பல்சுவை
என்னது இது.. கங்காரு குட்டி இப்படி வித்தியாசமாக பொறந்திருக்கு?


நியூயார்க் நகரில் கங்காருவுக்கு வெள்ளை நிறத்தில் குட்டி ஈன்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக கங்காருக்கள் அதன் வயிற்றில் உள்ள பையில் தான் குட்டிகளை ஈனும். எனவே, அது வெளியுலகத்திற்கு தெரியாது. அவ்வாறு வயிற்றுப் பையில் இருக்கும் குட்டிக்கு காது கேட்காது, கண்கள் தெரியாது, உரோமங்கள் இருக்காது.
அந்த வகையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நியூயார்க்கில் உள்ள அனிமெல் அட்வெஞ்சர் பூங்காவில் சிவப்பு சாம்பல் நிறத்திலான கங்காரு ஒன்று குட்டியை ஈன்றது. அது அப்படியே கங்காருவின் வயிற்றுப் பகுதியில் வளர்ந்து வந்தது.
இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தக் கங்காருவின் வயிற்றுப் பகுதியில் இருந்து கங்காருக்குட்டி வெளியே வந்தது. அதனைக் கண்ட பூங்கா ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் கங்காருக்கு சிறிதும் சம்பந்தமே இல்லாமல், வெள்ளை நிறத்தில் பிறந்துள்ளது.
உடனே அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க, நேரில் ஆய்வு செய்த விலங்கு ஆராய்ச்சியாளர்கள், இது மரபணு மாற்றத்தால் ஏற்பட்டிருக்கலாம் என்றனர். வெள்ளை கங்காருக் குட்டியின் போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அழகு குறிப்பு
முகம் பளபளப்பாக இருக்க இதை செய்யுங்கள்!


தினமும் 2 முறையாவது முகம் கழுவும் வழக்கம் இல்லை என்றால் உங்கள் முகத்தை பாதுகாக்க உடனே அதை துவங்குங்கள். வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். வெந்நீர் உங்கள் சருமத்தை உளர் தன்மை ஆக்கும். உங்கள் சருமத்தின் நீர்த்தன்மையை பாதிக்கும் சோடா பயன்படுத்துவதை தவிர்க்கவும். புகைக்கும் பழக்கம் உள்கள் சருமம் மற்றும் கூந்தலை பாதிக்கும்.
சிறிதளவு பால், கால் ஸ்பூன் எலுமிச்சைசாறு, ஒரு ஸ்பூன் கடலை மாவு, சிறிது கஸ்தூரி மஞ்சள் சேர்த்து பேஸ்டாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். பப்பாளி துண்டுகள், கற்றாழை ஜெல், சிறிது பால், கால் ஸ்பூன் சர்க்கரை ஆகியவை கலந்த பேஸ்டை 10 நிமிடங்கள் முகத்தில் மசாஜ் செய்து கழுவவும்.
தோலில் எண்ணெய், இறந்த செல்கள், பாக்டீரியாக்கள், முகப்பருக்கள் ஆகியவற்றை நீக்க வேம்பை பயன்படுத்துவது நல்லது. வேம்பின் இலையை அரைத்து சோப் போல பயன்படுத்தலாம். வேம்பில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகள், தோலின் நுண்ணுயிற்களை அழித்து முகம் பொலிவாக இருக்கும். முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை நீக்கவும் உதவும். சுருக்கங்களை நீக்கவும் வேம்பில் சக்தி உள்ளது.
உருளைக்கிழங்கு சாறு எடுத்து உதடு மற்றும் கன்னத்தை சுற்றி தடவி வர கருமை நீங்க சிறந்தது. லெமன் ஜுஸ் & ரோஸ் வாட்டர் சேர்த்து தடவி 10 – 15 நிமிடத்திற்கு பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
ஒரு க்ரீன் டீ பேக் அல்லது க்ரீன் டீத்தூளை நீரில் கொதிக்கவிட்டு தூளை வடிகட்டவும். காட்டன் பஞ்சில் எடுத்து முகம் முழுவதும தடவ வேண்டும். அது முகத்தில் உலர உலரக் கறைந்தது 3 முறை தடவி உலர விட்டுக் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முகப்பராமதிப்புக்குச் சிறந்த க்ரீன் டீ சருமத்தை பளபளக்க உதவும். இது முகத்திற்குச் சிறந்த டோனிங்காக செயல்படும்.
ஆரோக்கியம்
பாலக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!


பாலக்கீரையில் வைட்டமின் ஏ, பி, சி, புரதம், சுண்ணாம்பு, இரும்புச்சத்துகள் அதிகம் உள்ளன. இந்த கீரையை சமைக்காமல் இதன் தளிர்களை பச்சையாக மென்று சாப்பிடலாம். பாலக்கீரை ஒரு கீரை வகையைச் சேர்ந்த மூலிகைச் செடியாகும்.
பாலக்கீரையுடன் வேப்பிலை, ஓமம், மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் பெருவயிறு குறையும். பாலக்கீரை சாப்பிடுவதன் மூலம் அனிமீயா நோய் வராமல் தடுக்கலாம்.
பாலக்கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.
உஷ்ணத்தினால் நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு இருந்தாலும் போய் விடும். இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தசோகை குணமாகும். ருசியின்மையை போக்கி பசியை உண்டாக்கும். பித்தம் சம்பந்தமான வாந்தி, கிறுகிறுப்பு போன்றவற்றை அகற்றும்.
கண் பார்வை நன்றாக தெரிய பாலக் கீரை உதவி செய்கிறது. கண்ணில் ஏற்படும் நோய்களான மாலைக்கண் நோய், மற்றும் கண்களில் ஏற்படும் அரிப்பு, போன்றவை வராமல் தடுக்கும் தன்மை கொண்டது.
ஆரோக்கியம்
தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!


-
சினிமா செய்திகள்1 day ago
நயன்தாரா படத்தில் நாயகி ஆனார் ‘செல்லம்மா’ பட பாடகி: ஹீரோ யார் தெரியுமா?
-
தமிழ் பஞ்சாங்கம்2 days ago
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/02/2021)
-
ஆரோக்கியம்1 day ago
பாலக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
-
தமிழ்நாடு1 day ago
முதல்வர் வேட்பாளர் நான் தான்: கமல் அறிவிப்பால் சரத்குமார் அதிர்ச்சியா?