ஆரோக்கியம்
வெந்தய ‘டீ’ நன்மைகள் தெரியுமா?


கிரீன் டீ, மசாலா டீ பருகியிருப்பீர்கள். இதோ, இப்போது வெந்தய டீயும் பிரபலமாகி வருகிறது. வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்றே பலர் நினைக்கிறார்கள்.
ஆனால் அதை தவிர்த்து மேலும் பல நன்மைகள் வெந்தய டீயில் உள்ளது. வெந்தயத்தை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து சூடாக குடிப்பதால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். உடலின் கெட்ட கொழுப்பை கரைத்து பருமனை குறைக்க உதவுகிறது.
வெந்தயத்தின் உள்ள அமினோ அமிலங்கள் உடலில் இன்சுலின் உற்கத்தியை தூண்டி விடும். ஆய்வின் படி வெந்தயம் இரத்தத்திலுள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை குறைக்கும் என கூறப்படுகிறது.
வெந்தயத்தை ஊற வைத்து முளைகட்டி சாப்பிடலாம். பொடி செய்து அதனை நீர் அல்லது மோரில் சேர்த்து குடிக்கலம். வெந்தயம் உடலில் தேங்கியுள்ள கொழுப்பை குறைக்க பெரிதும் உதவும்.
வெந்தயக் கீரை பயன்கள்
முடி வளர்ச்சியை அதிகரிக்கும். சருமத்தில் உள்ள தழும்புகளைப் போக்கும். கொழுப்பைக் குறைக்க உதவும். பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் சுரப்பை அதிகரிக்கிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.
ஆரோக்கியம்
Weight Loss – குளிர் காலத்தில் எடை குறைக்க உதவும் 3 காய்கறிகள்!


குளிர்காலத்தில் நம் உடலை கதகதப்புடன் வைத்துக் கொள்ளும் அதே நேரத்தில் தேவையான ஊட்டச்சத்துகளையும் அதற்கு அளிக்க வேண்டும். அதற்கு ஏற்ற 3 வகை காய்கறிகள் குறித்துப் பார்ப்போம். குறிப்பாக இந்த காய்கறிகள் குளிர் காலங்களில் நமக்கு அதிக பலன் கொடுக்கும்.
1.கேரட்
இந்த காய்கறியில் விட்டமின் ஏ, பி, பி2, பி3, சி, டி, இ மற்றும் கே சத்துகள் உள்ளன. இதன் மூலம் நல்ல கண் பார்வை தெரியும். வயதாவதையும் கேரட் தடுக்கும். இதய நோய்களைத் தடுத்து, முடி வளர்ச்சியிலும் உதவும். கேரட் உடலை சுத்திகரித்து குடலை சுத்தப்படுத்தும். கேரட்டை சாண்டுவிச், சாலட் போன்றவற்றில் அதிகம் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடையைக் குறைக்கலாம்.
2.சக்கரவல்லிக் கிழங்கு
உருளைக் கிழங்கிற்கு பதிலாக சக்கரவல்லிக் கிழங்கு நல்ல மாற்று. குளிர் காலத்தில் அதிகம் கிடைக்கும் கிழங்கு வகை இது. இதில் அதிக நார்ச்சத்து, பீடா- கரோடீன், விட்டமின் ஏ, பி6 மற்றும் சி விட்டிமின்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த கிழங்கு மலச் சிக்கலைப் போக்கி, சலி பிடிப்பதிலிருந்து உடலைப் பாதுகாக்கும். சக்கரவல்லிக் கிழங்கை அவித்துச் சாப்பிட்டால் அதிக பலன் தரும்.
3.பீட் ரூட்
இந்த காய்கறியை எப்போதும் அதிகம் சாப்பிட வேண்டும். குளிர் காலங்களில் மிக அதிகமாக பீட் ரூட்டை உட்கொள்ள வேண்டும். பீட் ரூட்டில் இரும்புச் சத்து, விட்டமின் ஏ, பி6 மற்றும் சி விட்டமின்கள் இருக்கும். கால்சியம், மாக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் மினரல்களும் பீட் ரூட்டில் அதிகம். உடலில் உள்ள கெட்ட கசிவுகளை நீக்குவதில் பீட் ரூட் நன்கு செயலாற்றும். இவை இல்லாமல் வெள்ளை இரத்த செல்களையும் அதிகமாக்கும் பீட் ரூட்.
ஆரோக்கியம்
திராட்சையில் இவ்வளவு நன்மைகளா? இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே?


வயிற்று வலி, உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் பிரச்சினைகள், மலச்சிக்கல், இரைப்பை, குடல் புண், வாய்ப்புண் ஆகியவற்றைக் குணப்படுத்தும். வாய்க்குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு சரியாகும்.
உலர் திராட்சை
இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ள உலர் திராட்சையைப் பெண்கள் தினமும் சாப்பிடுவதால் மாதவிடாயின்போது ஏற்படும் வலி கட்டுப்படும். தோல் நோய்களிலிருந்தும் ரத்தசோகை போன்ற பிரச்சினைகளிலிருந்தும் விடுபட உலர் திராட்சை உதவுகிறது.
இதில், பொட்டாசியம் அதிகம் நிரம்பி உள்ளதால் இதயத்துடிப்பைச் சீராக வைத்திருக்கவும் செய்கிறது. உடலில் உள்ள சர்க்கரையை கட்டுக்குள் வைக்கிறது.
கருப்பு திராட்சை
பாரம்பரிய மருத்துவத்தில் கருப்பு திராட்சை முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் உள்ள குணங்கள் பல பிரச்சனைகளை குணப்படுத்தும். மூல நோய் உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்தாகவும், கண் புரை வந்தால் நீக்கவும், சிறுநீரகச் செயல்பாட்டில் குறைகளைச் சரிசெய்யவும் பயன்படுகிறது.
இது மாலைக் கண் நோய் நீக்கி ஒளி தருகிறது. மேலும் பெண்களுக்குக் கருப்பை கோளாறுகளைத் தடுக்க வல்லது.
ஆரோக்கியம்
இரத்த சர்க்கரை அளவை சீர் செய்யும் ‘கிவி பழம்’!


பசலிப்பழம் என்று அழைக்கப்படும் சிட்ரஸ் வகையை சேர்ந்த கிவி பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. கனிமச்சத்துக்காளான போரான், அயோடின், இரும்புச்சத்து, விட்டமின்கள் ஏ,பி,சி,டி,ஈ மற்றும் கே போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.
வைட்டமின் சி, ஏ சத்துகள் நிறைந்த கிவி பழத்தில் ப்ளேவனாய்டு எனப்படும் பாலீபீனால் உள்ளது. அதிக நார்ச்சத்துள்ள கிவி பழத்தை சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரம் இருமுறை சாப்பிடலாம். மேலும், இது செரிமான கோளாற்றைச் சரி செய்யும்.
இப்பழம் இரத்த சர்க்கரை அளவை சீர் செய்து, பக்கவாதம், இதய நோய்களை தடுக்கிறது. மேலும், குழந்தைகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.