Connect with us

விமர்சனம்

ஏர் ஓட்டுபவர்களை விமானத்தில் அழைத்துச் சென்றாரா சூர்யா.. சூரரைப் போற்று – விமர்சனம்!

Published

on

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள ஒரு பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவர் நெடுமாறன் ராஜாங்கம். அப்பா ஆசிரியர். அம்மா ஊர்வசி. தங்களது கிராமத்துக்கு பெட்டிஷன் எழுதி மின்சாரம் வர வைக்கிறார் சூர்யாவின் அப்பா. அடுத்ததாக எப்படியாவது சோழவந்தானில் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்த வேண்டும் என்று பல முறை பெட்டிஷன் எழுதுகிறார். ஆனால் தோல்வியே மிச்சம்.

இளைஞரான நெடுமாறன், கிராம மக்களை கூட்டிச்சென்று ரயிலை நிறுத்தக் கோரி போராட்டம் நடத்துகிறார். அதில் அவரது நண்பர் காளி வெங்கட்டுக்கு அடிபடுகிறது. சூர்யா தான் அதற்குக் காரணம் என்று அவரது அப்பா கோபப்படுகிறார்.

ஊரிலிருந்தால் அப்பாவுடன் எப்போது பிரச்சனை என்று அரசு வேலைக்கு விண்ணப்பிக்கிறார். விமானப் படையில் வேலை கிடைக்கிறது. ஆனாலும் அப்பாவுடன் சரியான பேச்சுவார்த்தை இல்லை. சில வருடங்களில் அவரது அப்பா சூர்யாவின் நினைப்பாகவே இருந்து இறந்துவிடுகிறார். தந்தையின் இறுதி ஊர்வலத்திற்குச் சரியான நேரத்திற்கு வர முடியவில்லை. காரணம் விமான டிக்கெட் கட்டணம்.

தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியாத போன துக்கத்தில் வீட்டிற்கு வரும் சூர்யாவைப் பார்த்து அவரது அம்மா சொல்லும் வசனங்கள் வெளியூர்களில், வெளிநாடுகளில் பணத்திற்காக வேலைக்குச் செல்வோர் படும் கஷ்டம். அடுத்த ஒரு வருடத்தில் ஏர் ஓட்டுப்பவனும் ஏரோ பிளேனில் செல்ல வேண்டும் என்ற கனவோடு வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கு வருகிறார்.

இவரது விமான நிறுவன கனவிற்குக் கடன் வழங்க வங்கிகள் மறுக்கின்றன. இப்படியே காலம் செல்ல கட்டினால் இவரைத்தான் கடிப்பேன் என்று அபர்ணா பாலமுரளி மாப்பிள்ளை பார்க்க வருகிறார். இருவருக்கும் பிடித்து இருந்தாலும் அபர்ணாவுக்கு உள்ள பேக்கரி கனவு, சூர்யாவின் விமான நிறுவன கனவும் இரண்டும் அவர்கள் திருமண கனவிற்குத் தடையாக உள்ளன.

ஆனால் ஊரில் சின்னதாக பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார் அப்பர்ணா. இவருக்கு உதவியாக அவரது சித்தப்பா கருணாஸ் இருக்கிறார். மறுபக்கம் சூர்யா தனது கனவு விமான நிறுவனத்தைத் தொடங்க பிரபல தொழில் அதிபரிடம் உதவி கேட்கிறார். அவர் உதாசினப்படுத்தினர். அப்போது முதலீட்டு நிறுவனர் ஒருவர் சூர்யாவுக்கு உதவ வருகிறார். அவர்களுக்குத் தனது நிறுவனத்தின் திட்டம் பற்றி விளக்குகிறார். 1000 ரூபாய் என்ன 1 ரூபாய்க்குக் கூட விமானத்தை இயக்கி லாபம் பார்க்க முடியும் என்கிறார். முதலீட்டு நிறுவனம் நிதி உதவி வழங்க ஒப்புக்கொள்கிறது. எப்படியும் விமான நிறுவனம் தொடங்கிவிடுவோம் என்ற கனவில் அபர்ணாவைத் திருமணம் செய்துகொள்கிறார்.

விமான நிறுவனத்தைத் தொடங்குவதற்கான அனுமதிகள் பெறும் முன்பு விமானம் ஒன்றை புக் செய்யுங்கள், நாங்கள் சில மாதங்களில் நிதி உதவி அளிக்கிறோம் என்று கூறுகின்றனர். அதை நம்பி வீட்டை அடைமானம் வைத்து கடன் வாங்கி விமானம் ஒன்றை புக் செய்கிறார் சூர்யா. ஆனால் நிதி வழங்க ஒப்புக்கொண்ட விமான நிறுவனம் சூர்யாவை ஏமாற்றுகிறது.

என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடும் சூர்யாவுக்கு பக்கபலமாக அவரது மனைவி இருக்கிறார். அப்போது சூர்யாவுக்கு நாம் ஏன் சிறிய விமானத்தை இயக்கக் கூடாது, அதுவும் விமானச் சேவை இல்லா சிறிய நகரங்களுக்கு விமானச் சேவை என்று திட்டமிடுகிறார். அப்படி முதல் விமானத்தை வாங்கி சென்னை விமான நிலையத்தில் இறக்க முயன்றால் அதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே தான் ஒரு முன்னாள் விமானப் படை அதிகாரி என்பதால் விமானப் படைக்குச் சொந்தமான விமான தளத்தில் அனுமதியின்றி விமானத்தை இறக்குகிறார்.

அங்கு இவருக்கும் அவரது உயர் அதிகாரிக்கும் முன் பிரச்சனைகள் இருந்தாலும், இவரது கனவு பெரிசு என்பதற்காகப் பழிவாங்குவதை மறந்து உதவுகிறார். சிறிய அபராதம் மட்டும் வசூலிக்கிறார். இதனால் சூர்யா மகிழ்ச்சி அடைந்து மீண்டும் விமான நிறுவனத்தைச் சரி செய்து விமானச் சேவையை தொடங்குகிறார். ஆனால் அங்கு அவரது விமானியை மிரட்டி போட்டி நிறுவனங்களால் பழிவாங்கப்படுகிறார். இவரது விமான நிறுவனத்தின் முதல் விமானமே விபத்துக்குள் ஆகிறது. அதனால் இவரது விமான நிறுவனத்தின் நன்மதிப்பு கேள்விக்குறியாகிறது. பாதுகாப்பு இல்லாத விமான நிறுவனம் என்று பழிக்கு உள்ளாகிறார்.

ஆனாலும் மனம் தளராத சூர்யா, முதல் பயணத்தை நான், எனது அம்மா மற்றும் மனைவி செய்வோம் என்று ஊடகம் ஒன்றில் கூறுகிறார். சென்னை விமான நிலையத்தில் முதல் விமானம் புறப்பட இருக்கிறது ஒரு பயணி கூட வரவில்லை. இதனால் விமான சேவை ரத்தாகிறது. இவர் செல்ல இருந்த விமானம் ரத்தானாலும், மதுரை, விசாகபட்டினம் உள்ளிட்ட பிற நகர விமானங்களில் பயணிகள் பயணிக்கிறனர். அது தெரியாத சூர்யா மக்களுக்கு தன் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது என்று வருத்தத்துடன் விமானத்தை விட்டு வெளியில் வர, அவரது நண்பர் தான் டிக்கெட் புக்கிங் செய்வதில் சிறு பிழை செய்துவிட்டேன். அதனால்தான் இந்த விமானத்திற்குப் பயணிகள் டிக்கெட் புக் செய்தும் சீட் கிடைக்கவில்லை. பிற நகர விமான சேவைகள் சரியாக உள்ளன என்கிறார்.

மதுரையில் இருந்து விமானம் சென்னையை வந்தடைகிறது. கிராமத்து மக்கள், சூர்யாவின் அம்மா ஊர்வசி எல்லோரும் விமானத்தில் பயணித்து வந்து சூர்யாவை பாராட்டுகின்றனர். விமானத்தில் உணவு வழங்கும் ஆர்டரை தனது மனைவிக்கு வழங்குகிறார். அதன் மூலம் அவர் லாபம் பார்க்கிறார். இவருக்கு போட்டியாக இருந்த நிறுவனங்கள் இவரை வாங்க முயல்கின்றன. ஆனால் இவர் தனது கனவு நிறைவேறிய சந்தோசத்தில் நண்பர்களுடன் பெருமிதம் கொள்கிறார். இதுதான் சூரைப்போற்று கதை. குடும்பம், பாசம், காதல், ரொமான்ஸ், நட்பு, தொழில் போட்டி என்று பலவற்றையும் பிளேஷ்பேக், பாடல் என்று திரைக்கதை அமைத்துள்ளனர்.

அப்பர்ணா சூர்யாவை பெண் பார்க்க வரும் போது சாவுக்கு குத்தாட்டம் போடும் இடத்தில், வாரனம் ஆயிரம் படத்தில் அஞ்சல பாட்டுக்கு நடமாடும் சூர்யாவை நினைவு படுத்துகிறார். அப்பரணா இறுதிச்சுற்று படத்தில் நடித்த ரித்திகா சிங்கை ஆங்காங்கே நினைவுபடுத்துகிறார். இது இயக்குனர் சுதா கோங்குரா டச் என்பது தெரிகிறது. ஜிவி பிரகாஷ் இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. கருணாஸ், ஞானசம்பந்தன், ஊர்வசி, காளி வெங்கட் என படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் தங்களது பங்கை சரியாக செய்துள்ளனர். டெக்கன் ஏவியேஷன் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாறு படம் என்றாலும், படத்திற்காக நிறைய மாற்றங்கள் செய்துள்ளனர்.

சூரரைப் போற்று சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு முன்னோடி!

விமர்சனம்

ஒடிடியில் வெளியாகி வெற்றி பெற்ற முதல் தமிழ் படம்.. க.பெ.ரணசிங்கம் விமர்சனம்!

Published

on

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாகத் திரை அரங்குகள் திறக்கப்படாமல் உள்ளன. எனவே பல்வேறு திரைப்படங்கள் ஆன்லைனில் வெளியாகி வருகின்றன. அதிலும் முதல் முறையாக ஒரு படத்தைப் பார்க்கக் கட்டணம் செலுத்தும் ஜி பிளக்ஸ் சேவையில் க/பெ.ரணசிங்கம் திரைப்படம் வெளியாகி உள்ளது.

இதுவரை விஜய் சேதுபதியுடன் ஐஷ்வர்யா ராஜேஷ் பல படங்களில் நடித்து இருந்தாலும், அவை எல்லாம் கெஸ்ட் ரோல் போன்று தான் இருக்கும். ஆனால் க.பெ.ரணசிங்கம் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரமாக இருக்க விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் என்று கூறலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் எந்த ஒரு பிரச்சினை என்றாலும் அதற்காக குரல் கொடுக்கும் விஜய் சேதுபதி, ஐஷ்வர்யா ராஜேஷின் கணவன். குடும்ப சூழல் காரணமாக, வேலைக்காகத் துபாய் செல்கிறார். அங்கு வேலைக்காக செல்லும் இந்தியர்கள் என்னவெல்லாம் கொடுமைகளை சந்திக்கிறார்கள் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள். அங்கு ஒருவர் இறந்துவிட்டால் அவரது உடல் தாய் நாட்டுக்கு கொண்டு வருவதில் ஏற்படும் சிக்கல் பற்றி எல்லாம் கதைக்களம் செல்கிறது.

வெளிநட்டுக்கு சென்ற கணவனை மீடக போராடும் மனைவி கதாபாத்திரத்தில் ஐஷ்வர்யா ராஜேஷ் சிறப்பாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி படத்தில் உள்ளதால், அவரின் பில்டப்புகளுக்காக சேர்க்கப்பட்டுள்ள காட்சிகள் காதைக்கு ஒட்டாமலும், இழுவையாகவும் உள்ளன.

சாதாரண ஒரு ஏழை வெளிநாடுகளில் இறந்துவிட்டால், அதனால் அவர்கள் குடும்பம் படும் கஷ்டத்தையும், அதுவே ஸ்ரீதேவி போன்ற பிரபலங்கள் மற்றும் பணக்காரர்கள் வெளிநாடுகளில் இறந்தால் காட்டப்படும் அக்கரை குறித்து காட்டியிருப்பது சிறப்பு.

விஜய் சேதுபதியின் பில்டப் காட்சிகள் படத்திற்கு, தொய்வை ஏற்படுத்தினாலும், ஓடிடியில் நேரடியாக வெளியான தமிழ் திரைப்படங்களில் முதல் வெற்றி க.பெ.ரணசிங்கம் படம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

விமர்சனம்

‘பென்குயின்’ குயின் தானா? திரை விமர்சனம்!

Published

on

கொரோனா ஊரடங்கால் திரை அரங்குகள் திறக்கப்படுவதில்லை. இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அமேசான் பிரைம் நிறுவனம் சென்ற மாதம் ஜோதிகாவின் பொன்மகள் வந்தால் திரைப்படத்தையும் இந்த வாரம் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பென்குயின் படத்தையும் நேரடியாக ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பென்குயின் திரைப்படமும் பொன்மகள் வந்தால் போல பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள க்ரைம் திரில்லர் படமே.

கதை

கீர்த்தி சுரேஷூம் அவரது கணவருக்கும் ஒரு ஆண் குழந்தை. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றுப் பிரிந்துவிடுகின்றனர். ஆனால் மகன் மற்றும் நட்பு ரீதியாலான உறவு மட்டும் தொடர்கிறது.

இதற்கிடையில் கீர்த்தி சுரேஷ் இரண்டாம் திருமணம் செய்துகொள்கிறார். மகன் அஜய் 2 வயதில் கானாமல் போய்விடுகிறார். தேடிப் பார்த்து ஓய்ந்து போக, இரண்டாம் கணவருடன் கர்ப்பமாகிறார். 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் போது மீண்டும் அவரது முதல் பையன் கிடைக்கிறான். ஆனால் பேச மாட்டேன் என்கிறான். அவன் கடத்தப்பட்ட பின்னணி என்ன? யார் அவனைக் கடத்தினார்கள்? எதற்காக என்பது தான் கதை.

பென்குயின் குயின் தானா?

படத்தில் கீர்த்தி சுரேஷை தவிரத் தெரிந்த முகம் என்று பெரிதாக யாரும் இல்லை. நடிகையர் திலகம் படத்திற்குப் பிறகு பெண் கதாபத்திறத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

க்ரைம் திரில்லர் படம் என்பதால், பார்வையாளர்களுக்குப் பலர் மீது சந்தேகம் வர வேண்டும் என்பதற்காகவே பல கதாபாத்திரங்கள் சொருகப்பட்டுள்ளது போன்று தெரிகிறது. என்ன தான் கீர்த்தி சுரேஷ் தனது நடிப்பிற்காக அவார்டு எல்லாம் வாங்கி இருந்தாலும் மொத்தமாகப் பார்த்தால் ஒரு நாடகத்தனமாகவே திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

132 நிமிடங்கள் ஓடும் படத்தில் டைட்டில் கார்டு போன்றவற்றைத் தவிர்த்தால் 125 நிமிடம். இது முழுவதுமே நிதானமாகவே நகருகிறது. படத்தின் கடைசி 40 நிமிடம் இருக்கும் போது வரும் டிவிஸ்ட்களால் படம் வேகம் எடுக்கும் என்று பார்த்தால், அதன் பின்பும் பல லாஜிக் ஓட்டைகளுடன் முடிவுக்கு வருகிறது. வில்லன் சாரி, வில்லி கதாபத்திறத்திற்கு கடைசி 5 நிமிடங்கள் வரை வேலையே இல்லை. கீர்த்தி சுரேஷின் இரண்டாம் கணவர் கதாபாத்திரம் எதற்கு என்றே தெரியவில்லை.

பின்னணி இசையில் சந்தோஷ் நாராயணன் பேருக்குத் தனது கடமையைச் செய்துள்ளார். சொல்லும் அளவிற்கு ஏதுமில்லை. படத்திற்கு முக்கிய பிளஸ் என்று பார்த்தால் ஒளிப்பதிவு மட்டுமே. மலை பகுதியில் நடுக்கும் கதையைச் சிறப்பாகப் படம் பிடித்துள்ளார் என்று கூறலாம். உண்மையில் கார்த்திக் சுப்புராஜ் கதையைக் கேட்ட பிறகுதான் படத்தை தயாரித்தாரா என்று தான் கேட்க தோன்றுகிறது.

இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் படத்தை எடுத்துள்ள வேகத்திற்குத் தத்தித் தத்திச் செல்லும் பெங்குயின் கூட வேகமாகச் சென்று விடும் போல.

ஆக மொத்தத்தில் பெங்குயின் குயினாக இல்லை என்றாலும், ஒரு ஜோக்கராக கூட இல்லாமல் போய்விட்டது என்பது வருத்தம் அளிக்கிறது.

பென்குயின் – டிரெய்லர்

Continue Reading

சினிமா

தர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…

Published

on

மும்பையில் காவல் ஆணையர் ஆதித்ய அருணாச்சலம் (ரஜினி) கண்ணில் படும் ரவுடிகளை எல்லாம் என்கவுண்டர் செய்கிறார். அதை விசாரிக்க வரும் மனித உரிமைகள் கழகத்தினரையும் (ஆணையம் இல்லை கழகம். அப்படித்தான் தலைவர் சொன்னார்) மிரட்டி கையெழுத்து வாங்கி அனுப்பிவிடுகிறார் ஆதித்ய அருணாச்சலம். ஆனால், உண்மையில் இவ்வளவு மூர்க்கமான ஆள் இல்லை ஆதித்ய அருணாச்சலம். அப்படியானால் இவ்வளவு மூர்க்கமாக ஆதித்ய அருணாச்சலம் நடந்துகொள்வதற்கான காரணம் என்ன? என்பதை சுருள் சுருளான கம்பிவளைவுகளுக்குப் பின்னான பிளாஸ்பேக் மூலம் சொல்லும் படம் தான் தர்பார்…

தர்பார் திரை விமர்சனம்

ஆதித்ய அருணாச்சலமாக அவ்வளவு அழகாக சுருசுருப்பாக இருக்கிறார் ரஜினி… இப்போதும் சொல்லலாம்… வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை என்பதை. ஏனென்றால் இதெல்லாம் அவர் கூடவே பிறந்தவை இல்லையா? நகைச்சுவை, ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என அதகளம் செய்திருக்கிறார் ரஜினி. அவ்ளோ இளமை… அவ்ளோ வேகம்… இப்போதும் ரஜினியின் கண்கள் நடிக்கின்றன. ஸ்கிரீனில் முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளார் ரஜினி. பாடல் காட்சிகளில் இவரின் எனர்ஜி வேற லெவல். நயன் தாராவிடம் காதலை சொல்லும் காட்சிகளில் அண்ணாமலை ரஜினியை பார்க்கலாம். அவ்ளோ அப்பாவியாக காதலை வெளிப்படுத்துகிறார். ரஜினியை மட்டுமே பேசிக்கொண்டே போகலாம். பார்த்துக்கொண்டே இருக்கலாம். தர்பாரிலும் அவரின் மேஜிக் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. இனியும் ஆகும்…

Darbar Review in Tamil | தர்பார் விமர்சனம்ரஜினி தவிர்த்து தர்பாரில் கவனிக்க வைப்பவர்கள் நிவேதா மற்றும் யோகி பாபு. ரஜினி படங்களில் வரும் தங்கைகள் போல இப்போது மகள்கள். வருகிறார்கள் பாசம் பொங்குகிறார்கள் இடையில் இறந்து போகிறார்கள். அதையே இம்மி பிசகாமல் செய்திருக்கிறார் நிவேதா.

யோகி பாபுவின் ஒன் லைன் கவுண்டர்கள் செம்மையாக ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. எல்லா இடத்திலும் ரசிக்கும் படியாக இருக்கின்றன. ரஜினியை கலாய்க்கும் இடங்களில் அவ்ளோ அழகாக கவுண்டர் கொடுத்திருக்கிறார். மிக முக்கியக் காரணம் இதற்கெல்லாம் சூப்பர் ஸ்டார் அனுமதி கொடுத்தது தான். இதெல்லாம் மற்ற எந்த பெரிய நடிகருக்கும் வராத ஒரு பெரிய குணம். ரஜினி ஏன் சூப்பர் ஸ்டார் என்பதற்கு யோகி பாபுவுக்கு சினிமாவில் கொடுத்துள்ள ஸ்பேஸ் சொல்லும். யோகி பாபுவும் அடக்கி அதே நேரம் ரசிக்கும் வகையில் நடித்திருக்கிறார்.

தர்பார் முழுவதும் வில்லன்கள் தான். தாடி வைத்து வந்து ரஜினியின் குண்டடிபட்டு செத்துக்கொண்டே இருக்கிறார்கள். சுனில் ஷெட்டி தான் முக்கியமான வில்லன் என்றாலும் அவர் இடைவேளைக்குப் பின்னர்தான் வருகிறார். முருகதாஸ் படங்களில் வில்லன்களுக்கு ஆரம்பத்தில் இருந்து ஒரு பில்டப் கொடுத்து எப்படா வில்லனுடன் கதாநாயகன் மோதுவான் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பார். இதிலும் பில்டப் கொடுத்துள்ளார். ஆனால், அது கொஞ்சம் ஓவர் டோஸாக அமைந்துள்ளது. பெரிய அளவில் வில்லனுக்கான கதாபாத்திரம் வெயிட் இல்லை.

மற்றபடி ஓ… நயன்தாரா… மன்னிச்சுடுங்க… நாலே நாலு காட்சியில் மட்டுமே வருகிறார். அதில் இரண்டு பாடல்காட்சி. ரஜினி படத்தில் வலுவாக இருக்கும் வில்லனே இதில் கொஞ்சம் வலு இல்லாமல் இருக்கும் போது சும்மா கடமைக்காக வைக்கப்பட்டுள்ள போது கதாநாயகிக்கு மட்டும் என்ன பெரிய இடம் இருக்கப் போகிறது. நயன்தாரா மற்றொரு ரஜினி பட நாயகி அவ்ளோ தான் படத்தில் அவருக்கான இடம்.

தர்பார் விமர்சனம் | Darbar Review in Tamil

தர்பார் ரஜினிகாந்த் போஸ்ட்டர்

போலீஸ் கதை… அதை ரஜினிக்கு ஏற்ற மாதிரி… ரஜினி ரசிகர்களுக்குப் பிடிக்கும் மாதிரி… ரஜினி படமாக எடுத்திருக்கிறார் ரஜினி. சார் இதுதான் காட்சி… ஸ்டைலா கெத்தா நடிங்க சார் என சொல்லிவிட்டு உட்கார்ந்துவிட்டார் போல முருகதாஸ்… மற்றபடி மும்பை தாதாக்களை அழிக்கும் ஒரு போலீஸ் கதை தான் இது. ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன். தளபதியில் காட்டியதை விட ரஜினியை அழகாக காட்டியுள்ளார். மற்றபடி இந்தப் படத்திற்கு சந்தோஷ் சிவனின் தேவை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இசை அனிருத்… ரஜினிக்கான பின்னணி இசை நன்றாக இருக்கிறது. பாடல்கள் முன்னரே பிரபலம் ஆகிவிட்டன. ஆனால், இரண்டாம் பாதியில் காதை கொஞ்சம் பதம் பார்த்துவிட்டுத்தான் அனுப்புகிறார்.

Darbar Review in Tamil | தர்பார் விமர்சனம்

தர்பார் ரஜினிகாந்த்

முற்பாதி அட்டகாசமாக இருக்கிறது. இரண்டாம் பாதியும் சூப்பர் ரகம் தான். ஆனால், கொஞ்சம் இழுவை. அவ்ளோ பில்டப் கொடுத்த வில்லன் ரெண்டே அடியில் செத்துப்போவது. ரஜினி சுட்டுக்கொண்டே இருப்பது. மகள், யோகி பாபு, நயன்தாரா என எப்போது ரஜினியுடனேயே இருப்பது. எல்லா இடங்களுக்கும் எம்பசி, மினிஸ்டரி என எந்த இடமாக இருந்தாலும் அசால்டாக சென்று வருவது என இன்னும் எவ்ளோ இதில் குறை கண்டுபிடிக்க வாய்ப்பு இருந்தாலும் ரஜினி என்ற ஒற்றை ஆள் படத்தை ரசிக்க வைத்துவிடுகிறார். அதனால் தான் இன்னும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் ரஜினி.

ரஜினிக்கு வயது எழுபது… கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக திரையில் வந்தாலே வசீகரிக்கும் பெயர் ஆளுமை ரஜினி. தர்பாரிலும் அப்படியே செய்திருக்கிறார். ரஜினி ஒரு சினிமாவை பொழுதுபோக்காக மட்டுமே பார்ப்பவர். இதுவும் ஒரு நல்ல ரஜினியின் பொழுதுபோக்கு படம்…

Continue Reading
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்4 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (29/11/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்4 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/11/2020)

சினிமா செய்திகள்8 hours ago

மாஸ்டர் திரைப்படம் திரை அரங்குகளில் தான் வெளியாகும்; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கிரிக்கெட்11 hours ago

#AUSvsIND இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு 20% அபராதம் விதித்த ஐசிசி!

தமிழ்நாடு19 hours ago

5 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் பெருக்கெடுத்த தண்ணீர்!

தமிழ்நாடு20 hours ago

இந்த மாதமே மீண்டும் ஒரு புயல்.. தாங்குமா சென்னை?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்21 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (28/11/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/11/2020)

தினபலன்1 day ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (28/11/2020)

கேலரி1 day ago

சணல் உடையில் வேதிகா.. வைரலாகி வரும் போட்டோ ஷூட்!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வைரல் செய்திகள்1 day ago

மனிதர்களைப் போல ‘டீ’ வாங்கி குடிக்கும் யானை.. வைரல் வீடியோ!

வீடியோ2 weeks ago

சசி குமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ ட்ரெய்லர்!

வீடியோ2 weeks ago

வாத்தி யாரு? விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசர்!

வீடியோ3 weeks ago

சன் டிவியில் தீபாவளிக்கு நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘நாங்க ரொம்ப பிஸி’ டிரெய்லர்!

வீடியோ3 weeks ago

மீண்டும் ‘விக்ரம்’.. #கமல்ஹாசன்232 பட தலைப்பை அறிவித்த படக்குழு!

வீடியோ1 month ago

ஜீவா, அருள்நிதி சேர்ந்து கலக்கும்‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்!

வீடியோ1 month ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ1 month ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

கிரிக்கெட்3 months ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

Trending

%d bloggers like this: