Connect with us

சினிமா

விஜய், அஜித்துக்கு அடுத்து விஜய் சேதுபதி: தொடர்ந்து முன்னேற்றம்!

Published

on

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும், ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவர் பிரபல முன்னணி நடிகர்களான அஜித், விஜய் போன்று தொடர்ந்து முன்னேறி வருகிறார். அதற்கு உதாரணமாக அஜித், விஜய் ஆகியோரை வைத்து படம் தயாரித்த நிறுவனம் ஒன்று தற்போது விஜய் சேதுபதியை வைத்து படம் தயாரிக்க உள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரது படங்கள் தொடர்ந்து மக்களின் ஆதரவை பெற்று வருகிறது. தன் கைவசம் பல படங்களை வைத்துள்ள விஜய் சேதுபதியின் செக்கச்சிவந்த வானம், 96 ஆகிய படங்கள் இந்த மாதத்தில் வரிசையாக திரைக்கு வர உள்ளது. இன்னமும் கைவசம் பல படங்களை வைத்துள்ளார் விஜய் சேதுபதி.

இவர் அடுத்ததாக இயக்குநர் விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனை பிரபல தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி பட நிறுவனங்களுள் ஒன்று விஜயா புரொடக்‌ஷன். இந்த நிறுவனம் சமீபத்தில் விஜய்யின் பைரவா, அஜித்தின் வீரம் போன்ற படங்களை தயாரித்தது. அடுத்ததாக தற்போது விஜய் சேதுபதி நடிக்க உள்ள படத்தை தயாரிக்க உள்ளது.

சினிமா செய்திகள்

அனுராக் கஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பாயல் கோஷ்.. ஆதரவு அளித்த டாப்ஸி!

Published

on

பிரபல பாலிவுட் இயக்குநர் மற்றும் நடிகருமான அனுராக் கஷ்யப் மீது, நடிகை பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பாலியல் குற்றச்சாட்டு குறித்து டிவிட்டரில் தெரிவித்த பாயல் கோஷ், “அனுராக் கஷ்யப் என்னுடன் மிகவும் தவறாக நடந்துகொண்டார். இந்த கலைஞன் பின்னால் உள்ள அரக்கத்தனத்தை நாட்டுக்கு வெளிக்காட்டி பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு தெரியும் இது எனது பாதுகாப்பைப் பாதிக்கும். எனக்கு உதவுங்கள்” என்று தெரிவித்து இருந்தார்.

பாயல் கோஷின் குற்றச்சாட்டுக்கு, “அடிப்படை ஆதாரம் அற்ற குற்றச்சாட்டு” என்று கஷ்யப் டிவிட்டரில் தெரிவித்து இருந்தார்.

அனுராக் கஷ்யப்புக்கு ஆதரவு தெரிவித்த டாப்ஸி, நீங்கள் ஒரு பெண்ணியவாதி என்று எனக்கு தெரியும் என்றும் அவருடன் தான் சேர்ந்து படத்தில் பணியாற்றிய புகைப்படத்தையும்” இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Continue Reading

சினிமா செய்திகள்

நயன்தாரா உடன் விக்‌னேஷ் ஷிவன் கொண்டாடிய பிறந்தநாள்.. எங்கு தெரியுமா?

Published

on

விக்னேஷ் ஷிவன் பிறந்தநாளை நயன்தாரா சிறப்பாகக் கொண்டாடிய படங்கள் ஆன்லைனில் வைரலாகி வருகிறது.

பிறந்தநாள், கொண்டாட்டம், விடுமுறை என எதுவாக இருந்தாலும், விக்னேஷ் ஷிவனும், நயன்தாராவும் விமானத்தில் வெளிநாடு பறந்து விடுவார்கள். ஆனால் இது கொரோனா காலம் என்பதால் வெளிநாடு பயணம்,செய்ய முடியாமல் இருவரும் தவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் விக்னேஷ் ஷிவனை குடும்பத்தோடு அழைத்துக்கொண்டு கோவா சென்றுள்ளார் நயன்தாரா. என்ன ஆனாலும் வெளியூர் செல்லாமல் பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்காது போல.

அதுமட்டுமல்லாமல் நயன்தாராவின் அமாவுடையை பிறந்தநாள் கொண்டாட்டமும், செப்டம்பர் 14-ம் தேதி கோவாவில் கொண்டாடப்பட்டுள்ளது. அந்த படங்களை எல்லாம் நீங்களே பாருங்கள்.

Continue Reading

சினிமா செய்திகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு பிறந்தது குழந்தை.. ஆணா? பெண்ணா?

Published

on

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஹேமாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நிஜ வாழ்க்கையில் ஆண் குழந்தை என்றாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பெண் குழந்தை பிறந்தது போல காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாகவே, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் மீனா கர்ப்பமாக இருந்து வந்தார். சீரியல் மற்றும் நிஜ வாழ்க்கை என இரண்டிலும் வளைகாப்பு நிகழ்ச்சி எல்லாம் நடைபெற்றது.

மேலும் குழந்தை பிறந்த பிறகு ஹேமா மீனா கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் ஹேமா அண்மையில் தான் அளித்த பேட்டியில் தான் இல்லாமல், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரம் இல்லை என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading




வேலை வாய்ப்பு10 hours ago

திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் வேலைவாய்ப்பு!

பல்சுவை11 hours ago

அறுசுவையான கேரளா ஸ்பெஷல் “எரிவேரி” செய்வது எப்படி?

வேலை வாய்ப்பு11 hours ago

ஆதார் கார்டு அலுவலத்தில் (UIDAI) வேலைவாய்ப்பு!

பல்சுவை12 hours ago

இந்த காய்கறிகள சாப்பிட்டால் இவ்வளவு நன்மை ஏற்பாடுமா?

சினிமா செய்திகள்14 hours ago

அனுராக் கஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பாயல் கோஷ்.. ஆதரவு அளித்த டாப்ஸி!

வேலை வாய்ப்பு14 hours ago

M.Sc படித்தவர்களுக்கு பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்14 hours ago

ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. செப்டம்பர் 30-க்குள் இதை செய்திடுக!

பர்சனல் ஃபினாஸ்15 hours ago

சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்!

கிரிக்கெட்18 hours ago

தோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (20/09/2020)

வேலை வாய்ப்பு10 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்1 week ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்1 month ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்6 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்6 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்6 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: