வீடியோ
மாஸ்டருக்கு போட்டியா விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ டீசர்!


விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் கோடியில் ஒருவன்.
இந்த படத்தில் நடிப்பதற்காக ஒப்புக்கொண்ட விஜய் ஆண்டனி, கொவிட்-19 ஊரடங்கு காலத்தில் தனது சம்பளத்தை 25 சதவீதம் குறைத்துக்கொள்வதாக அறிவித்தார்.
விஜய் ஆண்டனியின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தான் மற்ற பிற நடிகர்களும் தங்களது சம்பளத்தைக் குறைத்தனர்.
இந்த டீசரை பார்க்கும் போது விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்தின் சாயல் போலவே உள்ளது. பலரும் இந்த டீசரின் கீழும் குறிப்பிட்டுள்ளனர்.
விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ டீசர்!
வீடியோ
ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!


சிம்பு நடிப்பில் வேகமாகத் தயாராகிப் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் ஈஸ்வரன். முதன் முதலாக கொரோனா பற்றிய காட்சிகள் வந்ததும் ஈஸ்வரன் திரைப்படத்தில் தான்.
ஈஸ்வரன் படத்தின் விமர்சனத்திலும் பலராலும் பாராட்டப்பட்டது அந்த கொரோனா பற்றிய காட்சிகள். இந்நிலையில் படத்தின் அந்த காட்சியைத் திரைப்படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஈஸ்வரன் படத்தின் கொரோனா ஸ்னீக்பிக் வீடியோ!
வீடியோ
ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!


சிலம்பரசன் நடிப்பில் நீண்ட காலமாகத் தயாரிப்பிலிருந்து, தற்போது வேகமாக படப்பிடிப்பு நடைபெற்றும் வரும் திரைப்படம் மாநாடு.
வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு படம் ஒரு அரசியல் பின்னணி திரைக்கதை கொண்ட படமாக உருவாகி வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு யுவன் ஷங்கர் ராஜா சிம்பு படத்துக்கு இசை அமைத்து வருகிறார்.
சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் படம் இன்று வெலியாகி, ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஈஸ்வரன் படம் மட்டுமல்லாமல் சிம்பு ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இன்று மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
மோஷன் போஸ்டரில், அரசியல் மாநாடு ஒன்றில் சிம்பு கொலைவெறியில் துப்பாக்கியுடன் யாரையே சுடத் தேடிக்கொண்டு இருப்பது போலக் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஈஸ்வரன் படத்தில் கிராமத்துக் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ள நிலையில், மாநாடுவில் ஸ்டைலாக சிம்பு உள்ளார்.
‘மாநாடு’ – மோஷன் போஸ்டர்
வீடியோ
பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!


ஜெயம் ரவி நடிப்பில், ஹாட்ஸ்டாரில் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இமான் இசையில், தாமரை மதன் கார்கி எழுத்தில் தமிழ என்று சொல்லடா பாடல் உருவாகியுள்ளது. அனிருத் ரவிச்சந்தர், லவன்யா மற்றும் இமான் மூவரும் இணைந்து பாடியுள்ளனர். பாடலுக்கு பிருந்தா மற்றும் ஷெரிஃப் இருவரும் நடனம் அமைத்துள்ளனர்.