர் விமர்சனம்…!
-
ஆரோக்கியம்2 days ago
திராட்சையில் இவ்வளவு நன்மைகளா? இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே?