Connect with us

பல்சுவை

காதலை சொல்ல ஏற்ற நாள் #ProposeDay

Published

on

காதலர் தினத்தை வரவேற்கும் விதமாக, ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே கொண்டாட்டம் தொடங்கிவிடுகிறது.

அப்படி இன்று காதலை சொல்வதற்கு ஏற்ற நாள் என #ProposeDay கொண்டாடப்படுகிறது.

நேற்று இதே போன்று #RoseDay கொண்டாடப்பட்டது.

காதலர் தினத்தின் இந்த கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கலாச்சார அமைப்புகள் எதிர்த்து வந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் அதைக் கொண்டாடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே தான் வருகின்றது.

பல்சுவை

மருத்துவ குறிப்புகள்..!

Published

on

1. மணத்தக்களிக் கீரையுடன் தேங்காய், பாசிப்பருப்பு ஆகிய  இரண்டையும் சேர்த்து சமைத்துச் சாப்பிடுவதால் தொண்டைப்புண் மற்றும் குடல் புண் குணமாகும்.

2.  வாரம்  ஒருமுறை முருங்கைக்கீரை சாப்பிட, ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

3. தினமும் காலையில் தேய்காய் பால் குடிப்பதால், நமக்கு தேவையான நார்சத்து, வைட்டமின் சி, இ, பி1, பி3, பி5 ஆகிய சத்துக்கள் கிடைக்கின்றது. இதனால் உடல் எடை குறையும்.

 

Continue Reading

பல்சுவை

சானிடைசரை நீங்கள் சரியாகப் பயன்படுத்துகிறீர்களா? சானிடைசர் / சோப் கையை சுத்தப்படுத்த எது சிறந்தது?

Published

on

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், நாம் தனிநபர் பாதுகாப்பில் கவனமாக இருப்பது நல்லது. எனவே அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பு சானிடைசரை எவ்வாறு கையில் பயன்படுத்த வேண்டும் என்று விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்தியர்களாகிய நாம், சானிடைசரை சரியாகப் பயன்படுத்தி கொரோனா கிருமிகளைக் கொல்வது எப்படி என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

சோப், சானிடைசர் இரண்டில் எது பெஸ்ட்?

கைகளை கழுவ சோப் போட்டு கழுவும் போது தான், கையில் உள்ள கிருமிகள் எல்லாம் அழியும். சானிடைசரை விட சோப் மற்றும் தண்ணீர் தான் கைகளை கழுவ ஏற்றதாம்.

சரியான சானிடைசரை தேவு செய்வது எப்படி?

சோப் மற்றும் தண்ணீர் இல்லை என்றால் 60 சதவீதம் ஆல்கஹால் சேர்க்கப்பட்ட சானிடைசரை பயன்படுத்தலாம். ஆல்கஹால் சேர்க்கப்பட்ட சானிடைசர் வேகமாக கிருமிகளைக் கொல்லும். ஆனால் சானிடைசர் எல்லா கிருமிகளையும் கொல்லாது.

65 சதவீதம் முதல் 95 சதவீதம் வரை ஆல்கஹால் சேர்க்கப்பட்ட சானிடைசர்கள் தான் கிருமிகளை வேகமாகக் கொல்லும். கிருமிகளைக் கொல்கிறதோ இல்லையோ, கிருமிகளை வளர விடாமல் சானிடைசர்கள் தடுக்கும்.

சானிடைசர்களை பயன்படுத்துவது எப்படி?

சானிடைசரை உள்ளங் கையில் போட்டு இரண்டு கைகள் முழுவதும் காயும் வரை பூச வேண்டும்.
அதிக சானிடைர்களை பயன்படுத்தி அதை துடைத்து எடுப்பது சரியல்ல. பொதுவாக சானிடைசர் பயன்படுத்தும் போது கிருமிகளைக் கொல்ல 30 நொடிகள் வரை நேரம் எடுத்துக்கொள்ளும்.

எண்ணெய் பட்ட கையில் சானிடைசர் பயன்படுத்தலாம்?

கைகளில் மண் அல்லது எண்ணெய் இருக்கும் போது சானிடைசர் பயன்படுத்துவது பயன் அளிக்காது. இது போன்ற சமயங்களில் சோப் பயன்படுத்துவதே சிறந்தது என்று பரிந்துரைக்கப்படுகிறது.

சானிடைசரால் கெமிக்கல் / ரசாயனங்களை கைகளிலிருந்து நீக்க முடியாது?

சானிடைசர் கைகளைச் சுத்தப்படுத்தப் பயன்படும். ஆனால் பூச்சிக்கொல்லி அல்லது பிற இரசாயனங்கள் கைகளிலிருந்தால் இது மேலும் அதிக பாதிப்பையே ஏற்படுத்து.

சானிடைசரை மதுவிற்குப் பதிலாகக் குடிக்கலாமா?

சானிடைசரில் ஆல்கஹால் சேர்க்கப்படுவது உன்மை என்றாலும், அதனுடன் பிற இரசாயனங்களும் சேர்க்கப்படுவதால், சானிடைசரை குடித்தால் அது விஷமாகிவிடும் என்று எச்சரிக்கப்படுகிறது.

Continue Reading

பல்சுவை

வெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களை இயற்கை முறையில் காப்பது எப்படி?

Published

on

சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படத்தை நம்முள் பலரும் பார்த்திருப்போமா என்று தெரியாது.

அதில் ஒரு காட்சியில், கூட்டமாக வரும் வெட்டுக்கிளிகள் விவசாயிகள் விளைவித்த பயிர்கள் அனைத்தையும் தின்று அழித்துவிடும். அப்படி இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பயிர்களைக் கூட்டமாகச் சென்று அழிக்க தொடங்கியுள்ளன.

இப்படி விளை பயிர்களை வெட்டுக்கிளிகள் அழிக்கத் தொடங்கினால், உணவு பற்றாக்குறை பெரும் அளவில் அதிகரிக்கும். எனவே தமிழகத்துக்கு இது போன்ற ஒரு பாதிப்பு வருவதற்கு முன்பு அதிலிருந்து நம்மை இயற்கை முறையில் தற்காத்துக்கொள்வது எப்படி என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

பூண்டு தண்ணீர் தெளித்தல்

பூண்டு தண்ணீரைப் பயிர்களின் மீது தெளிக்கும்போது அது வெட்டுக்கிளிகள் மட்டுமல்லாமல் பிற பூச்சிகளைக் கொல்லும். எனவே இரண்டு முழு பூண்டுக்கு 10 கப் தண்ணீர் எடுத்துக்கொண்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் ஒரு இரவு முழுவதும் அந்த நீரை வைத்திருந்து காலையில் அதை பயிர்களின் மீது தெளித்தால் வெட்டுக்கிளிகள் பயிர்களை அண்டாது.

விட்டில் உள்ள மாவை வைத்து வெட்டுக்கிளிகளை அளிப்பது எப்படி?

பசைக்கு பயன்படுத்தும் மாவு பொருட்களை அப்படியே பயிர்களின் மீது தூவி விடுவதன் மூலம் வெட்டுக்கிளிகளின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். அதை சாப்பிடும் போது வெட்டுக்கிளிகளின் வாய் ஒட்டிக்கொள்ளும் பயிர்களை அழிக்க முடியாது.

பறவைகள் மற்றும் கோழிகள்

பறவைகள் மற்றும் கோழிகள் இயற்கையாகவே வெட்டுக்கிளிகளை வேட்டையாடி உண்பவை. எனவே அவற்றை விளை பயிர்களுக்கு இடையில் விடும் போது வெட்டுக்கிளிகளைத் தின்று அளித்துவிடும்.

இவை பெரும் கூட்டமாக வரும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து எந்த அளவிற்கு அளிக்கும் என்பது மட்டும் தரவில்லை. இருப்பினும் இதுபோன்ற ஒரு மோசமான சூழல் தமிழ்நாட்டிற்கு வரும் முன்பு நம்மை எப்படி தற்காத்துக்கொள்வது என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

தமிழ்நாட்டிற்கு இப்படிப் பாதிப்பு வரவில்லை என்றாலும், பயிர்களை அழித்து வரும் சில வெட்டுக்கிளிகள் மற்றும் பூச்சிகளை இப்படி அழிக்கலாம்.

Continue Reading
பர்சனல் ஃபினாஸ்20 mins ago

பிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா?

வேலை வாய்ப்பு20 mins ago

கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு4 hours ago

சென்னையில் மோடி பிறந்தநாள் விழாவில் வெடி விபத்து.. சிதறி ஓடிய கூட்டம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்5 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (19/09/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்5 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/09/2020)

வேலை வாய்ப்பு21 hours ago

10 ஆம் வகுப்புத் தேர்ச்சி / MBA படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

பல்சுவை21 hours ago

மருத்துவ குறிப்புகள்..!

வேலை வாய்ப்பு22 hours ago

நைனிடால் வங்கியில் வேலைவாய்ப்பு!

இந்தியா22 hours ago

ரயில் கட்டணம் உயர வாய்ப்பு.. அதிர்ச்சியில் பயணிகள்!

வணிகம்22 hours ago

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட பேடிஎம் என்ன காரணம்!

வேலை வாய்ப்பு10 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்1 week ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்1 month ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்6 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்6 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்6 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: