வேலை வாய்ப்பு
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை!

கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியிடங்கள் 1,060 உள்ளது. இதில் விரிவுரையாளர் வேலைகளுக்கு நேரடி மூலம் அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (http://trb.tn.nic.in/) புதன்கிழமை (நவ.27) வெளியிடப்பட்டுள்ளது.
வேலை: விரிவுரையாளர்(Lecturers)
காலியிடங்கள்: 1060
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Civil Engineering – 112
2. Mechanical Engineering -219
3. Electrical and Electronics Engineering – 91
4. Electronics and Communication Engineering -119
5. Instrumentation and Control Engineering – 03
6. Computer Engineering – 135
7. Information Technology – 06
8. Production Engineering – 06
9. Textile Technology – 03
10. Printing Technology – 06
11. English – 88
12. Mathematics – 88
13. Physics – 83
14. Chemistry – 84
15. Modern Office Practice – 17
மாத சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும்
வயது: 01.07.2019 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் பிசி, ஓபிசி பிரிவினர் ரூ.600 கட்டணமாகச் செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.300 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்தக் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்கலாம். கணினியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் விண்ணப்ப கடைசித் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்ததால் கடந்த 2018- ஆம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்துச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://trb.tn.nic.in/poli2019/poly.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
வேலை வாய்ப்பு
கருவூல அலுவலகத்தில் வேலை!
தேனி மாவட்டம் கருவூல அலுவலகத்தில் காலியிடங்கள் 03 உள்ளது. இதில் அலுவலக உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
வேலை: அலுவலக உதவியாளர்
மொத்த காலியிடங்கள்: 03
வேலை செய்யும் இடம்: தேனி
தகுதி: 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது: குறைந்தபட்சம் 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: கருவூல அலுவலர், மாவட்டக் கருவூல அலுவலகம், மாவட்ட ஆட்சியாளர் வளாகம், மதுரை – தேனி மெயின் ரோடு, தேனி – 625531.
விண்ணப்பிக்கும் முறை: theni.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து, அதனுடன் தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.12.2019
வேலை வாய்ப்பு
ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை!

பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியிடங்கள் 16 உள்ளது. இதில் பொறியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 16
வேலை: Well Engineer – 02
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் Petroleum, Mechanical பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 3 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வேலை: Drilling Engineer – 02
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்ற பெற்றிருக்க வேண்டும் அல்லது Pretroleum Exploration பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்று 5 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வேலை: Geophysicist – 10
கல்வித்தகுதி: Application Geophysicist துறையில் முதுகலைப் பட்டம் பெற்று 5 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
‘வேலை: Chemist – 02
கல்வித்தகுதி: வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Chemical Engineering பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.45,000 – 50,000
வயது: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: வேலை அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 16.12.2019 முதல் 20.12.2019
நேர்முகத் தேர்வு குறித்த முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.oilindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
வேலை வாய்ப்பு
எல்ஐசி வீட்டு வசதி கழகத்தில் வேலை!

பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி-யின் வீட்டு வசதி கழகத்தில் காலியிடங்கள் 35 உள்ளது. இதில் உதவி மேலாளர்(சட்டம்) வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 35 (தமிழகத்திற்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன)
வேலை: ASSISTANT MANAGERS – LEGAL
மாத சம்பளம்: ரூ.32815 – 56405
வயது: 01.01.2019 தேதியின்படி 23 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சட்டத்துறையில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். உடன் கணினி குறித்த தெரிதல் திறனும் பெற்றிருப்பதுடன் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.lichousing.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கைவசம் வைத்துக்கொள்ளவும்.
மேலும் முழு விவரங்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.12.2019
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.01.2019