Connect with us

செய்திகள்

முக்கொம்பில் ரூ.325 கோடி செலவில் புதிய கதவணைகள் -முதல்வர் பழனிச்சாமி

Published

on

முக்கொம்பில் 325 கோடி ரூபாய் செலவில் 2 புதிய கதவணைகள் கட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

திருச்சி முக்கொம்பு மேலணையில் நேற்று முன்தினம் இரவு 8 மதகுகளும் 4 தூண்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று காலை மேலும் ஒரு மதகு உடைந்தது.

இதனால் திருச்சி – கரூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அணையை சீரமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் 9 மதகுகள் அடித்து செல்லப்பட்ட முக்கொம்பு மேலணை பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரும் முதல்வருடன் ஆய்வு மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 325 கோடி ரூபாய் செலவில் முக்கொம்பில் 2 புதிய கதவணைகள் கட்டப்படும் என அறிவித்தார். 100 மீட்டர் தள்ளி கதவணைகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

புதிய கதவணை கட்டும்பணி விரைவில் தொடங்கும். கொள்ளிடத்தின் வடக்குப்பகுதியில் உள்ள அய்யன்வாய்க்காலிலும் ரூ. 85 கோடியில் கதவணை கட்டப்படும்.

திருச்சி முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் உடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணி 4 நாட்களில் முடியும். புதிய கதவணைகள் 15 மாதங்களில் கட்டி முடிக்கப்படும்.மதகுகள் அடித்து செல்லப்பட்டது விபத்து. மணல் குவாரிக்கும் மதகுகள் அடித்து செல்லப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

திருச்சி முக்கொம்பில் மதகுகள் உடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதிக அளவில் வெள்ள நீர் வெளியேறியதால் அழுத்தம் காரணமாக பழமையான அணையின் மதகு உடைந்தது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு காவிரி நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூ்ர் அணை நிரம்பியதை அடுத்து, அணைகளில் இருந்து வெளியேறிய உபரி நீர் முழுவதும் காவிரியில் திறக்கப்பட்டது.குறிப்பாக முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து 2.27 லட்சம் கனஅடியிலிருந்து 2.34 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த அணையிலிருந்து காவிரி ஆற்றுக்கு 67,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு சுமார் 8.30 மணியளவில் முக்கொம்பு அணையில் 8 மதகுகள் திடீரென்று உடைந்து விழுந்தது. இதனால் அணையின் பெரும் பகுதி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று காலை மற்றொரு மதகும் இடிந்து விழுந்தது. மொத்தம் 9 மதகுகள் இடிந்து விழுந்துள்ளது. மேலும், அணையின் 4 தூண்களும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கொம்பு மேலணையில் உடைந்த மதகுகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி பேசியதாவது: ‘முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் இடிந்து விழுந்துள்ளது. இதனை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

இன்னும் 4 நாட்களில் சீரமைப்பு பணிகள் நிறைவடையும். முக்கொம்பிற்கு வரும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதிக அளவு நீர் வெளியேறியதன் காரணமாகவே மதகுகள் உடைந்துள்ளன. மணல் குவாரிக்கும் மதகுகள் இடிந்து விழுந்ததிற்கும் சம்பந்தம் இல்லை.

குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் தான் மணல் அள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், தற்போது வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்படுகிறது. நமது மாநிலத்தில் மணல் பயன்பாட்டை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மணலுக்குப் பதிலாக எம் சாண்ட் (M-Sand) பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. புதிய கதவணை கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

 

 

Advertisement

கிரிக்கெட்

தோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்!

Published

on

அபுதாபில் உள்ள ஷேக் ஜயித் மைதானத்தில் முதல் போட்டியில், மும்பை இந்தியன் அணியை எதிர்த்து தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.

டாஸ் வென்ற தோனி, இரண்டாம் பாதியில் பனியில் பந்து வீசுவது கடினமாக இருக்கும், எனவே பவுளிங் தேர்வு செய்வதாகக் கூறினார். மைதானத்தையும் வானிலையையும் முன்பே கணித்திருந்த தோனியின் முடிவு பலராலும் வரவேற்கப்பட்டது.

முதலில் பேட்டிங் ஆட தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக ரோகித் ஷர்மா, டீ காக் இருவரும் கலம் இறங்கினர். சாஹர் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து ரோகித் ஷர்மா அதிரடி காட்டினார்.

ஆனால் 10 பந்துகளுக்கு 12 ரன் அடித்து இருக்கும் போது, 4வது ஓவரில் 4 பந்தை சாவ்லா வீசிய பந்தில் சாம் குர்ரனிடம் கேட்ச் கொடுத்து பரிதாபமாக ரோகித் ஷர்மா விளையாடினர். அவரை தொடர்ந்து டீ காக் அதிரடியாகத் தனது அட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில், 20 பந்துகளுக்கு 33 ரண்கள் எடுத்திருந்த டீ காக், சாம் குர்ரன் போட்ட பந்தில் வாட்சனிடம் கேட்ச் கொடுத்து வெளீயேரினார். அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணீயில் சவுரப் திவாரி மட்டும் 31 பந்துகளில் 41 அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 162 ரன்களை மும்பை இந்தியன்ஸ் எடுத்து இருந்தது.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாட தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தொடக்க அட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் ஷேன் வாட்சன் இருவரும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். ஷேன் வாட்சன் 5 பந்துகளுக்கு 4 ரன் அடித்து இருக்கும் போது போல் வீசிய பந்தில் எல்.பி.டபள்யு ஆகி வெளியேறினார். முரளி விஜய் 7 பந்துகளுக்கு 1 ரன் மட்டுமே அடித்து இருந்த நிலையில் ஜேம்ஸ் பாட்டிசன் பந்தில் எல்.பி.டபள்யு ஆகி வெளியேறினார்.

பின்னர் ஜோடி செர்ந்த டூபிசிஸ், அம்பத்தி ராயுடு அணி சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தன. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடு 48 பந்துகளுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் சாஹர் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். டூபிளிசிஸ் 44 பந்துகளுக்கு 58 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

ரவீந்தர ஜடேஜா 5 பந்துகளுக்கு 10 ரன்களும், சாம் குர்ரன் 6 பந்துகளுக்கு 18 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். தோனி இரண்டு பந்துகள் எதிர்கொண்டு ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டம் இழக்காமலிருந்தார்.19 ஓவரின் 2வது பந்தில் 166 ரன்கள் அடித்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐபிஎல் 2020-ன் முதல் போட்டியில் வெற்றியுடன் தங்களது வீர நடையை சென்னை சூப்பர் கிங்ஸ் அடி எடுத்து வைத்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இரண்டாம் போட்டியில் டெல்லி டேர்டெவில் அணியும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன.

Continue Reading

உலகம்

ஆன்லைனில் பாலியல் ரீதியாக ராகிங்.. பிரபல பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி தகவல்!

Published

on

சர்வதேச புகழ் பெற்ற யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களிடம், சீனியர் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பலியல் ரீதியாக ராகிங் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகக் கல்லூரிக்கு வரும் முதலம் ஆண்டு மாணவர்களிடம், சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வது நடைபெறும். இதற்கு எதிரக கடுமையான சட்டங்களும் அமலில் உள்ளன.

இப்போது கொரோனா காலம் என்பதால், கல்லூரிகளில் பாடங்கள் ஆன்லைனில் நடைபெற்று வருகின்றன. அதை பின்பற்றும் மாணவர்கள் ராகிங்கையும் ஆன்லைனில் நடத்திய சம்பவம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களை ஆடைகளைக் கலைய வைத்து, ஆபாசப் படங்கள் போன்று எல்லாம் ராகிங் செய்துள்ளனர். இதை அறிந்த பல்கலைக்கழக நிர்வாகம் ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் பிற மாணவர்களுக்கும், ராகிங் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Continue Reading

இந்தியா

இந்தியாவில் 60% மாணவர்கள் பள்ளிக்கு நடந்துதான் செல்கிறார்கள்: ஆய்வு அறிக்கை

Published

on

இந்தியாவில் 59.7 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு நடந்து தான் செல்கிறார்கள் என்று தேசிய புள்ளியில் அமைப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

பள்ளிக்கு 57.9 சதவீத ஆண் மாணவர்கள் நடந்து செல்கின்றனர். ஆண் மாணவர்களை விடச் சற்று அதிகமாக 62.1 சதவீத மாணவிகள் நடந்து பள்ளிக்கு செல்கின்றனர்.

நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற மாணவர்கள் என்று பிரித்துப் பார்த்தாலும் ஆண் மாணவர்களை விடப் பெண் மாணவர்களே அதிகளவில் நடந்து பள்ளிக்கு செல்கின்றனர். நகர்ப் புறங்களில் 61.4 சதவீத ஆண் மாணவர்களும், 66.5 சதவீத பெண் மாணவர்களும் நடந்து செல்கின்றனர். இதுவே கிராமப்புறம் என்று பார்த்தால், 57.9 சதவீத ஆண் மாணவர்களும் 62 சதவீத பெண் மாணவர்களும் பள்ளிக்கு நடந்து செல்கின்றனர்.

பள்ளிக்கு நடந்து செல்வதற்கு அடுத்தபடியாக 12 சதவீத பள்ளி மாணவர்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர். கிராமப் புறங்களில் 11.3 சதவீத மாணவர்களும், நகர்ப் புறங்களில் 15.3 சதவீத மாணவர்களும் பள்ளிக்குச் செல்ல பொது போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர்.

பஸ் பாஸ் பயன்படுத்தும் மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் போதும் நகர்ப்புற மாணவர்களை விட கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் பஸ் பாஸ் பயன்படுத்தி பள்ளிக்குச் செல்கின்றனர்.

கிராமப்புறங்களில் 92.7 சதவீத மாணவர்களுக்கு 1 கிலோ மீட்டர் இடையில் ஆரம்பப் பள்ளிகள் உள்ளன. நகர்ப்புறங்களில் 87.2 சதவீத மாணவர்களுக்கு 1 கிலோ மீட்டர் இடையில் ஆரம்பப் பள்ளிகள் உள்ளன. நடுநிலைப் பள்ளிகளும் கிராமப்புற மாணவர்களுக்கு 1 கிலோ மீட்டர் இடையில் அதிகளவில் கிடைக்கிறது. இதுவே மேல்நிலைப் பள்ளிகள் என்று பார்த்தால் நகர்ப்புற மாணவர்களுக்குத் தான் 1 கிலோ மீட்டர் இடையில் அதிக பள்ளிகள் உள்ளன.

Continue Reading




weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்44 mins ago

உங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (செப்டம்பர் 21 முதல் 27 வரை)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்57 mins ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (21/09/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்1 hour ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/09/2020)

வேலை வாய்ப்பு17 hours ago

திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் வேலைவாய்ப்பு!

பல்சுவை17 hours ago

அறுசுவையான கேரளா ஸ்பெஷல் “எரிவேரி” செய்வது எப்படி?

வேலை வாய்ப்பு18 hours ago

ஆதார் கார்டு அலுவலத்தில் (UIDAI) வேலைவாய்ப்பு!

பல்சுவை19 hours ago

இந்த காய்கறிகள சாப்பிட்டால் இவ்வளவு நன்மை ஏற்பாடுமா?

சினிமா செய்திகள்20 hours ago

அனுராக் கஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பாயல் கோஷ்.. ஆதரவு அளித்த டாப்ஸி!

வேலை வாய்ப்பு20 hours ago

M.Sc படித்தவர்களுக்கு பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்21 hours ago

ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. செப்டம்பர் 30-க்குள் இதை செய்திடுக!

வேலை வாய்ப்பு10 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்1 week ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்1 month ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்6 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்6 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்6 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: