Connect with us

இந்தியா

ஊக்க மருந்தின் பெயர்கூட எனக்குத் தெரியாது: கோமதி மாரிமுத்து வேதனை!

Published

on

ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்க பதக்கம் வென்ற தமிழக வீராங்கணை கோமதி மாரிமுத்து ஊக்க மருந்து பயன்படுத்தியதாக தடகள சம்மேளனம் இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் கோமதி மாரிமுத்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து கடந்த மாதம் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தார். அனைவரும் அவரை தூக்கி வைத்து கொண்டாடினர். பத்திரிக்கைகளில் முதன்மை செய்தியானார் கோமதி மாரிமுத்து.

ஆனால் அவர் தற்போது ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளார். தடைசெய்யப்பட்ட ஸ்டெராய்டு போன்ற மருந்துகளை பயன்படுத்தியதற்கான முகாந்திரம் இருப்பதால் கோமதிக்கு இடைக்கால தடை விதித்துள்ளது இந்திய தடகள சம்மேளனம்.

இந்திய தடகள சம்மேளனம் இதுகுறித்து அறிவித்துள்ளதாவது, ஆசிய போட்டியில் போது ஊக்கமருந்து சோதனைக்காக கோமதியின் சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் நான்ட்ரோலோன் எனும் ஸ்டெராய்ட் மருந்தை அவர் எடுத்துக்கொண்டது உறுதியாகியுள்ளது. மார்ச் மாதம் நடந்த பெடரேஷன் கோப்பை, தோஹாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஆகிய இரண்டிலும் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் கோமதி மாரிமுத்து தோல்வி அடைந்துள்ளார் இதனையடுத்து அவருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்தகட்ட சோதனைக்காக அவரது பி சாம்பிள் கேட்கப்பட்டுள்ளது. அந்த சோதனையிலும் அவர் தோல்வியடைந்தால், 4 ஆண்டுகள் தடை அவருக்கு விதிக்கப்படும். இந்நிலையில் கோமதி மாரிமுத்து வீடியோ விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதாகக் கூறுகிறார்கள், அந்த மருந்தின் பெயர்கூட எனக்குத் தெரியாது.

நான் பி சேம்பிள் கொடுப்பதற்காக கத்தார் வந்தேன், முடிவிற்காகக் காத்திருக்கிறேன். இதன் முடிவில், எனக்கு எந்த பிரச்சினையும் வராது என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். நான் ஊக்க மருந்து எடுக்காதபோது, அதனை எடுத்துக்கொண்டதாகச் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் ஊக்க மருத்தினைப் பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிக்கும்வரை, நான் இதை விடமாட்டேன். கண்டிப்பாக ஜெயித்துக் காட்டுவேன் என்றார் கோமதி மாரிமுத்து.

இந்தியா

தங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா?

Published

on

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் படத்தில் ஒரு காட்சி வரும் தஞ்சை மாவட்ட விவசாய நிலங்களின் பெரும்பகுதியை வெட்டுக்கிளிகள் கூட்டம் அழிப்பது போன்று. அதனால் விவசாயிகள் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாவது போன்றும். அது வெறும் கற்பனை அல்ல. தற்போது உலக நாடுகளில் மட்டுமல்லாது இந்தியாவின் ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட பல்வேறு வட மாநில விவசாய நிலங்களை இந்த வெட்டுக்கிளிகள் அழித்து வருகின்றன. பார்க்க சாதுவாக இருக்கும் வெட்டுக் கிளிகளால் இன்று உலக நாடுகள் பல பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன. கொரோனாவைக் கூட கட்டுப்படுத்திவிடலாம் போல. ஆனால், இந்த வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதாக இருக்காது என்ற நிலையில் இன்று உலகம் இருக்கிறது.

வெட்டுக்கிளிகளால் விவசாய நிலம் பாதிக்கப்படுவது என்பது எகிப்தின் பிரமிடுகள் தோன்றிய காலம் தொட்டே நடந்து வருகிறது. வெட்டிக் கிளிகளின் கூட்டம் ஒரே நேரத்தில் பூமியின் 20 % நிலப்பரப்பை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. உலக மக்களின் வாழ்வாதாரத்தை 10 %க்கும் அதிகமாக பாதிக்கிறது. குறைந்தது ஒரு நாளைக்கு 200 டன் தாவரங்களை உணவாக எடுத்துகொள்கிறது என்றால் அதன் தீவிரத்தை ஆபத்தை உணர்ந்துகொள்ளுங்கள். அப்படியானால் ஒரு கூட்டத்தில் எத்தனை வெட்டுக்கிளிகள் இருக்கும் என்பதை யூகித்துக்கொள்ளுங்கள்.

வெட்டுக் கிளிகள் வெறும் தாவரங்களை மட்டும் உண்பவை அல்ல. அவை தங்களைத் தாங்களே உண்ணும் ஒரு மாமிச உண்ணிகளும் கூடத்தான். கேட்கவே கொஞ்சம் அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருக்கிறது இல்லையா? ஆனால், அது தான் உண்மை. வெட்டுக் கிளிகளின் கூட்டம் ஒரே நேரத்தில் இரு வேறு நாடுகளில் உள்ள கூட்டங்களோடு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும் அளவுக்கு திறன் வாய்ந்தவை. அப்படி தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளாமல் அவைகளால் இனப்பெருக்கத்தை செய்ய முடியாது என்கிறது ஒரு ஆய்வு.

வெட்டுக் கிளிகளின் கூட்டங்களை கட்டுப்படுத்த சில வழிமுறைகள் சில ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

வெட்டுக்கிளிகள் இருக்கும் பகுதிகளில் விமானங்களை தாழ்வாகப் பறக்க விட்டு அந்த சத்தத்தின் மூலம் அவற்றை அழிக்க முடியும் என்கிறது ஒரு ஆய்வு. வெட்டுக்கிளிகளுக்குள் இருக்கும் தொடர்பை அழிக்கும் வகையில் அவை பறக்கும் இடங்களில் டயர்களை எறிப்பது, பள்ளங்கள் தோண்டுவது போன்ற வழிமுறைகளையும் பின்பற்றலாம். ஆனால், இந்த முயற்சிகள் அவற்றைக் கட்டுப்படுத்த ஓரளவே பயன்படும் என்கின்றன.பூச்சிக்கொல்லிகளை தெளித்து அவற்றை தடுக்கலாம் என்றாலும் இது சுற்றுச்சூழலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதுவும் ஆபத்தான ஒன்றுதான்.

இவையெல்லாம் இருக்க இன்று தமிழக அரசும் வெட்டுக்கிளிகள் தமிழகத்தில் வராமல் இருக்க வந்தால் தடுப்பது குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பயிர்ப்பாதுகாப்பு மருந்தான வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லிகளை தெளிக்கலாம். மாலத்தியான் மருந்தினை தெளிப்பான்கள் மற்றும் பெரிய டிராக்டர்கள் மற்றும் தீயணைப்பு இயந்திரங்கள் மூலம் தெளிக்கலாம். உயிரியல் கட்டுப்பாட்டு காரணியான பெட்டாரைசியன் அனிசோபிலே என்ற எதிர் உயிர் பூஞ்சாணத்தினை தெளித்து கட்டுப்படுத்தலாம், வெட்டுக்கிளிகளை உண்ணும் கோழி உள்ளிட்ட பறவைகள் மற்றும் விலங்குகளையும் கட்டுப்பாட்டு பணியில் பயன்படுத்தலாம். அரசு அனுமதி மூலம் விமானம் மூலம் பூச்சிக் கொல்லிகளை விமானம் மூலம் தெளிக்கலாம் என பல்வேறு அறிவுரைகளை இன்று தமிழக அரசும் வெளியிட்டுள்ளது.

