பல்சுவை
என்னது தங்கத்துல பர்கரா? புதுசா இருக்கே


கொலம்பியாவில் உள்ள ஒரு உணவகத்தில் 24 கேரட் தங்க பர்கர் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஜங்க் ஃபுட் என்றாலே எல்லாருக்கும் பிடித்தமான உணவாகவே மாறிவிட்டது. சுவை கூடுதலாக இருப்பதால் விலையை பற்றி மக்கள் கவலைப்படுவது இல்லை. வாடிக்கையாளர்களை கவருவது என்பது ஜங்க் ஃபுட் உணவகங்களுக்கு கற்றுத்தேர்ந்த கலை ஆகும்.
இந்த நிலையில், தற்போது கொலம்பியாவில் ஒரு உணவகம் 24 கேரட் தங்க பர்கரை செய்து அசத்தி உள்ளது. ‘ஓரோ மெக்கோய்’ என்பது அந்த பர்கரின் பெயர் ஆகும். முதலில் 24 கேரட் தங்கத்தில் நனைக்கபடும் இந்த பர்கரின் இடையே இறைச்சி மற்றும் சீஸ்தூண்டுகள் வைக்கப்படுகின்றது.
இதன் விலை கொலம்பியன் பீசோஸ் மதிப்பில் 2,00,000 பீசோஸ் ஆகும். இந்திய மதிப்பில் 4,191 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இன்னும் ஒரு ஆச்சர்யமான விஷயம் இங்கு சாதாரணமாக விற்கப்படும் பர்கரின் இந்திய மதிப்பு ரூ.807 ஆகும். கொலம்பியாவில் பிரபலமான உணவகம் என்பதால் மக்கள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
பல்சுவை
என்னது இது.. கங்காரு குட்டி இப்படி வித்தியாசமாக பொறந்திருக்கு?


நியூயார்க் நகரில் கங்காருவுக்கு வெள்ளை நிறத்தில் குட்டி ஈன்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக கங்காருக்கள் அதன் வயிற்றில் உள்ள பையில் தான் குட்டிகளை ஈனும். எனவே, அது வெளியுலகத்திற்கு தெரியாது. அவ்வாறு வயிற்றுப் பையில் இருக்கும் குட்டிக்கு காது கேட்காது, கண்கள் தெரியாது, உரோமங்கள் இருக்காது.
அந்த வகையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நியூயார்க்கில் உள்ள அனிமெல் அட்வெஞ்சர் பூங்காவில் சிவப்பு சாம்பல் நிறத்திலான கங்காரு ஒன்று குட்டியை ஈன்றது. அது அப்படியே கங்காருவின் வயிற்றுப் பகுதியில் வளர்ந்து வந்தது.
இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தக் கங்காருவின் வயிற்றுப் பகுதியில் இருந்து கங்காருக்குட்டி வெளியே வந்தது. அதனைக் கண்ட பூங்கா ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் கங்காருக்கு சிறிதும் சம்பந்தமே இல்லாமல், வெள்ளை நிறத்தில் பிறந்துள்ளது.
உடனே அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க, நேரில் ஆய்வு செய்த விலங்கு ஆராய்ச்சியாளர்கள், இது மரபணு மாற்றத்தால் ஏற்பட்டிருக்கலாம் என்றனர். வெள்ளை கங்காருக் குட்டியின் போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆரோக்கியம்
Weight Loss – குளிர் காலத்தில் எடை குறைக்க உதவும் 3 காய்கறிகள்!


குளிர்காலத்தில் நம் உடலை கதகதப்புடன் வைத்துக் கொள்ளும் அதே நேரத்தில் தேவையான ஊட்டச்சத்துகளையும் அதற்கு அளிக்க வேண்டும். அதற்கு ஏற்ற 3 வகை காய்கறிகள் குறித்துப் பார்ப்போம். குறிப்பாக இந்த காய்கறிகள் குளிர் காலங்களில் நமக்கு அதிக பலன் கொடுக்கும்.
1.கேரட்
இந்த காய்கறியில் விட்டமின் ஏ, பி, பி2, பி3, சி, டி, இ மற்றும் கே சத்துகள் உள்ளன. இதன் மூலம் நல்ல கண் பார்வை தெரியும். வயதாவதையும் கேரட் தடுக்கும். இதய நோய்களைத் தடுத்து, முடி வளர்ச்சியிலும் உதவும். கேரட் உடலை சுத்திகரித்து குடலை சுத்தப்படுத்தும். கேரட்டை சாண்டுவிச், சாலட் போன்றவற்றில் அதிகம் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடையைக் குறைக்கலாம்.
2.சக்கரவல்லிக் கிழங்கு
உருளைக் கிழங்கிற்கு பதிலாக சக்கரவல்லிக் கிழங்கு நல்ல மாற்று. குளிர் காலத்தில் அதிகம் கிடைக்கும் கிழங்கு வகை இது. இதில் அதிக நார்ச்சத்து, பீடா- கரோடீன், விட்டமின் ஏ, பி6 மற்றும் சி விட்டிமின்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த கிழங்கு மலச் சிக்கலைப் போக்கி, சலி பிடிப்பதிலிருந்து உடலைப் பாதுகாக்கும். சக்கரவல்லிக் கிழங்கை அவித்துச் சாப்பிட்டால் அதிக பலன் தரும்.
3.பீட் ரூட்
இந்த காய்கறியை எப்போதும் அதிகம் சாப்பிட வேண்டும். குளிர் காலங்களில் மிக அதிகமாக பீட் ரூட்டை உட்கொள்ள வேண்டும். பீட் ரூட்டில் இரும்புச் சத்து, விட்டமின் ஏ, பி6 மற்றும் சி விட்டமின்கள் இருக்கும். கால்சியம், மாக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் மினரல்களும் பீட் ரூட்டில் அதிகம். உடலில் உள்ள கெட்ட கசிவுகளை நீக்குவதில் பீட் ரூட் நன்கு செயலாற்றும். இவை இல்லாமல் வெள்ளை இரத்த செல்களையும் அதிகமாக்கும் பீட் ரூட்.
ஆரோக்கியம்
வெந்தய ‘டீ’ நன்மைகள் தெரியுமா?


கிரீன் டீ, மசாலா டீ பருகியிருப்பீர்கள். இதோ, இப்போது வெந்தய டீயும் பிரபலமாகி வருகிறது. வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்றே பலர் நினைக்கிறார்கள்.
ஆனால் அதை தவிர்த்து மேலும் பல நன்மைகள் வெந்தய டீயில் உள்ளது. வெந்தயத்தை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து சூடாக குடிப்பதால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். உடலின் கெட்ட கொழுப்பை கரைத்து பருமனை குறைக்க உதவுகிறது.
வெந்தயத்தின் உள்ள அமினோ அமிலங்கள் உடலில் இன்சுலின் உற்கத்தியை தூண்டி விடும். ஆய்வின் படி வெந்தயம் இரத்தத்திலுள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை குறைக்கும் என கூறப்படுகிறது.
வெந்தயத்தை ஊற வைத்து முளைகட்டி சாப்பிடலாம். பொடி செய்து அதனை நீர் அல்லது மோரில் சேர்த்து குடிக்கலம். வெந்தயம் உடலில் தேங்கியுள்ள கொழுப்பை குறைக்க பெரிதும் உதவும்.
வெந்தயக் கீரை பயன்கள்
முடி வளர்ச்சியை அதிகரிக்கும். சருமத்தில் உள்ள தழும்புகளைப் போக்கும். கொழுப்பைக் குறைக்க உதவும். பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் சுரப்பை அதிகரிக்கிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.
-
சினிமா செய்திகள்1 day ago
பட்டித்தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பிய ‘குட்டி ஸ்டோரி’ பாடலின் வீடியோ ரிலீஸ்; அடிச்சுத்தூக்கும் வைரல்!
-
கிரிக்கெட்1 day ago
INDvENG – “பைத்தியக்கார உலகம்…”- இங்கி., – இந்தியா தொடர் குறித்து மைக்கெல் வாகன் கடும் விமர்சனம்!
-
சினிமா செய்திகள்1 day ago
மது போதையில் தகராறு..? சண்டையிடும் நடிகர் விஷ்ணு விஷாலின் சிசிடிவி வீடியோ – உண்மை என்ன??
-
டிவி1 day ago
உச்ச கட்ட கோபத்தில் ‘குக் வித் கோமாளி’ ரசிகர்கள்… விஜய் டிவி-க்குக் குவியும் கண்டனங்கள்!