இந்தியா
இந்தியாவில் ஒரே நாளில் 4.4 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை; 48,661 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!


இந்தியாவில் சனிக்கிழமை ஒரே நாளில் 4.4 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் 48,661 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுவரை இந்தியாவில் 1,62,91,331 நபர்களுக்கு கொரோனா சோதனை செய்து, அதில் 13,85,522 பேருக்கு கொரோனா உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். 8,85,576 நபர்கள் சிகிச்சை பெற்றுக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
32,063 நபர்கள் இறந்துள்ளனர். 4,67,882 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியா
தமிழர்களை மோடி இரண்டாம் தர மக்களாக கருதுகிறார்: கோவையில் ராகுல்காந்தி பரப்புரை.!!!


பிரதமர் மோடி தமிழர்களை இரண்டாம் தர மக்களாக தான் பார்க்கிறார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தேர்தல் பரப்புரைக்காக இன்று தமிழகம் வந்துள்ளார். அப்போது பேசிய அவர், ‘எனக்கு தமிழகம் வருவது எப்போது பெருமையாக இருக்கும். இந்தியாவில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. தொழில்துறையில் முன்னோடியாக உள்ளது.
இந்தியா என்பது பல மொழி, பல கலாச்சாரம், வாழ்க்கை முறையை உள்ளடக்கியது. ஆனால், தற்போது ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்ற முயற்சியை மத்திய அரசு எடுக்கிறது. அந்த முயற்சியை எடுத்து நாம் போராட வேண்டும். தமிழக மக்களை பிரதமர் மோடி இரண்டாம் தர மக்களாகவே பார்க்கிறார்.
எல்லா துறைகளிலும் பெருமை பெற்ற தமிழ்நாடு தற்போது அந்த பெருமைகளை இழந்து வருகிறது. வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. புதிதாக தொழில் முனைவோர், மாணவர்கள், இளைஞர்கள், விவாயிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்காக மட்டுமே பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். அவர்களுக்கு அடிமைகளாக மக்களை மாற்ற விரும்புகிறார்’
இவ்வாறு ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியா
சிவில் சர்வீஸ் தேர்வு கடைசி வாய்ப்பை விட்டவர்களுக்கு மறுதேர்வு கிடையாது: மத்திய அரசு


சிவில் சர்வீஸ் தேர்வு எழுத கடைசி வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு மறுதேர்வு நடத்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. இடஒதுக்கீடு, வயதிற்கு ஏற்ப ஒருவர் குறிப்பிட்ட அளவில் சிவில் சர்வீஸ் தேர்வை மீண்டும் மீண்டும் எழுத வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெற்ற போது பலருக்கு அது கடைசி வாய்ப்பாக இருந்தது. ஆனாலும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிலர் அந்தத் தேர்வை எழுத முடியாமல் போயினர். இதனைச் சுட்டிக்காட்டி ரச்சனா சிங் என்ற சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டிருந்தனர்.
இதற்கு விளக்கம் அளித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார், சிவில் சர்வீஸ் தேர்வின் கடைசி வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு மறுதேர்வு நடத்தும் எண்ணம் இல்லை என்றும் இதுகுறித்து மனுதாக்கல் செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை விசாரணையை 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்தியா
மேற்கு வங்கத்தில் பரபரப்பு! அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் அடுத்தடுத்து ராஜினாமா!!


மேற்கு வங்கத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வரும் நிகழ்வுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் மம்தா பாணர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மேலும், அங்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், திரிணாமுல் கட்சியில் இருந்து அடுத்தடுத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். அதில் சிலர் நேரடியாக பாஜகவிற்கு சென்று தங்களை இணைத்துக் கொண்டனர்.
கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி சுவேந்து அதிகாரி தனது எம்எல்ஏக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இவர் மம்தா பாணர்ஜிக்கு நெருக்கமாக பணியாற்றி வந்தார். ஆனால், அவரே பாஜகவில் இணைந்தது மம்தாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து கடந்த 5-ம் தேதி அம்மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் லஷ்மி ரத்தன் சுக்லா ராஜினாமா செய்துவிட்டார். அதே போல், சாந்திபூர் தொகுதி எம்எல்ஏவும் திடீரென ராஜினாமா செய்து, பாஜகவில் இணைந்துவிட்டார்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மம்தா பாணர்ஜி சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்வது கட்சியில் பிளவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதற்கு அமித்ஷா தான் முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
-
வேலைவாய்ப்பு2 days ago
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வேலைவாய்ப்பு!
-
விமர்சனம்2 days ago
இன்னும் எத்தனை படங்கள் இப்படி?… புலிக்குத்தி பாண்டி விமர்சனம்
-
வேலைவாய்ப்பு2 days ago
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!