இந்தியா
கொரோனா கிடுகிடு: மகாராஷ்டிராவைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் லாக்டவுன்!


இந்திய அளவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுப் பரவல் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.
இதனால் கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்றுப் பரவல் உச்சத்தில் உள்ளது. இதனால் அம்மாநில அரசு சில நாட்களுக்கு முன்னர் அங்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு உத்தரவுகளை அமல்படுத்தியது. தற்போது கர்நாடக மாநிலமும் பல்வேறு லாக்டவுன் கட்டுப்பாடுகளை அமல் செய்துள்ளது.
இதன்படி பள்ளிக்கு வந்து கொண்டிருந்த 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜிம், நீச்சல் குளங்கள் மூடப்படுகின்றன. ஆன்மிக வழிபாட்டுத் தலங்களில் எந்தவிதக் கூட்டமும் அனுமதிக்கப்படாது. போராட்டங்கள், பேரணிகளுக்கும் அனுமதி கிடையாது. திரையரங்குகளில், பார்களில், உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் ஏப்ரரல் 6 ஆம் தேதி நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவுக்குப் பின்னர் பல்வவேறு கட்டுப்பாடுகள் அமல் செய்யப்படலாம் எனத் தகவல்.
இந்தியா
தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு


தங்க நகை கடைகளில் ஹால்மார்க் முத்திரை குத்தி விற்பனை செய்துவரும் நிலையில் வரும் ஜூன் மாதம் முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் லீனா நந்தன் அவர்கள் ’தங்க நகைகளுக்கு ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்று கூறியுள்ளார். நகைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் தங்க ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலக்கெடுவை ஏற்கனவே பலமுறை ஒத்தி போடப்பட்டு உள்ளதாகவும், எனவே ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை இட வேண்டும் என்றும் கூறினார்.
சென்னை உள்பட பல நகரங்களில் இன்னும் ஒரு சில கடைகளில் ஹால்மார்க் முத்திரை இல்லாமல் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பதும் ஆனால் ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து அவ்வாறு இனிமேல் விற்பனை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் ஹால்மார்க் முத்திரை இடப்பட்டு உள்ளதா என்பதை அறிந்து தங்க நகைகளை வாங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஜூன் 1 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு தங்க நகை கடைக்காரர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா
அதிகரிக்கும் கொரோனா: மேலும் ஒரு மாநிலத்தில் இரவுநேர ஊரடங்கு!


தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மாநிலமான ராஜஸ்தான் மாநிலத்திலும் நாளை முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் நாளை முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும், இரவு நேர ஊரடங்கின்போது யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திரையரங்குகள் நீச்சல் குளங்கள் ஆகியவை முற்றிலும் மூடப்பட வேண்டும் என்றும் உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி என்றும் பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி என்றும் ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா
இந்தியாவில் இரண்டு லட்சத்தை நெருங்கியது ஒருநாள் கொரோனா பாதிப்பு!


இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் கடந்த சில நாட்களாக தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நேற்று மட்டும் 1.85 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இந்த நிலையில் இன்று இரண்டு லட்சத்தை நெருங்கி விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1.98 லட்சம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன இதனால் இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் சுமார் 2 லட்சம் அதாவது 1,98,000 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்தியாவில் கொரனோ வைரஸ் இரண்டாவது அலை மிகவும் மோசமாக இருக்கிறது என்றும் முதல் அலையைவிட இரண்டாவது மோசமாக இருப்பதால் மத்திய மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்த 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவில் கொரோனாவால் இதுவரை பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,070,890 எனவும், இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 173,152 எனவும், குணமானோர் எண்ணிக்கை 12,426,146 எனவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சினிமா செய்திகள்2 days ago
’கர்ணன்’ படத்தில் இந்த தவறு நடந்துள்ளது: உதயநிதி டுவிட்
-
வேலைவாய்ப்பு2 days ago
விருதுநகர் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
IPL – முதன்முதலாக கேப்டனாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் செய்த காரியத்தைப் பாருங்க!
-
சினிமா செய்திகள்2 days ago
உடனடியாக இரத்தம் தேவை: இயக்குனர் அட்லியின் டுவிட்டால் பரபரப்பு!