சினிமா
வரலட்சுமியுடன்தான் திருமணமா? எப்போது?: விஷால் விளக்கம்!


நடிகை வரலட்சுமியும், நடிகர் விஷாலும் காதலித்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் அடிக்கடி பேசப்படும். ஆனால் இருவருக்கும் திருமணம் முடிந்தபாடில்லை. இந்நிலையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு தற்போது நடிகர் விஷால் பதிலளித்துள்ளார்.
விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான சண்டக்கோழி 2 திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. விஷால் தயாரித்த இந்த படத்தின் சக்சஸ் மீட் ஆந்திராவில் நடைபெற்றது. தமிழை விட தெலுங்கில் தான் இந்த படம் அதிக வசூலை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சக்சஸ் மீட்டில் விஷாலிடம், வரலட்சுமியுடன்தான் திருமணமா? எப்போது? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த விஷால், வரலட்சுமி எனது பால்ய நண்பர். என் மனதுக்கு நெருக்கமானவர். நேரம் வரும்போது எனது திருமணம் குறித்தும், யாரைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என்பது குறித்தும் தெளிவுபடுத்துவேன் என்றார்.
முன்னதாக நடிகை வரலட்சுமி அளித்த பேட்டி ஒன்றில், விஷால் எனக்கு நெருக்கமான நண்பர். எல்லா விஷயங்களையும் இருவரும் ஷேர் செய்துகொள்வோம். ஆனால் அவரும் நானும் காதலிப்பதாகவோ, டேட்டிங் செல்வதாகவோ வரும் தகவல்களில் உண்மையில்லை. விஷாலுக்கு, திருமணத்திற்குப் பெண் பார்த்தால், நானே பெண் பார்த்துத் திருமணம் செய்து வைக்கத் தயார். அவர் திருமணம் செய்துகொண்டால் மகிழ்ச்சியடையப் போவதும் நான்தான். எதற்காக விஷாலுடன் என்னை இணைத்துப் பேசுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை என்றார்.
சினிமா செய்திகள்
பிரபல நடிகருக்காக சிம்பு பாடிய பாடல் இன்று ரிலீஸ்: குவியும் வாழ்த்துக்கள்!


பிரபல நடிகருக்காக சிம்பு பாடிய பாடல் ஒன்று இன்று ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து சிம்புவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் கார்த்தி. இவர் நடித்து முடித்துள்ள ’சுல்தான்’ என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இரவு 7 மணிக்கு இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ என்ற திரைப்படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நெப்போலியன், லால், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
🎶 #Sulthan2ndSingle – யாரையும் இவ்ளோ அழகா releasing today at 7 PM.
🎤 #SilambarasanTR
✍️ @Viveka_Lyrics
🥁 @MervinJSolomon @iamviveksiva @Karthi_Offl @iamRashmika@Bakkiyaraj_k #சுல்தான்#Sulthan2ndSingleFromToday#Sulthan2ndSingleFromToday7pm pic.twitter.com/osAZkmpzFy— Diamond Babu (@idiamondbabu) March 5, 2021
சினிமா செய்திகள்
எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’: ரன்னிங் டைம் எவ்வளவு?


பல்வேறு தடைகளுக்கு பின்னர் நான்கு ஆண்டுகள் கழித்து ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் இன்று தமிழகம் உள்பட உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது.
எஸ்ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 22 நிமிடங்கள் அதாவது 142 நிமிடங்கள் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. சுமார் இரண்டரை மணி நேரமே உள்ள திரைப்படம் என்பதால் சரியான அளவில் உள்ள திரைப்படம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சினிமா செய்திகள்
’ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9’ ரிலீஸ் தேதி அறிவிப்பு


உலகம் முழுவதும் வசூலில் சக்கை போடு போட்ட ’பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ திரைப்படம் இதுவரை எட்டு பாகங்கள் வெளிவந்துள்ள நிலையில் ஒன்பதாம் பாகத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது
பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தின் ஒன்பதாவது பாகம் வரும் ஜூன் மாதம் 25ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வழக்கம்போல் வின் டீசல் இந்த படத்தின் நாயகனாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதும் தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் இந்த படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிரிக்கெட்23 hours ago
பும்ராவுக்கும் இந்த தமிழ் நடிகைக்கும் திருமணமா?
-
சினிமா செய்திகள்2 days ago
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய தமிழ் நடிகை வீட்டில் ஐடி ரெய்டு!
-
கிரிக்கெட்1 day ago
6 பந்தில் 6 சிக்ஸர்கள்: பொளந்து கட்டிய பொல்லார்டு!
-
வேலைவாய்ப்பு1 day ago
தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!