இந்தியா
காங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார்.. அதிர்ச்சியில் தொண்டர்கள்!


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் இன்று காலை காலமானார்.
கொரோனா தொற்று காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டே சிகிச்சை பலனின்றி கலாமானார்.
அகமது பட்டேல், சென்ற மாதம் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு, டெல்லி அருகில் உள்ள குருகாம் பகுதியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இவரின் உடல் உறுப்புகள் படிப்படியாகச் செயல் இழந்து, உடல் நிலை மோசம் அடைந்தது.
இந்நிலையில் இன்று காலை அகமது பட்டேல் கலாமானார். இவரது இறப்பை அவரது மகன் ஃபைசல் பட்டேல் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
இவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய அரசியல் ஆலோசகராகவும் இருந்துவந்தார்.
அகமது பட்டேலின் இறப்புக்குக் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இறங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா
குடிபோதையில் 11 வயது மகனை கொளுத்திய தந்தை! உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதி!!


ஹைதராபாத்தில் குடிபோதையில் பெற்ற மகனையே கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள குஹட்பல்லியைச் சேர்ந்த பாலு என்பவர் கடந்த ஞாயிறன்று வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது 11 வயது மகன் சரண் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தான். கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் ஆன்லைன் வகுப்புகள் மட்டும் அவனுக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில், சரண் சரியாக படிக்கவில்லை என்று கூறி பெற்ற மகன் என்றும் பாராமல் அடித்து உதைத்துள்ளார். பின்பு பீடியும் தீப்பெட்டியும் வாங்கி வரச் சொல்லியுள்ளார். சரணும் பயத்துடன் தந்தை கேட்டதை வாங்கிக் கொடுத்துள்ளான்.
அதன்பிறகும் ஆத்திரம் குறையாமல், குடிபோதையில் மகன் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். சரணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சரணை மீட்டு 60 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பாலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தியா
உத்தர பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர் பலி!


உத்தர பிரதேச மாநிலத்தில், 46 வயதுடைய சுகாதார ஊழியருக்கு நேற்று முன் தினம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்ட 24 மணி நேரத்திற்குள் அந்த நபர் இறந்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
உத்தர பிரதேசத்தின் மொராதாபாத்தில் இருக்கும் மருத்துவமனையில் வார்டு பாயாக பணி செய்து வந்தவர் மகிபால் சிங். அவருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இது குறித்து மொராதாபாத் தலைமை மருத்து அதிகாரி எம்.சி.கார்க் கூறுகையில், ‘சனிக்கிழமை அவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பின்னர், ஞாயிற்றுக் கிழமை மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. நெஞ்சு வலியும் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் இறந்துள்ளார். அவரது மரணத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை செய்து வருகிறோம். விரைவில் பிரேதப் பரிசோதனை முடிவு எங்கள் கைகளுக்கு வரும். அவர் தடுப்பூசி காரணமாக இறந்துள்ளதாக எங்களுக்குத் தோன்றவில்லை’ என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில் மகிபால் சிங்கின் மகன், ‘தடுப்பூசி போடுவதற்கு முன்னரே என் தந்தையின் உடல் நிலை சற்று குறைபாடுகள் உடன் தான் இருந்தது. ஆனால் தடுப்பூசி போட்ட பின்னர் அவர் அதிக உடல் உபாதைகளை அனுபவித்தார்’ என்று அதிர்ச்சிகர தகவலைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி போட்ட நிறைய பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கொரோனா தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் பயன்பாட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள இரண்டு தடுப்பூசிகளில் கோவாக்ஸின் என்கிற தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் கிளப்பப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் தடுப்பூசி போட்டதால் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என்கிற செய்தி மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா
கொரோனா தடுப்பூசியால் 447 பேருக்கு பக்கவிளைவுகள்: மத்திய அரசு


நாடு முழுவதும் இரண்டு நாட்கள் போடப்பட்ட தடுப்பூசியால் 447 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த சனியன்று தொடங்கியது. மாநில சுகாதாரத்துறை, தனியார் மருத்துவமனைகள் மூலமாக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. முதல் நாளில் 1,91,181 பேருக்கு போடப்பட்டன.
நேற்று இரண்டாவது நாள் முடிவில் மொத்தம் 2,07,229 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த இரண்டு நாள் போடப்பட்ட தடுப்பூசியில் 447 பேருக்கு தலைவலி, வாந்தி, மயக்கம், உடல் சோர்வு, காய்ச்சல், குமட்டல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டன. 447 பேரில் 3 பேர் மட்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா தடுப்பூசியில் உள்ள குறைகளை களையும் பொருட்டாக மருத்துவ விஞ்ஞானிகள் ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.