செய்திகள்
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை!


சென்னை: தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று உள்ளது. இரண்டு நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னையிலும் நேற்று மழை பெய்தது.
அதேபோல் நேற்று டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.


தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை
முக்கியமாக இன்றிலிருந்து மழை தீவிரமாக பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், சென்னை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய இடங்களில் மழை பெய்யும.
இந்த மழை காரணமாக காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக்கி புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியா
வாடிக்கையாளர்களிடம் இருந்து எஸ்பிஐ விதிகளை மீறி வசூல் செய்த ரூ.300 கோடி: அதிர்ச்சி தகவல்


ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து எஸ்பிஐ தேவையில்லாமல் 300 கோடி ரூபாய்க்கு அதிகமான தொகையை கட்டணமாக வசூலித்து உள்ளதாக மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது
மாதம் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவை கட்டணம், பண பரிவர்த்தனை கட்டணம், ரயில் டிக்கெட் புக்கிங், மொபைல் போன் ரீசார்ஜ் போன்றவைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் குறித்து நீண்ட நாட்களாகவே புகார்கள் பெறப்பட்டு வருகின்றன
மேலும் சேவை கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கப்படும் தொகைகள் குறித்து வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு பெரும்பாலும் தெரியாமலேயே போய் வீணாக பண இழப்பும் ஏற்படும் நிலை ஏற்படுகிறது. மேலும் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது வங்கிகள் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் கணக்கில் இருந்து எவ்வளவு தொகை குறைவாக இருக்கிறதோ அதற்கு ஏற்ப அபராதத் தொகையை வசூலிக்கின்றன
இந்த நிலையில் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்க்கும் பணியாளர்களால் வங்கிகள் குறிப்பிடும் அளவுக்கு மினிமம் பேலன்ஸ் தொகையை வைத்துக் கொள்ள முடியாத நிலை இருப்பதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்தன. இதை கருத்தில் கொண்டு வங்கி கணக்கு இல்லாத ஏழை எளிய மக்கள் வங்கி கணக்கு தொடங்க ஏதுவாக பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் இந்த திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு உள்ளவர்கள் ஆக மாறினார்கள்
ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் மாதம் ஒன்றுக்கு நான்கு முறைக்கு மேல் ஏடிஎம்-இல் பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் எஸ்பிஐ 17 ரூபாய் 70 காசுகள் கட்டணம் வசூலித்து உள்ளது. இவ்வாறு எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து தேவையில்லாமல் 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் 12 கோடி கணக்குகளில் இருந்து 300 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதேபோன்று இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியும் 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பல கோடி ரூபாயை வசூலித்து விதிமுறைகளை மீறியுள்ளதாக ஐஐடி ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாடு
சென்னை ஈ.வெ.ரா பெரியார் சாலை பெயர் மாற்றப்பட்டதா?


சென்னை ஈவேரா பெரியார் சாலை பெயர் மாற்றப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் பரவி வரும் செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் பல ஆண்டுகளாக ஈவேரா பெரியார் சாலை அழைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திடீரென தேசிய நெடுஞ்சாலையின் அறிவிப்பு பலகையில் கிராண்ட் டிரங்க் ரோடு என்ற பெயராக ஈவேரா பெரியார் சாலை மாறியுள்ளது. அதேபோல் தேசிய நெடுஞ்சாலையில் இணையதளத்திலும் டிரங்க் ரோடு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மீண்டும் ஈவேரா பெரியார் சாலை என்று தேசிய நெடுஞ்சாலையின் அறிவிப்பு பலகையிலும் இணையதளத்திலும் மாற்றப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு
இன்றும் நாளையும் மெரீனாவில் அனுமதி இல்லை: தமிழக அரசு அறிவிப்பு!


இன்றும் நாளையும் சென்னை மெரினா உள்பட சென்னையில் உள்ள அனைத்து கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று தெலுங்கு வருடப்பிறப்பு விடுமுறை நாள் என்பதும் நாளை தமிழ் புத்தாண்டு தின விடுமுறை என்பதும் தெரிந்ததே. இதனால் இந்த இரண்டு நாட்களிலும் சென்னை மெரினா உள்பட பல கடற்கரைகளில் பொது மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒரே இடத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடினால் கொரோனா தொற்றின் பரவல் அதிகமாகும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்தனர்.
ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தினமும் 2,000 பேருக்கு மேல் புதிதாக சென்னையில் பரவி வரும் நிலையில் இப்படி ஒரு நடவடிக்கை அவசியமானது என்று ஒரு சிலர் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
-
தமிழ்நாடு23 hours ago
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கா? பெரும் பரபரப்பு
-
இந்தியா2 days ago
முழு லாக்டவுன் அச்சம்: மாநிலத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
-
வேலைவாய்ப்பு2 days ago
வ.ஊ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!
-
சினிமா செய்திகள்2 days ago
வெளிநாடுகளிலும் வசூல் மழை பொழியும் ‘கர்ணன்’- எவ்வளவு தெரியுமா?