வீடியோ
‘நீ அழிக்க வந்த அசுரன்னா.. நான் காக்க வந்த ஈஸ்வரன் டா’.. ஈஸ்வரன் ட்ரெயலர்.. மீண்டும் தொடங்கிய சிம்பு தனுஷ் சண்டை!


சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள படம் ஈஸ்வரன். ஈஸ்வரன் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெலியாகி ரசிகர்கள் இடையில் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ஈஸ்வரன் படத்தில் ட்ரெயலர் மேலும் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. காதல், நட்பு செண்டிமெண்ட், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த மசாலாவாக ஈஸ்வரன் படம் ட்ரெய்லர் உள்ளது.
ஈஸ்வரன் படத்தின் ட்ரெய்லர் இறுதியில், ‘நீ அழிக்க வந்த அசுரன்னா.. நான் காக்க வந்த ஈஸ்வரன் டா’ என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இது தனுஷின் அசுரன் படத்தை குறிவைத்து அமைக்கப்பட்ட வசனமா? மீண்டும் சிம்பு, தனுஷ் இடையில் போட்டி தொடங்கிவிட்டதா என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.
ஈஸ்வரன் பட ட்ரெயலரை பார்த்துவிட்டு உங்கள் கருத்து என்ன என்று நீங்களும் சொல்லுங்கள்.
ஈஸ்வரன் படத்தில், சிம்பு, நிதி அகர்வால், நந்திதா, பாரதிராஜா, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ளார்.
வீடியோ
ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!


சிம்பு நடிப்பில் வேகமாகத் தயாராகிப் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் ஈஸ்வரன். முதன் முதலாக கொரோனா பற்றிய காட்சிகள் வந்ததும் ஈஸ்வரன் திரைப்படத்தில் தான்.
ஈஸ்வரன் படத்தின் விமர்சனத்திலும் பலராலும் பாராட்டப்பட்டது அந்த கொரோனா பற்றிய காட்சிகள். இந்நிலையில் படத்தின் அந்த காட்சியைத் திரைப்படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஈஸ்வரன் படத்தின் கொரோனா ஸ்னீக்பிக் வீடியோ!
வீடியோ
ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!


சிலம்பரசன் நடிப்பில் நீண்ட காலமாகத் தயாரிப்பிலிருந்து, தற்போது வேகமாக படப்பிடிப்பு நடைபெற்றும் வரும் திரைப்படம் மாநாடு.
வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு படம் ஒரு அரசியல் பின்னணி திரைக்கதை கொண்ட படமாக உருவாகி வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு யுவன் ஷங்கர் ராஜா சிம்பு படத்துக்கு இசை அமைத்து வருகிறார்.
சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் படம் இன்று வெலியாகி, ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஈஸ்வரன் படம் மட்டுமல்லாமல் சிம்பு ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இன்று மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
மோஷன் போஸ்டரில், அரசியல் மாநாடு ஒன்றில் சிம்பு கொலைவெறியில் துப்பாக்கியுடன் யாரையே சுடத் தேடிக்கொண்டு இருப்பது போலக் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஈஸ்வரன் படத்தில் கிராமத்துக் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ள நிலையில், மாநாடுவில் ஸ்டைலாக சிம்பு உள்ளார்.
‘மாநாடு’ – மோஷன் போஸ்டர்
வீடியோ
பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!


ஜெயம் ரவி நடிப்பில், ஹாட்ஸ்டாரில் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இமான் இசையில், தாமரை மதன் கார்கி எழுத்தில் தமிழ என்று சொல்லடா பாடல் உருவாகியுள்ளது. அனிருத் ரவிச்சந்தர், லவன்யா மற்றும் இமான் மூவரும் இணைந்து பாடியுள்ளனர். பாடலுக்கு பிருந்தா மற்றும் ஷெரிஃப் இருவரும் நடனம் அமைத்துள்ளனர்.