சினிமா
வில் ஸ்மித்தின் ‘ஜெமினி மேன்’ விமர்சனம்… உங்களிடம் இதையா நாங்கள் எதிர்பார்த்தோம் ஆங் லீ…

‘ஜெமினி மேன் (அ) ஜெமினை மேன்’ இந்த ஆண்டு வில் ஸ்மித் நடிப்பில் வெளியாகியிருக்கும் இரண்டாவது படம்.
தீவிரவாதிகளை அளிக்கும் ஜெமைன் அதாவது டிஐ ஏஜெண்டாக இருக்கிறார் ஹென்ரி ப்ரோகன் (வில் ஸ்மித்). 2 கி.மீ தூரத்தில் 300 கி.மீ வேகத்தில் செல்லும் ரயிலில் இருக்கும் ஒருவரை சுட்டு வீழ்த்தும் அளவுக்கு திறமை உள்ளர் ஹென்ரி. அப்படி ஒரு தீவிரவாதியை சுட்டுக் கொல்கிறார். ஆனால், தான் சுட்டுக் கொன்றவர் தீவரவாதி இல்லை. அவர் ஒரு பயாலஜி விஞ்ஞானி என்பதை அறிகிறார் ஹென்றி. அவரை வேண்டும் என்றே டிஐஏ குழுவில் இருக்கும் தலைவர் ஜாக் வில்ஸ் கொலை செய்ய வைக்கிறார். இதை தன் நண்பர் மூலம் அறிந்துகொள்ளும் ஹென்ரி டிஐஏ-வில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறார். ஓய்வு முடிவை அறிவித்தவுடன் அவரை கொலை செய்ய முடிவு செய்கிறார் ஜாக் வில்ஸ். அந்த பயலாஜி விஞ்ஞானியை ஏன் கொலை செய்யச் சொன்னார்கள். தன்னை ஏன் கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். தன்னை கொலை செய்ய அனுப்பப்பட்டவர் யார் என்பதை 2மணி நேரம் சொல்கிறது இந்த ஜெமினி மேன்.
50 வயது ஏஜெண்டாகவும் 23 வயது ஜூனியராகவும் தன்னுடைய அறுமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் வில் ஸ்மித். கதை எப்படி இருந்தாலும் தான் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு உரிய நியாயத்தை செய்வார். இந்தப் படத்திலும் அப்படித்தான். முதிர்ச்சியான ஹென்ரியாகவும் இளம் வயது ஜூனியராக துடிப்புடனும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தின் ஒரே ஆறுதலும் கூட வில் ஸ்மித்தும் அவரது நடிப்பும்தான்.
பார்க்குப் பழக்கப்பட்ட கதைதான் என்றாலும் இயக்குநர் ஆங் லீ கதை சொல்லும் விதத்தில் அசத்திவிடுவார். ஆனால், லைப் ஆஃப் பை போன்ற படங்களை எடுத்த ஆங் லீ தான் இந்தப் படத்தை இயக்கினாரா அல்லது அவரது குலோனிங்கா (குலோனிங் பற்றி பேசுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஸ்பாய்லர் என்பதால் தவிர்க்கிறேன். படம் பார்த்து தெரிந்து கொள்ளவும்) என்ற சந்தேகம் எழுகிறது. படம் அவ்வளவு மெதுவாகச் செல்கிறது. சுவாரஸ்யமே இல்லாமல் நகர்கிறது. இறுதியில் வரும் ஒரு ஒரே எமோசனல் காட்சியை தவிர வேறு எந்தக் காட்சியும் மனதில் ஒட்டவே இல்லை. படம் எப்போது முடியும் என்ற அளவிற்கு ஆகிவிட்டது.
ஆங் லீ, வில் ஸ்மித் இருவரது படம் என்றால் அது வேற லெவலில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒரு ரசிகனுக்கு இருக்கும். அப்படிப்பட்ட இருவரும் இணைந்து ஒரு படத்தில் வேலை செய்கிறார்கள் என்றால் அந்தப் படத்தின்மீது ஒரு சாதாரண ரசிகனின் எதிர்பார்ப்பு எந்த அளவிற்கு இருக்கும். அப்படி ஓர் எதிர்பார்ப்பில் சென்றால் நிச்சயம் இந்தப் படம் நம்மை ஏமாற்றும். சரி பெரிய எதிர்ப்பார்ப்பில்லாமல் சென்றால் என்ன ஆகும் என்று கேட்டால் அப்படியும் இந்தப் படம் நம்மை ஏமாற்றத்தான் செய்கிறது.
ஆங் லீ, வில் ஸ்மித் உங்களிடம் எதிர்பார்ப்பது ஜெமினி மேன் அல்ல. லைப் ஆஃப் பை, அலாவுதீன், சூசைடு ஸ்குவாடு போன்ற படங்களைத்தான். ப்ளீஸ்… அடுத்த முறை கொஞ்சம் பார்த்து செய்யவும்…
பி.கு. சென்னை பிவிஆரிலேயே சப் டைட்டில் போடவில்லை. அதனால் தமிழில் பார்ப்பது சிறந்தது என்றால் அதையே செய்யவும்…
சினிமா செய்திகள்
அஜித்தின் வலிமை ஷூட்டிங் தொடுங்குவது எப்போது? எப்போது வெளியாகும்?

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தைத் தொடர்ந்து அஜித் மீண்டும் எச்.விநோத் உடன் இணைந்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் டிசம்பர் 13-ம் தேதி முதல் தொடங்குகிறது. அஜித் இதில் போலீஸ் வேடத்தில் நடிப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
வலிமை திரைப்படம் 2020 தீபாவளிக்கு வெளியாகும்.
தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை அடுத்து மீண்டும் அஜித்தை வைத்துக் காவல் துறை மையமான கதையையே எச்.விநோத் கூறியுள்ளார்.
இந்த திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். சாட்டிலைட் உரிமை ஜீ நிறுவனம் பெற்றுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
சினிமா செய்திகள்
பெண்களை மதிப்பவன் தான் பாதுகாப்பான நாயகன்; தெலுங்கானா என்கவுண்டருக்கு ஆதரவாக நயன்தாரா!

தெலுங்கானா மாநிலத்தில் 27 வயது கால் நடை மருத்துவரான திஷா (பெயர் மாற்றம்) பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த குற்றவாளிகளைக் கைது செய்த காவல் துறை என்கவுட்டர் செய்தது.
என்கவுட்டரில் ஈடுபட்ட காவலர்களுக்கு உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகிறனர். தற்போது நயன்தாரா இந்த என்கவுண்டருக்கு ஆதரவாக நயன்தாராவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று இன்று உன்மையாகியிருக்கிறது. உண்மையான நாயகர்களால் தெலுங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள். காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான சட்டத்திற்குப் புறம்பாகப் பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராகத் தீர்க்கமான பதிலளித்துள்ளார்கள்.
பெண்களின் முன்னேற்றத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை. இந்த நடவடிக்கை என்பது மிக சரியாக வழங்கப்பட்ட நீதி. இதுவே நியாயமான நடவடிக்கை என அழுத்திச் சொல்வேன்.
நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த நாளை, தேதியை பெண்களுக்குச் சரியான நியாயம் கிடைத்த நாளாகக் குறித்து வைத்துக் கொள்ளலாம். பெண்களுக்கு இது சற்றே ஆறுதல். அவர்களுக்கு எதிராக வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு இந்த நடவடிக்கை சற்றேனும் பயன்தரும்.
மனிதம் என்பது அனைவரிடத்தும் சரிசமமாக மரியாதை தருவது, அன்பு செலுத்துவதும், இரக்கம் செலுத்துவதும் ஆகும். நீதி கிடைத்திருக்கும் இத்தருணம் மகிழ்ச்சியே என்றாலும், நாம் நம் குழந்தைகளுக்குப் பெண் பாதுகாப்பு குறித்து கல்வியைக் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். குறிப்பாய் நம் ஆண் குழந்தைகளுக்குப் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கற்று தர வேண்டும். பெண்களை மதிப்பவன் தான் பாதுகாப்பான நாயகன் என்பதை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.
எதிர்கால உலகைப் பெண் மீதான வன்முறைக்கு எதிரான, அன்பான உலகாக மாற்ற வேண்டியது நம் கடமை. அப்போது தான் நாம் நிம்மதியான பெருமூச்சுடன் அன்பை அனைவரிடத்தும் பகிர்ந்துகொள்ள முடியும்.” என்று அறிக்கையில் நயன்தார குறிப்பிட்டு இருந்தார்.
வீடியோ
ரஜினிகாந்த்தின் தர்பார் திரைப்படப் பாடல்கள் – வீடியோ!

ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் திரைப்படம் தர்பார். ஏற்கனவே இந்த படத்தின் சும்மா கிழி பாடல் வெளியாகி ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மறுபக்கம் அந்த பாடல், ஐயப்பன் பக்தி பாடல் போல உள்ளது என்று விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில் தர்பார் படத்தின் பிற பாடல்கள் அனைத்தும் வெளியாகியுள்ளன.
அவற்றை இங்கு வீடியோ வடிவில் கேட்டு மகிழுங்கள்.
-
தினபலன்2 days ago
உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (07/12/2019)
-
சினிமா செய்திகள்22 hours ago
பெண்களை மதிப்பவன் தான் பாதுகாப்பான நாயகன்; தெலுங்கானா என்கவுண்டருக்கு ஆதரவாக நயன்தாரா!
-
தினபலன்1 day ago
உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (08/12/2019)
-
தமிழ் பஞ்சாங்கம்1 day ago
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (08-12-2019)