வேலை வாய்ப்பு
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு!

நபார்டு என அழைக்கப்படும், தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் குரூப்-பி பிரிவில் காலியாக உள்ள டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்குப் பின்வரும் தகுதிகள் மற்றும் விருப்பம் இருப்பின் விண்ணப்பிக்கலாம்.
காலி பணியிடங்கள்: 91
பணியின் தன்மை: டெவலப்மெண்ட் அசிஸ்டெண்ட்
வயது வரம்பு: 18-35
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.32,000
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 02/10.2019
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பக் கட்டணம்: ரூ.450/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.50/-
மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க: https://www.nabard.org/#3rdPage
விண்ணப்பம் 14/09/2019-ம் தேதி முதல் கிடைக்கும்.
வேலை வாய்ப்பு
தஞ்சாவூர் மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை!

தஞ்சாவூர் மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 15. இதில் மேலாளர், துணை மேலாளர் தனியார் செயலர் டெக்னீசியன் போன்ற வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 15
வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Manager (Scheme) – 01
2. Manager (Marketing) – 01
3. Manager (Accounts) – 01
4. Deputy Manager (System) – 01
5. Extension Officer Grade – II – 03
6. Private Secretary Grade – III – 01
7. Executive(Office) – 02
8. Junior Executive (Office) – 02
9. Junior Executive (Typing) – 01
10. Technician (Operation) – 02
வயது: OC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் மட்டும் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கும் வயதுவரம்பு இல்லை. டெக்னீசியன் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் மட்டும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35க்குள்ளும், எம்பிசி, டிஎன்சி, பிசி பிரிவினர் 32 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com அல்லது www.aavinthanjavur.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Thanjavur District Cooperative Milk Producers’ Union Ltd., Nanjikkottai Road, Thanjavur, PIN Code : 613 006.
மேலும் விண்ணப்பக் கட்டணம், தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 31.12.2019
வேலை வாய்ப்பு
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு: தமிழக அரசின் தொல்லியல் துறையில் வேலை!

தமிழக அரசின் தொல்லியல் துறையில் காலியிடங்கள் 18 உள்ளது. இதில் அதிகாரி வேலைக்கு அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ் வெளியிட்டுள்ள இந்த வேலைக்கான விண்ணப்பியுங்கள்.
நிர்வாகம்: தமிழகத் தொல்லியல் துறை
தேர்வு வாரியம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC)
மொத்த காலியிடங்கள்: 18
வேலை: Archaeological Officer
மாத சம்பளம்: ரூ.36,200 – 1,14,800
கல்வித்தகுதி: 28.11.2019 தேதியின்படி கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் பண்டைய கால வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் முதுகலைப் பட்டம் அல்லது வரலாறு, இந்திய வரலாறு, தமிழ் உள்ளிட்ட துறையில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளங்கலை படிப்பில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டிருப்பது அவசியம்.
வயது: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். வயது வரம்பில் சலுகை கோரும் பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி உச்ச வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஒரு முறை பதிவுக்கட்டணமாக 150 ரூபாய் செலுத்த வேண்டும். தேர்வுக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எனவே, முதன் முதலாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் 250 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். ஏற்கனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கட்டணம் ரூ.250 மட்டும் செலுத்தினால் போதுமானது.
தேர்வுக்கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் அல்லது நேரடி வங்கி மூலமாகச் செலுத்த வேண்டும்.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெற http://www.tnpsc.gov.in/Notifications/2019_33_notifn_Archaeological_Officer.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 29.02.2020
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.12.2019
வேலை வாய்ப்பு
மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆய்வுக் கழகத்தில் வேலை!

மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆய்வுக் கழகத்தில் காலியிடங்கள் 66 உள்ளது. இதில் கிளார்க் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 66
வேலை: Upper Division Clerk (Group “C”)
காலியிடங்கள்: 14
மாத சம்பளம்: ரூ.5,200 – 20,200
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வேலை: Lower Division Clerk (Group “C”)
காலியிடங்கள்: 52
மாத சம்பளம்: ரூ.5,200 – 20,200
கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு செய்யும் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம்: புதுதில்லி, அவுரங்காபாத், சென்னை, லக்னோ சண்டிகர், கொல்கத்தா, கவுகாத்தி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்கும் முறை: www.ccras.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 19.12.2019
-
தினபலன்2 days ago
உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (10/12/2019)
-
தினபலன்3 days ago
உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (09/12/2019)
-
சினிமா செய்திகள்3 days ago
பெண்களை மதிப்பவன் தான் பாதுகாப்பான நாயகன்; தெலுங்கானா என்கவுண்டருக்கு ஆதரவாக நயன்தாரா!
-
வீடியோ செய்திகள்1 day ago
“காசு வேண்டாம்.. ஆசி போதும்”- சென்னை டிராபிக்கை சரிசெய்யும் மூதாட்டியின் சேவை