வீடியோ
ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!


சிம்பு நடிப்பில் வேகமாகத் தயாராகிப் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் ஈஸ்வரன். முதன் முதலாக கொரோனா பற்றிய காட்சிகள் வந்ததும் ஈஸ்வரன் திரைப்படத்தில் தான்.
ஈஸ்வரன் படத்தின் விமர்சனத்திலும் பலராலும் பாராட்டப்பட்டது அந்த கொரோனா பற்றிய காட்சிகள். இந்நிலையில் படத்தின் அந்த காட்சியைத் திரைப்படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஈஸ்வரன் படத்தின் கொரோனா ஸ்னீக்பிக் வீடியோ!
வீடியோ
ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!


சிலம்பரசன் நடிப்பில் நீண்ட காலமாகத் தயாரிப்பிலிருந்து, தற்போது வேகமாக படப்பிடிப்பு நடைபெற்றும் வரும் திரைப்படம் மாநாடு.
வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு படம் ஒரு அரசியல் பின்னணி திரைக்கதை கொண்ட படமாக உருவாகி வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு யுவன் ஷங்கர் ராஜா சிம்பு படத்துக்கு இசை அமைத்து வருகிறார்.
சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் படம் இன்று வெலியாகி, ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஈஸ்வரன் படம் மட்டுமல்லாமல் சிம்பு ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இன்று மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
மோஷன் போஸ்டரில், அரசியல் மாநாடு ஒன்றில் சிம்பு கொலைவெறியில் துப்பாக்கியுடன் யாரையே சுடத் தேடிக்கொண்டு இருப்பது போலக் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஈஸ்வரன் படத்தில் கிராமத்துக் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ள நிலையில், மாநாடுவில் ஸ்டைலாக சிம்பு உள்ளார்.
‘மாநாடு’ – மோஷன் போஸ்டர்
வீடியோ
பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!


ஜெயம் ரவி நடிப்பில், ஹாட்ஸ்டாரில் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இமான் இசையில், தாமரை மதன் கார்கி எழுத்தில் தமிழ என்று சொல்லடா பாடல் உருவாகியுள்ளது. அனிருத் ரவிச்சந்தர், லவன்யா மற்றும் இமான் மூவரும் இணைந்து பாடியுள்ளனர். பாடலுக்கு பிருந்தா மற்றும் ஷெரிஃப் இருவரும் நடனம் அமைத்துள்ளனர்.
வீடியோ
ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!


சிலம்பரசன் நடிப்பில் ஜனவரி 14-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள ஈஸ்வரன் படத்தின், மாங்கல்யம் பாடல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
மாங்கல்யம் பாட்டை சிலம்பரசன் ரோஷினி மற்றும் தமன் மூவரும் இணைந்து பாடியுள்ளனர், யுகபாரதி பாடல் வரிகளை எழுதியுள்ளார். எஸ் தமன் இசை அமைத்துள்ளார்.
மாங்கல்யம் ஆடியோ பாடல் ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வீடியோ பாடல் இப்போது வெளியாகியுள்ளது.
-
கிரிக்கெட்2 days ago
‘நீ என்னனை கைவிட்டுட்ட இஷாந்த்!’- கடைசி டெஸ்டில் தோனியின் அவலநிலை; வெளிவந்த ரகசியம்
-
கிரிக்கெட்2 days ago
‘ஏன்டா நீ ஆஸி., கேப்டன்டா… இப்டியா பேசுறது’- ஆரோன் பின்சை வறுத்தெடுத்த மைக்கெல் கிளார்க்
-
கிரிக்கெட்2 days ago
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: 4 விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து திணறல்
-
டிவி2 days ago
தொடங்குகிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 5… எப்போது முதல் தெரியுமா?