வேலை வாய்ப்பு
எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை!

ரிஷிகேஷில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 372. இதில் செவிலியர் அதிகாரி வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள. இதற்கு விண்ணப்பியுங்கள்.
வேலை: Nursing Officer (Staff Nurse Grade -II)
மொத்த காலியிடங்கள்: 372
மாத சம்பளம்: ரூ.9,300 – 34,800
வயது: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: B.sc (Hons), B.sc. Nursing, B.sc (Post-Certificatio), Post Basic B.Sc Nursing பட்டப்படிப்பை முடித்து Nurses மற்றும் Midwife in State, India Nursing Council-ல் பதிவு செய்திருக்க வேண்டும். அல்லது அதே துறையில் டிப்ளமோ முடித்துப் பதிவு செய்து 2 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழில் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.3000, ஓபிசி பிரிவினருக்கு ரூ.1,500, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.aiimsrishikesh.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கைவசம் வைத்துக்கொள்ளவும்.
மேலும் முழு விவரங்கள் அறிய https://www.aiimsrishikesh.edu.in/recruitments/group%20b%20-%20nursing%20officer%20%20-%20dr%20-%20website.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.12.2019
வேலை வாய்ப்பு
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு: தமிழக அரசின் தொல்லியல் துறையில் வேலை!

தமிழக அரசின் தொல்லியல் துறையில் காலியிடங்கள் 18 உள்ளது. இதில் அதிகாரி வேலைக்கு அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ் வெளியிட்டுள்ள இந்த வேலைக்கான விண்ணப்பியுங்கள்.
நிர்வாகம்: தமிழகத் தொல்லியல் துறை
தேர்வு வாரியம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC)
மொத்த காலியிடங்கள்: 18
வேலை: Archaeological Officer
மாத சம்பளம்: ரூ.36,200 – 1,14,800
கல்வித்தகுதி: 28.11.2019 தேதியின்படி கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் பண்டைய கால வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் முதுகலைப் பட்டம் அல்லது வரலாறு, இந்திய வரலாறு, தமிழ் உள்ளிட்ட துறையில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளங்கலை படிப்பில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டிருப்பது அவசியம்.
வயது: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். வயது வரம்பில் சலுகை கோரும் பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி உச்ச வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஒரு முறை பதிவுக்கட்டணமாக 150 ரூபாய் செலுத்த வேண்டும். தேர்வுக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எனவே, முதன் முதலாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் 250 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். ஏற்கனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கட்டணம் ரூ.250 மட்டும் செலுத்தினால் போதுமானது.
தேர்வுக்கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் அல்லது நேரடி வங்கி மூலமாகச் செலுத்த வேண்டும்.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெற http://www.tnpsc.gov.in/Notifications/2019_33_notifn_Archaeological_Officer.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 29.02.2020
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.12.2019
வேலை வாய்ப்பு
மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆய்வுக் கழகத்தில் வேலை!

மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆய்வுக் கழகத்தில் காலியிடங்கள் 66 உள்ளது. இதில் கிளார்க் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 66
வேலை: Upper Division Clerk (Group “C”)
காலியிடங்கள்: 14
மாத சம்பளம்: ரூ.5,200 – 20,200
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வேலை: Lower Division Clerk (Group “C”)
காலியிடங்கள்: 52
மாத சம்பளம்: ரூ.5,200 – 20,200
கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு செய்யும் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம்: புதுதில்லி, அவுரங்காபாத், சென்னை, லக்னோ சண்டிகர், கொல்கத்தா, கவுகாத்தி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்கும் முறை: www.ccras.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 19.12.2019
வேலை வாய்ப்பு
திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் வேலை!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள் 17 உள்ளது. இதில் ஆராய்ச்சி அதிகாரி, ஆராய்ச்சி உதவியாளர் வேலைகளை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 17
வேலை: Research Officer – 02
கல்வித்தகுதி: சமூக அறிவியல் பிரிவில் முதுகலை பட்ட் பெற்றிருப்பதுடன் வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.12,000
வேலை: Research Assistant – 14
மாத சம்பளம்: ரூ.8,000
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி குறித்த அறிதலும் பெற்றிருக்க வேண்டும்.
வேலை: Data Entry Operator – 01
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி குறித்த அறிதல் மற்றும் தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 11.12.2019 அன்று காலை 10.30 மணிக்கு
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Department of Lifelong Learning Gandhigram Rural Institute (Deemed to be University) Campus
தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
Dr.L. Raja
Project Director, Situation Analysis on Child Marriage in Dindugul District Centre for Lifelong Learning
The Gandhigram Rural Institute(Deemed to be University)
Gandhigram – 624 302. Tamilnadu
Mobile No: 9843656439, 9443677457
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
-
தினபலன்2 days ago
உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (07/12/2019)
-
சினிமா செய்திகள்18 hours ago
பெண்களை மதிப்பவன் தான் பாதுகாப்பான நாயகன்; தெலுங்கானா என்கவுண்டருக்கு ஆதரவாக நயன்தாரா!
-
தினபலன்1 day ago
உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (08/12/2019)
-
தமிழ் பஞ்சாங்கம்1 day ago
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (08-12-2019)