Connect with us

விமர்சனம்

விமர்சனம்: கொலைகாரன் ஹிட்டா? ஃபிளாப்பா?

Published

on

விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் இன்று வெளியான கொலைகாரன் படம் எப்படி இருக்கிறது என்று இந்த விமர்சனத்தில் காண்போம்.

விஜய் ஆண்டனியின் கல்லூரி நண்பரான ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் இன்று வெளியான கொலைகாரன் திரைப்படம் விஜய் ஆண்டனிக்கு நிச்சயம் ஒரு கம்பேக் படம் என்றே சொல்லலாம்.

இரும்புத்திரை படத்திற்கு பிறகு நடிகர் அர்ஜுன் படம் முழுக்க வந்து ரசிகர்களை கதைக்குள் கச்சிதமாக இழுத்துச் செல்கிறார்.

விஜய் ஆண்டனியின் ஆர்பாட்டம் இல்லாத அமைதியான நடிப்பு, இந்த படத்தில் அவருக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

கதைக்களம்:

தற்காப்புக்காக நாயகி மற்றும் அவரது அம்மா இணைந்து செய்யும் ஒரு கொலையில் இருந்து அவர்களை காப்பாற்ற நாயகன் விஜய் ஆண்டனி கொலை பலியை ஏற்றுக் கொள்கிறார். ஆனால், அந்த கொலையை விஜய் ஆண்டனி செய்திருக்க வாய்ப்பில்லை என எண்ணும் போலீஸ் அதிகாரி அர்ஜுன், அந்த கொலைக்கு யார் காரணம் என்பதை கண்டறிய முயற்சி செய்கிறார்.

ஆனால், விஜய் ஆண்டனியின் முந்தைய தொழில் மற்றும் புத்திக் கூர்மை அர்ஜுனை அந்த கேஸை முடிக்க விடாமல் திக்குமுக்காட செய்கிறது.

ஆனாலும், உண்மையான குற்றவாளி யார் என்றும், விஜய் ஆண்டனி யாரை கொலை செய்தார் என்ற உண்மையையும் அர்ஜுன் கிளைமேக்ஸில் கண்டுபிடித்தாரா? விஜய் ஆண்டனியை காப்பாற்றினாரா? இல்லையா என்பதே படத்தின் கிளைமேக்ஸ்.

ஆண்ட்ரூ லூயிஸ் லீலை என்ற படத்திற்கு பிறகு மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தை இயக்கியுள்ளார். தான் எழுதிய கதையின் மீது வைத்திருந்த நம்பிக்கையை திரையிலும் திறம்பட காட்டியுள்ளார்.

ஆனால், பாபநாசம் படத்தின் கதையும் இந்த படத்தின் கதையும் ஒத்துப்போவது படத்திற்கு எந்தளவுக்கு பலமாக இருக்கும் என்பது போகப்போகத்தான் தெரியும்.

நல்ல கிரைம் த்ரில்லர் படத்தை எதிர்பார்த்து செல்லும் ரசிகர்களுக்கு இந்த கொலைகாரன் நல்ல சம்பவமாக இருப்பான்.

மூவி ரேட்டிங்: 3.75/5.

Advertisement

விமர்சனம்

‘வணக்கம் டா மாப்ள’ – விமர்சனம்!

Published

on

கல்லூரி நண்பர்கள் ஜீ.வி.பிரகாஷ், டேனியல் பேர்வெல் பார்ட்டியின் போது கால்யாணம் பண்ணுனா ரெண்டு பேரும் ஒரே தேதியில் ஒரே மேடையில் தான் கல்யாணம் பண்ணுவோம் என்று சபதம் செய்கிறார்கள். இதற்கிடையே ஜி.வி.பிரகாஷ் நேவியில் வேலை கிடைத்துச் சென்று விடுகிறார்.

ஐந்து ஆண்டுகள் கழித்து திரும்ப வரும்போது டேனியல் திருமணம் செய்யப் போகிறார் என்ற செய்தி அவருக்கு வருகிறது. டேனியலை சந்திக்கும் ஜி.வி.பிரகாஷ் என்ன ஆனாலும் தாங்கள் செய்த சத்தியத்தின்படிதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று திருமணத்தை தடுத்து நிறுத்துகிறார். பின்னர் என்ன ஜி.வி.பிரகாஷ்-க்கு காதலி கிடைத்தாரா? இருவரும் செய்து கொண்ட சத்தியத்தை காப்பாற்றினார்களா என்பதை கடுப்பாகும் படி காமெடி செய்து சொல்ல முயன்றிருக்கும் படம் தான் “வணக்கம் டா மாப்ள…”

சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஓகே… ஓகே… படங்களை இயக்கிய எம்.ராஜேஷ்-ஆ இது என்று சொல்லும் அளவிற்கு அவரது படங்களைச் சுட்டே ஒரு படம் இயக்கி இருக்கிறார். நல்லா வாழ்ந்து கெட்ட ஜமீன் குடும்பம் என்று தமிழ் சினிமாவில் காட்டுவார்களே. அது சினிமா-வில் இப்போது இயக்குநர் ராஜேஷ் தான். சந்தானம் இல்லாமல் தவியாய் தவிப்பது நன்றாகத் தெரிகிறது. பேசாமல் சந்தானத்தை வைத்து ஒரு படம் எடுத்துவிடலாம். அது சந்தானம், ராஜேஷ் ஆகிய இருவருக்கும் ஒரு வாழ்க்கை கிடைத்தா மாதிரி இருக்கும்…

ஜீ.வி.பிரகாஷ் என்ன கதை சொன்னாலும் ஒரே மாதிரியான நடிப்பைத்தான் கொடுக்கப் போகிறார் எனும் போது இந்தப் படத்தில் மட்டும் என்ன புதுசாவா செய்யப் போகிறார். நடிப்பைக் கூட சகிச்சுக்கலாம் போல. ஆனா, அவருடைய படத்திற்கு அவர் போடும் இசையைத்தான் கொஞ்சம் கூட பொறுத்துக்க முடியல. அசுரன் படத்திற்கு மியூசிக் போட்ட கையா இது… நடிக்க கூட செய்யங்க ஜீ.வி. ஆனா ப்ளீஸ் உங்க படத்திற்கு மியூசிக் மட்டும் போடாதீங்கங்கங்கோன்னு கதற வேண்டியதா இருக்கு.

டேனியல் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமரா படத்திற்குப் பின் வெறுப்பைத்தான் ஏற்றிக்கொண்டிருக்கிறார். இதிலும் அதையே சிறப்பாகச் செய்கிறார். ராஜேஸ் பட அப்பாவி அம்மாவாக பிரகதி. கடுப்பாகுறா மாதிரி காமெடிதான் இருக்குன்னா இவங்க நடிப்பு அதைவிடப் பெரும் கடுப்பா இருக்கு. யம்மா இன்னும் எத்தனைடா இருக்கு… முடியலா டா மாப்ள என்று சொல்லும் அளவிற்கு கதாபாத்திரங்கள் இருக்கின்றன. ஜெயப்பிரகாஷ், அமிர்தா ஐயர் (நாயகி), எம்.எஸ்.பாஸ்கர் என எல்லோரும் வந்து கடுப்பேத்திட்டே இருக்காங்க… முடியல.

முன்னெல்லாம் கடுப்பாகணும்னா சுடுதண்ணிய குடின்னு சொல்வாங்க. வெறியேத்த வேணும்னா இப்போ இந்தப் படத்தை ஒருமுறை போட்டுக் காட்டிடுங்க. சும்மா 2.45 மணி நேரமும் நம்மல சாகடிச்சுட்டே இருக்காங்க. போதும் டா சாமின்னு சொல்ற அளவுக்கு இருக்கு. மத்த படங்கள்ல இருந்து சுட்டு படம் இயக்கும் இயக்குநர்களைப் பாத்திருப்போம். ஆனால், இயக்குநர் எம்.ராஜேஷ் மட்டும்தான் தன்னோட படங்கள்ல இருந்தே திருடி படம் எடுக்கிறார். இனிமேல் ராஜேஷ் படங்களில் சென்சாரிடம் இங்கு ரசிகர்கள் துன்புறுத்தப்படவில்லை என்று கார்டு போட்டு வாங்கச் சொல்லணும்…

Continue Reading

விமர்சனம்

ஜோஜி – விமர்சனம்!

Published

on

வீட்டின் அனைத்து அதிகாரமும் உள்ள அப்பா. அவருக்கு மூன்று பசங்க. அப்பாவின் அதிகாரத்தை, பணத்தை அபகரிக்க நினைக்கும் மூன்று மகன்கள். அதில் மூன்றாவது மகன் ஜோஜி செய்யும் ஒரு காரியத்தால் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களின் கோர்வை தான் ஜோஜி படத்தின் கதை. அலோ என்ன இவ்ளோ சின்னதா கதையை முடிச்சுட்டீங்கன்னு நீங்க கேட்டிங்கன்னா கதையே அவ்ளோதா இருக்குனும் போது எங்களாள என்ன செய்ய முடியும்?
மகேசிண்ட பிரதிகாரம், தொண்டி முதலும் திரிக்‌ஷியமும் படங்களினி இயக்குநர் தீலீப் போத்தனின் அடுத்த படைப்பு ஜோஜி. முதல் இரண்டு படங்களைப் போல இதிலும் பகத் பாசில்தான் கதாநாயகன். முதல் இரண்டு படங்களைப் போலவே சின்னக் கதை, அதை விவரிக்க காட்சி அமைப்புகள் (கேரளா என்றால் சொல்லவா வேண்டும்), அதற்கு குறைவான கதாபாத்திரங்கள் என வைத்துக்கொண்டு கதையை நகர்த்தியிருக்கிறார் திலீப் போத்தன்.

மேக்பத் கதையின் தழுவல் என்றும் சொல்லப்படுகிறது. பகத் பாசில் தவிர மத்த பாத்திரங்களும் அவர்களுக்கு உரிய பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஆனால், பகத் பாசில் தொடர்ந்து ஒரே மாதிரியான பாத்திரத்தில் ஒரே மாதிரியான நடிப்பைத் தருகிறாரோ என்று தோன்றும் போது கொஞ்சம் அசதி ஏற்படத்தான் செய்கிறது. இன்னும் கொஞ்சம் மாறனும். அல்லது மாற்றம் உள்ள பாத்திரங்களை அவர் தேர்வு செய்து நடிக்க வேண்டும். ஹைப்பர் ஆக்டிவ் இளைஞராக இன்னும் எத்தனை படங்கள் நடிப்பு அரக்கரே. (அப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள்)

படத்தின் மிக முக்கிய இடத்தைப் பிடிப்பது இசை. சின்னக் கதைக்கு ஏற்றார் போல அமைந்துள்ள இசையும், ஒளிப்பதிவும் தான். த்ரில்லர் கதை என்று சொன்னாலும் அது இசையில் மட்டுமே தெரிகிறது. ஒளிப்பதிவு கூட லொக்கேசனைக்காட்டத்தான் பயன்படுகிறது. கேரளாவில் என்ன எடுத்தாலும் அழகாகத்தான் இருக்கும் என்பது வேறு கதை.

சின்னக் கதை… கொஞ்சம் சினாக்ஸ் சாப்பிடும் போது ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஒரு படம் பார்க்கலாம் என்று தோன்றினால் இதைப் பார்க்கலாம். மற்றபடி வெளியில் சொல்லப்படும் அளவிற்கு இந்தப் படத்திற்கு ஹைப் எதுவும் இல்லை. கொஞ்சம் ஓவராக பில்டப் கொடுக்கப்பட்ட மற்றொரு பகத் பாசில் படம் தான் இந்த ஜோஜி. 2 மணி நேரப்படத்தில் சுவாரஸ்யமாகவோ, திருப்பத்தை ஏற்படுத்தும் விதமாகவோ ஏதும் இல்லை. ஒரே போக்கில் போய்க்கொண்டே இருக்கிறது. ரயிலில் பயணம் செய்யும் போது எந்த மேடுபள்ளமும் இல்லாமல் வண்டி போய்க்கொண்டே இருக்குமே. தடக்… தடக்… சத்தம் மட்டும் கொடுத்துக்கொண்டு அதேபோல இசையை மட்டும் வைத்துக்கொண்டு ஒரே மாதிரி கோட்டில் எந்த அசைவும் இல்லாமல் பயணிக்கிறது இந்த ஜோஜி… சேட்டன்களே இன்னும் உங்களிடம் எதிர்பார்க்கிறோம். அமேசானில் இருக்கிறது ஒரு முறை பார்த்துவிடுங்கள்… கொஞ்சம் ஓவர் பில்டப் கொடுக்கப்பட்ட மற்றொரு பகத் பாசில் படம்..!

Continue Reading

விமர்சனம்

பரமபதம் விளையாட்டு விமர்சனம்.. பாதுகாப்பற்ற பகுதி கவனம்… சேதாரத்திற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது..!

Published

on

தமிழ்நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சியின் தலைவர் வேலராமமூர்த்தி. நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க மக்களிடம் எந்த மாதிரியான பரப்புரை செய்யலாம் என கட்சியின் பொதுக்குழுவை கூட்டி ஆலோசனை நடத்துகிறார். பணம் கொடுக்க கூடாது, நாம் செய்த நல்லதை மட்டும் சொல்லி வாக்கு கேட்க வேண்டும் என்று சொல்லிவிட்டு இந்த முறை இளைஞர்களுக்குத்தான் கட்சியில் போட்டியிட வாய்ப்பு என்றும் வாரிசுகளுக்கு தன்னுடைய கட்சியில் இடமில்லை என்றும் கூறிவிட்டுச் செல்கிறார். வீட்டுக்குச் சென்று லண்டனில் தன் மகன் நந்தா புதிதாக கட்டியுள்ள மருத்துவமனை திறப்பு விழாவிற்கு செல்லலாம் எனத் திட்டமிட்டுருக்கும் சூழலில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் திர்ஷா வருகிறார்.

தன்னுடைய வாய் பேசமுடியாத காது கேட்காத மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வசித்து வருகிறார். ஊரே தலைவருக்கு என்ன ஆனது என்று பரபரப்பில் இருக்க கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அவர் பிழைக்க கூடாது என்றும், கட்சியின் தலைமை பொறுப்பில் தாங்கள் வந்துவிட வேண்டும் என்றும் முயற்சி செய்கிறார்கள். இதற்கிடையே தந்தையைப் பார்க்க நந்தா லண்டனில் இருந்து வருகிறார். நந்தா வந்த சில நாட்களிலியே வேலராமமூர்த்தி இறந்துவிடுகிறார். நன்றாக உடல்நிலை தேறி வந்த தலைவர் எப்படி இறந்தார் என மருத்துவர் திர்ஷா புலனாய்வு செய்கிறார். அதில் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன. யார் தலைவரைக் கொன்றது? கொலையைக் கண்டுபிடிக்கச் சென்ற திர்ஷாவுக்கு என்ன ஆனது? என்பதைச் சொல்லும் படம் தான் பரமபதம் விளையாட்டின் கதை.

திர்ஷா-வின் 60வது படம்… உண்மையில் தமிழ் சினிமாவில் நாயகியாக ஒருவர் 60 படங்களுக்கு மேல் வலம் வருவது ஆச்சர்யம் தான். அதை நயன்தாரா, திர்ஷா சாத்தியம் ஆக்கியிருக்கிறார்கள். கொஞ்சம் வயதான முகம் தெரிந்தாலும் தனக்குக் கொடுத்த பாத்திரத்தில் தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார். பார்க்க கொஞ்சம் நாடகத் தனமாகவும் இருக்கிறது. இன்னும் கூட சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கலாம். அப்போ இது சிறந்த கதை இல்லையா? என்று கேட்டால் தமிழ் சினிமாவில் இதே மாதிரி 1,999 படங்கள் வந்துவிட்டன. இது 2,000-வது படம். அவ்ளோ அதர பழசான கதை, அதை விட அதரப்பழசான திரைக்கதை. அறையில் இருந்து நாம் பார்த்துக்கொண்டிருக்கும் போது என் வீட்டில் வசனத்தை வைத்தே அடுத்து இந்தக் காட்சிதான் வரும் என்று சொல்லும் அளவிற்கு பழைய காட்சி அமைப்புகள். படம் தொடங்கியதில் இருந்து என் இணையர் அடுத்து இந்தக் காட்சி தான், அடுத்து இதுதான் வரும், இவர் தான் கொலைகாரன் எனச் சொல்லிக்கொண்டே இருந்தார்.

படமே இப்போ தானே ரிலீஸ் எப்படி உனக்கு இதெல்லாம் தெரியும் என்று கேட்டால் அலோ போங்க நாங்க பாக்காத சினிமாவான்னு அடிச்சுட்டுப் போயிட்டே இருக்காங்க.
இப்போ இருக்கும் சூழலில் நம்மை நம்பி ஒருவர் பணம் போட்டு படம் எடுக்கிறேன் என்று வருவதே சிரமமான விஷயம். அப்படி வாய்ப்புக் கிடைக்கும் போது அதை பிடித்துக்கொண்டு அடுத்தடுத்த இடங்களுக்குச் செல்ல வேண்டும் இல்லையா? திர்ஷா-வுக்கு இது 60 படங்கள்.

நாயகியை மையமிட்டு வரும் போது கொஞ்சம் கூடுதலாக சிரத்தை எடுத்து கதை கேட்டு தேர்வு செய்தால் நல்லது இல்லையா? நந்தாவுக்கும் தான். நம்மை நாமே ஏன் குறைவாக எடை போட வேண்டும். அதுமட்டுமல்ல ஹீரோ என்று படத்தின் பாதிக்கும் மேல் ஒரு கேரக்டரை அறிமுகம் செய்வார் இயக்குநர். யாப்பா சாமி நீ எப்போ வாயை மூடுவன்னு உக்காந்துட்டு இருந்தோம். காமெடி என்று அவர் பேசியது எல்லாம் எரிச்சலின் உச்சம். போதும் விட்டுடுங்க. கதையே ஒட்டவில்லை அப்புறம் எப்படி மத்த கதாபாத்திரங்கள் மனதில் ஒட்டும்…

பொழுது போக்கிற்காக சினிமா பார்க்கலாம் என்றால் யப்பா சாமி எப்படா விடுவிங்கன்னு கதறும் அளவுக்கு ஒரு படத்தை எடுத்து வைத்திருக்கிறார் இயக்குநர் திருஞானம். வாய்ப்புகள் கிடைப்பது கஷ்டம் பாஸ். கொஞ்சம் பாத்துப்பண்ணுங்க… இந்த ரெண்டு பக்கக் கட்டுரையையும் படிச்சுட்டு நீங்க படத்தைப் பார்த்துதான் ஆவேன்னு சொன்னா சேதாரத்துக்கு செய்திச்சுருள் பொறுப்பு ஆகாது. ஹாட் ஸ்டாரில் இருக்கிறது. படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் அது ஆபாத்தான முடிவு. அப்படியே குழி தோண்டி புதைத்து விடவும்… அக்கறையுடன் செய்திச்சுருள்…

Continue Reading
கிரிக்கெட்2 hours ago

131 ரன்களுக்கு சுருண்ட மும்பை: பஞ்சாப் அணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம்?

சினிமா செய்திகள்2 hours ago

மே 1ல் ’வலிமை’ பர்ஸ்ட்லுக் போஸ்டர் இல்லை: அஜித் ரசிகர்கள் சோகம்

சினிமா செய்திகள்4 hours ago

‘அகில உலக சூப்பர்ஸ்டார்’-ன் அடுத்தப் படத்தின் டைட்டில் இதுதான்- ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியீடு!

கிரிக்கெட்4 hours ago

டாஸ் வென்றது பஞ்சாப்: மூன்று தோல்விகளுக்கு பின் இன்று வெற்றி கிடைக்குமா?

Uncategorized4 hours ago

14 ஆயிரத்தை நெருங்கிவிட்டது இன்றைய கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

சினிமா செய்திகள்4 hours ago

அசோக் செல்வன் – பிரியா பவானி சங்கர் இணையும் ‘ஹாஸ்டல்’ First Look!

சினிமா செய்திகள்5 hours ago

‘உப்பென்னா’ பட நாயகி தனுஷுக்கு ஜோடியாகிறார்!!

தமிழ்நாடு5 hours ago

80 கோடி மக்களுக்கு ரூ.26,000 கோடி மதிப்பில் உணவு தானியங்கள்: பிரதமர் அறிவிப்புக்கு எல்.முருகன் நன்றி

தமிழ்நாடு5 hours ago

முதல்வரை திடீரென சந்தித்த தலைமை செயலாளர்: என்ன காரணம்?

சினிமா செய்திகள்5 hours ago

ஹீரோயின் இல்லாமலேயே டூயட் பாடலின் படப்பிடிப்பை நடத்திய ‘தளபதி 65’ இயக்குனர்!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ3 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ3 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ3 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ3 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ4 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி4 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending