பல்சுவை
புத்துணர்வூட்டும் ‘புதினா டீ’ !


ஹெர்பல் டீ வகைகளில் முக்கியமான ஒன்று புதினா டீ. பிரெஷ் புதினா இலைகள் அல்லது வெயிலில் உலர்த்திய இலைகள் கொண்டு தயாரிப்பதே இந்த டீ.
தினமும் தேனுடன் கலந்து அருந்துவதால் சரும பாதிப்புகளை வெகுவாக குறைக்கலாம். புதினாவின் மணமும் சுவையும், இதனை அருந்தும்போது நம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், முகச் சுருக்கங்கள் போக்கி இளமை தோற்றம் பெற உதவும்.
தினம் தேநீரில் புதினாவைச் சேர்ந்து பருகினால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுவதில் புதினா முக்கியப்பங்கு வகிக்கிறது.
வயிற்று வலியைப் போக்கப் புதினா உதவுகிறது.
இதய நோய், நரம்பு மண்டல நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றைத் தடுக்க புதினா உதவுகிறது.
பல்சுவை
வைரல் வீடியோ: Zoom அழைப்பில் பேசிக் கொண்டிருந்த கணவருக்கு முத்தமிட முயன்ற மனைவி; அடுத்து நடந்தது…


கடந்த இரு வாரங்களாக ஒரு ஜூம் கால் வீடியோவில் நடந்த சம்பவம் இணையத்தை கலக்கி வருகிறது.
நடுத்தர வயதுடைய நபர் ஒருவர், ஜூம் அழைப்பில் ஜிடிபி குறித்தும், இன்னபிற பொருளாதார விஷயங்கள் குறித்தும் தன் வீட்டில் அமர்ந்தபடி உரையாற்றி வருகிறார். அப்போது அவருக்கு அருகில் வரும் அவரது மனைவியென்று சொல்லப்படும் பெண், கன்னத்தில் முத்தமிட முயல்கிறார். தான் ஜூம் காலில் இருப்பதால், சட்டென்று மனைவியின் முத்தத்தைத் தவிர்க்கும் அந்தக் ‘கறார்’ கணவர், ‘என்ன நான்சென்ஸ் இது. நான் ஜூம் அழைப்பில் இருக்கிறேன்’ என்று சிடுசிடுக்கிறார்.
இதனால் அந்த மனைவியும் பரிதாபமாக விலகிச் செல்கிறார். இந்த வைரல் சம்பவத்தில் இரு விஷயங்கள் பெரிய விவாதங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. முதலாவதாக, மனைவி கொடுத்த முத்தத்தை வாங்கிக் கொள்ள அந்த கணவர் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. இரண்டாவது, அலுவலக அழைப்பின் ஜூம் காலில் இருக்கும் போது, ஒரு மனிதர் எப்படி ரொமான்ஸ் செய்ய முடியும் என்றும் இணையத்தில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.
வைரல் வீடியோ:
Zoom call …..so funny 😄 😄😄pic.twitter.com/6SV62xukMN
— Harsh Goenka (@hvgoenka) February 19, 2021
அதற்கு வந்த ரியாக்ஷன்கள்,
Haha. I nominate the lady as the Wife of the Year. And if the husband had been more indulgent and flattered, I would have nominated them for Couple of the Year but he forfeited that because of his grouchiness! @hvgoenka https://t.co/MVCnAM0L3W
— anand mahindra (@anandmahindra) February 19, 2021
the wife probably doesn’t know it’s a video call instead of an audio one? 🤔
😄 tho i don’t think this action is appropriate, it at least reveals she’s happy & relaxed in her marriage. no? 👫🏻💝— 🦄TIRzah🌿🌸✨ (@TIRzahLookup) February 19, 2021
An ultimate #WorkFromHome #StressBuster (for attendees of the meeting) https://t.co/gsft93VWPm
— Deepak Kumar Vasudevan (@lavanyadeepak) February 21, 2021
ஆரோக்கியம்
பழம் எப்போது சாப்பிடலாம்..? – உணவுக்கு முன்பா, பின்பா?


உடல் ஆரோக்கியத்துக்கு தினமும் பல வகை பழங்களைச் சாப்பிட வேண்டும். அதே நேரத்தில் நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்கள் மற்றும் உடல் எடைக் குறைப்பில் ஈடுபட்டிருப்பவர்கள் பழங்களைச் சாப்பிடுவதில் தனிக் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் என்றால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை பழங்கள் அதிகரிக்கக்கூடும்.
அதே நேரத்தில் பழத்தின் முழு பலனை எப்போது சாப்பிட்டால் பெறலாம்? இது குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா கூறியதாவது:-
பழங்களில் மிக அதிக ஊட்டச்சத்துகள் நிரம்பி இருக்கின்றன. அதில் வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி-ஆகிசிடன்ட் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான பொருட்கள் இருக்கின்றன. அதே நேரத்தில் உணவுக்குப் பின் பழத்தைச் சாப்பிடுவது என்பது சரியான விஷயம் அல்ல. காரணம் பிரதான உணவின் புரதம், கார்ப்ஸ் மற்றும் கொழுப்புச் சத்துகளுடன் பழத்தின் சத்துகள் கரைந்து விடும். இதனால் பழங்களின் மூலம் மேலும் உடல் சர்க்கரை அளவு அதிகரிக்கவே செய்யும்.
பழங்களைப் பொறுத்தவரை அவற்றைச் சாப்பாட்டுடன் சாப்பிடாமல் தனியாக சாப்பிடுவது தான் அதிக பலனைக் கொடுக்கும். அப்படிச் சாப்பிடுவதன் மூலம் ஊட்டச்சத்துகள் அனைத்தும் உடலுக்குக் கிடைத்து, பசியையும் போக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆரோக்கியம்
முட்டையை மஞ்சள் கருவுடன் சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்குமா? – இந்த உண்மை ஷாக் கொடுக்கலாம்


முட்டை பொதுவாக உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்றும், ஒரு நாளைக்கு ஒரு முட்டையாவது சாப்பிட வேண்டும் என்றும் பலரும் சொல்லக் கேட்டிருபோபம். அதே நேரத்தில் முட்டையின் வெள்ளைப் பகுதியை நிறைய சாப்பிடலாம் என்றும், மஞ்சள் கருவில் அதிகம் கொலஸ்டிரால் இருப்பதாகவும் கேள்விப்பட்டு இருப்போம். அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது?
இது குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் முன்முன் கனேரிவால் கூறியதாவது:
முட்டையை முழுவதுமாக சாப்பிடுவது மிகவும் நல்லது. அதில் நிறைய ஆரோக்கியம் உள்ளது. மஞ்சள் கருவில் அதிக கொலஸ்டிரால் இருப்பதாக நாம் நினைக்கிறோம். ஆனால், அதில் உடலுக்கு நன்மை பயக்கும் ஃபாஸ்பர் லிபிட்கள் உள்ளன. இது ஒரு நல்ல கொழுப்பு ஆகும். இதன் மூலம் உடலில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். இந்தக் கொழுப்பு உடலுக்கு அவசியமாகும்.
முட்டையில் பிற ஊட்டச்சத்துகளும் நிரம்ப இருக்கின்றன. புரதம், பி வைட்டமின்கள், இறும்புச் சத்து, வைட்டமின் ஏ உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச் சத்துகள் அதிகம் முட்டையில் உள்ளது. ஒரு நாளைக்கு 1 அல்லது 2 முட்டைகளை தினமும் சாப்பிட்டு வரலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா1 day ago
மின்னல் வேகத்தில் பரவும் உருமாறிய கொரோனா; 10 மாநிலங்களுக்கு வல்லுநர் குழுவை அனுப்பிய மத்திய அரசு!
-
சினிமா செய்திகள்2 days ago
13 ஆண்டுகளுக்குப் பின் சினிமாவுக்கு வரும் இயக்குநர்… வடிவேலுவுக்கு அழைப்பு..!
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு!
-
சினிமா செய்திகள்2 days ago
தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டி… வெறித்தனமாக பயிற்சி செய்யும் ‘தல’ அஜித்!