Connect with us

விமர்சனம்

ஈஸ்வரன் சிம்பு கம்பேக்குக்கு உதவினாரா? – ஈஸ்வரன் விமர்சனம்

Published

on

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் பெரியசாமியின் (பாரதிராஜா) பெரிய குடும்பத்தில் வரும் பிரச்னைகளும் அந்தப் பிரச்னைகளை அவருக்குத் துணையாக இருக்கும் ஈஸ்வரன் (சிலம்பரசன்) எப்படித் தீர்க்கிறார் என்பதும்தான் கதை.


2019-க்குப் சிம்பு நடிக்கும் படம், சுசீந்திரன் இயக்கம், அதுவும் குறுகிய காலத்தில் எந்த பிரசனையும் இல்லாமல் சிம்பு ஷுட்டிங் முடிச்ச படம் என இந்த படம் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்த பல காரணங்கள் இருக்கின்றன.
ஈஸ்வரனாக சிலம்பரசன் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் இருந்ததை விட பாதியாக வந்து நிற்கிறார். முடிந்த அளவு கை… கால்களை ஆட்டாமல் பன்ச் பேசி வெறுப்பேத்தாமல், பில்டப் கொடுக்காமல் (அங்கே அங்கே இருக்கின்றன. ஆனால் சலித்து கொள்ளலாம்) நடித்ததற்காகவே சிம்புவை பாராட்ட வேண்டும். இரண்டு நாயகிகள் இருந்தும் காதல் காட்சிகள் இல்லை. நந்திதா எதற்கு… வாயை கூட அசைக்க தெரியாத நீதி அகர்வால் எதற்கு என்பது இயக்குநருக்கு தான் வெளிச்சம். ஒரே ஒரு சண்டை காட்சி… ஆனால் இரண்டு வில்லன்கள். அதுவும் எதற்கு என்று தான் தெரியவில்லை (ட்ரைலரில் கட்டாத இன்னொரு வில்லன் யார் என்பது சஸ்பென்ஸ்). ஆனால், சிம்பு முடிந்த அளவு சிறப்பாக நடித்திருக்கிறார். இவ்ளோ நாள் ஆனாலும் எப்படி அவரால் இவ்வளவு ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ள முடிந்தது என்பதற்கு அவரது நடிப்பு… ஸ்க்ரீன் பிரசன்ஸ், டான்ஸ், காமெடி சென்ஸ் எல்லாம் காரணமாக இருக்கலாம். (இவை எல்லாம் அவ்வளவு சிறப்பாக இல்லை என்றாலும் முந்தைய படங்களை ஒப்பிடும் போது 200% சிறப்பாகவே செய்திருக்கிறார்.) சம்பந்தமே இல்லாமல் யாரோ ஒரு அசுரனை எச்சரிக்கவும் செய்கிறார்.
பாரதிராஜா கொஞ்சம் ஓவராக நடித்தாலும் தன் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சில இடங்களில் அப்லாஸ் அள்ளுகிறார். உண்மையில் பாண்டிய நாடு படத்தில் பாரதிராஜா செம்மையாக நடித்திருப்பார். அந்த அளவு கனமான கதாபாத்திரமாக இவரது பாத்திரம் எழுதப்பட்டவில்லை தான். பாலசரவணன், முனிஸ்காந்த் வரும் சில காட்சிகளில் சிரிப்பு கொஞ்சமாக வர முயன்றது. அவ்ளோ தான்.
தமன் இசை… தெலுங்கு படங்களுக்கு இசை அமைத்து… இசை அமைத்து இப்படியா ஆகிவிட்டார் போல. படத்திற்கு முழு தெலுங்கு வாசனை தருகிறார் தன் இசை மூலம். சகிக்க முடியவில்லை. பாடல்… பின்னணி இசை… பில்டப் பிஜிஎம் ஏதும் காதில் ஏறவில்லை. ரத்தம் வராத குறைதான்.
திண்டுக்கல்லை மையமிட்டு கதை திரைக்கதை அமைத்த சுசீந்திரன் படங்கள் எல்லாம் செம்ம ஹிட். நமக்கு ஒரு கம்பேக் அதே மாதிரி இருக்கணும் என்று சிம்பு நினைத்திருக்கலாம். இந்த கதையை தேர்ந்தெடுக்கும் போது. ஆனால் அழுத்தம் இல்லாத கதை, திரைக்கதை மூலம் சிம்புவை மட்டும் இல்லை நம்மையும் ஏமாற்றி விட்டார். காட்சி, உறவுகளுக்குள் ஒரு வரும் சொத்து பிரச்னை, பழி வாங்க வில்லனுக்கு இருக்கும் காரணம், காதல் காட்சிகள் என ஒண்ணு கூட புதுசு இல்லை இந்தப் படத்தில். ஆனால் படம் மட்டும் நியூ ரிலீஸ்… கொடுமை…


படம் 2 மணி நேரம்… இண்ட்ரோ ஸீன் 20 நிமிடம்… கொரோனா ஸீன் 15 நிமிடம் (கொரோனா டெஸ்ட் எடுத்து இதயத்தில் இருக்கும் ஓட்டையை கண்டுபிடிக்கவும் செய்யலாம் போல. படத்தை பாருங்க புரியும்), வில்லனுக்கு ஒரு பிளாஷ் பேக்… ஹீரோவுக்கு ஒரு பிளாஷ் பேக் மொத்தம் 15 நிமிடம்… டீசரில் வந்துச்சே ஒரு பாம்பு ஸீன் அதுக்கு ஒரு 15 நிமிடம்… (இங்கையும் ஒரு மெடிக்கல் மிராக்கில்… பாம்பு கடிச்சி ரெண்டு சண்டை போட்டு மருத்துவமனை போனா ஒரே ஊசில ஒரு நிமிசத்தில குணம் ஆயிடுது) கிளைமாக்ஸ் ஒரு 20 ன் நிமிடம்… அப்புறம் பாட்டுக. இவ்ளோ தான் ஈஸ்வரன்.
பொழுது போகும்னு தியேட்டருக்கு போனா… அங்க எப்படி பொழுதை போக்குறதுன்னு உக்காந்திருக்க வச்சுட்டாரு இந்த ஈஸ்வரன். கொஞ்சம் பாத்து பண்ணியிருக்கலாம்… வேற என்ன சொல்ல… பாவம் சிம்பு… ஐயோ பாவம் நாம்…
நீண்ட நாளுக்கு பிறகு வருகிறோம். ரசிகனுக்காக… பெண் ரசிகைகளுக்காக நல்ல குடும்ப படத்தில் கம்பேக் கொடுக்கணும் நெனச்சது சரிதான். ஆனால் கதை… திரைக்கதை… அதை சரியா கொண்டு போகும் இயக்குநர் பத்தியும் யோசிச்சு இருக்கணும்.

விமர்சனம்

விவசாயிகளுக்கு ஆப்பு அடிக்க முயன்றிருக்கிறார் ஜெயம் ரவி… பூமி விமர்சனம்

Published

on

இளம் வயதில் சிறிய செயற்கை கோள் செய்ய அதன் மூலம் நாசாவில் வேலை கிடைத்து பணியாற்றுகிறார் பூமிநாதன் (ஜெயம் ரவி). செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்து அங்கே மனிதர்களை குடியேற்றும் புராஜெக் செய்து வருபவருக்கு ஒருமாதம் லீவ் கிடைக்கிறது. லீவுக்கு சொந்த கிராமத்திற்கு செல்லலாம் என நினைத்து திருநெல்வேலியில் இருக்கும் தன்னுடையை ஊருக்கு வருகிறார் பூமிநாதன். அங்கே விவசாயிகள் படும் துன்பத்தை பார்த்து, அதை போக்க தானும் விவசாயம் செய்யலாம் என முடிவுசெய்கிறார்.


விவசாயம் செய்ய தொடங்கும் பூமி அவர்களின் துன்பத்திற்கு காரணம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் என்பதை தன்னுடைய விஞ்ஞான மூளை மூலம் கண்டுபிடிக்கிறார். பின்னர் சொந்தமாக விவசாயம் செய்யவிடாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் பிரச்னைகளை ஏற்படுத்த, பூமிநாதன் அதில் இருந்து மீண்டுவர என்ன செய்கிறார், விவசாயிகளையும் விவசாயத்தையும் எப்படி காப்பாற்றுகிறார் பூமி படத்தின் கதை…

விவசாயிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குமான ஒற்றை வரி கதை தான். எந்த கதையாக இருந்தாலும் அதை சொல்லுவதில் கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்த்தால் போதும். ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுவார்கள் என்பதற்கு தமிழ் சினிமாவில் பல படங்களை உதாரணமாக சொல்லலாம். ஆனால் வாட்ஸப், பேஸ்புக், டெலிகிராம், 4 பசுமை விகடன் புத்தகம் நிறைய மதன் கவுரி யூடியூப் வீடியோக்களை பார்த்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் லக்ஷ்மணன்.

ஒரு காட்சியில் கூட நம்பகத்தன்மை இல்லை. விவசாயம் பற்றிய தெளிவான புரிதல் இல்லை, விவசாயிகள் பிரச்னை பற்றி தெரியவில்லை, இயற்கை விவசாயம் என்றால் என்ன என்ற சின்ன அளவு கூட தெளிவு இல்லை. விவசாயம்… விவசாயம் என ரத்தம் தெரிக்க இயக்குநர் சொன்னதை விட கொஞ்சம் ஓவராகவே உணர்ச்சியை கொட்டி நடித்து தள்ளி விட்டார் ஜெயம் ரவி. பார்க்கவே சிரிப்பாக இருக்கிறது (கேளிச்சிரிப்பு).

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அம்மா பாத்திரத்தில் சரண்யா 2 காட்சிகளில் மட்டும் வந்து போகிறார். உண்மையில் இந்த பொங்கல் நீதி அகர்வாலுக்கானது போல. பொங்கலுக்கு ஈஸ்வரன், மாட்டுப் பொங்கலுக்கு பூமி என இரண்டிலும் வீணாக வந்து போகிறார். முதல் பாதில் முதல் 15 நிமிடத்திற்குள் வரும் ஒரு பாடலுக்கு மட்டும் முழுதாக வருகிறார். நடிக்கவே வராத வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகி.

டிஸ்கரி, சோனி பிபிசி மட்டும் இல்லை ஆங்கில சினிமாக்களிலேயே நல்ல தமிழில் பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், வெளிநாட்டு அல்லது கார்ப்பரேட் வில்லன் என்றாலே தமிழ் சினிமா வில்லன் அறைகுறை தமிழில் தான் பேசுவார் என்ற ஆதிகாலத்து விசயத்தையே இங்கேயும் கொண்டுவந்துள்ளார் இயக்குநர். வில்லன் பேசும் போதெல்லாம் செம்மையாக கடுப்பு ஏறுகிறது.இமானின் இசையும் அவ்வளவு சிறப்பாக இல்லை.


விவசாயம் பற்றி பேச வந்து இலவச மின்சாரம் தேவையில்லை; கடன் தள்ளுபடி தேவையில்லை; டென்மார்க் நாடு விவசாயம் செய்தே முன்னேறி வருகிறது என விவசாயிகளுக்கு ஆப்பு அடிக்கவே இந்த பூமி முயற்சி செய்திருக்கிறது. விவசாயம் பற்றி வாட்சப்பில் வந்ததை தமிழன் என்றால் பார்வர்டு செய் ரக உணர்ச்சியில் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார் லட்சுமணன். இவரது ரோமியோ ஜூலியட் மட்டும் தான் சுவாரஸ்யமான படம். போகன் ஒரு போங்கு… பூமி விவசாயிகளுக்கு அடிக்க வந்த ஆப்பு…

 

ஹார் ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது (இதை ஏன் சொல்லுவானே உங்களையும் கஷ்டபடுத்துவானேனு பார்த்தேன்.)

Continue Reading

விமர்சனம்

நல்ல மார்க் வாங்கி இருக்க வேண்டிய மாஸ்டர் பார்டரில் பாஸ் ஆகியிருக்கிறார்… மாஸ்டர் விமர்சனம்…!

Published

on

சென்னையில் எப்போதும் குடி போதையில் அடாவடி செய்து கொண்டு திரியும் கல்லூரி ஆசிரியர் ஜான் துரைராஜ் (விஜய்) ஒரு சந்தர்ப்பத்தில் நாகர்கோவிலில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு ஆசிரியராக செல்கிறார். அங்கே சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டு துன்புறுத்தப்படும் சிறுவன், வளர்ந்து பெரிய ரவுடியாக உருவாகியிருக்கிறான் பவானி (விஜய் சேதுபதி). தன் ரவுடிசத்திற்கு சீர்திருத்தப் பள்ளியில் இருக்கும் சிறுவர்களையே பயன்படுத்திக்கொள்கிறான். அங்கு வரும் புதிய ஆசிரியரான ஜான் துரைராஜ் (விஜய்), பவானியை வீழ்த்தி எப்படி சிறுவர்களைக் காக்கிறார் என்பதுதான் மாஸ்டர்.

தொடர்ந்து அட்லீ படத்தில் நடத்தி வெறுப்பேற்றிக் கொண்டிருந்த விஜய் மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற அறிவிப்பு வந்ததும் அவரது ரசிகர்களுக்கு மட்டும் இல்லை காமன் ஆடியன்ஸ்-க்கும் பெரிய எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது. மாநகரம் மாதிரி செம்ம திரைக்கதை, கைதி மாதிரி ஆக்ஷன் அட்டகாசம் என மாஸ்டர் டபுள் ட்ரீட் இருக்கு என்ற எதிர்பார்ப்பு வேறு.
ஜேடி என்ற கல்லூரி ஆசிரியராக விஜய் எப்படியும் ஒரு ஐம்பது வயது இருக்கும். ஆனால், அவ்ளோ இளமையா இருக்கிறார். முதல் பாதி முழுவதும் அவ்வளவு மெனரிசம். பாடி லாங்குவேச் என மனிதன் அட்டகாசம் செய்திருக்கிறார். வழக்கமான விஜயாக இல்லாமல் அசத்தியிருக்கிறார். சண்டை, டான்ஸ் என படம் முதல் பாதி முழுவதும் இவரே ஆக்கிரமிக்கிறார். பிற்பாதியில் சீர்திருத்த பள்ளிக்கு செல்லும் விஜய் தன்னுடைய குடி, அடாவடிகளை நிறுத்து வேறு ஒரு ஆளாக வந்து நிற்கிறார் மீசை இல்லாமல் அழகாக. ஒவ்வொரு பிரேமும் விஜய் ஸ்கிரீனை முழுமையாக ஆக்கிரமிக்கிறார். பேசியே வில்லன்களை திருத்தவும் செய்கிறார் (எல்லாம் எவ்ளோ பாத்திருக்கும். லோகேஷ் நீங்களுமா?)


பவானியாக விஜய் சேதுபதி நீண்ட நாளுக்கு பிறகு கொஞ்சம் நடித்திருக்கிறார். சின்ன சின்ன வசனங்கள், பார்வை, நடை, உடை மூலமே வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார். முதல் பாதியில் கொஞ்சம், இரண்டாம் பாதியில் கொஞ்சம் கடைசியில் வழக்கமான வில்லனாக ஹீரோவிடம் அடி வாங்குவதற்கு கொஞ்சம் மட்டுமே விஜய் சேதுபதியை பயன்படுத்தியிருக்கிறார் லோகேஷ். ஆனாலும், ஹீரோவுக்கு நெருக்கமானவங்களை கொலை செய்வது, மிரட்டுவது என அதே பழைய பாணி வில்லத்தனமும் செய்ய வைத்திருக்கிறார்.
எல்லாம் நல்லா தானே இருக்கு என்று யோசித்தால் அது தான் இல்லை. இப்படி விஜய், விஜய் சேதுபதி என பிரித்து பார்த்தால் ஒவ்வொரு காட்சியும் நல்லா தான் இருக்கு. ஆனால் ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது ஒரு நல்ல காட்சி… நாலு மொக்க அல்லது இழுவை காட்சி என ஓவராக நம்மை சோதிக்கிறார் இந்த மாஸ்டர். படத்தில் வில்லனுக்கும் ஹிரோவுக்குமான ஒரு ரைவல் படத்தில் மிஸ்ஸிங். அதனால் படத்தின் இறுதி காட்சியில் எல்லாம் துளி கூட சுவாரஸ்யம் இல்லாமல் போகிறது. ஆன்டிரியா, மாளவிகா மோகன், சாந்தனு மற்றும் பலர் ஏன் இந்த படத்துக்கு என்றே தெரியவில்லை. பூவையார், அர்ஜுன் தாஸ்-க்கு ஓரளவு நடிக்க வாய்ப்பு தந்திருக்கிறார் லோகேஷ்.
இந்த படத்தை உண்மையில் போரடிக்காமல் கொண்டு செல்வது அனிருத்தின் இசை தான். விஜய்க்கும், விஜய் சேதுபதிக்கு பாரபட்சம் பார்க்காமல் பிஜிஎம் போட்டு அசத்திவிட்டார். பாடல்கள் ஏற்கெனவே ஹிட் என்பதால் அதை தனியாக சொல்லவில்லை.இந்த படம் உண்மையில் மாணவர்களுக்கான அரசியல் புரிதல் வேண்டும், சிறார் குற்றங்களின் பின்னணி, அதற்கான காரணம், அவர்களை மீட்கும் வழி என புதிய ஒரு கதை களத்தை கையில் எடுத்துக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதன் நோக்கம் அதுவாக இல்லையா அல்லது ஹீரோவுக்காக மாற்றப்பட்டதா என தெரியவில்லை. நிறைய சண்டை காட்சி, அதிலே மாஸ் காட்சி, அதற்குள்ளே வில்லன், வில்லனுக்கு மாஸ் காட்சி என்று மட்டும் சுருங்கி விட்டது. உண்மையில் சுருங்கி இருக்க வேண்டியது எடிட்டிங்கில் தான். 3 மணி நேரம், சுவாரஸ்யம் இல்லாத அதும் ரசிகனின் பொறுமையை முழுமையாக சோதிக்கும் இரண்டாம் பாதியை அவ்ளோ நேரம் பார்ப்பது எல்லாம் கஷ்டமாத்தான் இருக்கு. லோகேஷ் கனகராஜின் சில க்ளிஜே காட்சிகளும் இருக்கின்றன. கமர்சியல் படங்களில் லாஜிக் எல்லாம் பார்க்க கூடாது தான் என்றாலும் ஒரு அளவில்லாமல் லாஜிக் ஓட்டைகள் வேறு. உண்மையில் டிஸ்டிங்சன் வாங்கியிருக்க வேண்டிய மாஸ்டர் பார்டரில் பாஸ் செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

Continue Reading

விமர்சனம்

இந்திய பண்பாடு பற்றியும் யோசிச்சு இருக்கலாம் – Never Have i Ever விமர்சனம்

Published

on

வணக்கம் வாசகர்களே… நம் செய்தி சுருளில் Web Series Reivew செய்ய உள்ளோம். முன்னர் ஓரளவு முயற்சி செய்தோம். இனி தொடர்ந்து தர முயற்சி செய்வோம். உங்களுக்கு வேண்டிய சீரியஸை கமெண்ட் செய்தால் அவை பற்றியும் அறிமுகம் மற்றும் விமர்சனம் செய்வோம். சேர்ந்தே பயணிப்போம்.Ma
Never Have I Ever அமெரிக்காவில் குடியேறிய தமிழ் குடும்பம் குறிப்பாக முதல் தலைமுறை பற்றிய ஒரு சிறிய வெப் தொடராக Netflix-இல் வெளியாகி உள்ளது. (நீண்ட நாளுக்கு முன்னரே வெளியானது என்றாலும் தற்போது தான் பார்க்க முடிந்தது.) ஒரு இந்தியவம்சாவளியை சேர்ந்த அதாவது தமிழ் குடும்பத்தின் 16 வயது பெண் தேவி விஷ்வகுமார், தன்னை எப்படி அமெரிக்க பண்பாட்டிற்கு மாற்றி கொள்ள முயற்சி செய்கிறார். அதில் அவர் இன, நிற ரீதியாக எப்படி தவிர்க்கப்படுகிறார். முழுவதும் இந்திய மரபில் ஊறிப்போன தன் அம்மா நளினி உடன் ஒத்துப் போக முடியாமல் எந்த அளவு ஜெனரேசன் கேப்-ஆல் முரண் பட்டு நிற்கிறார் என்பதை நகைச்சுவை கொஞ்சம் சென்டிமென்ட் கலந்து 10 எபிஸோடுகளில் சொல்லியிருக்கிறது.

ஒவ்வொரு எப்பிசோடுக்கும் ஒரு தலைப்பு. தேவி முதன் முதலாக Sex வைக்க முயற்சி செய்வது, தன் நண்பர்களுடன் சண்டை, அவளது அறிவுத்திறனை காட்டுவது, தன் பள்ளி விழாவில் மரணமடைந்த அப்பாவின் நினைவில் தவிப்பது, அமெரிக்க பண்பாட்டிற்குள் தன்னை நுழைத்து கொள்ள முயற்சி செய்வது என சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டுள்ளது.

தேவியாக இலங்கை தமிழர் மைத்ரேயி ராமகிருஷ்ணன் நடித்துள்ளார். ஒட்டுமொத்த கதையும் அவரை சுற்றியே நகர்கிறது. அதை உணர்ந்து தன் சிறப்பை கொடுத்துள்ளார். நடிப்பில் மட்டுமல்ல பார்க்கவும் அவ்ளோ அழகாக இருக்கிறார். அவருடன் வரும் 3 நண்பர்கள் அவரது அம்மா நளினி, அவரது Cousin கமலா என சில பாத்திரங்கள் தேவியை சுற்றியே இருக்கின்றன. அவை எல்லாம் பெரிய அளவில் மனதில் ஒட்டவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

பார்க்க அழகாக இருக்கிறது என்பது மட்டுமே இந்த Never Have i Ever உள்ள ஒரு சிறப்பு. அமெரிக்காவில் குடியேறிய இந்திய குடும்பம் அதிலும் தமிழ் குடும்ப பெண் குழந்தை பற்றிய வெப் தொடர் என உக்கார்ந்தால் ஒரு சிறு அளவுக்கு கூட இந்திய பண்பாடு பற்றிய புரிதல் இல்லாமல் Mindy Kaling மற்றும் Lang Fisher உருவாக்கியிருக்கிறார்கள். இந்த தொடரை பார்க்கும் யாருக்கும் இன்னும் இந்திய சமூகம் கற்காலத்தில் இருப்பதாகவே உணர்வார்கள். அவ்வளவு பிற்போக்குத்தனங்களுடன் தேவி, நளினி, கமலா என்ற முக்கிய பாத்திரங்கள் மட்டும் இல்லாமல் ஆங்காங்கே வரும் துணை பாத்திரங்கள் அதை விட மோசமாக காட்டப்பட்டுள்ளன. அமெரிக்காவில் அத்தனை இந்தியர்கள் உள்ளபோது ஒருவரையாவது தங்களுடன் சேர்த்து கொண்டு இந்த தொடரை உருவாக்கியிருந்தால் நிச்சயம் இந்திய ரசிகர்களை கவர்ந்திருக்கும்.


இது ஒரு மினி சீரியஸ் தான். ஒவ்வொரு எப்பிசோடும் 20 முதல் 30 நிமிடங்களில் முடிந்துவிடும். சிட்-காம் டைப் ரசிகர்கள் என்றால் நிச்சயம் உங்களை இந்த சீரியஸ் கவரும். இந்திய பண்பாடு மீது அதீத விருப்பம் கொண்டவர் என்றால் செம்மையா உங்களை கடுப்பாக்கும். ஒரு நாட்டின் பண்பாடு குறித்து துளி அளவு கூட புரிதல் இல்லாமல் இதை உருவாக்கியிருக்க வேண்டாம் என்றுதான் சொல்ல தோணுது. இதை பார்க்கும் போது உங்களுக்கும் அது தோணும்.

Continue Reading
சினிமா செய்திகள்3 mins ago

தளபதி 65 படம் பற்றி இந்த அப்டேட் உங்களுக்குத் தெரியுமா?

தமிழ்நாடு1 hour ago

‘திமுக கூட்டணியில் கமல்..!’- என்ன சொல்ல வராப்ல கார்த்தி சிதம்பரம்

கிரிக்கெட்1 hour ago

INDvAUS – 5 விக்கெட்டுகள் எடுத்து ஆஸி.,யை அலறவிட்ட சிராஜுக்கு பும்ராவின் ‘நெகிழ்ச்சி ஹக்’

தமிழ்நாடு2 hours ago

30 தொகுதிகளை திமுக பிடிக்கும்… இல்லையேல் தற்கொலை செய்வேன்- ஜெகத்ரட்சகன் ஆவேச பேட்டி

சினிமா செய்திகள்2 hours ago

கானா நாயகனாக கலக்கும் நடிகர் சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ ட்ரெய்லர்..!

சினிமா செய்திகள்2 hours ago

இயக்குநர் மணிரத்னத்தின் மெகா பட்ஜெட் படத்தில் நாயகன் ஆகிறார் யோகிபாபு!

சினிமா செய்திகள்2 hours ago

பிரசாத் ஸ்டுடியோ விவகாரம்… பத்மவிபூஷனை திருப்பி அளிக்கிறாரா இளையராஜா?

சினிமா செய்திகள்2 hours ago

சூரிக்கு நாயகி ஆகிறாரா ஜி.வி.பிரகாஷ் தங்கை..?- வெற்றிமாறன் பட அப்டேட்

செய்திகள்3 hours ago

எம்.ஜி.ஆரை நினைவுப்படுத்த 500 ரூபாய்

செய்திகள்3 hours ago

பொதிகையில் சமஸ்கிருதம்!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு9 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வீடியோ4 days ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ5 days ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ5 days ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ1 week ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ1 week ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ2 weeks ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ2 weeks ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்2 weeks ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி1 month ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

வீடியோ1 month ago

விஜய பிரபாகரன் பாடி நடித்த #என்உயிர்தோழா தனி இசைப்பாடல்!

Trending