Connect with us

செய்திகள்

ஸ்டாலின் – அழகிரி- கனிமொழி.. கருணாநிதியால் மீண்டும் இணைந்த குடும்பம்!

Published

on

ஸ்டாலின் - அழகிரி- கனிமொழி.. கருணாநிதியால் மீண்டும் இணைந்த குடும்பம்!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கோபாலபுரத்தில் மொத்த குடும்பமும் மீண்டும் ஒன்று சேர்ந்து இருக்கிறது.

திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த சில நாட்களாக உடலில் இருந்த பிரச்சனை கொஞ்சம் குறைந்து இருக்கிறது. இரண்டு நாட்களாக அவர் சீரான உடல்நிலையில் இருக்கிறார்.

இந்த நிலையில் திமுக தொண்டர்களுக்கு இன்னொரு சந்தோசமான செய்தியும் கிடைத்து இருக்கிறது. அதன்படி, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி எல்லோரும் மீண்டும் எப்போதும் போல பேச தொடங்கி இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையில் உள்ள மனஸ்தாபம் குறைந்து இருக்கிறது.

ஸ்டாலின் - அழகிரி- கனிமொழி.. கருணாநிதியால் மீண்டும் இணைந்த குடும்பம்!

ஸ்டாலின் – அழகிரி- கனிமொழி.. கருணாநிதியால் மீண்டும் இணைந்த குடும்பம்!

திமுக தலைவரின் உடல்நிலையில் ஏற்பட்ட நலிவும், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலைக்கு சென்றதுமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் வருத்தத்தில் ஆழ்ந்த மூவரும் மீண்டும் பேச தொடங்கி இருக்கிறார்கள்.

முக்கியமாக கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு சென்ற அன்றே ஸ்டாலினும், அழகிரியும் மீண்டும் பழையபடி பேச தொடங்கி இருக்கிறார்கள். மருத்துவமனையில் மீண்டும் தயாநிதி மாறனுடன் பேசி நல்ல நிலைக்கு வந்து இருக்கிறார்கள்.

இது குடும்பத்தில் மட்டுமில்லாமல் காட்சியிலும் சில மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கோபாலபுரம் பட்சிகள் சொல்கிறது.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.

தமிழ்நாடு

அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்கள்!

Published

on

இன்று காலை நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஈபிஎஸ், ஓபிஎஸ் இடையில் உள்ள கருத்து முரன் போன்றவற்றுக்கு இடையில் இன்று அதிமுக கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அடுத்த முதல்வர் வேட்பாளர் குறித்து தற்போதைக்கு விவாதிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டன. அதுகுறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

1) கொரோனா காலத்தில் அயராது உழைத்த முதல்வர் மற்றும், துணை முதல்வரைப் பாராட்டி தீர்மானம்.

2) கொரோனா தடுப்பு பணிகளுக்கு அரசு கூடுதல் நிதி உதவி வழங்க வலியுறுத்த வேண்டும்.

3) மேகதாதுவில் அணை கட்ட முயற்ச்சித்து வரும் கர்நாடக அரசு தடுத்து நிறுத்தியதாக, தமிழக அரசுக்கு பாராட்டு.

4) நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

5) காவேரி டெல்டா மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமாக அறிவித்த தமிழக அரசுக்கு பாராட்டு.

6) 2021 தேர்தலில் அதிமுக அரசு தொடர, தொண்டர்கள் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.

7) ரூ.14 ஆயிரம் கோடி செலவில் காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை -குண்டாறு இணைப்பைச் செயல்படுத்தும் தமிழக அரசுக்கு நன்றி.

8) ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களை அழகுற அமைக்கும் தமிழக அரசுக்கு நன்றி.

9) மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி.

10) 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்க அனுமதி பெற்ற தமிழக அரசுக்கு நன்றி.

11) ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மற்றும் இதர திட்டங்களுக்கு மானியத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

12) தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை என்ற நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக இருக்க வேண்டும்.

13) கொரோனா காலத்தில் சிறப்பாக பொதுப்பணி செய்து வந்த அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நன்றி.

14) தமிழ் நாட்டில் கொரோனா காலத்திற்கு பிந்தைய சூழலில் பொருளாதாரத்தை மீட்டெடுத்து, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடப் பொருளாதார வல்லுநர் திரு.சி.ரங்கராஜன் தலைமையில் 24 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்தற்கு, தமிழக முதல்வருக்குப் பாராட்டு.
15) நீட் தேர்வு அமலாகிடக் காரணமாக இருந்துவிட்டு, தற்போது கபட நாடகமாடி வரும் திமுகவுக்குக் கண்டனம்.
Image
Image
Image
Image
Image
Continue Reading

இந்தியா

இன்று ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் மோடி உரை.. என்னவெல்லாம் பேசுவார்!

Published

on

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் இன்று பிரதமர் மோடியின் உரை நிகழ உள்ளது.

அதிலும் ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆண்டுக்கால வரலாற்றில் முதல் முறையாக, உலக தலைவர்கள் அனைவரும் காணொளி மூலம் தங்களது உரையை நிகழ்த்தி வருகிறனர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் ஐநா சபையில் ஆற்றிய உரையில், “இந்தியா 370வது அரசியல் அமைப்பு சட்டத்தை ரத்து செய்து, காஷ்மீர் தலைவர்களைச் சிரையில் அடைத்தது, துருப்புகளைக் குவித்தது, எல்லையில் பதற்றம் ஏற்படுத்தியது என இந்தியா மீது குற்றம்சாட்டிப் பேசினார்.” இதற்கு இந்தியத் தரப்பு கடும் எதிர்ப்பை தெரிவித்தது. மேலும் அதற்கு இந்தியா தரப்பிலிருந்து இந்த கூட்டத்திலேயே பதில் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியப் பிரதமர் மோடி இன்று மாலை 6:30 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையில் தனது உரையை நிகழ்த்த உள்ளார். அதில், சீன எல்லை பிரச்சினை, பாகிஸ்தான் தீவிரவாதம் குறித்து எல்லாம் பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

தமிழ்நாடு

மாணவர்களுக்குப் பாடங்களில் சந்தேகமா? இலவச உதவி எண் அறிவிப்பு!

Published

on

பள்ளி மாணவர்களுக்கு தங்களுடைய பாடங்கள் குறித்த சந்தேகங்கள் இருந்தால், உதவி எண்ணைத் தொடர்புகொண்டு கேட்கலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோவிட்-19 தொற்று காரணமாகக் கடந்த 5 மாதங்களாகப் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இனிமேலும் பள்ளிகள் திறந்தாலும் 100 சதவீத பாடங்களை முடிக்க முடியாது என்பதால் பாடத்திட்டங்கள் இந்த ஆண்டு மட்டும் குறைக்கப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், “பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்த அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே பாடங்களைக் குறைப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து அறிவிப்பார்.

பள்ளி மாணவர்கள் சேர்க்கை இந்த மாத இறுதி வரை நடக்கும். அதேபோல, மாணவர்கள் தங்களுடைய பாடங்கள் குறித்த சந்தேகங்களை 14474 என்ற இலவச உதவி எண்ணில் தொடர்பு கொண்டு கேட்கலாம்.

இந்த உதவி எண் மூலம், காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் தங்களுடைய சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அடுத்த மாதம் முதல் இந்த எண் பயன்பாட்டுக்கு வரும்.

மேலும், பள்ளிகள் திறந்தாலும் கண்டிப்பக பள்ளிக்கு வர வேண்டும் என்ற கட்டாயம் இருக்காது. விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம்” என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Continue Reading
தமிழ்நாடு5 hours ago

அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்கள்!

சினிமா செய்திகள்7 hours ago

எஸ்.பி.பியின் மருத்துவக் கட்டணம் சர்ச்சை.. பேஸ்புக்கில் வீடியோ போட்ட சரண்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்10 hours ago

உங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 4 வரை)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்10 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (28/09/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்10 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/09/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/09/2020)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (27/09/2020)

இந்தியா2 days ago

இன்று ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் மோடி உரை.. என்னவெல்லாம் பேசுவார்!

தமிழ்நாடு2 days ago

மாணவர்களுக்குப் பாடங்களில் சந்தேகமா? இலவச உதவி எண் அறிவிப்பு!

சினிமா செய்திகள்2 days ago

மண்ணுக்குள் மறைந்தார் SPB.. 72 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்… சோகத்தில் தமிழகம்!

வேலை வாய்ப்பு11 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்2 weeks ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்4 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்2 months ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்7 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்7 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்7 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்7 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்7 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்7 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: