டிவி
‘உங்களைப்போல நானும் காத்திருக்கிறேன்!’- இன்று ‘பிக் பாஸ்’ டைட்டில் வின்னர் அறிவிப்பு #ViralPromo


பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனின் கடைசி நாள் இன்று. பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் டைட்டிலை வெல்லப் போகிறார் என்பது இன்று அறிவிக்கப்படும்.
பலகட்ட பரபரப்புகளையும் சர்ச்சைகளையும் தாண்டி, பிக் பாஸின் இந்த சீசன் முடிவுக்கு வருகிறது. இந்த சீசனின் இறுதிச் சுற்றுக்கு 6 பேர் தகுதி பெற்றார்கள். ஆரி, பாலா, ரம்யா பாண்டியன், ரியோ, சோம் மற்றும் கேபி ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு சென்றனர்.
கடைசி வாரத்தில் கேபி, 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு, பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். தனக்குப் பணத் தேவை இருப்பதாலும், இறுதிச் சுற்றில் வெல்லப் போவதில்லை என்று நினைத்ததாலும் இந்த அதிர்ச்சிகர முடிவை எடுத்து, தன் ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தார் கேபி. அதே நேரத்தில், அவரது முடிவு சரிதான் என்றும் ஒரு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர்.
காரணம், நடிகர் ஆரிக்கும், பாலாவுக்கும் இடையில் தான், டைட்டிலை வெல்வதில் பலத்தப் போட்டி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அவரைத் தவிர்த்து ரம்யா பாண்டியன், ரியோ மற்றும் சோம் ஆகியோருக்கும் டைட்டிலை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் கேபி, சரியான நேரத்தில் வெளியேறி விட்டார் என்று பலரும் சொல்கிறார்கள்.
இன்று 6 மணி முதல், விஜய் டிவியில் பிக் பாஸின் இறுதி நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் முடிவில் யார் வெற்றி பெற்றார் என்பது அறிவிக்கப்படும்.
டிவி
‘சித்தி-2 சீரியலில் என்னுடைய கதாபாத்திரத்தில் நடிப்பது யார்?’- பதிலளித்த ராதிகா!


சித்தி 2 சீரியலில் தன்னுடைய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார்? என்ற கேள்விக்கு ராதிகாவே பதில் அளித்துள்ளார்.
சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலேயே ராதிகா சரத்குமாரின் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் வட்டம் உண்டு. அந்த வகையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் சித்தி 2 நாடகம் ஒளிபரப்பாகி வருகிறது. முழு நேர அரசியலில் கணவர் சரத்குமார் உடன் சேர்ந்து ஈடுபட உள்ளதாக சமீபத்தில் ராதிகா அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் சித்தி 2 சீரியலில் மட்டுமிருந்து இல்லாது சின்னத்திரையில் நடிப்பதில் இருந்தே மொத்தமாக விலகிக் கொள்வதாக ராதிகா அறிவித்தார். அடுத்து முன்னணியில் இருக்கும் சித்தி 2 சீரியலில் சித்தி கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார் என்ற கேள்வி அதிகப்படியாக எழுந்து காணப்பட்டது.
இதற்கு தற்போது ராதிகாவே பதில் அளித்துள்ளார். ராதிகா கூறுகையில், “நான் சித்தி 2 சீரியல்ல நடிச்சிட்டிருந்த ரோல்-ல யார் யாரோ நடிக்கப் போறாங்கன்னு செய்தி படிச்சேன். அதெல்லாம் பார்த்த போது சிரிப்புதான் வந்துச்சு. நாட்டுல எத்தனையோ விஷயங்கள் நடந்துட்டு இருக்கு. சீரியல் தொடர்பா பரப்பப்படுற செய்தியெல்லாம் நான் கண்டுக்கவே மாட்டேன்.
சித்தி 2 சீரியல்ல இனிமே என் கதாபாத்திரத்தில் யாரும் நடிக்க மாட்டாங்க. என் கதாபாத்திரம் அப்படியே மறைஞ்சிடும். இளம் நடிகர்களின் கதாபாத்திரங்களின் அடிப்படையில் கதை நகரும். தேர்தல் முடிஞ்சப்பறம் சீரியல் என்னுடைய தேவை இருக்குன்னு சொன்னா அத அப்போ பாத்துக்கலாம்” எனக் கூறியுள்ளார்.
டிவி
தொடங்குகிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 5… எப்போது முதல் தெரியுமா?


பிக்பாஸ் தமிழ் சீசன் 5 விரைவில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 சமீபத்தில் தான் நிறைவு பெற்றது. ஆனால், அதற்குள்ளாகவே சீசன் 5 எப்போது தொடங்கும் என ட்விட்டர்வாசிகள் கேள்விகளை எழுப்பத் தொடங்கிவிட்டனர். கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளால் பிக்பாஸ் தாமதமாகத் தொடங்கப்பட்டது. ஆனால், 2021 பிக்பாஸ் முதல் மூன்று சீசன்களைப் போலவே சரியான காலத்தில் தொடங்கிவிடுமாம்.
ஏறத்தாழ வருகிற ஜூன் மாதம் முதல் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 தொடங்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கான ஆவணங்கள் தயாரிக்கும் பணிகள் தற்போது தொடங்கிவிட்டுள்ளதாம். வழக்கம் போல் சீசன் 5 நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார். ஏப்ரல் அல்லது மே மாதத்துக்குள் தமிழக சட்டசபைத் தேர்தல் நிறைவடைந்து விடும் என்பதால் கமலும் ஜூன் மாதம் தயாராகவே இருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
இப்போது இருந்தே பிக்பாஸ் தமிழ் சீசன் 5-க்கான போட்டியாளர்கள் தேர்வு விஜய் டிவி நிர்வாகத்தில் கலந்து ஆலோசிக்கப்படுகிறதாம். விரைவில் போட்டியாளர்களிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்குவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
டிவி
இந்த வாரம் ‘குக்கு வித் கோமாளி’-க்கு வரும் பிரபலங்கள் பட்டாளம்… செலிபிரிட்டி ரவுண்ட் புகைப்படம்!


வரும் வாரம் குக்கு வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டி வாரம் ஆக இல்லாமல் செலிபிரட்டி வாரம் ஆக அமைய உள்ளது.
வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இம்மியூனிட்டி வாரமாக நடத்தப்பட வேண்டும். ஆனால், இந்த முறை இம்யூனிட்டி வாரம் இல்லை. அதற்கு பதிலாக ஒரு பெரிய பிரபலங்கள் பட்டாளம் கொண்ட செலிபிரிட்டி சுற்றாக குக்கு வித் கோமாளி அமைய உள்ளது.
இதுகுறித்து தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ள போஸ்டர் தான் சமுக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ரசிகர்களின் பிடித்தமான நிகழ்ச்சி என்பதால் தொடர்ந்து சீசனை இழுக்க குக்கு வித் கோமாளி டீம் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்காக செலிபிரேஷன் சுற்று செலிபிரிட்டி சுற்று என விதவிதமாகப் பெயர் வைத்து இழுக்கிறார்கள்.
வரும் வாரம் சீசன் 1 போட்டியாளர்களான வனிதா, உமா ரியாஸ், ரேகா, ரம்யா பாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளார்கள். இதுகுறித்த போஸ்டர் தான் தற்போது வைரல் ஆகி வருகிறது.
-
இந்தியா1 day ago
மின்னல் வேகத்தில் பரவும் உருமாறிய கொரோனா; 10 மாநிலங்களுக்கு வல்லுநர் குழுவை அனுப்பிய மத்திய அரசு!
-
கிரிக்கெட்2 days ago
100வது டெஸ்டில் விளையாடும் இஷாந்த் சர்மா; இந்திய அணியில் அவர் முதன்முறை தேர்வானபோது கோலி செய்த காரியம்
-
தமிழ் பஞ்சாங்கம்2 days ago
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/02/2021)
-
கிரிக்கெட்1 day ago
‘நீ என்னனை கைவிட்டுட்ட இஷாந்த்!’- கடைசி டெஸ்டில் தோனியின் அவலநிலை; வெளிவந்த ரகசியம்