டிவி
உச்ச கட்ட கோபத்தில் ‘குக் வித் கோமாளி’ ரசிகர்கள்… விஜய் டிவி-க்குக் குவியும் கண்டனங்கள்!


விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு விஜய் டிவி நிர்வாகமே எதிர்பார்க்காத அளவில் ரசிகர்கள் குவிந்து விட்டனர்.
தற்போது வழக்கமான கலாட்டாக்கள், நகைச்சுவைகள் உடன் குக்கு வித் கோமாளி சீசன் 2 வாரம் தோறும் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சமைக்கும் குக்கு-களை விட உடன் இருக்கும் கோமாளிகளுக்குத் தான் ரசிகர்களும் அதிகம், ஆர்மிகளும் அதிகம்.
கடந்த வாரம் குக்கு வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை ஒளிபரப்பானது. ஆனால், பிக்பாஸ் பைனல்ஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை குக்கு வித் கோமாளி ஒளிபரப்பாகவில்லை. ’பிக்பாஸ் நிகழ்ச்சியை யார்டா கேட்டா உங்கட்ட… குக்கு வித் கோமாளி எங்கடா?’ என வடிவேலு பாணியில் ட்விட்டரில் கொதிக்கத் தொடங்கினர் ரசிகர்கள்.
இந்த வாரமும் நேற்று சனிக்கிழமை மாலை ஒளிபரப்பானது நிகழ்ச்சி. ஆனால், சூப்பர் சிங்கர் தொடக்க விழாவை முன்னிட்டு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மீண்டும் தடை பட்டுள்ளது. இதனால் குக்கு வித் கோமாளி ரசிகர்கள் ட்விட்டரில் விஜய் டிவி நிர்வாகத்துக்கு எதிராகக் கடுமையாகக் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
@hotstar_helps why today episode of cooku with comali not telecasted yet?
— R.Rahul Barathwaj🆒 (@BarathwajRahul) January 24, 2021
Hi! We wish to inform you that Cooku with Comali will not be airing today i.e. 24th January 2021, due to Super Singer S8 Launch.
— Disney+HS_helps (@hotstar_helps) January 24, 2021
டிவி
தர்ஷா குப்தா முதல் ஶ்ரீரெட்டி வரை… பிக்பாஸ் தமிழ் சீசன் 5-ல் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள்?



பிக்பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தைகளை விஜய் டிவி நிர்வாகம் தொடங்கிவிட்டது. இந்த சூழலில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதால் தேர்தலுக்குப் பின் ஜூன் மாதம் பிக்பாஸ் 5 நிகழ்ச்சி தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம் போல சீசன் 5 நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்களிடம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். உத்தேசப் பட்டியலில் குக்கு வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா, கவர்ச்சி நடிகைகளான பூனம் பாஜ்வா, ராய் லட்சுமி, சர்ச்சை நடிகை ஶ்ரீரெட்டி, மூத்த நடிகை ராதா, நடிகர் சித்தார்த், குக்கு வித் கோமாளி புகழ் அஸ்வின், மூத்த நடிகர் ராதாரவி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்னும் முழு பட்டியல் முடிவாகவில்லை. பேச்சுவார்த்தை தான் தற்போது நடைபெற்று வருகிறதாம்.
டிவி
‘சித்தி-2 சீரியலில் என்னுடைய கதாபாத்திரத்தில் நடிப்பது யார்?’- பதிலளித்த ராதிகா!


சித்தி 2 சீரியலில் தன்னுடைய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார்? என்ற கேள்விக்கு ராதிகாவே பதில் அளித்துள்ளார்.
சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலேயே ராதிகா சரத்குமாரின் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் வட்டம் உண்டு. அந்த வகையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் சித்தி 2 நாடகம் ஒளிபரப்பாகி வருகிறது. முழு நேர அரசியலில் கணவர் சரத்குமார் உடன் சேர்ந்து ஈடுபட உள்ளதாக சமீபத்தில் ராதிகா அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் சித்தி 2 சீரியலில் மட்டுமிருந்து இல்லாது சின்னத்திரையில் நடிப்பதில் இருந்தே மொத்தமாக விலகிக் கொள்வதாக ராதிகா அறிவித்தார். அடுத்து முன்னணியில் இருக்கும் சித்தி 2 சீரியலில் சித்தி கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார் என்ற கேள்வி அதிகப்படியாக எழுந்து காணப்பட்டது.
இதற்கு தற்போது ராதிகாவே பதில் அளித்துள்ளார். ராதிகா கூறுகையில், “நான் சித்தி 2 சீரியல்ல நடிச்சிட்டிருந்த ரோல்-ல யார் யாரோ நடிக்கப் போறாங்கன்னு செய்தி படிச்சேன். அதெல்லாம் பார்த்த போது சிரிப்புதான் வந்துச்சு. நாட்டுல எத்தனையோ விஷயங்கள் நடந்துட்டு இருக்கு. சீரியல் தொடர்பா பரப்பப்படுற செய்தியெல்லாம் நான் கண்டுக்கவே மாட்டேன்.
சித்தி 2 சீரியல்ல இனிமே என் கதாபாத்திரத்தில் யாரும் நடிக்க மாட்டாங்க. என் கதாபாத்திரம் அப்படியே மறைஞ்சிடும். இளம் நடிகர்களின் கதாபாத்திரங்களின் அடிப்படையில் கதை நகரும். தேர்தல் முடிஞ்சப்பறம் சீரியல் என்னுடைய தேவை இருக்குன்னு சொன்னா அத அப்போ பாத்துக்கலாம்” எனக் கூறியுள்ளார்.
டிவி
தொடங்குகிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 5… எப்போது முதல் தெரியுமா?



பிக்பாஸ் தமிழ் சீசன் 5 விரைவில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 சமீபத்தில் தான் நிறைவு பெற்றது. ஆனால், அதற்குள்ளாகவே சீசன் 5 எப்போது தொடங்கும் என ட்விட்டர்வாசிகள் கேள்விகளை எழுப்பத் தொடங்கிவிட்டனர். கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளால் பிக்பாஸ் தாமதமாகத் தொடங்கப்பட்டது. ஆனால், 2021 பிக்பாஸ் முதல் மூன்று சீசன்களைப் போலவே சரியான காலத்தில் தொடங்கிவிடுமாம்.
ஏறத்தாழ வருகிற ஜூன் மாதம் முதல் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 தொடங்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கான ஆவணங்கள் தயாரிக்கும் பணிகள் தற்போது தொடங்கிவிட்டுள்ளதாம். வழக்கம் போல் சீசன் 5 நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார். ஏப்ரல் அல்லது மே மாதத்துக்குள் தமிழக சட்டசபைத் தேர்தல் நிறைவடைந்து விடும் என்பதால் கமலும் ஜூன் மாதம் தயாராகவே இருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
இப்போது இருந்தே பிக்பாஸ் தமிழ் சீசன் 5-க்கான போட்டியாளர்கள் தேர்வு விஜய் டிவி நிர்வாகத்தில் கலந்து ஆலோசிக்கப்படுகிறதாம். விரைவில் போட்டியாளர்களிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்குவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
கிரிக்கெட்2 days ago
INDvENG – “இந்தியா ரொம்ப டஃப்புங்க..!”- புலம்பும் பென் ஸ்டோக்ஸ்
-
சினிமா செய்திகள்2 days ago
பிரபல நடிகருக்காக சிம்பு பாடிய பாடல் இன்று ரிலீஸ்: குவியும் வாழ்த்துக்கள்!
-
கிரிக்கெட்2 days ago
INDvENG – 5 விக்கெட்டுகள் இழந்து தள்ளாடும் இந்தியா – ஒரு ரன்னில் அரைசதம் மிஸ் செய்த ரோகித்!
-
கிரிக்கெட்2 days ago
4 விக்கெட்டுக்களை இழந்து திணறி வரும் இந்திய அணி: தனியாளாக போராடும் ரோஹித்!