Connect with us

வேலை வாய்ப்பு

தேசிய தொழில்நுட்ப கழகத்தில் வேலை!

Published

on

தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (Maulana Azad National Institute of Technology) அறிவியல், பொறியியல் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு பாடப்பிரிவுகளில் காலியிடங்கள் 144உள்ளது. இதில் பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Assistant Professor Grade – II
காலியிடங்கள்: 69
மாத சம்பளம்: ரூ.70.900

வேலை: Associate Professor
காலியிடங்கள்: 49
மாத சம்பளம்: ரூ.1,39,600

வேலை: Professor
காலியிடங்கள்: 26
மாத சம்பளம்: ரூ.1,59,100

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இசிஇ, சிஎஸ்இ போன்ற பிரிவுகளில் அல்லது கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம், உளவியல், சமூகவியல் போன்ற பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் யூஜிசி விதிமுறைகளின்படி தகுதி மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 2 ஆண் ரயில் கட்டணம் வழங்கப்படும்.

கட்டணம்: ரூ.1200. கட்டணத்தை இணையத்தில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.manit.ac.in என்ற இணையதளத்தின் மூலம் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.08.2019

விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசித் தேதி: 26.08.2019

வேலை வாய்ப்பு

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி வேலை!

Published

on

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தவிர்த்து மற்ற கடனற்ற சங்கங்களில் காலியிடங்கள் 108 உள்ளது. இதில் உதவியாளர் வேலைகளை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: உதவியாளர்

மொத்த காலியிடங்கள்: 108

மாத சம்பளம்: ரூ.14,000 – 47,500

வயது: 01.01.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருப்பதுடன் கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250. கட்டணத்தைக் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகம் அல்லது கிளைகளில் நேரடியாகச் செலுத்தி, அவ்வாறு செலுத்தப்பட்ட விண்ணப்பக் கட்ட ரசீதியில் உள்ள Journel ID என்ற எண்ணை விண்ணப்பதாரர், தமது விண்ணப்பத்தில் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் குறிப்பிட்டுக் கட்டணம் செலுத்திய ரசீதை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் எஸ்பிஐ வங்கி இணையதளத்தில் உள்ள “SBI Collect” என்ற சேவையைப் பயன்படுத்தியும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.kpmdrb.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 13.10.2019 பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை நடைபெறும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ளhttp://www.kpmdrb.in/doc_pdf/Notification_1.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.09.2019

Continue Reading

வேலை வாய்ப்பு

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

Published

on

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் காலியிடங்கள் 102 உள்ளது. இதில் உதவி இயக்குநர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அதிகாரி வேலைக்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 102

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Assistant Director
காலியிடங்கள்: 13
மாத சம்பளம்: ரூ.56,100 – 1,77,500

வேலை: Child Development project Officer
காலியிடங்கள்: 89
மாத சம்பளம்: ரூ.36,900 – 1,16,600

வயது: 01.07.2019 தேதியின்படி கணக்கிடப்படும்.

கல்வித்தகுதி: மனையில் அறிவியல், உளவியல், சமூகவியல், குழந்தை மேம்பாடு, உணவு மற்றும் ஊட்டச்சத்து, சமூகப் பணி அல்லது மறுவாழ்வு அறிவியல் போன்ற துறைகளில் ஏதாவதொன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ஒருமுறை பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வு கட்டணம் ரூ.200. இதனை நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஆன்லைனில் செலுத்தலாம்.

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், திருச்சிராப்பள்ளி.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: http://www.tnpsc.gov.in, http://www.tnpsc.exams.net அல்லது http://www.tnpsc.exam.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு: 2019 செப்டம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.tnpsc.gov.in/Notifications/2019_24_Assistant_Director_CDPO_NEW.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.09.2019

Continue Reading

வேலை வாய்ப்பு

இந்திய திட்டங்கள் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை!

Published

on

இந்தியத் திட்டங்கள் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியிடங்கள் 391 உள்ளது. இதில் பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 391

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான காலியிடங்கள் விவரம்:
1.Civil (Design) – 15
2.Electrical (Inspection) – 5
3.Inspection (NDT) – 5
4.Instrumentation (Design) – 1
5.IT – 1
6.Mechanical (Construction) – 3
7.Mechanical (Piping) – 13
8.Mechanical (PV) – 2
9.Process (Design) – 1
10.Safety – 4

பொறியியல் துறையில் பட்டம் முடித்தவர்களுக்கான காலியிடங்கள் விவரம்:

11.Civil (Construction) – 66
12.Civil (Design) – 10
13.Electrical (Construction) – 26
14.Electrical (Design) – 7
15.Finance – 4
16.Civil (Inspection) – 1
17.Electrical (Inspection) – 13
18.Instrumentation (Inspection) – 4
19.Mechanical (Inspection) – 6
20.Instrumentation (Construction) – 13
21.Instrumentation (Design) – 11
22.Management Services – 11
23.Materials Management – 12
24.Mechanical (Construction) – 92
25.Mechanical (Machinery) – 8
26.Mechanical (Piping) – 6
27.Mechanical (PV) – 2
28.P&A – 6
29.Process – 13
30.Project Management – 6
31.Safety – 22
32.SSP & QC Audit – 2

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் மற்றும் சி.ஏ., எம்பிஏ, எம்.எஸ்சி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: https://www.pdilin.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கவும்.

கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.400. எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி கார்டுகள், ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://pdilcareer.in/PDF/WebAdvt.No.HR71-19-02-Contractualposts.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.08.2019

Continue Reading




சினிமா செய்திகள்17 mins ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்29 mins ago

கார்த்தியின் கைதி எப்போ ரிலீஸ் தெரியுமா?

சினிமா செய்திகள்1 hour ago

தீபாவளி ரேசில் கலந்து கொள்ளும் சங்கத்தமிழன்!

தமிழ்நாடு3 hours ago

வெளிநாடு செல்லும் முதல்வர் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லாமல் பதவி பறிபோகும் என பயப்படுகிறார்: சிபிஎம் விளாசல்!

கிரிக்கெட்3 hours ago

மேற்கிந்திய தீவுகள் அணியை வதம் செய்த இந்தியா 318 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி!

தமிழ்நாடு4 hours ago

வேதாரண்யத்தில் இரு சமூகத்தினர் மோதலில் அம்பேத்கர் சிலை உடைப்பால் பதற்றம்!

தமிழ்நாடு5 hours ago

இன்று முதல் சேவையை தொடங்குகிறது கல்வி தொலைக்காட்சி: தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி!

இந்தியா5 hours ago

சிபிஐ காவல் இன்றுடன் முடிகிறது: சிதம்பரம் திகார் சிறைக்கு செல்லாமல் தப்பிப்பாரா?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்15 hours ago

உங்களுக்கான இன்றைய ராசிபலன் (26/08/2019)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்15 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/08/2019)

சினிமா1 month ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 month ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

தமிழ்நாடு1 week ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழ்நாடு1 month ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

வேலை வாய்ப்பு2 weeks ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா2 weeks ago

பிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்2 months ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)

சினிமா1 month ago

பிக்பாஸ் வீட்டில் புகைப்பிடிக்கும் போட்டியாளர்கள்: நோட்டீஸ் அனுப்பியது டொபாக்கோ மானிட்டர் அமைப்பு!

இந்தியா3 days ago

சிறுமிகள், பெண்களை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருக்கும் பிரபல சாமியார்: வெளியான அதிர்ச்சி வீடியோ!

சினிமா செய்திகள்1 month ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

Sangathamizhan Official Teaser | Vijay Sethupathi, Raashi Khanna | Vivek-Mervin | Vijay Chandar
வீடியோ2 weeks ago

சுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்!

வீடியோ2 months ago

நேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்!

வீடியோ2 months ago

அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்!

வீடியோ2 months ago

தனுஷுடன் மோதும் விஜய்சேதுபதி!

வீடியோ2 months ago

கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்!

வீடியோ2 months ago

12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்!

வீடியோ2 months ago

சத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்!

வீடியோ2 months ago

வைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்!

வீடியோ2 months ago

வழக்கறிஞராக தெறிக்கவிடும் அஜித்; நேர்கொண்ட பார்வை டிரைலர் சிறப்பம்சங்கள்!

வீடியோ3 months ago

பக்கிரி படத்தின் மாயாபஜாரு வீடியோ பாடல் ரிலீஸ்!

Trending