Connect with us

பல்சுவை

மேனியை பளபளப்பாக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

Published

on

வெயில் காலத்தில் உங்கள் மேனி வறண்டு போகிறதா? கவலை வேண்டாம் இதோ உங்களுக்கான சில குறிப்புகள்…

அழகு குறிப்புகள்:

  • தக்காளிச் சாறுடன் சிறிது மஞ்சள் கலந்து அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் களித்து கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

 

  • தேங்காய் எண்ணெயில் சிறிது மஞ்சள் கலந்து உடம்பில் தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் மேனி பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

 

  • இளம் சூடான நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.

 

  • ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும்.

செய்திகள்

இந்தியருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு… வாழ்த்துகள் அபிஜித் பானர்ஜி…

Published

on

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி பொருளியல் நிபுணர்கள் அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகியோர் இந்த ஆண்டு பொருளாதாரதிற்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வறுமையை ஒழிப்பதற்கான முன்னோடி திட்டங்களை வகுத்ததற்கான பொருளியல் நிபுணர்கள் 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு வென்ற நிபுணர்களில் ஒருவரான அபிஜித் பானர்ஜி, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டூஃப்லோ கணவர் – மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 2019-ம் ஆண்டு பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது.

Continue Reading

பல்சுவை

மனிதனுக்கு ஏற்படும் பக்கவாதத்தைப் பற்றிய ஒரு அலசல்!!

Published

on

மூளை இயக்கங்களில் ஏதேனும் தடை உண்டாகும் நேரங்களில் ஏற்படுவதுதான் பக்கவாதம். மூளைக்குச் செல்லும் ரத்தநாளங்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தில் தடங்கல் ஏற்பட்டால் மூளைச் செல்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதும் தடையாகிறது.

இதனால் அவை செயலிழக்க ஆரம்பித்து விடுகின்றன. இதன் காரணமாக அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் உடல் பாகங்கள் தங்கள் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும். இப்படி ஏற்படும் பக்க வாதத்திற்கு “ஐசெமிக் ஸ்ட்ரோக்” (Ischemic stroke) என்று பெயர்.

மூளைக்குச் செல்லும ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு ரத்தப் போக்கு அதிகமாகும் சமயங்களிலும் பக்கவாதம் உண்டாகும். இதற்கு “ஹெமராஜிக் ஸ்ட்ரோக்” என்று பெயர்.

எனவே, பக்கவாதம் என்னும் இந்நோய் முழுக்க முழுக்க மூளையின் பாதிப்பால் ஏற்படும் நோய்தான் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இன்றைய கால கட்டத்தில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 80 சதவீதத்தினர் “ஐசெமிக் ஸ்டோரோக்”-னால்தான் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வகை ஸ்ட்ரோக்கிலும் “திரம்போடிக்”(Thrombolytic) மற்றும் “எம்போலிக்”(Embolytic) என இரு வகைகள் உள்ளது. இந்த இருவகை பக்கவாதமும் ரத்த ஓட்டத் தடை, ரத்தம் உறைதல் போன்ற காரணங்களினால் ஏற்படுவதாகும்.

மினி ஸ்ட்ரோக் தற்காலிகமாககக உண்டாகும் பக்கவாத நோயாகும். இந்தப் பிரச்சனைக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கப்பட்டால் பக்கவாதத்திலிருந்து உடனடியாக விடுபடலாம். சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் “ஐசெமிக் ஸ்டோரோக்” நிலை உண்டாகிவிடும்.

மீதமுள்ள 20 சதவீதத்தினர், “ஹெமராஜிக் ஸ்ட்ரோக்”கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூளை பாதிப்பு:

மூளையின் வலது பகுதி பாதிக்கப்பட்டால் உடலின் இடது பக்க உறுப்புகளும், மூளையின் இடது பகுதி பாதிக்கப்பட்டால் உடலின் வலதுபக்க உறுப்புகளும் செயலிழந்து விடுகின்றன.

பக்கவாதத்தின் அறிகுறிகள்:

உடலின் ஒரு பகுதியில் எடை குறைவு ஏற்படுதல், சரியாகப் பேச முடியாமல் போகுதல், ஒரு பக்க கண்ணில் பார்வைக் கோளாறு, திடீரென உண்டாகும் தலைவலி, தலைசுற்றல் போன்றவை பக்கவாத நோயின் அறிகுறிகளாகும்.

இந்நோயால் வருடத்திற்கு சுமாராக 50,000 பேர் பாதிக்கப்படுகிறார்கள். இந்நோய் எல்லா வயதினரையும் தாக்கும் நிலை இருந்தாலும், வயதான முதியவர்களையே மிக அதிகமாக தாக்கும்.

ரத்த அழுத்தம் அதிகமாகும் போதும், அதிக அளவு கொழுப்பு சேர்ந்துவிடும் நிலையும், இதயத்துடிப்பு சீராக இல்லாத போதும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் பக்கவாத நோய் ஏற்படுவதற்கு சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளது.

மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்ட உடனேயே காலம் தாழ்த்தாமல் டாக்டரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்நோயினை மாத்திரைகள், அறுவைச் சிகிச்சைகள் போன்றவற்றின் மூலம் குணப்படுத்தலாம். ரத்த அழுத்த பரிசோதனை போன்றவற்றின் அடிப்படையில் நோயின் தீவிரம் கண்டறியப்பட்டு, அதைப் பொறுத்தே சிகிச்சைகள் அமையும். தற்காலிக பக்கவாத நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில் அது நிரந்தர பக்கவாத நோயாக மாறிவிடும்.

முன்னேறி வரும் மருத்துவத்துறையில் எல்லா நோய்களுக்கும் புதிய சிகிச்சை முறைகள் இருப்பது போல் பக்கவாத நோயைக் குணப்படுத்தவும் அநேக புதிய முறைகள் உள்ளன. எனவே, இவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த நோயும் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் தீர்வு நிச்சயம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. இது பக்கவாத நோய்க்கும் பொருந்தும்.

Continue Reading

பல்சுவை

கொழுப்பால் உடல் எடையைக் குறைப்பது எப்படி? பேலியோ டயட் பற்றித் தெரியுமா?

Published

on

பேலியோ டயட், பேலியோ, பேலியோ உணவுமுறை, பேலியோ டயட் உண்மையா, paleo diet, paleo diet in tamil, paleo diet news, paleo diet articles, paleo diet tips

பொதுவாக உடல் எடை குறையக் கொழுப்பைக் குறைக்கவோ தவிர்க்கவோ சொல்வதைத்தான் நாம் கேட்டிருக்கிறோம்.

ஆனால் இந்தப் பேலியோ டயட் சாப்பிடுபவர்கள் நேரடியாகக் கொழுப்பை உணவாகச் சேர்த்துக் கொள்கிறார்கள் என்று கேள்விப்படும்போது ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக உள்ளதல்லவா? முல்லை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்று நாம் கேள்விப்பட்டு இருப்போம்.

அது போலத் தான் பேலியோ டயட்டும். உடல் எடை மட்டுமல்ல, தோற்றம் பொலிவடைந்து வயதும் குறைந்து போகும் என்றால் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுகிறதல்லவா?

கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிர்ப்பதுதான் பேலியோ டயட். முந்திரிப் பருப்பை நெய்யில் வருத்துச் சாப்பிடுங்கள்.கொழுப்பை மட்டும் வாங்கி வந்து பிரை பண்ணி சாப்பிடுங்கள். என்றால் கேட்பதற்கே வித்தியாசமாக இருக்கிறதா இல்லையா?

உண்மையில் இது புதிய முறையல்ல.பழைய காலங்களில் சாப்பிட்டதைப்போல அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களைத் தவிர்த்து நல்ல கொழுப்புள்ள இறைச்சி, மீன்கள், முட்டை, விதைகள், கொட்டைகள் ஆகியவற்றை உண்பதே பேலியோ டயட்.

காலையில் காய்கறி பொரியல், பகலில் பன்னீர் டிக்கா, சீஸ், சிக்கன் சூப், மட்டன் சாப்ஸ், இரவில் ஆப் பாயில், பன்னீர் மறுபடியும் பொரியல் இதுதான் பேலியோ டயட்.

இது எடைக்குறைப்புக்கான பிரத்யேக டயட் அல்ல.இதைப் பின்பற்றினால் எடைக்குறைப்பு தானாகவே நிகழும்.தேவையில்லாத கொழுப்பு கரைந்து உடல் வலுவடையும்.

இந்த உணவு முறைதான் இப்போது உலகைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. பரீட்சித்துத்தான் பாருங்களேன்!

Continue Reading
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 hour ago

உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (11/12/2019)

வேலை வாய்ப்பு10 hours ago

தஞ்சாவூர் மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை!

வீடியோ செய்திகள்11 hours ago

பெட்ரோல் பங்கில், தொடர்ந்து அளவு குறைத்து ஏமாற்றியதால் வாடிக்கையாளர்கள் போராட்டம்

வீடியோ செய்திகள்11 hours ago

படங்கள் இல்லாதனால Web Series பண்ண வந்துட்டேனா?

வீடியோ செய்திகள்11 hours ago

“காசு வேண்டாம்.. ஆசி போதும்”- சென்னை டிராபிக்கை சரிசெய்யும் மூதாட்டியின் சேவை

வீடியோ செய்திகள்11 hours ago

கடலூரில் ரூ.25-க்கு ஒரு கிலோ வெங்காயம்: முண்டியடிக்கும் மக்கள்

வீடியோ செய்திகள்11 hours ago

ஷாருக் கான் மனைவிக்கு உதவும் வீடியோ இணையத்தில் வைரல்

Keerthi Suresh - Rajinikanth - Thalaivar 168
சினிமா செய்திகள்18 hours ago

#Thalaivar168: ரஜினிகாந்த் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்!

வணிகம்18 hours ago

எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்கள்; இதோ உங்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

வணிகம்18 hours ago

5% ஜிஎஸ்டி 6 சதவீதமாக உயர்த்த வாய்ப்பு; எந்த பொருட்கள் விலை எல்லாம் உயரும்!

வேலை வாய்ப்பு4 weeks ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா5 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா3 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு4 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா5 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

வேலை வாய்ப்பு3 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு4 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு5 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்4 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்5 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

வீடியோ செய்திகள்11 hours ago

பெட்ரோல் பங்கில், தொடர்ந்து அளவு குறைத்து ஏமாற்றியதால் வாடிக்கையாளர்கள் போராட்டம்

வீடியோ செய்திகள்11 hours ago

படங்கள் இல்லாதனால Web Series பண்ண வந்துட்டேனா?

வீடியோ செய்திகள்11 hours ago

“காசு வேண்டாம்.. ஆசி போதும்”- சென்னை டிராபிக்கை சரிசெய்யும் மூதாட்டியின் சேவை

வீடியோ செய்திகள்11 hours ago

கடலூரில் ரூ.25-க்கு ஒரு கிலோ வெங்காயம்: முண்டியடிக்கும் மக்கள்

வீடியோ செய்திகள்11 hours ago

ஷாருக் கான் மனைவிக்கு உதவும் வீடியோ இணையத்தில் வைரல்

இந்தியா2 days ago

காதலுக்கு கண் இல்லைதான்; அதற்கென்று ரயிலில் இப்படியே மோசமாக நடந்துகொள்வது?

வீடியோ செய்திகள்2 days ago

முதல் லெட்டருக்கே செருப்படி தான்…!

வைரல் செய்திகள்2 days ago

மீன், மட்டன் விலையை தொட்டது வெங்காயம், முருங்கை விலை: மக்கள் வேதனை

வைரல் செய்திகள்2 days ago

அரசுப் பேருந்து மோதியதில் பிச்சைக்காரர் பலி

வீடியோ செய்திகள்2 days ago

சென்னையில் வெங்காயம் விலை சற்று குறைந்தது

Trending