டிவி
அர்ச்சனாவை சுருக்கென்று குத்திய ஆஜித்.. என்ன பதில் வந்து இருக்கும்?


பிக்பாஸ் போட்டிக்கு வரும் போட்டியாளர்கள் பலர் மாசாக வருவார்கள். ஆனால் பிரச்சனைகள், சண்டைகள் வர தொடங்கிய உடன் எப்படா வீட்டுக்கு போவோம் என்ற நினைப்புக்கு வந்துவிடுவார்கள். அதை வெளிப்படையாகவே பேசிவிடுவார்கள்.
அதை வைத்து அர்ச்சனாவை வாய் அடைக்கச் செய்துள்ளார் ஆஜித். நீங்கள் பிக்பாஸ் கேம்முக்குள் வரும் போது, உங்களை எல்லோரும் ஒரு கடினமான போட்டியாளர் என்று நினைத்தோம். கமல் சார் உடன் பேசும் போது கூட நான் இன்னும் நக்கல் எல்லாம் ஆரம்பிக்கவில்லை என்று கூறியிருந்தீர்கள்.
ஆரம்பத்தில் ஓர் இருநாட்கள் அப்படி தான் இருந்தீர்கள். ஆனால் அது அடுத்து வந்த வாரங்களில் தொடர்ந்து குறைந்துவிட்டது போல எனக்குத் தெரிகிறது. அடுத்து எப்போது பார்த்தாலும் நான் வீட்டுகு போக வேண்டும் என்று கூறிக்கொண்டு இருக்கிறீர்கள் இல்லையா. ஆனால் டாஸ்க் என்று வந்துவிட்டால் நல்லா செய்கிறீர்கள்.
எனக்கு இப்போது உள்ள ஒரு சந்தேகம், நீங்க இப்போது உன்மையிலேயே வீட்டிற்குச் செல்ல வேண்டுமா? இந்த ஷோவில் வெற்றி பெற வேண்டுமா? எந்த எண்ணத்தில் இப்போது உள்ளீர்கள் என்று கேட்டுள்ளார்.
இந்த கேள்வியைக் கேட்ட உடன் அர்ச்சனா வாய் அடைத்துப் போனது போல, அர்ச்சனா ரியாக்ஷன் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த கேள்விகளுக்கு அர்ச்சனா என்ன பதில் அளித்து இருப்பார் என்று உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
டிவி
பிக்பாஸ் 4 பார்ட்டியில் கலந்து கொண்ட லாஸ்லியா… மேடைக்கு வந்த கவின் பார்ட்டிக்கும் வந்தாரா?- புகைப்படம்


பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் நிறைவுபெற்று ஆரி டைட்டிள் வின்னர் ஆகவும் அறிவிக்கப்பட்டார்.
பிக்பாஸ் டைட்டிள் வின்னருக்கான விருது வழங்கப்பட்ட பின்னர் பிக்பாஸ் 4 போட்டியாளர்கள், நிகழ்ச்சி மேற்பார்வையாளர்கள் என அத்தனைப் பேருக்குமாக சேர்த்து பார்ட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பிக்பாஸ் 4 போட்டியாளர்கள் மட்டுமல்லாது பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் நட்சத்திர போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டுக்குள் கவுரவ விருந்தினராக சென்ற பிக்பாஸ் 3 வெற்றியாளர் முகின், அதன் பின்னர் மேடையில் சிறப்பு உரையாற்றிய கவின் என கேமிரா முன் சில நட்சத்திரங்கள் தோன்றினார்கள். அதேபோல் கேமிராவுக்குப் பின்னும் சில நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்தப் புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் மிகவும் வைரல் நாயகியாக இருந்தவர் லாஸ்லியா.
லாஸ்லியா பிக்பாஸ் 4 பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படம் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லாஸ்லியா புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள், மேடைக்கு வந்த கவின் பார்ட்டிக்கும் வந்தாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். பிக்பாஸ் 3 முடிந்தாலும் ஓராண்டுக்கு முந்தைய கிசுகிசுக்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
டிவி
‘செண்டை மேளம், சரவெடி, குத்தாட்டம்..’- ரம்யா பாண்டியனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்த குடும்பத்தார்- போட்டோஸ்


பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து முழுவதுமாக 106 நாட்கள் இருந்துவிட்ட உற்சாகமாக வீடு திரும்பிய ரம்யா பாண்டியனுக்கு அவரது குடும்பத்தார் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முழுவதுமாக 106 நாட்கள் இருந்த ஒரே பெண் போட்டியாளர் ரம்யா பாண்டியன். வீட்டுக்குள் நடக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கும் பேட்டி கொடுத்து ரம்யா பாண்டியனுக்கு நிகராக அவரது சகோதரர் பரசு பாண்டியன், சகோதரி சுந்தரி பாண்டியன் ஆகியோரும் நிகராக பிரபலம் அடைந்துவிட்டனர்.
View this post on Instagram
டிவி
மறுபடியும் முதல்ல இருந்தா… மீண்டும் இன்ஸ்டாவை தெறிக்கவிட்ட ஷிவானி!


தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக புகைப்படங்கள் பகிர்ந்ததன் மூலமே புகழ் பெற்றவர் ஷிவானி நாராயணன். தொடர்ந்து சில டிவி சீரியல்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் போட்டியாளராகவும் அவர் நுழைந்தார்.
பிக் பாஸ் வீட்டுக்கு உள்ளே சென்ற ஷிவானி, மிகவும் அமைதியாக யாருடனும் பழகாதவராகவே இருந்து வந்தார். வீட்டுக்குள் கொடுக்கப்படும் டாஸ்க் மற்றும் போட்டிகளிலும் அதிகமாக பங்கெடுத்துக் கொள்ளாமல் விலகியே இருந்தார். இருப்பினும் தன் ரசிகர்களின் ஆதரவால் வீட்டுக்குள் தொடர்ச்சியாக இருந்தார்.
ஆனால், கடைசி வாரத்தில் எவிக்ட் செய்யப்பட்டு வெளியே வந்தார் ஷிவானி. இப்படி வெளியே வந்தவர் மீண்டும் இன்ஸ்டாகிராமில் பழைபயபடி புகைப்படங்களைப் பதிவேற்ற ஆரம்பித்துள்ளார். ஷிவானி, எப்படியும் அடுத்ததாக விஜய் டிவி ஷோக்களில் பங்கேற்பாளராக ஒரு ரவுண்டு வருவார் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக விஜய் டிவி சீரியல்களில் ஒன்றில் முக்கிய கதாப்பாத்திரத்தில் அவர் தோன்றலாம்.
View this post on Instagram
பிக் பாஸ் வீட்டுக்குள் ஷிவானிக்கும் பாலாவுக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. இந்த நட்பு வெளியே வந்த பின்னரும் தொடருமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.