இந்தியா
ஆளுநர் எழுதிய காதல் கடிதம்: குமாரசாமி மரண கலாய்!


கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் முதல்வர் குமாரசாமிக்கு அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலா இரண்டுமுறை கடிதம் எழுதி பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தினார். ஆனால் குமாரசாமி அதனை காதல் கடிதம் என சட்டசபையில் குறிப்பிட்டு கலாய்த்துள்ளார்.
கர்நாடக அரசியலில் சில எம்எல்ஏக்களின் ராஜினாமாவால் அரசு கவிழும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால் அதனை காப்பாற்றிக்கொள்ள குமாரசாமி பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சட்டசபையில் இரண்டு நாட்களாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல் விவாதம் செய்து காலத்தை ஓட்டுகிறார்.
இந்நிலையில் முதல்நாள் ஆளுநர் வஜுபாய் வாலா சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி இருந்தார். ஆனால் சபாநாயகர் அதனை ஏற்கவில்லை. இதனையடுத்து இரண்டு முறை காலக்கெடு விதித்து இரண்டு கடிதங்களை கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு அனுப்பி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டார் ஆளுநர்.
ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாத குமார்சாமி ஆளுநரின் கடிதத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் கர்நாடக சட்டசபையில் நேற்று பேசிய குமாரசாமி, ஆளுநரிடமிருந்து அரசுக்கு வந்திருக்கும் இரண்டாவது காதல் கடிதம் இதுதான என அந்த கடிதத்தை படித்தார்.
மேலும், சதித்திட்டங்கள் குறித்து பலரும் எனக்கு எச்சரித்து அமெரிக்கா செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தினர். ஆளுநர் மீது எனக்கு மரியாதையுண்டு. ஆனால் அவரின் இரண்டாம் காதல் கடிதம்தான் எனக்கு வருத்தமளிக்கிறது. குதிரை பேரம் குறித்து 10 நாட்களுக்கு முன்புதான் அவருக்கு தெரியுமா?
அவையில் இன்னும் 25-26 எம்.எல்.ஏக்கள் பேச வேண்டியிருக்கிறது. அவர்கள் அவைக்கு வர சபாநாயகர் இன்னும் கால அவகாசம் அளிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து சபாநாயகரே முடிவெடுக்கட்டும். டெல்லியால் எனக்கு உத்தரவிட முடியாது. ஆளுநர் அனுப்பிய கடிதத்திலிருந்து மட்டும் என்னை காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.
இந்தியா
ஆக்சிஜன் சிலிண்டர்களை கூகுளில் தேடும் நெட்டிசன்கள்!


இதுவரை ஆக்சிஜன் சிலிண்டர் என்பதையே பலரும் கேள்விப்பட்டிராத நிலையில் தற்போது திடீரென ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து பல நெட்டிசன்கள் ஆக்சிஜன் சிலிண்டர் என்றால் என்ன? என்பது குறித்து கூகுளில் தேடி வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.30 லட்சத்தை தாண்டிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அவர்களுக்கு செலுத்துவதற்கான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கூகுள் தேடுபொறியில் ஆக்சிஜன் தொடர்பான தகவல்களை இந்தியர்கள் தேடி வருவதாக கூகுள் நிறுவனத்தின் ஹிஸ்டரி தெரிகிறது. வரலாறு காணாத ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதை மத்திய அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.
இந்தியா
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பொது எதிரியை அழிக்க உதவ தயார்: சீனா அறிவிப்பு


கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மற்றும் சீனா மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான பொது எதிரியை வீழ்த்த இந்தியாவுக்கு உதவ தயார் என சீனா அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இந்தியா சீனாவுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் மனித இனத்திற்கே எதிரியாக இருப்பது கொரோனா வைரஸ். மனித குலத்தின் இந்த பொது எதிரியான கொரோனா வைரஸை ஒழிக்க உலக நாடுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏராளமான உயிர்ப்பலிகள் ஏற்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருவது பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் அதே நேரத்தில் சிங்கப்பூர், வளைகுடா நாடுகள் ஆகியவற்றிடம் இருந்து ஆக்சிஜன் வாங்க இந்தியா திட்டமிட்டு உள்ளதாகவும் சீனாவின் இந்த அறிவிப்பு குறித்து இந்தியா பரிசீலனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா
மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: ஈபிஎஸ்-க்கு பதிலாக கலந்து கொண்டது யார்?


இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை செய்து வருகிறார். கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களுடன் அவர் காணொளி மூலம் ஆலோசனை செய்து கொண்டு வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து அறிவுரைகளை வழங்கி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழகத்தின் சார்பில் இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பதிலாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் ஈபிஎஸ் அவர்களுக்கு சமீபத்தில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3.30 லட்சத்திற்கும் மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உள்ளதால் உடனடியாக கொரோனாவால் பாதிக்கப்படும் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிரிக்கெட்2 days ago
வெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா?
-
தமிழ்நாடு1 day ago
இந்தியாவில் பரவும் மும்முறை உருமாறிய கொரோனா: மருத்துவர்கள் எச்சரிக்கை!
-
வேலைவாய்ப்பு2 days ago
ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு!