ஆரோக்கியம்
Weight Loss – குளிர் காலத்தில் எடை குறைக்க உதவும் 3 காய்கறிகள்!


குளிர்காலத்தில் நம் உடலை கதகதப்புடன் வைத்துக் கொள்ளும் அதே நேரத்தில் தேவையான ஊட்டச்சத்துகளையும் அதற்கு அளிக்க வேண்டும். அதற்கு ஏற்ற 3 வகை காய்கறிகள் குறித்துப் பார்ப்போம். குறிப்பாக இந்த காய்கறிகள் குளிர் காலங்களில் நமக்கு அதிக பலன் கொடுக்கும்.
1.கேரட்
இந்த காய்கறியில் விட்டமின் ஏ, பி, பி2, பி3, சி, டி, இ மற்றும் கே சத்துகள் உள்ளன. இதன் மூலம் நல்ல கண் பார்வை தெரியும். வயதாவதையும் கேரட் தடுக்கும். இதய நோய்களைத் தடுத்து, முடி வளர்ச்சியிலும் உதவும். கேரட் உடலை சுத்திகரித்து குடலை சுத்தப்படுத்தும். கேரட்டை சாண்டுவிச், சாலட் போன்றவற்றில் அதிகம் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடையைக் குறைக்கலாம்.
2.சக்கரவல்லிக் கிழங்கு
உருளைக் கிழங்கிற்கு பதிலாக சக்கரவல்லிக் கிழங்கு நல்ல மாற்று. குளிர் காலத்தில் அதிகம் கிடைக்கும் கிழங்கு வகை இது. இதில் அதிக நார்ச்சத்து, பீடா- கரோடீன், விட்டமின் ஏ, பி6 மற்றும் சி விட்டிமின்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த கிழங்கு மலச் சிக்கலைப் போக்கி, சலி பிடிப்பதிலிருந்து உடலைப் பாதுகாக்கும். சக்கரவல்லிக் கிழங்கை அவித்துச் சாப்பிட்டால் அதிக பலன் தரும்.
3.பீட் ரூட்
இந்த காய்கறியை எப்போதும் அதிகம் சாப்பிட வேண்டும். குளிர் காலங்களில் மிக அதிகமாக பீட் ரூட்டை உட்கொள்ள வேண்டும். பீட் ரூட்டில் இரும்புச் சத்து, விட்டமின் ஏ, பி6 மற்றும் சி விட்டமின்கள் இருக்கும். கால்சியம், மாக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் மினரல்களும் பீட் ரூட்டில் அதிகம். உடலில் உள்ள கெட்ட கசிவுகளை நீக்குவதில் பீட் ரூட் நன்கு செயலாற்றும். இவை இல்லாமல் வெள்ளை இரத்த செல்களையும் அதிகமாக்கும் பீட் ரூட்.
ஆரோக்கியம்
பழம் எப்போது சாப்பிடலாம்..? – உணவுக்கு முன்பா, பின்பா?


உடல் ஆரோக்கியத்துக்கு தினமும் பல வகை பழங்களைச் சாப்பிட வேண்டும். அதே நேரத்தில் நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்கள் மற்றும் உடல் எடைக் குறைப்பில் ஈடுபட்டிருப்பவர்கள் பழங்களைச் சாப்பிடுவதில் தனிக் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் என்றால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை பழங்கள் அதிகரிக்கக்கூடும்.
அதே நேரத்தில் பழத்தின் முழு பலனை எப்போது சாப்பிட்டால் பெறலாம்? இது குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா கூறியதாவது:-
பழங்களில் மிக அதிக ஊட்டச்சத்துகள் நிரம்பி இருக்கின்றன. அதில் வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி-ஆகிசிடன்ட் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான பொருட்கள் இருக்கின்றன. அதே நேரத்தில் உணவுக்குப் பின் பழத்தைச் சாப்பிடுவது என்பது சரியான விஷயம் அல்ல. காரணம் பிரதான உணவின் புரதம், கார்ப்ஸ் மற்றும் கொழுப்புச் சத்துகளுடன் பழத்தின் சத்துகள் கரைந்து விடும். இதனால் பழங்களின் மூலம் மேலும் உடல் சர்க்கரை அளவு அதிகரிக்கவே செய்யும்.
பழங்களைப் பொறுத்தவரை அவற்றைச் சாப்பாட்டுடன் சாப்பிடாமல் தனியாக சாப்பிடுவது தான் அதிக பலனைக் கொடுக்கும். அப்படிச் சாப்பிடுவதன் மூலம் ஊட்டச்சத்துகள் அனைத்தும் உடலுக்குக் கிடைத்து, பசியையும் போக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆரோக்கியம்
முட்டையை மஞ்சள் கருவுடன் சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்குமா? – இந்த உண்மை ஷாக் கொடுக்கலாம்


முட்டை பொதுவாக உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்றும், ஒரு நாளைக்கு ஒரு முட்டையாவது சாப்பிட வேண்டும் என்றும் பலரும் சொல்லக் கேட்டிருபோபம். அதே நேரத்தில் முட்டையின் வெள்ளைப் பகுதியை நிறைய சாப்பிடலாம் என்றும், மஞ்சள் கருவில் அதிகம் கொலஸ்டிரால் இருப்பதாகவும் கேள்விப்பட்டு இருப்போம். அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது?
இது குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் முன்முன் கனேரிவால் கூறியதாவது:
முட்டையை முழுவதுமாக சாப்பிடுவது மிகவும் நல்லது. அதில் நிறைய ஆரோக்கியம் உள்ளது. மஞ்சள் கருவில் அதிக கொலஸ்டிரால் இருப்பதாக நாம் நினைக்கிறோம். ஆனால், அதில் உடலுக்கு நன்மை பயக்கும் ஃபாஸ்பர் லிபிட்கள் உள்ளன. இது ஒரு நல்ல கொழுப்பு ஆகும். இதன் மூலம் உடலில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். இந்தக் கொழுப்பு உடலுக்கு அவசியமாகும்.
முட்டையில் பிற ஊட்டச்சத்துகளும் நிரம்ப இருக்கின்றன. புரதம், பி வைட்டமின்கள், இறும்புச் சத்து, வைட்டமின் ஏ உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச் சத்துகள் அதிகம் முட்டையில் உள்ளது. ஒரு நாளைக்கு 1 அல்லது 2 முட்டைகளை தினமும் சாப்பிட்டு வரலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியம்
ஆரோக்கியம் நிறைந்த மீன் வகைகள் மற்றும் அதன் நன்மைகள்.. லிஸ்ட் இதோ!


ஒருவர் சாப்பிடும் உணவில் மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவு மீன். இதில் வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 போன்று ஏராளமான நியூட்ரியன்ட்கள் நிறைந்துள்ளன. இவை இரண்டும் பெரும்பாலான இந்தியர்களுக்கு மிக குறைவாக இருக்கிறது.
இதுதவிர மீன்களில் நல்ல கொழுப்பு மற்றும் அதிக புரோடீன் நிறைந்துள்ளது. மீன்களை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும். மேலும் இது உடலின் நோய் எதிர்ப்பு திறன், மூளை வளர்ச்சி மற்றும் அனீமியா உள்ளிட்டவைகளுக்கும் சிறந்தது.
மூன்று பக்கமும் நீர் சூழ்ந்த பகுதியில் இந்தியா அமைந்துள்ளது. இதுதவிர இந்தியாவில் அதிக ஆறுகள், ஏரி மற்றும் குளங்கள் நிறைந்துள்ளன. இதன் காரணமாக ஆண்டு முழுக்க எல்லா சமயங்களிலும் மீன் சாதாரணமாக கிடைக்கும் உணவாக இருக்கிறது.
எனினும், எந்த மீனை சாப்பிட வேண்டும் என உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் கிடைக்கும் மீன்களில் அதிக சத்துக்கள் நிறைந்த மீன் வகைகளை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ரோகு (Rohu- Carpo Fish)
இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இந்த மீன் அதிகம் கிடைக்கும். இதில் ஏராளமான புரோடீன் மற்றும் ஒமேகா 3 ரக கொழுப்பு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அனைத்து இந்தியர்களும் வாங்க கூடிய விலையில் இந்த மீன் கிடைக்கிறது. இதில் மெர்குரி அளவு குறைவாக உள்ளதால் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம்.
கட்லா (Catla- Bengal Carp)
இது சுத்தமான நீரில் கிடைக்கும் மீன் எனலாம். முழுமையான வளர்ந்த நிலையில், இந்த மீன் அதிகபட்சம் 2 கிலோ வரை எடை கொண்டிருக்கும். இது அதிக எண்ணெய் நிறைந்த மீன் ஆகும். இதில் அதிகளவு சல்பர் மற்றும் சின்க் நிறைந்துள்ளது. இது சரும ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு நல்லது.
Also Read: அதிகமா டீ குடிப்பவரா நீங்கள்? நல்லா டீ செய்ய தெரியுமா? இந்த சர்வேயை பாருங்க !
திரை வாளை (Indian Salmon)
இந்த மீன் இந்தியாவின் சால்மன் என்றும் கூறப்படுகிறது. இது நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியில் அதிகம் கிடைக்கும். இது விலை உயர்ந்த மீன் என்பதோடு, இதன் சுவையும் தூக்கலாக இருக்கும். இந்த மீனில் அதிகப்படியான அமினோ ஆசிட் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது.
அயல (Bangada – Horse Mackeral)
தென் பகுதி மற்றும் மத்திய இந்தியாவில் அதிகம் கிடைக்கும் மீன் இது. இதில் ஏராளமான ஒமேகா 3, வைட்டமின் டி மற்றும் செலனியம் நிறைந்துள்ளது. இது இதய ஆரோக்கியம், மூளை வளர்ச்சி, இரத்த அழுத்தம் என பல்வேறு பாதிப்புகளை சரி செய்யும்.
சங்கரா (Pink Perch)
இந்த மீனில் ஏராளமான புரோடீன் மற்றும் மிக குறைந்த அளவு மெர்குரி உள்ளது. இது அதிகளவு புரோடீன் தேவைப்படும் விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த மீன் ஆகும். மேலும் இது உடல் எடை குறைப்பு மற்றும் தசைகளை வலுவாக்க சிறந்தது. இந்த மீனும் அனைவரும் வாங்க கூடிய விலையில் கிடைக்கிறது.
வஞ்சிரம் (King Mackerel)
ஏராளமான புரோடீன், ஒமேகா 3, வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12 நிறைந்த மீன் இது. இது இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்வது, பார்வை குறைபாட்டை மேம்படுத்துவது, எலும்புகளை வலுவாக்குவது என பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. எனினும் இதில் மெர்குரி அளவு அதிகம் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் இந்த மீனை தவிர்ப்பது நல்லது.
வவ்வால் (Pomfret)
இது நாடு முழுக்க பிரபலமான மீன் ஆகும். இதில் குறைந்த அளவு எண்ணெய் உள்ளது. அதிக சுவை மட்டுமின்றி ஏராளமான அளவில் ஒமேகா 2 ஆசிட், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் டி நிறைந்து இருக்கிறது.
மத்தி (Sardines)
அதிகப்படியான டிஹெச்ஏ நிறைந்த மீன் இது. இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் ஞாபக சக்தியை தூண்டும். மேலும் மூளை வளர்ச்சிக்கும் இந்த மீன் சிறந்தது. இதில் ஏராளமான புரோடீன், வைட்டமின் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு மன அழுத்தத்தை போக்குகிறது.
கெளுத்தி (Cat Fish)
குறைந்த அளவு கலோரி அதிக புரோடீன் நிறைந்த மீன் இது. தவிர ஏராளமான நியூட்ரியன்ட்கள், வைட்டமின் பி12, செலினியம், ஒமேகா 3, ஒமேகா 6 பேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த மீன் சாப்பிடலாம். இது மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதய கோளாறு ஏர்படுவதை தடுக்கும் திறன் கொண்டுள்ளது. எனினும் இதில் மெர்குரி அளவு அதிகம் இருப்பதால் கருவுற்றவர்கள் இந்த மீன் சாப்பிட கூடாது.
-
இந்தியா1 day ago
மின்னல் வேகத்தில் பரவும் உருமாறிய கொரோனா; 10 மாநிலங்களுக்கு வல்லுநர் குழுவை அனுப்பிய மத்திய அரசு!
-
டிவி2 days ago
இந்த வாரம் ‘குக்கு வித் கோமாளி’-க்கு வரும் பிரபலங்கள் பட்டாளம்… செலிபிரிட்டி ரவுண்ட் புகைப்படம்!
-
கிரிக்கெட்1 day ago
100வது டெஸ்டில் விளையாடும் இஷாந்த் சர்மா; இந்திய அணியில் அவர் முதன்முறை தேர்வானபோது கோலி செய்த காரியம்
-
தமிழ் பஞ்சாங்கம்2 days ago
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/02/2021)