Connect with us

செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம்-திமுக,மதிமுக ஆதரவு!

Published

on

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் அழைப்பு விடுத்திருக்கும் நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்திற்கு மதிமுக ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இப்போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் திமுகவின் தோழைமைக் கட்சியான மதிமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய பா.ஜ. ஆட்சியில், மக்களின் நலனைப் பின்னுக்குத் தள்ளி எண்ணெய் நிறுவனங்களின் அபரிமிதமான லாப நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, பெட்ரோல் டீசல் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டு, லிட்டர் ரூ.100 ஐ வேகமாக நெருங்கி வருவது, மிகுந்த கவலையளிப்பதாகவும், வேதனையளிப்பதாகவும் இருக்கிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை குறைந்த போதும், அதன் பலனை அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கோ, சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கோ, அத்தியாவசியப் பொருட்கள் போக்குவரத்துக்கோ போய்ச் சேர்ந்து விடாமல், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த அனுமதிப்பதில் மட்டுமே, பா.ஜ. அரசு கடந்த 4 வருடமாக செயல்பட்டு வருவதால், இன்று ஒரு லிட்டர் பெட்ரோல்ரூ.82.62 காசும், டீசல் ஒரு லிட்டர் ரூ.75.48 காசும் விற்கும் அபாயகரமான எல்லைக்குப் போய் விட்டது.

பா.ஜ.விற்குச் சாதகமான மாநிலங்களில் தேர்தல் வந்தால், பெட்ரோல், டீசல் விலை உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் எண்ணெய் நிறுவனங்கள், தேர்தல் முடிந்ததும் மீண்டும் எவ்வித தடையுமின்றி தாராளமாக  பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.

ஆகவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில், செப்டம்பர் 10ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய பாரத் பந்திற்கு திமுக மனப்பூர்வமானஆதரவினை நல்கி, அந்த பந்த் முழுஅளவில் வெற்றி பெற ஆர்வத்துடன் பங்கேற்று, அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இது குறித்து பேசியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து செப்டம்பர் 10ல் நடக்கும் பாரத் பந்த்க்கு மதிமுக ஆதரிக்கிறது.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ்நாடு

இளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

Published

on

திருமணமானதை மறைத்து, இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தால், கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

காணாமல் போன 10-ம் வகுப்பு மாணவியை மீட்டுத் தர வேண்டும் என்ற ஆட்கொணர்வு மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

அப்போது மாணவி ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்ததாகவும், அங்கு பணிபுரிந்து வந்த திருமணமான ஒருவரை மணமுடிந்ததாகவும் காவல் துறையினர் அறிக்கை சமர்ப்பித்தனர்.

வீட்டை விட்டு ஓடிப் போகும் இளம் பெண்களை, ஏற்கனவே திருமணமானவர் ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்படி வந்த புகாரின் பெயரில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நீதிபதிகள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் கேட்டுள்ளனர்.

மேலும், இப்படி திருமணமானதை மறைத்து, இளம்பெண்களை ஏமாற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Continue Reading

உலகம்

சுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்!

Published

on

சுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகளை அவர்கள் வீட்டிற்கே பார்சல் செய்து அனுப்புகிறது, தாய்லாந்து தேசிய பூங்கா.

பாங்காக் அருகில் உள்ள காவ் யை தேசிய பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், உள்ளே நுழையும் முன்பே அவர்களது முகவரி உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.

பின்னர் உள்ளே செல்லும் அவர்கள், குப்பைகளை வீசி சென்றால் அதை சிசிடிவி மூலம் கண்காணித்து, அந்த சுற்றுலா பயணிகளின் வீட்டிற்கே பேக் செய்து அனுப்புகிறது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கவ் யாவ் தேதிய பூங்கா நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் சுற்றுலாப் பயணிகள் பொது இடங்களில் குப்பைகளை வீச பயப்படுவதாகவும் கூறுகின்றனர்.

Continue Reading

இந்தியா

இந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது..? இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

Published

on

இந்தியாவில் மிக மகிழ்ச்சியான மாநிலம் என்ற பட்டத்தை தொழில்துறை வளர்ச்சியே இல்லாத மிசோரம் பெற்றுள்ளது.

இந்தியாவின் பிரபல நிர்வாகத் திறனுக்கான நிபுணர் ராஜேஷ் பில்லனியா, இந்தியாவின் முதல் மகிழ்ச்சியான மாநிலங்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளார். இதற்காக மார்ச் முதல் ஜூலை 2020-க்கு இடையில் 16,950 நபர்களுடன் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளது.

கடைசியாகக் கிடைத்த முடிவில் மிசோரம், பஞ்சாப், அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, சிக்கிம் ஆகிய மாநிலங்கள் டாப் 5 இடத்தை பிடித்துள்ளன.

36 மாநில மக்களிடம் இருந்து பெறப்பட்ட இந்த ஆய்வு முடிவில் 3.29 மகிழ்ச்சி மதிப்பெண்ணுடன், தமிழ்நாடு 29-வது இடத்தை பிடித்துள்ளது. தென் இந்தியாவில் புதுச்சேரி, தெலுங்கானா (9), ஆந்திர பிரதேசம் (11), கேரளா (14), கர்நாடகா (16) ஆகிய மாநிலங்கள் டாப் 20 மகிழ்ச்சியான மாநிலங்களுக்குள் வந்துள்ளன.

சட்டிஷ்கர், உத்தரகாண்ட், ஒடிசா, மேகாலயா, கோவா ஆகிய மாநிலங்களில் கடைசி 5 இடத்தை பிடித்துள்ளன. எப்போது தீவிரவாதிகள் பிரச்சனை, குண்டு வெடிப்பு என பரபரப்பாக இருக்கும் ஜம்மு காஷ்மீர் கூட தமிழ்நாட்டை விட மகிழ்ச்சியாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

India's 36 States Happiness Report 2020

India’s 36 States Happiness Report 2020

கோவிட்-19, சம்பளம், ஆன்மீகம், கட்டமைப்பு என பல்வேறு படிகளின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டு அதற்குப் பதில் அளித்த தரவுகளை வைத்து இந்த முடிவு பெறப்பட்டுள்ளது.

முழு ஆய்வு நீங்களே பாருங்கள்:

Continue Reading




வேலை வாய்ப்பு15 hours ago

கடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு16 hours ago

புதுக்கோட்டைச் சிறைச்சாலை பார்ஸ்டல் பள்ளியில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு17 hours ago

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!

பல்சுவை17 hours ago

தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா!

சினிமா செய்திகள்18 hours ago

ஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

வேலை வாய்ப்பு18 hours ago

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

டிவி19 hours ago

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணையும் நடிகை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/09/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/09/2020)

கேலரி2 days ago

அக்‌ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்!

வேலை வாய்ப்பு11 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்2 weeks ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்1 month ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்6 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்6 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்6 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: