Connect with us

செய்திகள்

கள்ளக் காதலால் நேர்ந்த விபரீதம்-மின்சாரம் பாய்ச்சி தற்கொலை!

Published

on

ஈரோடு மாவட்டத்தில் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சிங்கம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(39). இவர் மின்வாரிய ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அதானி காலணி பகுதியைச் சேர்ந்த ஜோதி என்பவருடன் முறையற்ற உறவில் ஈடுபட்டுள்ளார்.

அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் பெண்ணின் தவறான உறவை, அவரது கணவர் சின்னசாமி கண்டித்துள்ளார்.

சுரேஷ் மற்றும் ஜோதியின் கள்ளக்காதல் சுரேஷின் மனைவி மாரியம்மாளுக்கும் தெரிய வரவே அவர் தனது கணவருடன் சண்டையிட்டுள்ளார்.

இதையடுத்து இருவரும் தற்கொலை முடிவை தேர்வு செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை வீட்டைவிட்டு ஜோதி வெளியேறினார். பின்னர் அவரும், சுரேசும் ஒன்று சேர்ந்து அத்தாணி அருகே உள்ள வரதன் தோட்டம் என்ற பகுதிக்கு சென்றனர்.

அங்குள்ள மின் கம்பத்தில் கொக்கி மூலம் மின்சாரத்தை எடுத்து 2 பேரும் தங்களுடைய உடலில் பாய்ச்சினர். இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் உடல் கருகி இறந்தனர்.

இதைக் கண்டு அப்பகுதி மக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Advertisement

கிரிக்கெட்

தோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்!

Published

on

அபுதாபில் உள்ள ஷேக் ஜயித் மைதானத்தில் முதல் போட்டியில், மும்பை இந்தியன் அணியை எதிர்த்து தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.

டாஸ் வென்ற தோனி, இரண்டாம் பாதியில் பனியில் பந்து வீசுவது கடினமாக இருக்கும், எனவே பவுளிங் தேர்வு செய்வதாகக் கூறினார். மைதானத்தையும் வானிலையையும் முன்பே கணித்திருந்த தோனியின் முடிவு பலராலும் வரவேற்கப்பட்டது.

முதலில் பேட்டிங் ஆட தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக ரோகித் ஷர்மா, டீ காக் இருவரும் கலம் இறங்கினர். சாஹர் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து ரோகித் ஷர்மா அதிரடி காட்டினார்.

ஆனால் 10 பந்துகளுக்கு 12 ரன் அடித்து இருக்கும் போது, 4வது ஓவரில் 4 பந்தை சாவ்லா வீசிய பந்தில் சாம் குர்ரனிடம் கேட்ச் கொடுத்து பரிதாபமாக ரோகித் ஷர்மா விளையாடினர். அவரை தொடர்ந்து டீ காக் அதிரடியாகத் தனது அட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில், 20 பந்துகளுக்கு 33 ரண்கள் எடுத்திருந்த டீ காக், சாம் குர்ரன் போட்ட பந்தில் வாட்சனிடம் கேட்ச் கொடுத்து வெளீயேரினார். அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணீயில் சவுரப் திவாரி மட்டும் 31 பந்துகளில் 41 அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 162 ரன்களை மும்பை இந்தியன்ஸ் எடுத்து இருந்தது.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாட தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தொடக்க அட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் ஷேன் வாட்சன் இருவரும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். ஷேன் வாட்சன் 5 பந்துகளுக்கு 4 ரன் அடித்து இருக்கும் போது போல் வீசிய பந்தில் எல்.பி.டபள்யு ஆகி வெளியேறினார். முரளி விஜய் 7 பந்துகளுக்கு 1 ரன் மட்டுமே அடித்து இருந்த நிலையில் ஜேம்ஸ் பாட்டிசன் பந்தில் எல்.பி.டபள்யு ஆகி வெளியேறினார்.

பின்னர் ஜோடி செர்ந்த டூபிசிஸ், அம்பத்தி ராயுடு அணி சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தன. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடு 48 பந்துகளுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் சாஹர் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். டூபிளிசிஸ் 44 பந்துகளுக்கு 58 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

ரவீந்தர ஜடேஜா 5 பந்துகளுக்கு 10 ரன்களும், சாம் குர்ரன் 6 பந்துகளுக்கு 18 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். தோனி இரண்டு பந்துகள் எதிர்கொண்டு ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டம் இழக்காமலிருந்தார்.19 ஓவரின் 2வது பந்தில் 166 ரன்கள் அடித்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐபிஎல் 2020-ன் முதல் போட்டியில் வெற்றியுடன் தங்களது வீர நடையை சென்னை சூப்பர் கிங்ஸ் அடி எடுத்து வைத்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இரண்டாம் போட்டியில் டெல்லி டேர்டெவில் அணியும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன.

Continue Reading

உலகம்

ஆன்லைனில் பாலியல் ரீதியாக ராகிங்.. பிரபல பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தகவல்!

Published

on

சர்வதேச புகழ் பெற்ற யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களிடம், சீனியர் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பலியல் ரீதியாக ராகிங் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகக் கல்லூரிக்கு வரும் முதலம் ஆண்டு மாணவர்களிடம், சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வது நடைபெறும். இதற்கு எதிரக கடுமையான சட்டங்களும் அமலில் உள்ளன.

இப்போது கொரோனா காலம் என்பதால், கல்லூரிகளில் பாடங்கள் ஆன்லைனில் நடைபெற்று வருகின்றன. அதை பின்பற்றும் மாணவர்கள் ராகிங்கையும் ஆன்லைனில் நடத்திய சம்பவம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களை ஆடைகளைக் கலைய வைத்து, ஆபாசப் படங்கள் போன்று எல்லாம் ராகிங் செய்துள்ளனர். இதை அறிந்த பல்கலைக்கழக நிர்வாகம் ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் பிற மாணவர்களுக்கும், ராகிங் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Continue Reading

இந்தியா

இந்தியாவில் 60% மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் செல்கிறார்கள்: ஆய்வு அறிக்கை

Published

on

இந்தியாவில் 59.7 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு நடந்து தான் செல்கிறார்கள் என்று தேசிய புள்ளியில் அமைப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

பள்ளிக்கு 57.9 சதவீத ஆண் மாணவர்கள் நடந்து செல்கின்றனர். ஆண் மாணவர்களை விடச் சற்று அதிகமாக 62.1 சதவீத மாணவிகள் நடந்து பள்ளிக்கு செல்கின்றனர்.

நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற மாணவர்கள் என்று பிரித்துப் பார்த்தாலும் ஆண் மாணவர்களை விடப் பெண் மாணவர்களே அதிகளவில் நடந்து பள்ளிக்கு செல்கின்றனர். நகர்ப் புறங்களில் 61.4 சதவீத ஆண் மாணவர்களும், 66.5 சதவீத பெண் மாணவர்களும் நடந்து செல்கின்றனர். இதுவே கிராமப்புறம் என்று பார்த்தால், 57.9 சதவீத ஆண் மாணவர்களும் 62 சதவீத பெண் மாணவர்களும் பள்ளிக்கு நடந்து செல்கின்றனர்.

பள்ளிக்கு நடந்து செல்வதற்கு அடுத்தபடியாக 12 சதவீத பள்ளி மாணவர்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர். கிராமப் புறங்களில் 11.3 சதவீத மாணவர்களும், நகர்ப் புறங்களில் 15.3 சதவீத மாணவர்களும் பள்ளிக்குச் செல்ல பொது போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர்.

பஸ் பாஸ் பயன்படுத்தும் மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் போதும் நகர்ப்புற மாணவர்களை விட கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் பஸ் பாஸ் பயன்படுத்தி பள்ளிக்குச் செல்கின்றனர்.

கிராமப்புறங்களில் 92.7 சதவீத மாணவர்களுக்கு 1 கிலோ மீட்டர் இடையில் ஆரம்பப் பள்ளிகள் உள்ளன. நகர்ப்புறங்களில் 87.2 சதவீத மாணவர்களுக்கு 1 கிலோ மீட்டர் இடையில் ஆரம்பப் பள்ளிகள் உள்ளன. நடுநிலைப் பள்ளிகளும் கிராமப்புற மாணவர்களுக்கு 1 கிலோ மீட்டர் இடையில் அதிகளவில் கிடைக்கிறது. இதுவே மேல்நிலைப் பள்ளிகள் என்று பார்த்தால் நகர்ப்புற மாணவர்களுக்குத் தான் 1 கிலோ மீட்டர் இடையில் அதிக பள்ளிகள் உள்ளன.

Continue Reading
வேலை வாய்ப்பு10 hours ago

திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் வேலைவாய்ப்பு!

பல்சுவை10 hours ago

அறுசுவையான கேரளா ஸ்பெஷல் “எரிவேரி” செய்வது எப்படி?

வேலை வாய்ப்பு11 hours ago

ஆதார் கார்டு அலுவலத்தில் (UIDAI) வேலைவாய்ப்பு!

பல்சுவை12 hours ago

இந்த காய்கறிகள சாப்பிட்டால் இவ்வளவு நன்மை ஏற்பாடுமா?

சினிமா செய்திகள்13 hours ago

அனுராக் கஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பாயல் கோஷ்.. ஆதரவு அளித்த டாப்ஸி!

வேலை வாய்ப்பு14 hours ago

M.Sc படித்தவர்களுக்கு பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்14 hours ago

ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. செப்டம்பர் 30-க்குள் இதை செய்திடுக!

பர்சனல் ஃபினாஸ்15 hours ago

சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்!

கிரிக்கெட்18 hours ago

தோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (20/09/2020)

வேலை வாய்ப்பு10 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்1 week ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்1 month ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்6 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்6 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்6 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: