Connect with us

செய்திகள்

அழகு நிலையத்திற்குள் புகுந்து பெண்ணை தாக்கிய திமுக பிரமுகர் நீக்கம்!

Published

on

அழகு நிலையத்திற்குள் புகுந்து திமுக பிரமுகர் பெண்ணை தாக்கிய வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணை காலால் எட்டி உதைத்த திமுக நிர்வாகி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது.

பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் பிரபல தனியார் கல்லூரிக்கு செல்லும் வழியில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா. 35 வயதான இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் செல்வகுமார் என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது.

இதனால் ஆத்திரமடந்த அவர் பெரம்பலூரில் அந்த பெண் வைத்திருக்கும் அழகு நிலையத்துக்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணை சராமாரியாக அடித்தும் காலால் எட்டி உதைத்தும் துன்புறுத்தியுள்ளார்.  அங்கு வேலை செய்யும்  ஊழியர்கள் தடுக்க முடியாமல் தினறியுள்ளனர். அவர் தொடர்ந்து அந்த பெண்ணை அடித்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் திமுக தலைவர் ஸ்டாலினின் கவனத்துக்கு செல்ல, செல்வக்குமார் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், பெரம்பலூர் திமுக நிர்வாகி செல்வகுமார் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

இது குறித்து க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில்: “பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம் அன்னமங்கலம் கிராமத்தைச்சேர்ந்த மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் உறுப்பினர் எஸ்.செல்வகுமார் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்தால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கிப் படுகிறார் ”என்று தெரிவித்தார்.

உலகம்

ஆன்லைனில் பாலியல் ரீதியாக ராகிங்.. பிரபல பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தகவல்!

Published

on

சர்வதேச புகழ் பெற்ற யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களிடம், சீனியர் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பலியல் ரீதியாக ராகிங் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகக் கல்லூரிக்கு வரும் முதலம் ஆண்டு மாணவர்களிடம், சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வது நடைபெறும். இதற்கு எதிரக கடுமையான சட்டங்களும் அமலில் உள்ளன.

இப்போது கொரோனா காலம் என்பதால், கல்லூரிகளில் பாடங்கள் ஆன்லைனில் நடைபெற்று வருகின்றன. அதை பின்பற்றும் மாணவர்கள் ராகிங்கையும் ஆன்லைனில் நடத்திய சம்பவம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களை ஆடைகளைக் கலைய வைத்து, ஆபாசப் படங்கள் போன்று எல்லாம் ராகிங் செய்துள்ளனர். இதை அறிந்த பல்கலைக்கழக நிர்வாகம் ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் பிற மாணவர்களுக்கும், ராகிங் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Continue Reading

இந்தியா

இந்தியாவில் 60% மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் செல்கிறார்கள்: ஆய்வு அறிக்கை

Published

on

இந்தியாவில் 59.7 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு நடந்து தான் செல்கிறார்கள் என்று தேசிய புள்ளியில் அமைப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

பள்ளிக்கு 57.9 சதவீத ஆண் மாணவர்கள் நடந்து செல்கின்றனர். ஆண் மாணவர்களை விடச் சற்று அதிகமாக 62.1 சதவீத மாணவிகள் நடந்து பள்ளிக்கு செல்கின்றனர்.

நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற மாணவர்கள் என்று பிரித்துப் பார்த்தாலும் ஆண் மாணவர்களை விடப் பெண் மாணவர்களே அதிகளவில் நடந்து பள்ளிக்கு செல்கின்றனர். நகர்ப் புறங்களில் 61.4 சதவீத ஆண் மாணவர்களும், 66.5 சதவீத பெண் மாணவர்களும் நடந்து செல்கின்றனர். இதுவே கிராமப்புறம் என்று பார்த்தால், 57.9 சதவீத ஆண் மாணவர்களும் 62 சதவீத பெண் மாணவர்களும் பள்ளிக்கு நடந்து செல்கின்றனர்.

பள்ளிக்கு நடந்து செல்வதற்கு அடுத்தபடியாக 12 சதவீத பள்ளி மாணவர்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர். கிராமப் புறங்களில் 11.3 சதவீத மாணவர்களும், நகர்ப் புறங்களில் 15.3 சதவீத மாணவர்களும் பள்ளிக்குச் செல்ல பொது போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர்.

பஸ் பாஸ் பயன்படுத்தும் மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் போதும் நகர்ப்புற மாணவர்களை விட கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் பஸ் பாஸ் பயன்படுத்தி பள்ளிக்குச் செல்கின்றனர்.

கிராமப்புறங்களில் 92.7 சதவீத மாணவர்களுக்கு 1 கிலோ மீட்டர் இடையில் ஆரம்பப் பள்ளிகள் உள்ளன. நகர்ப்புறங்களில் 87.2 சதவீத மாணவர்களுக்கு 1 கிலோ மீட்டர் இடையில் ஆரம்பப் பள்ளிகள் உள்ளன. நடுநிலைப் பள்ளிகளும் கிராமப்புற மாணவர்களுக்கு 1 கிலோ மீட்டர் இடையில் அதிகளவில் கிடைக்கிறது. இதுவே மேல்நிலைப் பள்ளிகள் என்று பார்த்தால் நகர்ப்புற மாணவர்களுக்குத் தான் 1 கிலோ மீட்டர் இடையில் அதிக பள்ளிகள் உள்ளன.

Continue Reading

தமிழ்நாடு

சென்னையில் மோடி பிறந்தநாள் விழாவில் வெடி விபத்து.. சிதறி ஓடிய கூட்டம்!

Published

on

சென்னை அம்பத்தூரில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவுக்காக கொண்டு வரப்பட்டு இருந்த கேஸ் பலூன் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் பாடியில், பாஜக விவசாயிகள் அணி சார்பில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் போது 2 ஆயிரம் கேஸ் பலூன்கள் பறக்கவிட திட்டமிடப்பட்டு இருந்தது.

பாடி சிவன்கோவில் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பாஜக விவசாய அணி துணைத் தலைவர் முத்து ராமன் பங்கேற்றார். அவரை வரவேற்று பட்டாசு வெடித்ததில், தீ பலூன் மீது விழுந்து வெடித்தது.

அப்போது அங்கு இருந்தவர்கள் அனைவரும் சிறிய தீ காயங்களுடன் உயிர் தப்பினர். இதனை அடுத்துக் காவல் துறையினர் செய்த விசாரணையில், அனுமதி இல்லாமல் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது, முறையான பாதுகாப்பு வசதி இல்லாமல் கேஸ் பலூன் பறக்கத் திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.

கேஸ் பலூனில் ஹீலியம் கேஸ் பதிலாக ஹைட்ரஜன் கேஸ் நிரப்பப்பட்டு இருந்திருக்கலாம். அதனால் தான் தீ பற்றி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Continue Reading




உலகம்4 hours ago

ஆன்லைனில் பாலியல் ரீதியாக ராகிங்.. பிரபல பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தகவல்!

இந்தியா5 hours ago

இந்தியாவில் 60% மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் செல்கிறார்கள்: ஆய்வு அறிக்கை

வேலை வாய்ப்பு5 hours ago

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு5 hours ago

B.Sc (or) M.Sc (or) M.Phil (Chemistry) படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு6 hours ago

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

பல்சுவை7 hours ago

சுவையான பால் பாயசம் செய்வது எப்படி?

பர்சனல் ஃபினாஸ்9 hours ago

பிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா?

வேலை வாய்ப்பு9 hours ago

கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு12 hours ago

சென்னையில் மோடி பிறந்தநாள் விழாவில் வெடி விபத்து.. சிதறி ஓடிய கூட்டம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்13 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (19/09/2020)

வேலை வாய்ப்பு10 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்1 week ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்1 month ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்6 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்6 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்6 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: