வேலை வாய்ப்பு
இந்திய அஞ்சல் துறையில் வேலை!

இந்திய அஞ்சல் துறையின் மகாராஷ்டிரா அஞ்சல் வட்டத்தில் காலியிடங்கள் 3650 உள்ளது. இதில் ‘கிராமின் டக் சேவாக்’ வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 3650
வேலை: BRANCH POSTMASTER (BPM)
வேலை: ASSISTANT BRANCH POSTMASTER (ABPM)
வேலை: DAK SEVAK
வயது: 01.11.2019 தேதியின்படி 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் உள்ளூர் மொழித்திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 60 நாட்கள் கால அடிப்படையிலான கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து தகுதியானவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பி நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர்களுக்குக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை வங்கிகளின் பணப் பரிவர்த்தனை அட்டைகளைப் பயன்படுத்தி ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: https://indiapost.gov.in அல்லது http://appost.in/gdsonline என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள file:///C:/Users/Dotcom/Downloads/Maharashtra-14.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.11.2019
வேலை வாய்ப்பு
கருவூல அலுவலகத்தில் வேலை!
தேனி மாவட்டம் கருவூல அலுவலகத்தில் காலியிடங்கள் 03 உள்ளது. இதில் அலுவலக உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
வேலை: அலுவலக உதவியாளர்
மொத்த காலியிடங்கள்: 03
வேலை செய்யும் இடம்: தேனி
தகுதி: 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது: குறைந்தபட்சம் 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: கருவூல அலுவலர், மாவட்டக் கருவூல அலுவலகம், மாவட்ட ஆட்சியாளர் வளாகம், மதுரை – தேனி மெயின் ரோடு, தேனி – 625531.
விண்ணப்பிக்கும் முறை: theni.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து, அதனுடன் தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.12.2019
வேலை வாய்ப்பு
ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை!

பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியிடங்கள் 16 உள்ளது. இதில் பொறியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 16
வேலை: Well Engineer – 02
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் Petroleum, Mechanical பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 3 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வேலை: Drilling Engineer – 02
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்ற பெற்றிருக்க வேண்டும் அல்லது Pretroleum Exploration பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்று 5 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வேலை: Geophysicist – 10
கல்வித்தகுதி: Application Geophysicist துறையில் முதுகலைப் பட்டம் பெற்று 5 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
‘வேலை: Chemist – 02
கல்வித்தகுதி: வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Chemical Engineering பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.45,000 – 50,000
வயது: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: வேலை அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 16.12.2019 முதல் 20.12.2019
நேர்முகத் தேர்வு குறித்த முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.oilindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
வேலை வாய்ப்பு
எல்ஐசி வீட்டு வசதி கழகத்தில் வேலை!

பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி-யின் வீட்டு வசதி கழகத்தில் காலியிடங்கள் 35 உள்ளது. இதில் உதவி மேலாளர்(சட்டம்) வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 35 (தமிழகத்திற்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன)
வேலை: ASSISTANT MANAGERS – LEGAL
மாத சம்பளம்: ரூ.32815 – 56405
வயது: 01.01.2019 தேதியின்படி 23 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சட்டத்துறையில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். உடன் கணினி குறித்த தெரிதல் திறனும் பெற்றிருப்பதுடன் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.lichousing.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கைவசம் வைத்துக்கொள்ளவும்.
மேலும் முழு விவரங்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.12.2019
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.01.2019