ஆனால், இந்த வெட்டுக்கிளிக் கூட்டங்களை கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதானதாக தெரியவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே இதற்கு ஒரு சிறந்த மருத்து ஆகும். ஆனால், மூன்றே மூன்று வெட்டுக்கிளிகள் மட்டுமே ஒரு கோடிக்கணக்கான வெட்டிக்கிளிகள் அடங்கிய கூட்டத்தை உருவாக்கப் போதுமானது என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்….

வெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களை இயற்கை முறையில் காப்பது எப்படி?

Continue Reading

இந்தியா

பேராபத்தில் மகாராஷ்டிரா, ஒரே நாளில் 97 பேர் கொரோனாவால் பலி!

Published

on

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 97 கொரோனாவால் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. செவ்வாய்க்கிழமை வரை மகாராஷ்டிராவில் 54,758 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதியதாக 2,091 நபர்களுக்கு ஒரே நாளில் கொரொனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

97 நபர்கள் இறந்துள்ளனர். அதனால் மகாராஷ்டிராவின் கொரோனா இறப்பு எண்ணிக்கை 1,792 ஆக அதிகரித்துள்ளது. இப்படியே சென்றால் அமெரிக்கா போல இந்தியாவும் கொரோனாவால் அதிக இறப்புகளைச் சந்திக்குமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.

மகாராஷ்டிராவில் இதுவரை 3,90,170 நபர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Continue Reading

இந்தியா

வெட்டுக்கிளிகளை பூச்சிக்கொல்லிகள் மூலம் அழிக்க முயலும் விவசாயிகள்!

Published

on

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விளை பயிர்களை வெட்டுக்கிளிகள் வேகமாக அழித்து வருகின்றன.

வெட்டுக்கிளிகளை எதிர்த்துப் போராடத் துணிந்துள்ள விவசாயிகள் சிலர், மரங்கள், செடிகள் மீது பூச்சிக்கொல்லி மருந்துகளை அடித்து வருகின்றனர்.

பூச்சிக்கொல்லி மருந்துகளை அளவுக்கு அடிப்பதன் மூலம் உணவு தானியங்கள், காய்கறிகள் அதிகளவில் நச்சுத்தன்மை அடையும். அதனால் ஏற்படும் விளைவுகள் வெட்டுக்கிளிகளால் ஏற்படும் உணவுப் பஞ்சத்தை விட கொடுமையானதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சென்ற வாரம் மூன்று கிலோ மீட்டர் தொலைவிலான வெட்டுக்கிளி கூட்டம் உத்திரப்பிரதசேத்தை நோக்கி வருவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களை இயற்கை முறையில் காப்பது எப்படி?

Continue Reading
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன்
தினபலன்3 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (29/05/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்3 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/05/2020)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன்
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (28/05/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/05/2020)

இந்தியா1 day ago

தங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா?

இந்தியா2 days ago

பேராபத்தில் மகாராஷ்டிரா, ஒரே நாளில் 97 பேர் கொரோனாவால் பலி!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன்
தினபலன்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (27/05/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/05/2020)

வணிகம்2 days ago

டிவிஎஸ்-ல் சம்பளம் கட்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்!

இந்தியா2 days ago

வெட்டுக்கிளிகளை பூச்சிக்கொல்லிகள் மூலம் அழிக்க முயலும் விவசாயிகள்!

வேலை வாய்ப்பு7 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா10 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா9 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு10 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா11 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு9 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு10 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு4 weeks ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வீடியோ செய்திகள்3 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்3 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்3 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்3 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்3 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்3 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

வீடியோ செய்திகள்3 months ago

ரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்

வீடியோ செய்திகள்3 months ago

கொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு

வீடியோ செய்திகள்3 months ago

எண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.

வீடியோ செய்திகள்3 months ago

கட்சி ஆரம்பிச்சிடலாமா? : வடிவேலு சரவெடி

Trending

%d bloggers like this: