ஆரோக்கியம்
உங்கள் தொப்பை குறைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்!


உடலை ஸ்லிம்மாக காட்டிக்கொள்ள விரும்புபவர்கள் பெரும்பாழும் டைட் செய்வதைத்தான் கடைப்பிடிப்பார்கள். டைட் உடல் பருமனைக் குறைக்க ஒரு தீர்வு என்றாலும், உடற்பயிற்சியும் முக்கியம்.
எனவே வீட்டில் உடற்பயிற்சிகள் செய்து கொழுப்பைக் குறைப்பது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
ஓடுவது அல்லது நடைப்பயிற்சி செய்வது
உடற்பயிற்சி செய்யும் போது உடல் உள்ள அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பின் அளவை குறைக்கலாம். உடற்பயிற்சிகள் வயிற்றில் உள்ள கொழுப்பை மட்டுமல்லாமல் உடலில் பிற கொழுப்புகளையும் குறைக்க உதவும். ஓடுவதும், நடைப்பயிற்சி செய்வதும் வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும் சிறந்த உடற்பயிற்சிகளாக உள்ளன. இதை செய்ய நாம் வாங்க வேண்டியது ஷூ ஒன்றுதான். ஓடுவது அல்லது நடைப்பயிற்சி செய்வதில் எது சிறந்தது என்று கேட்டால், ஓடும்போது அதிக கரிகளைக் குறைக்க உதவும். நடைபயிற்சி செய்யும் போது அந்த அளவுக்கு கலோரிகளை எரிக்க முடியாது.
சைக்கிள்
சைக்கிள் ஓட்டாமல் வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க முடியாது. சைக்கிள் ஓட்டுவதால் வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறும். 30 நிமிடம் வேகமாகச் சைக்கிள் ஓட்டும் போது 250 முதல் 500 கலோரிகள் வரை குறைக்கலாம்.
ஆரோக்கியம்
பாலக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!


பாலக்கீரையில் வைட்டமின் ஏ, பி, சி, புரதம், சுண்ணாம்பு, இரும்புச்சத்துகள் அதிகம் உள்ளன. இந்த கீரையை சமைக்காமல் இதன் தளிர்களை பச்சையாக மென்று சாப்பிடலாம். பாலக்கீரை ஒரு கீரை வகையைச் சேர்ந்த மூலிகைச் செடியாகும்.
பாலக்கீரையுடன் வேப்பிலை, ஓமம், மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் பெருவயிறு குறையும். பாலக்கீரை சாப்பிடுவதன் மூலம் அனிமீயா நோய் வராமல் தடுக்கலாம்.
பாலக்கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.
உஷ்ணத்தினால் நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு இருந்தாலும் போய் விடும். இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தசோகை குணமாகும். ருசியின்மையை போக்கி பசியை உண்டாக்கும். பித்தம் சம்பந்தமான வாந்தி, கிறுகிறுப்பு போன்றவற்றை அகற்றும்.
கண் பார்வை நன்றாக தெரிய பாலக் கீரை உதவி செய்கிறது. கண்ணில் ஏற்படும் நோய்களான மாலைக்கண் நோய், மற்றும் கண்களில் ஏற்படும் அரிப்பு, போன்றவை வராமல் தடுக்கும் தன்மை கொண்டது.
ஆரோக்கியம்
தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!


ஆரோக்கியம்
பழம் எப்போது சாப்பிடலாம்..? – உணவுக்கு முன்பா, பின்பா?


உடல் ஆரோக்கியத்துக்கு தினமும் பல வகை பழங்களைச் சாப்பிட வேண்டும். அதே நேரத்தில் நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்கள் மற்றும் உடல் எடைக் குறைப்பில் ஈடுபட்டிருப்பவர்கள் பழங்களைச் சாப்பிடுவதில் தனிக் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் என்றால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை பழங்கள் அதிகரிக்கக்கூடும்.
அதே நேரத்தில் பழத்தின் முழு பலனை எப்போது சாப்பிட்டால் பெறலாம்? இது குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா கூறியதாவது:-
பழங்களில் மிக அதிக ஊட்டச்சத்துகள் நிரம்பி இருக்கின்றன. அதில் வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி-ஆகிசிடன்ட் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான பொருட்கள் இருக்கின்றன. அதே நேரத்தில் உணவுக்குப் பின் பழத்தைச் சாப்பிடுவது என்பது சரியான விஷயம் அல்ல. காரணம் பிரதான உணவின் புரதம், கார்ப்ஸ் மற்றும் கொழுப்புச் சத்துகளுடன் பழத்தின் சத்துகள் கரைந்து விடும். இதனால் பழங்களின் மூலம் மேலும் உடல் சர்க்கரை அளவு அதிகரிக்கவே செய்யும்.
பழங்களைப் பொறுத்தவரை அவற்றைச் சாப்பாட்டுடன் சாப்பிடாமல் தனியாக சாப்பிடுவது தான் அதிக பலனைக் கொடுக்கும். அப்படிச் சாப்பிடுவதன் மூலம் ஊட்டச்சத்துகள் அனைத்தும் உடலுக்குக் கிடைத்து, பசியையும் போக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.