Connect with us

இந்தியா

காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்கா மூக்கை நுழைப்பது ஏன்? டிரம்பின் பேச்சுக்கு இந்தியா மறுப்பு!

Published

on

இந்தியா, பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக காஷ்மீர் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்ததாக டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்கா சென்றபோது அவரை வெள்ளை மாளிகையில் வரவேற்றுப்பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் பிரச்சனை நீண்ட காலமாக உள்ளது. இந்தியா எங்களது நெருங்கிய நட்பு நாடு. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜி20 மாநாட்டில் நானும் இந்திய பிரதமர் மோடியும் காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது, மோடி என்னிடம், நீங்கள் இந்த பிரச்சினையை மீடியேட்டராக இருந்து தீர்க்க விரும்புகிறீர்களா? நடுவராக இருந்து தீர்க்க விரும்புகிறீர்களா? என்று கேட்டார். நான் இரு நாடுகளுக்கும் இடையிலான மீடியேட்டராகவே இருந்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரும்புகிறேன் என்று பேசியினார் டிரம்ப். டிரம்பின் இந்த பேச்சு இந்தியா, பாகிஸ்தான் இரு நாட்டிலும் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளார் இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார். அதில், பிரதமர் மோடி சார்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக எந்த வேண்டுகோளும் வைக்கப்படவில்லை. காஷ்மீர் பிரச்சினை இரு நாடுகளின் பிரச்சினை. இந்தியாவும் பாகிஸ்தானும் இரு தரப்புப் பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு காணவேண்டும் என்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு.

எல்லையில் நடக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தையும் நடக்கும். எனவே காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நபரின் தலையீடு தேவையற்றது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என இந்தியா மறுத்துள்ளது. இந்நிலையில் இதற்கு டிரம்ப் என்ன பதில் அளிப்பார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா

ஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்குத் தடையா? உண்மை என்ன?

Published

on

ஆர்ஓ தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யப்படும் தண்ணீரில் கரைந்துள்ள திடப்பொருளின் மொத்த அளவு (TDS-Total Dissolved Solids)500 மில்லி கிராமுக்கும் குறைவாக இருந்தால், அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

சாதாரண தண்ணீரில் சுண்ணாம்பு, மெக்னீஷியம், பாஸ்பேட், இரும்பு, பைகார்பனேட் போன்ற பல்வேறு தாது சத்துக்கள் கரைந்து இருக்கும். இந்த தாதுகளின் கலப்படம் தண்ணீரில் 500 மில்லி கிராமுக்கும் குறைவாக இருக்கக் கூடாது. இவ்வாறு குறைவாக இருந்தால், அந்த தண்ணீரைக் குடிப்பவர்களின் உடல் எழும்பு உறுதித் தன்மை இழத்தல் போன்ற உடல்நல பிரிச்னைகள் ஏற்படும். எனவே இந்த அளவுக்குத் தண்ணீரைச் சுத்திகரிப்பு செய்யும் ஆர்ஓ இயந்திரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு முதலில் இந்த உத்தரவைச் செயல்படுத்த, கருத்துக் கணிப்பு போன்றவை நடத்த வேண்டும். எனவே 4 மாதங்கள் வரை கால அவகாசம் கேட்டது. ஆனால் தற்போது 2 மாதங்களுக்குள் இந்த உத்தரவைப் பிறப்பிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

மறுபக்கம் ஆர்ஓ சுத்திகரிப்பு இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தை நாடின. ஆனால் முதலில் இது குறித்து மத்திய அமைச்சகத்திடம் அணுகுமாறு உச்ச நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது.

எனவே ஏப்ரல் மாதத்திற்குள் மத்திய அரசு எந்த ஆர்ஓ இயந்திரங்களுக்குத் தடை என அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Continue Reading

இந்தியா

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் சீராய்வு மனு தள்ளுபடி!

Published

on

நிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை வழங்கியதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

2012-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஒரு கூட்ட பாலியல் பலாத்காரத்தில் நிர்பயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இறந்தார்.

இந்த வழக்கில் வினய் சர்மா, முகேஷ் உள்ளிட்ட நால்வருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராவு மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்,

சீராய்வு மனு என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, பானுமதி, அஷோக் பூஷன் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வுக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

எனவே நிர்பயா வழக்கு சம்மந்தப்பட்ட 4 பேருக்கும் ஜனவரி 22-ம் தேது தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது.

Continue Reading

இந்தியா

இனி ஓட்டு போட ஸ்மார்ட்போன் போதும்; புதிய சேவை அறிமுகம் செய்த தேர்தல் ஆணையம்!

Published

on

டெல்லி சட்ட சபை தேர்தல் வரும் ஃபிப்ரவரி 8-ம் தேதி நடைபெற உள்ளது.

பொதுவாக வாக்குச்சாவடிகளில் ஓட்டு போட வாக்கு சீட்டு கட்டாயம். ஆனால் முதல் முறையாக வாக்கு சீட்டை மறந்து சென்று விட்டால், ஸ்மார்ட்போன் மூலம் ஓட்டு போடும் முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

எனவே ஓட்டு போட செல்லும் போது வாக்குச் சீட்டை மறந்து சென்று விட்டால், தேர்தல் ஆணையம், வாக்கு மையங்களில் வைத்துள்ள க்யூ-ஆர் குறியீட்டை ஸ்கான் செய்து வாக்கு சீட்டு பெறலாம் என்று தெரிவித்துள்ளது.

முதல் முறையாக இந்த சேவை டெல்லி தேர்தலில் 11 தொகுதிகளில் மட்டும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
வீடியோ செய்திகள்11 hours ago

சிறுமியின் வயிற்றிலிருந்து அரை கிலோ தலைமுடி அகற்றம்

வீடியோ செய்திகள்11 hours ago

விவசாயிகளை விரட்டி அடித்த அரசு ஊழியர்..! நெல் கொள்முதலில் கமிஷன்

வீடியோ செய்திகள்11 hours ago

8 வருட கனவு..ஆட்டோவை கார்போல் மாற்றிய இளைஞர்!

வீடியோ செய்திகள்11 hours ago

சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளார், வில்லன் விஜய் சேதுபதி

வீடியோ செய்திகள்11 hours ago

106 பேர் உயிரை பறித்த கொரோனா வைரஸ்

வீடியோ செய்திகள்11 hours ago

காற்று மாசை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்த இளம்பெண் பொறியாளர்

வீடியோ செய்திகள்12 hours ago

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்காக ரூ 120 கோடி?

வீடியோ செய்திகள்12 hours ago

பாகிஸ்தானில் பெண்ணை கடத்தி திருமணம்

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்16 hours ago

இன்றைய (28/01/2020) தமிழ் பஞ்சாங்கம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்17 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய (28/01/2020) தினபலன்கள்!

வேலை வாய்ப்பு3 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா6 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா5 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு5 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா7 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

வேலை வாய்ப்பு5 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு6 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு6 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்5 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்6 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

வீடியோ செய்திகள்11 hours ago

சிறுமியின் வயிற்றிலிருந்து அரை கிலோ தலைமுடி அகற்றம்

வீடியோ செய்திகள்11 hours ago

விவசாயிகளை விரட்டி அடித்த அரசு ஊழியர்..! நெல் கொள்முதலில் கமிஷன்

வீடியோ செய்திகள்11 hours ago

8 வருட கனவு..ஆட்டோவை கார்போல் மாற்றிய இளைஞர்!

வீடியோ செய்திகள்11 hours ago

சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளார், வில்லன் விஜய் சேதுபதி

வீடியோ செய்திகள்11 hours ago

காற்று மாசை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்த இளம்பெண் பொறியாளர்

வீடியோ செய்திகள்12 hours ago

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்காக ரூ 120 கோடி?

வீடியோ செய்திகள்12 hours ago

பாகிஸ்தானில் பெண்ணை கடத்தி திருமணம்

வீடியோ செய்திகள்1 day ago

காணி இனத்தை சேர்ந்த 2 பெண்கள் முதல்முறையாக வனக்காவலர் பணிக்கு தேர்வு..!

வீடியோ செய்திகள்1 day ago

சிஏஏவுக்கு எதிராக கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இணைந்து போராட்டம்

வணிகம்1 week ago

அல்வா வழங்கி பட்ஜெட் அச்சிடும் பணியைத் தொடக்கி வைத்தார் நிர்மலா சீதாராமன்!

Trending