டிவி
‘சித்தி-2 சீரியலில் என்னுடைய கதாபாத்திரத்தில் நடிப்பது யார்?’- பதிலளித்த ராதிகா!


சித்தி 2 சீரியலில் தன்னுடைய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார்? என்ற கேள்விக்கு ராதிகாவே பதில் அளித்துள்ளார்.
சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலேயே ராதிகா சரத்குமாரின் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் வட்டம் உண்டு. அந்த வகையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் சித்தி 2 நாடகம் ஒளிபரப்பாகி வருகிறது. முழு நேர அரசியலில் கணவர் சரத்குமார் உடன் சேர்ந்து ஈடுபட உள்ளதாக சமீபத்தில் ராதிகா அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் சித்தி 2 சீரியலில் மட்டுமிருந்து இல்லாது சின்னத்திரையில் நடிப்பதில் இருந்தே மொத்தமாக விலகிக் கொள்வதாக ராதிகா அறிவித்தார். அடுத்து முன்னணியில் இருக்கும் சித்தி 2 சீரியலில் சித்தி கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார் என்ற கேள்வி அதிகப்படியாக எழுந்து காணப்பட்டது.
இதற்கு தற்போது ராதிகாவே பதில் அளித்துள்ளார். ராதிகா கூறுகையில், “நான் சித்தி 2 சீரியல்ல நடிச்சிட்டிருந்த ரோல்-ல யார் யாரோ நடிக்கப் போறாங்கன்னு செய்தி படிச்சேன். அதெல்லாம் பார்த்த போது சிரிப்புதான் வந்துச்சு. நாட்டுல எத்தனையோ விஷயங்கள் நடந்துட்டு இருக்கு. சீரியல் தொடர்பா பரப்பப்படுற செய்தியெல்லாம் நான் கண்டுக்கவே மாட்டேன்.
சித்தி 2 சீரியல்ல இனிமே என் கதாபாத்திரத்தில் யாரும் நடிக்க மாட்டாங்க. என் கதாபாத்திரம் அப்படியே மறைஞ்சிடும். இளம் நடிகர்களின் கதாபாத்திரங்களின் அடிப்படையில் கதை நகரும். தேர்தல் முடிஞ்சப்பறம் சீரியல் என்னுடைய தேவை இருக்குன்னு சொன்னா அத அப்போ பாத்துக்கலாம்” எனக் கூறியுள்ளார்.
டிவி
பிக்பாஸ் சீசன் 5-க்கு சிம்பு ஓகே சொன்னாலும் கமல் தான்.. ஏன் தெரியுமா?


பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனை கமலுக்கு பதிலாகச் சிம்பு இயக்குவார் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியைச் சிம்பு தொகுத்து வழங்க ஓகே சொன்னாலும், கமல் தான் தொகுத்து வழங்குவார் என்று செய்தி பூமி டுடே தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
தமிழில் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்கள் வரை நடந்துள்ளது. முதல் சீசன் முதலே இதை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
ஆனால் கடந்த 2 சீசன்களாகவே, சிம்புதான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனை தொகுத்து வழங்குவார் என்று செய்திகள் வரும். ஆனால் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார்.
அதே போன்று இப்போதும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியைக் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார். பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கும் எண்டமால் ஷைன் நிறுவனம் கமல்ஹாசனுடன் 5 வருடங்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி பிக்பாச் சீசன் நிகழ்ச்சியைக் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார். பிக்பாஸ் சீசன் 6 வேண்டுமானால் சிம்பு அல்லது பிற நடிகர்கள் தொகுத்து வழங்க வாய்ப்புள்ளது.
டிவி
‘குக்கு வித் கோமாளி’ பிரபலம் மருத்துவமனையில் அனுமதி… நலம் விசாரிக்கும் ரசிகர்கள்..!


குக்கு வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் பிரபலம் ஒருவர் உடல் நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குக்கு வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளர் ஆக நுழைந்தவர் நடிகை ரித்திகா. 3 வாரங்கள் மட்டுமே நிகழ்ச்சியில் தொடர்ந்தவர் பின்னர் எலிமினேட் ஆனார். தற்போது விஜய் டிவி சீரியலில் பிஸியாக நடித்து வரும் ரித்திகா உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ரசிகர்களிடம் ரித்திகா தெரிவித்ததும் பலரும் அவருக்கு ஆறுதல் சொல்லியும் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். ஃபுட் பாய்சன் ஏற்பட்டதால் ரித்திகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொஞ்சம் தேறியதும் வீடு திரும்பி உள்ளார். சமீபத்தில் தான் மற்றொரு குக்கு வித் கோமாளி பிரபலம் ஆன மணிமேகலை விபத்தில் சிக்கி தற்போது காயம் காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிவி
மணிமேகலைக்கு ஏற்பட்ட விபத்து: இரண்டு வாரங்கள் வரமாட்டார் என தகவல்!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கோமாளிகளில் ஒருவராகிய மணிமேகலைக்கு சிறு விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் இரண்டு வாரங்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டார் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இயல்பான காமெடி செய்து கொண்டிருப்பவர் மணிமேகலை. அவரது காமெடிக்காகவே பலர் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் அவரைப் பார்த்து அனைத்து குக்குகளும் மிரண்டு போவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் குக் வித் கோமாளி மணிமேகலைக்கு திடீரென சிறு விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அவர் வீட்டில் அடுப்பில் இருந்து சுடுதண்ணி இறக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
இரண்டு வாரங்கள் மணிமேகலையை மிஸ் செய்வோம் என்ற தகவல் ’குக் வித் கோமாளி ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
-
தமிழ்நாடு2 days ago
கூடுதல் மதிப்பெண்களுகாக பொதுத்தேர்வு என்பது உண்மையா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
CSK உடையில் தளபதி விஜய் – வைரல் புகைப்படம்!
-
சினிமா செய்திகள்2 days ago
ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்: விரைவில் ரிலீஸ்