Connect with us

செய்திகள்

அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டி-விஜயகாந்த் அதிரடி!

Published

on

2019 பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2005-ம் ஆண்டு கழகம் தொடங்கப்பட்ட பிறகு 2006-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாளை “வறுமை ஒழிப்பு தினமாக” கடைப்பிடித்து வருகிறேன். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் என் வழியை பின்பற்றி அவர்களால் முடிந்த அளவிற்கு மக்களுக்கான நல உதவிகளை “இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே” என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து, ஒவ்வோரு ஆண்டும் செய்து வருகிறார்கள்.

இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று, அவர்களின் வறுமையை ஒழிக்கும் முயற்சியில் தே.மு.தி.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.

மேலும் கடந்த காலங்களில் முதியோர் இல்லங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் 32 லட்சம் ரூபாய், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு மனை நிலங்கள் இலவசமாகவும், காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவச திருமண மண்டபமும், பெண் சிசுக் கொலையை தடுத்திட “பெண்கள் நாட்டின் கண்கள்” என்ற திட்டத்தின் மூலம் சுமார் 500 பெண் குழந்தைகளுக்கு அவர்களின் திருமண வயதில் தலா இரண்டு லட்சம் ரூபாய் கிடைக்கும் படி செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி லட்சக்கணக்கான மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தமிழகத்தில் 60 இடங்களில், 600 கணினிகள் கொண்ட கேப்டன் இலவச கணினி பயிற்சி மையமும், ஏழைத் தாய்மார்கள் சுயதொழில் செய்வதற்காக 65 லட்சம் ரூபாய் மதிப்பில் 1300 தையல் எந்திரங்கள் வழங்கியுள்ளார்.

ஏழை சகோதரிகளின் திருமணத்திற்கு உதவிகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களும், காது கேட்கும் கருவி களும், சலவைத் தொழிலாளர்களுக்கு சலவை பெட்டிகளும், மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணங்களும், பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடைகளும், நோட்டுப் புத்தகங்களும் வழங்கி வருகிறோம்.இந்த உதவிகளை பெற்று படித்து, பட்டம் பெற்று பல்வேறு உயர்பதவிகளில் பலரும் இருக்கிறார்கள்.

அவர்கள் குடும்பங்களை நேரில் சந்தித்து 10 லட்சம் ரூபாய், 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை “மக்களுக்காக மக்கள் பணி” என்ற திட்டத்தின் மூலம் ஏற்கனவே 2012-ம் ஆண்டில் செய்ததைப்போல தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நல உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி உள்ளோம்.

கடந்த வருடம் 234 தொகுதிகளிலும் 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள,2,50,000 மரக்கன்றுகள் பசுமை தமிழகம் திட்டத்தின் மூலம் நடப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் நலிவுற்ற ஏழை எளிய 100 குடும்பங்களுக்கு தலா 18,000 ரூபாய் காப்பீட்டு திட்டத்தில் வைப்பு நிதியாக வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து வழங்கம் போல் இந்த ஆண்டும் கேரளா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் அம்மாநில மக்களுக்கு தே.மு.தி.க.வின் அனைத்து மாவட்ட கழகத்தின் சார்பாக 1 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்படும்.

மேலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் மதிய உணவு மற்றும் நிதியுதவியாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கியதைப்போல் இந்த ஆண்டும் வழங்கப்படும்.

வழக்கம் போல் இந்த ஆண்டும் தே.மு.தி.க.வின் அமைப்பு ரீதியான 64 மாவட்டங்களிலும் இது போன்று பல நல உதவிகளை கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் ஏழை, எளிய மக்களுக்கு இந்த வறுமை ஒழிப்பு தினத்தில் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அரசியல் என்பது பொதுநலமாக இருக்க வேண்டுமே தவிர, எல்லா துறைகளிலும் தலையீடு இருக்கக்கூடாது. லஞ்சத்தையும், ஊழலையும், வறுமையையும் ஒழிக்க வேண்டும் என்ற உன்னத குறிக்கோளுடன் அரசியல் பாதையில் பயணித்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் சில ஆட்சியாளர்கள் தங்கள் பதவிகளை தக்க வைத்து கொள்வதில் குறிக்கோளாக இருக்கிறார்களே தவிர, மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதில்லை. இவற்றையெல்லாம் எதிர்காலத்தில் தீர்க்க வேண்டிய முயற்சியில் தே.மு.தி.க. தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும். ஒரு நல்ல எதிர்காலம் தமிழ்நாட்டு மக்களுக்கு அமைய நான் உறுதிகொண்டுள்ளேன்.

அதற்காக தமிழக மக்களுக்கும், தாய்மார்களுக்கும், தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என்றென்றும் நான் கடமைப்பட்டுள்ளேன். அதே நேரத்தில் தமிழக மக்கள் தங்கள் ஆதரவையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து தேமுதிக க்கு தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

2019 பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களுக்கு உதவிகள் செய்திட அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம் என்றும் தேமுதிக தலைவர் கூறினார்.

நான் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது எனக்காக உடல் நலம் வேண்டி சாதி, மதம் பார்க்காமல் ஆலயங்களிலும், மசூதிகளிலும், தேவாலயங்களிலும் பிரார்த்தனை செய்த “என் உயிரிலும் மேலான எனது அன்பு தொண்டர்களுக்கும், தமிழ் நெஞ்சங்களுக்கும்” மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிடும் என பொதுச்செயலாளர் விஜயகாந்த் அதிரடியாக அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இப்போதே பல்வேறு கட்சிகள் தங்களது பணியைத் தொடங்கியுள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை டிடிவி.தினகரன் பொறுப்பாளர்களை நியமித்து அதிரடி காட்ட தொடங்கியுள்ளார். அதேபோல் நேற்று நடைபெற்ற அதிமுக செயற்குழுவிலும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தே விவாதிக்கப்பட்டது. தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2019-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். மேலும் அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்து பேசி வரும் நிலையில் விஜயகாந்த் இந்த அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ்நாடு

இளம்பெண்களை ஏமாற்றினால் கடுமையான தண்டனை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

Published

on

திருமணமானதை மறைத்து, இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தால், கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

காணாமல் போன 10-ம் வகுப்பு மாணவியை மீட்டுத் தர வேண்டும் என்ற ஆட்கொணர்வு மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

அப்போது மாணவி ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்ததாகவும், அங்கு பணிபுரிந்து வந்த திருமணமான ஒருவரை மணமுடிந்ததாகவும் காவல் துறையினர் அறிக்கை சமர்ப்பித்தனர்.

வீட்டை விட்டு ஓடிப் போகும் இளம் பெண்களை, ஏற்கனவே திருமணமானவர் ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்படி வந்த புகாரின் பெயரில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நீதிபதிகள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் கேட்டுள்ளனர்.

மேலும், இப்படி திருமணமானதை மறைத்து, இளம்பெண்களை ஏமாற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Continue Reading

உலகம்

சுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகள்… வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பூங்கா நிர்வாகத்தினர்!

Published

on

சுற்றுலா பயணிகள் வீசி செல்லும் குப்பைகளை அவர்கள் வீட்டிற்கே பார்சல் செய்து அனுப்புகிறது, தாய்லாந்து தேசிய பூங்கா.

பாங்காக் அருகில் உள்ள காவ் யை தேசிய பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், உள்ளே நுழையும் முன்பே அவர்களது முகவரி உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.

பின்னர் உள்ளே செல்லும் அவர்கள், குப்பைகளை வீசி சென்றால் அதை சிசிடிவி மூலம் கண்காணித்து, அந்த சுற்றுலா பயணிகளின் வீட்டிற்கே பேக் செய்து அனுப்புகிறது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கவ் யாவ் தேதிய பூங்கா நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் சுற்றுலாப் பயணிகள் பொது இடங்களில் குப்பைகளை வீச பயப்படுவதாகவும் கூறுகின்றனர்.

Continue Reading

இந்தியா

இந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலம் எது..? இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

Published

on

இந்தியாவில் மிக மகிழ்ச்சியான மாநிலம் என்ற பட்டத்தை தொழில்துறை வளர்ச்சியே இல்லாத மிசோரம் பெற்றுள்ளது.

இந்தியாவின் பிரபல நிர்வாகத் திறனுக்கான நிபுணர் ராஜேஷ் பில்லனியா, இந்தியாவின் முதல் மகிழ்ச்சியான மாநிலங்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளார். இதற்காக மார்ச் முதல் ஜூலை 2020-க்கு இடையில் 16,950 நபர்களுடன் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளது.

கடைசியாகக் கிடைத்த முடிவில் மிசோரம், பஞ்சாப், அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, சிக்கிம் ஆகிய மாநிலங்கள் டாப் 5 இடத்தை பிடித்துள்ளன.

36 மாநில மக்களிடம் இருந்து பெறப்பட்ட இந்த ஆய்வு முடிவில் 3.29 மகிழ்ச்சி மதிப்பெண்ணுடன், தமிழ்நாடு 29-வது இடத்தை பிடித்துள்ளது. தென் இந்தியாவில் புதுச்சேரி, தெலுங்கானா (9), ஆந்திர பிரதேசம் (11), கேரளா (14), கர்நாடகா (16) ஆகிய மாநிலங்கள் டாப் 20 மகிழ்ச்சியான மாநிலங்களுக்குள் வந்துள்ளன.

சட்டிஷ்கர், உத்தரகாண்ட், ஒடிசா, மேகாலயா, கோவா ஆகிய மாநிலங்களில் கடைசி 5 இடத்தை பிடித்துள்ளன. எப்போது தீவிரவாதிகள் பிரச்சனை, குண்டு வெடிப்பு என பரபரப்பாக இருக்கும் ஜம்மு காஷ்மீர் கூட தமிழ்நாட்டை விட மகிழ்ச்சியாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

India's 36 States Happiness Report 2020

India’s 36 States Happiness Report 2020

கோவிட்-19, சம்பளம், ஆன்மீகம், கட்டமைப்பு என பல்வேறு படிகளின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டு அதற்குப் பதில் அளித்த தரவுகளை வைத்து இந்த முடிவு பெறப்பட்டுள்ளது.

முழு ஆய்வு நீங்களே பாருங்கள்:

Continue Reading
வேலை வாய்ப்பு17 mins ago

புதுக்கோட்டைச் சிறைச்சாலை பார்ஸ்டல் பள்ளியில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு51 mins ago

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!

பல்சுவை1 hour ago

தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா!

சினிமா செய்திகள்3 hours ago

ஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

வேலை வாய்ப்பு3 hours ago

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

டிவி3 hours ago

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணையும் நடிகை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்14 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/09/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்14 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/09/2020)

கேலரி22 hours ago

அக்‌ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்!

பர்சனல் ஃபினாஸ்23 hours ago

எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி?

வேலை வாய்ப்பு11 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்2 weeks ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்1 month ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்6 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்6 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்6 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: