இந்தியா
ஓடிடியில் வரும் படங்கள், நிகழ்ச்சிகளையும் தணிக்கை செய்ய வேண்டும்: தணிக்கை துறைத் தலைவர்


ஓடிடி தளங்களையும் ஒழுங்குபடுத்தி தணிக்கை செய்ய வேண்டும் என்று தணிக்கைத் துறைத் தலைவர் ப்ரஸூன் ஜோஷி கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஓடிடி தளங்களில் வரும் திரைப்படங்களும், தணிக்கைத் துறையின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
அப்போது தணிக்கைத் துறை தலைவர் ஜோஷி் பேசுகையில், ஓடிடியில் வரும் திரைப்படங்கள் திரையரங்குகளில் அப்படியே வருகின்றன. எனவே, ஓடிடி படங்கள் திரைக்கு வரும் போது அவற்றையும் தணிக்கை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், ஓடிடியில் படம் பார்க்கும் போது அது ஒருவருக்கு மட்டும் சென்றடைகிறது, திரையரங்குகளில் பல ரசிகர்கள் படம் பார்ப்பதால் இரண்டுக்கும் இடையேயான விதிகள் மாறுபடுவதாக தெரிவித்தார்.
கூட்டத்தில் 2013, 2016 ஆம் ஆண்டு குழுக்கள் பரிந்துரைத்த பரிந்துரைகளின் மீத எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தணி்க்கை துறை தலைவர் ஜோஷி பதில் பேச முடியாமல், பின்னர் பதிலளிப்பதாக தெரிவித்தார்.
இந்தியா
‘வெற்றிவேல்…வீரவேல்…’- கோவையில் முழங்கிய பிரதமர் மோடி!


கோவையில் பாஜக பரப்புரையின் போது பிரதமர் மோடி ‘வெற்றிவேல் வீரவேல்’ என முழங்கி உள்ளார்.
கோவையில் தமிழகத்துக்கான நலத்திட்டங்களை முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் முன்னிலையில் இன்று மோடி தொடங்கி வைத்தார். அதன் பின்னர் கோவையில் நடந்த பாஜக பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். வெற்றி வேல்… வீர வேல்… என கூறி பரப்புரையை தொடங்கிய மோடி, “மத்திய அரசின் திட்டத்தால் கோவையில் சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகளவில் பயனடைந்துள்ளன. சிறு வியாபாரிகள், விவசாயிகளுக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ். தமிழர் திருவிழாக்கள் உலகளவில் புகழ்பெற்றவை. பொறியியல், மருத்துவம் போன்ற துறை படிப்புகளை உள்ளூர் மொழிகளிலேயே பயிற்றுவிக்க வேண்டும். இதன் மூலம் உள்ளூர் இளைஞர்கள் அதிகப் பயன் பெறுவர். தமிழகத்தில் சிறு, குறு தொழில்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
கோவையில் மட்டும் சுமார் 25 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மத்திய அரசின் திட்டம் மூலம் பயன்பெற்றுள்ளன. ஜவுளித்துறையை மேம்படுத்தவும் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தவும் மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது” என்றார்.
இந்தியா
நடுக்கடலில் குதித்த ராகுல் காந்தி… மீனவர்களுடன் உற்சாகம்- வைரல் வீடியோ


அரபிக் கடலின் நடுவின் அசால்டாக ராகுல் காந்தி டைவ் அடித்து மீனவர்களுடன் உற்சாகமாக இருந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
கேரளா எம்.பி ராகுல் காந்தி நேற்று அதிகாலை 5 மணி அளவில் ரகசியமாக கொல்லம் சென்று அங்கிருந்து வெறும் 2 போலீஸ்காரர்கள் உடன் மீனவர்கள் படை சூழ கடல் பயணத்துக்குக் கிளம்பி உள்ளார். படகில் இருந்த மீனவர் ஒருவர் கடலில் குதிப்பதைப் பார்த்து உடனடியாகத் தானும் கடலில் குதித்துவிட்டார். இதைப் பார்த்து அங்கிருந்த போலீஸ்காரர்கள் பதறிவிட்டார்களாம்.
ஆனால், ராகுலின் பாதுகாவலர்கள் உடன் இருந்ததால் எதுவும் சொல்லவில்லையாம். மீனவர்களுடன் இணைந்து மீன் பிடித்தல், வலை விரித்தல், நடுக்கடலில் நீந்துதல் என உற்சாகமாகிவிட்டுள்ளார் ராகுல். நேற்றே இந்த செய்தி வைரல் ஆன போதும் இன்று ராகுல் காந்தி பகிர்ந்துள்ள வீடியோ வைரல் ஆகி உள்ளது.
View this post on Instagram
இந்தியா
நிரவ் மோடியை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு..!


கடன் மோசடி வழக்கில் இந்தியாவிலிருந்து தப்பித்து லண்டனில் வசித்து வரும் நிரவ் மோடியை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ள நிரவ் மோடி இந்தியாவிலிருந்து தப்பித்து லண்டன் சென்று வசித்து வருகிறார். இந்திய அமலாக்கத்துறையினர், சிபிஐ சார்பில் கடந்த சில ஆண்டுகளாகவே நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தச் சொல்லி வழக்குத் தொடர்ந்து வருகிறது இந்தியா.
இந்நிலையில் இந்தியா அளித்துள்ள சான்றுகளும் வேண்டுகோளும் ஏற்புடையதாக இருப்பதால் நிரவ் மோடி நாடு கடத்தப்படலாம் என லண்டன் நீதிமன்ற நீதிபதி சாமுவேல் கூஸ் அறிவித்துள்ளார். நாடு கடத்த அனுமதி கிடைத்த போதும் ஆவணப் பணிகளை எல்லாம் நிறைவு செய்து நிரவ் மோடி இந்தியா வர இன்னும் மாதங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.
காரணம், இதே போல் தான் விஜய் மல்லையாவுக்கும் நாடு கடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அதற்கான நடைமுறைகள் இன்னும் முடியவில்லை.
-
இந்தியா1 day ago
மின்னல் வேகத்தில் பரவும் உருமாறிய கொரோனா; 10 மாநிலங்களுக்கு வல்லுநர் குழுவை அனுப்பிய மத்திய அரசு!
-
கிரிக்கெட்1 day ago
100வது டெஸ்டில் விளையாடும் இஷாந்த் சர்மா; இந்திய அணியில் அவர் முதன்முறை தேர்வானபோது கோலி செய்த காரியம்
-
தமிழ் பஞ்சாங்கம்2 days ago
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/02/2021)
-
கிரிக்கெட்1 day ago
‘நீ என்னனை கைவிட்டுட்ட இஷாந்த்!’- கடைசி டெஸ்டில் தோனியின் அவலநிலை; வெளிவந்த ரகசியம்