Connect with us

செய்திகள்

அரசு மருத்துவரின் அலட்சியம் -இறந்தே பிறந்த குழந்தை!

Published

on

அரசு மருத்துவரின் அலட்சியப்போக்கால் குறித்த நேரத்தில் பிரசவம் பார்க்காத்தால் இறந்து பிறந்த குழந்தை..

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள பொய்யுண்டார்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிரகாஷ் அவரது மனைவி கனிமொழி நிறைமாத கர்ப்பிணியான இவர் ஒவ்வொரு மாதமும் வடக்கூர் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் சிகிச்சையும் ஆலோசனையும் பெற்று வந்தார். இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர் சுயப்பிரசவம் தான் நடக்கும் அதனால் வேற எங்கேயும் போக வேண்டாம். வீட்டிலும் பிரசவம் பார்க்க கூடாது என்றும் கூறியதோடு லேசாக வலி வந்ததும் அரசு ஆரம்பசுகாதார நிலையத்திற்கு வரும்படி சொல்லி அனுப்பியுள்ளனர்.

இதனை தொடர்ந்து 16 ந் தேதி அவருக்கு வயிற்றுவலி ஏற்பட மருத்துவர் மற்றும் செவிலியர்கள் சொன்னது போலவே வடக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைத்தில் சேர்த்தனர். முதலில் வலி குறைந்தது. மாலை மீண்டும் வலி ஏற்பட்ட போது சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத நிலையில் செவிலியர்கள் மட்டும் இருந்தனர்.

கனிமொழிக்கு வலி அதிகரிக்கவே மருத்துவரை வரச் சொல்லுங்க இல்லன்னா 108 ல் ஏற்றி தஞ்சாவூருக்கு அனுப்புங்க என்று கனிமொழியின் கணவர் மற்றும் உறவினர்கள் கெஞ்சினார்கள். ஆனால் செவிலியர்கள் .மருத்துவர் வருகிறார் என்றே பதில் சொன்னார்கள். நள்ளிரவை தாண்டியதும் வலி அதிமானதால் செவிலியர்களே பிரசவம் பார்க்கத்தொடங்கினர்.
.
குழந்தை சுயப்பிரசவம் தான் ஆனால் அந்த குழந்தை இறந்தே பிறந்தால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த உறவினர்கள். மருத்துவர் இருந்திருந்தாலோ அல்லது தஞ்சைக்கு அனுப்பி இருந்தாலோ குழந்தையை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் கடைசி வரை மருத்துவர் வரவில்லை. குழந்தை இறந்த தகவல் அறிந்து வேகமாக வரும் போது விபத்து ஏற்பட்டதாக கூறி தனியார் மருத்துவமனையில் போய் படுத்துவிட்டார். மருத்துவர் பணி செய்யாமல் குழந்தை பலியாக காரணமாக இருந்ததால் பணி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை குழந்தை சடலத்தை வாங்கமாட்டோம் என்று கிராம மக்களும் உறவினர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளானர்.. இதனால் போலிசார் குவிக்கப்பட்டனர் ஆனால் கோரிக்கை ஏற்கப்படும் வரை வீட்டுக்கு போகமாட்டோம் என்று இன்று இரவு வரை போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

வீட்டில் பிரசவம் பார்த்தால் கைது செய்யும் அரசாங்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாமல் குழந்தை இறந்தால் இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதா? ஏழைகளுக்கு நீதி கிடைக்காதா? என்கின்றனர் உறவினர்கள். மேலும் இந்த நிலை மீண்டும் தொடராமல் தடுக்க வேண்டுமெனில் அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றனர்.

 

Advertisement

தமிழ்நாடு

சென்னையில் மோடி பிறந்தநாள் விழாவில் வெடி விபத்து.. சிதறி ஓடிய கூட்டம்!

Published

on

சென்னை அம்பத்தூரில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவுக்காக கொண்டு வரப்பட்டு இருந்த கேஸ் பலூன் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் பாடியில், பாஜக விவசாயிகள் அணி சார்பில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் போது 2 ஆயிரம் கேஸ் பலூன்கள் பறக்கவிட திட்டமிடப்பட்டு இருந்தது.

பாடி சிவன்கோவில் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பாஜக விவசாய அணி துணைத் தலைவர் முத்து ராமன் பங்கேற்றார். அவரை வரவேற்று பட்டாசு வெடித்ததில், தீ பலூன் மீது விழுந்து வெடித்தது.

அப்போது அங்கு இருந்தவர்கள் அனைவரும் சிறிய தீ காயங்களுடன் உயிர் தப்பினர். இதனை அடுத்துக் காவல் துறையினர் செய்த விசாரணையில், அனுமதி இல்லாமல் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது, முறையான பாதுகாப்பு வசதி இல்லாமல் கேஸ் பலூன் பறக்கத் திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.

கேஸ் பலூனில் ஹீலியம் கேஸ் பதிலாக ஹைட்ரஜன் கேஸ் நிரப்பப்பட்டு இருந்திருக்கலாம். அதனால் தான் தீ பற்றி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Continue Reading

இந்தியா

ரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்!

Published

on

விரைவில் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்த வாய்ப்புள்ளதாக வெளியான தகவல் பயணிகளிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் நிலையங்களைச் சர்வதேச தரத்தில் உயர்த்த முடிவு செய்துள்ள, இந்தியன் ரயில்வேஸ் அதற்காக ரயில் நிலையம் பயன்பாட்டுக் கட்டணத்தை டிகெட் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்க முடிவு செய்துள்ளது.

இந்தியா முழுவதும் 7000 ரயில் நிலையங்கள் உள்ள நிலையில், முதற்கட்டமாக அவற்றில் 15 சதவீத ரயில் நிலையங்களில் (1000) மட்டும் இந்த பயன்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அதன்படி, பயணிகளில் அதிகளவில் கூடும் ரயில் நிலையங்களில் இந்த கட்டணம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரயில் டிக்கெட் கட்டணத்துடன் பயன்பாட்டுக்கா கட்டணமும் இணைக்கப்படலும், டிக்கெட் கட்டணத்தில் பெரிய மாறுதல் இருக்காது என்று இந்தியன் ரயில்வேஸ் தெரிவித்துள்ளது.

Continue Reading

இந்தியா

உலக வங்கியின் அந்த பட்டியலில் 116வது இடத்தை பிடித்த இந்தியா!

Published

on

By

உலக வங்கி ஒவ்வொரு ஆண்டும் மனித மூலதன குறியீடு பட்டியலை வெளியிட்டு வருகிறது.

உலகம் முழுவதும் 174 நாடுகளில் கல்வி அறிவு பெற்ற குழந்தைகள் மற்றும் அவர்களது ஆரோக்கிய நிலையை வைத்து, உலக வங்கியின் மனித மூலதன குறியீடு பட்டியல் தயாரிக்கப்படும்.

அந்த வகையில் 2020-ம் ஆண்டு உலக வங்கி வெளியிட்டுள்ள மனித மூலதன குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 116வது இடத்தை பிடித்துள்ளது.

மனித மூலதன மேம்பாட்டில் இந்தியாவின் பங்கு இந்த ஆண்டு 0.49 சதவீதமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பங்கு 0.41%, வங்க தேசம் பங்கு 0.46% ஆக உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு முன்பு குறைந்த வருவாய் உள்ள நாடுகளில் குழந்தைகளின் கல்வி அறிவு மற்றும் ஆரோக்கியம் அதிகரித்து இருந்தது.

ஆனால் கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு குழந்தைகள் பள்ளிகளில் சேருவது, ஆரோக்கியம் போன்றவற்றில் பல்வேறு நாடுகள் பின்னடைவைச் சந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
வேலை வாய்ப்பு13 mins ago

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

பல்சுவை2 hours ago

சுவையான பால் பாயசம் செய்வது எப்படி?

பர்சனல் ஃபினாஸ்3 hours ago

பிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா?

வேலை வாய்ப்பு3 hours ago

கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு7 hours ago

சென்னையில் மோடி பிறந்தநாள் விழாவில் வெடி விபத்து.. சிதறி ஓடிய கூட்டம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்8 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (19/09/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்8 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/09/2020)

வேலை வாய்ப்பு24 hours ago

10 ஆம் வகுப்புத் தேர்ச்சி / MBA படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

பல்சுவை1 day ago

மருத்துவ குறிப்புகள்..!

வேலை வாய்ப்பு1 day ago

நைனிடால் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு10 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்1 week ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்1 month ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்6 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்6 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்6 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: