வீடியோ
2 மில்லியன் பார்வைகளை கடந்த ராட்சசி டிரைலர்!


அரசு பள்ளி மாணவர்களை மையமாக வைத்து அதிக அளவில் தமிழ் சினிமாவில் படங்கள் வரவில்லை என்றே சொல்லலாம். சில படங்களில் அரசு பள்ளிகள் குறித்து ஒரு சில காட்சிகள் வந்துள்ளன. முழுக்க முழுக்க அரசு பள்ளியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஜோதிகாவின் ராட்சசி டிரைலர் வெளியாகி ஒரே நாளில் 20 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
இயக்குநர் கெளதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராட்சசி படத்தின் டிரைலர் வெளியாகி பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளது. நாச்சியார் படத்திற்கு பிறகு மிகுந்த போல்டான அரசு பள்ளி ஆசிரியை கதாபாத்திரத்தில் ராட்சச நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஜோதிகா. ஷான் ரோல்டன் இசையில் வரும் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாய் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் சூர்யாவின் என்ஜிகே வெளியாகி கலவையான விமர்சனங்களுக்கு இடையே வசூல் ஈட்டி வரும் நிலையில், சூர்யாவின் மனைவி ஜோதிகாவின் படத்தையும் ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
நடனம் ஆடிக்கொண்டே புஷ்-அப்.. சமந்தாவின் வைரல் வீடியோ!!!!


தமிழில் பாணா காத்தாடி, விண்ணைத்தாண்டி வருவாயா படங்கள் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை சமந்தா.
தற்போது தெலுங்கு நடிகர் நாகார்ஜூனின் மகன் நாக சைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். ஆனால் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது அழகுக் குறிப்புகள், சமையல் குறிப்புகள், மொட்டை மாடி விவசாயம், ஃபிட்னஸ் போன்ற வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார். அது வைரலும் ஆகி வருகிறது.
அப்படி தற்போது அவர் நடனம் ஆடிக்கொண்டே புஷ்-அப் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
வீடியோ
ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!


சிம்பு நடிப்பில் வேகமாகத் தயாராகிப் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் ஈஸ்வரன். முதன் முதலாக கொரோனா பற்றிய காட்சிகள் வந்ததும் ஈஸ்வரன் திரைப்படத்தில் தான்.
ஈஸ்வரன் படத்தின் விமர்சனத்திலும் பலராலும் பாராட்டப்பட்டது அந்த கொரோனா பற்றிய காட்சிகள். இந்நிலையில் படத்தின் அந்த காட்சியைத் திரைப்படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஈஸ்வரன் படத்தின் கொரோனா ஸ்னீக்பிக் வீடியோ!
வீடியோ
ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!


சிலம்பரசன் நடிப்பில் நீண்ட காலமாகத் தயாரிப்பிலிருந்து, தற்போது வேகமாக படப்பிடிப்பு நடைபெற்றும் வரும் திரைப்படம் மாநாடு.
வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு படம் ஒரு அரசியல் பின்னணி திரைக்கதை கொண்ட படமாக உருவாகி வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு யுவன் ஷங்கர் ராஜா சிம்பு படத்துக்கு இசை அமைத்து வருகிறார்.
சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் படம் இன்று வெலியாகி, ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஈஸ்வரன் படம் மட்டுமல்லாமல் சிம்பு ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இன்று மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
மோஷன் போஸ்டரில், அரசியல் மாநாடு ஒன்றில் சிம்பு கொலைவெறியில் துப்பாக்கியுடன் யாரையே சுடத் தேடிக்கொண்டு இருப்பது போலக் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஈஸ்வரன் படத்தில் கிராமத்துக் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ள நிலையில், மாநாடுவில் ஸ்டைலாக சிம்பு உள்ளார்.
‘மாநாடு’ – மோஷன் போஸ்டர்
-
கிரிக்கெட்2 days ago
வெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா?
-
தமிழ்நாடு1 day ago
இந்தியாவில் பரவும் மும்முறை உருமாறிய கொரோனா: மருத்துவர்கள் எச்சரிக்கை!
-
வேலைவாய்ப்பு2 days ago
ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு!