Connect with us

இந்தியா

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்!

Published

on

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல் நிலையில் மிகுந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் (வயது 93), முதுமை காரணமாக அரசியலிருந்து ஓய்வு பெற்றார். அரசியல் நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது . முதுமை மற்றும் உடல்நல குறைவின் காரணமாக டெல்லியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டதாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் கடந்த ஜூன் மாதம் 11-ந் தேதி அங்குள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக ஆஸ்பத்திரியில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டார். . இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை மேற்க்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவரது உடல்நிலை கடந்த 24 மணிநேரத்தில் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், உயிர் காக்கும் மருத்துவ உபகாரணங்களுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்துவருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து டுவிட்டர் மற்றும் இனையதளங்களில் ப்ல்வேறு கணக்கான மக்கள் வாஜ்பாய் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட தொடர்ந்து பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவரது உடல்நிலை பற்றி விசாரிக்க பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மற்றும் மத்திய அமைச்சர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர். இந்த நிலையில், இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, வாஜ்பாய் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். சுமார் 15 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்த துணை ஜனாதிபதி அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.

அவரது உடல்நலம் குறித்து பிரதமர் அலுவலகம் தொடர்ந்து விசாரித்த வண்ணம் உள்ளது.அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் அவரது உடல் நிலையில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனிடையே இன்று பா.ஜ.க. தலைவர் அமித்ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களிடம் வாஜ்பாயின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

 

இந்தியா

இன்று ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் மோடி உரை.. என்னவெல்லாம் பேசுவார்!

Published

on

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் இன்று பிரதமர் மோடியின் உரை நிகழ உள்ளது.

அதிலும் ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆண்டுக்கால வரலாற்றில் முதல் முறையாக, உலக தலைவர்கள் அனைவரும் காணொளி மூலம் தங்களது உரையை நிகழ்த்தி வருகிறனர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் ஐநா சபையில் ஆற்றிய உரையில், “இந்தியா 370வது அரசியல் அமைப்பு சட்டத்தை ரத்து செய்து, காஷ்மீர் தலைவர்களைச் சிரையில் அடைத்தது, துருப்புகளைக் குவித்தது, எல்லையில் பதற்றம் ஏற்படுத்தியது என இந்தியா மீது குற்றம்சாட்டிப் பேசினார்.” இதற்கு இந்தியத் தரப்பு கடும் எதிர்ப்பை தெரிவித்தது. மேலும் அதற்கு இந்தியா தரப்பிலிருந்து இந்த கூட்டத்திலேயே பதில் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியப் பிரதமர் மோடி இன்று மாலை 6:30 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையில் தனது உரையை நிகழ்த்த உள்ளார். அதில், சீன எல்லை பிரச்சினை, பாகிஸ்தான் தீவிரவாதம் குறித்து எல்லாம் பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

இந்தியா

இந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது..? இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

Published

on

இந்தியாவில் மிக மகிழ்ச்சியான மாநிலம் என்ற பட்டத்தை தொழில்துறை வளர்ச்சியே இல்லாத மிசோரம் பெற்றுள்ளது.

இந்தியாவின் பிரபல நிர்வாகத் திறனுக்கான நிபுணர் ராஜேஷ் பில்லனியா, இந்தியாவின் முதல் மகிழ்ச்சியான மாநிலங்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளார். இதற்காக மார்ச் முதல் ஜூலை 2020-க்கு இடையில் 16,950 நபர்களுடன் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளது.

கடைசியாகக் கிடைத்த முடிவில் மிசோரம், பஞ்சாப், அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, சிக்கிம் ஆகிய மாநிலங்கள் டாப் 5 இடத்தை பிடித்துள்ளன.

36 மாநில மக்களிடம் இருந்து பெறப்பட்ட இந்த ஆய்வு முடிவில் 3.29 மகிழ்ச்சி மதிப்பெண்ணுடன், தமிழ்நாடு 29-வது இடத்தை பிடித்துள்ளது. தென் இந்தியாவில் புதுச்சேரி, தெலுங்கானா (9), ஆந்திர பிரதேசம் (11), கேரளா (14), கர்நாடகா (16) ஆகிய மாநிலங்கள் டாப் 20 மகிழ்ச்சியான மாநிலங்களுக்குள் வந்துள்ளன.

சட்டிஷ்கர், உத்தரகாண்ட், ஒடிசா, மேகாலயா, கோவா ஆகிய மாநிலங்களில் கடைசி 5 இடத்தை பிடித்துள்ளன. எப்போது தீவிரவாதிகள் பிரச்சனை, குண்டு வெடிப்பு என பரபரப்பாக இருக்கும் ஜம்மு காஷ்மீர் கூட தமிழ்நாட்டை விட மகிழ்ச்சியாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

India's 36 States Happiness Report 2020

India’s 36 States Happiness Report 2020

கோவிட்-19, சம்பளம், ஆன்மீகம், கட்டமைப்பு என பல்வேறு படிகளின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டு அதற்குப் பதில் அளித்த தரவுகளை வைத்து இந்த முடிவு பெறப்பட்டுள்ளது.

முழு ஆய்வு நீங்களே பாருங்கள்:

Continue Reading

இந்தியா

இந்தியாவில் 60% மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் செல்கிறார்கள்: ஆய்வு அறிக்கை

Published

on

இந்தியாவில் 59.7 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு நடந்து தான் செல்கிறார்கள் என்று தேசிய புள்ளியில் அமைப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

பள்ளிக்கு 57.9 சதவீத ஆண் மாணவர்கள் நடந்து செல்கின்றனர். ஆண் மாணவர்களை விடச் சற்று அதிகமாக 62.1 சதவீத மாணவிகள் நடந்து பள்ளிக்கு செல்கின்றனர்.

நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற மாணவர்கள் என்று பிரித்துப் பார்த்தாலும் ஆண் மாணவர்களை விடப் பெண் மாணவர்களே அதிகளவில் நடந்து பள்ளிக்கு செல்கின்றனர். நகர்ப் புறங்களில் 61.4 சதவீத ஆண் மாணவர்களும், 66.5 சதவீத பெண் மாணவர்களும் நடந்து செல்கின்றனர். இதுவே கிராமப்புறம் என்று பார்த்தால், 57.9 சதவீத ஆண் மாணவர்களும் 62 சதவீத பெண் மாணவர்களும் பள்ளிக்கு நடந்து செல்கின்றனர்.

பள்ளிக்கு நடந்து செல்வதற்கு அடுத்தபடியாக 12 சதவீத பள்ளி மாணவர்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர். கிராமப் புறங்களில் 11.3 சதவீத மாணவர்களும், நகர்ப் புறங்களில் 15.3 சதவீத மாணவர்களும் பள்ளிக்குச் செல்ல பொது போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர்.

பஸ் பாஸ் பயன்படுத்தும் மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் போதும் நகர்ப்புற மாணவர்களை விட கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் பஸ் பாஸ் பயன்படுத்தி பள்ளிக்குச் செல்கின்றனர்.

கிராமப்புறங்களில் 92.7 சதவீத மாணவர்களுக்கு 1 கிலோ மீட்டர் இடையில் ஆரம்பப் பள்ளிகள் உள்ளன. நகர்ப்புறங்களில் 87.2 சதவீத மாணவர்களுக்கு 1 கிலோ மீட்டர் இடையில் ஆரம்பப் பள்ளிகள் உள்ளன. நடுநிலைப் பள்ளிகளும் கிராமப்புற மாணவர்களுக்கு 1 கிலோ மீட்டர் இடையில் அதிகளவில் கிடைக்கிறது. இதுவே மேல்நிலைப் பள்ளிகள் என்று பார்த்தால் நகர்ப்புற மாணவர்களுக்குத் தான் 1 கிலோ மீட்டர் இடையில் அதிக பள்ளிகள் உள்ளன.

Continue Reading




Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்15 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (29/09/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்15 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/09/2020)

தமிழ்நாடு1 day ago

விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு கொரோனா!

தமிழ்நாடு1 day ago

மனைவியை ஜிம்முக்கு அனுப்பிய கணவனுக்கு நேர்ந்த சோகம்!

தமிழ்நாடு1 day ago

அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்கள்!

சினிமா செய்திகள்2 days ago

எஸ்.பி.பியின் மருத்துவக் கட்டணம் சர்ச்சை.. பேஸ்புக்கில் வீடியோ போட்ட சரண்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 days ago

உங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 4 வரை)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (28/09/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/09/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்3 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/09/2020)

வேலை வாய்ப்பு11 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்3 weeks ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்4 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்2 months ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்7 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்7 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்7 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்7 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்7 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்7 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: