Connect with us

விமர்சனம்

அதை மட்டும் தவிர்த்திருந்தால் அட்டகாச புல் மீல் ட்ரீட் ஆகியிருக்கும்… ஸ்னைடரின் ஜஸ்டிஸ் லீக் விமர்சனம்…!

Published

on

ஜாக் ஸ்னைடரின் ஜஸ்டிஸ் லீக் தியேட்டர்ல வெளியாகல. அந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான வார்னர்ஸ் பிரதர்ஸ்-இன் அப்சீயல் ஓடிடி தளமான ஹெச்பிஓ மேக்ஸ்-ல வெளியாயிருக்கு. இந்தப் படம் 2017-இல் வெளியான ஜஸ்டிஸ் லீக் படத்தின் எக்ஸ்டென்சன்வெர்சன் தான்.

ஏன் இப்படி ஒரு வெர்சன் வெளியிட வேண்டிய தேவை இருக்குன்னு ஒரு கதை இருக்கு. முதல்ல அதப் பாத்துட்டு வந்துடுவோம். 2017ல இந்தப் படத்த இயக்கிட்டு இருந்தப்போ ஜாக் ஸ்னைடரின் மகளுக்கு உடல்நிலை முடியாம போனதால இந்தப் படத்துல இருந்து விலகிட்டார். அவர் எடுத்த படத்தை போட்டுப் பார்த்த வார்னஸ் பிரதர்ஸ்க்கு அதுவரை எடுக்கப்பட்ட படம் பிடிக்காமப்போக அவங்க அவென்சர்ஸ் இயக்குநர் ஜாக் வேடனை வச்சு மீதிப் படத்தை இயக்க முடிவு பண்ணாங்க. அவரும் ஜாக்ஸ்னைடர் வச்சுருந்த ஸ்கிரிப்ட்.ல சில மாற்றங்களைச் செஞ்சு 2 மணி நேரப் படமா எடுத்துக்கொடுத்தார். அந்தப் படம் வெளியாகி சாதாரண ரசிகர்களிடம் மட்டுமில்லாம டிசி ரசிகர்கள்ட்டையும் செம்ம அடி வாங்கியது.

2017-இல் வெளியான ஜஸ்டிஸ் லீக் மிகப்பெரிய தோல்விப் படம் தான். தன்னுடைய குடும்பச் சூழல்ல இருந்து வெளியான ஸ்னைடர் தான் இயக்கிய ஜஸ்டிஸ் லீக் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனத்திடம் அனுமதி கேட்டார். ஆனால், அப்படி ஒரு வெர்சனே எங்கட்ட இல்லைன்னு மறுத்துட்டாங்க. ஜஸ்டிஸ் லீக்.ல நடிச்ச நடிகர்கள், டிசி ரசிகர்கள் எல்லாம் தொடர்ந்து கொடுத்த அழுத்ததின் பேர்ல ஒருவழியா வார்னஸ் பிரதர்ஸ் வச்சுருந்த ஜஸ்டிஸ் லீக் ஸ்னைடர் கட் வெர்சனை வெளியிட ஒப்புக்கிட்டாங்க.

இப்படிப் பல பிரச்னைகளுக்கு இடையில ஜஸ்டிஸ் லீக் 8 பாகமா கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்கு ஹெச்பிஓ.ல வெளியாகி இருக்கிறது.

டூம்ஸ்டே என்ற வில்லனால் சூப்பர்மேன் (ஹென்றி கெவில்) கொல்லப்பட்டு விட்டார். அவரது மரணம் தந்த சோகத்தில் இருந்து இன்னும் பேட்மேன் (பென் அஃப்லெக்) மீளவில்லை. இன்னொரு பக்கம் மதர் பாக்ஸ் என்ற மூன்று பெட்டிகள் மூலம் ஆதிகாலம் முதல் பல உலகங்களை அழித்துக் கொண்டிருக்கிறான் வில்லன் டார்க்ஸீட். அந்த முயற்சியை அமேசான்ஸ், அட்லாண்டியன்ஸ், மனிதர்கள் ஆகியோர் ஒரு கட்டத்தில் தடுத்து அந்த மூன்று பெட்டிகளையும் தனித்தனியாகப் பிரித்து வெவ்வேறு இடங்களில் ஒழித்து வைத்துவிடுகிறார்கள்.

அதன்பின்னர் டார்க்ஸீட் தன்னுடைய அடியாளான ஸ்டெப்பன்வொல்ஃபை பூமிக்கு அனுப்பி அந்தப் பெட்டிகளைக் கண்டுபிடிக்கச் சொல்கிறான். அவை கிடைத்ததும் உடனடியாக பூமியை அழிக்கவும் உத்தரவிடுகிறான். பேட்மேன் இதனை அறிந்து வொண்டர் வுமன் (கால் கேடட்), சைபார்க் (ரே ஃபிஷர்), ஃப்ளாஷ் (எஸ்ரா மில்லர்), அக்வாமேன் (ஜாஸன் மாமோ) ஆகியோரைக் கொண்டு ஒரு குழுவை அமைக்கிறார். சூப்பர்மேனின் உதவியில்லாமல் தங்களால் வெற்றிபெற முடியாது என்று அறியும் அந்தக் குழு, சூப்பர்மேனுக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் முயற்சியில் இறங்குகிறது. சூப்பர்மேன் மீண்டும் வந்தாரா? ஸ்டெப்பன்வொல்ஃபால் மூன்று பெட்டிகளையும் ஒன்றிணைக்க முடிந்ததா? டார்க்ஸீடின் நோக்கம் நிறைவேறியதா? என்பதைச் சொல்லும் படம்தான் ஜாக் ஸ்னைடரின் ஜஸ்டிஸ் லீக்….

நான்கு மணி நேரத்திற்கு எட்டு பாகமாக வெளியாகியிருக்கும் இதற்கும் 2017-இல் வெளியான படத்துக்கும் கிட்டத்தட்ட ஒருமணி நேரக் காட்சி ஒத்துப்போகுது.

முந்தைய படத்தில் மைனஸ் என்று சொல்லப்பட்ட பல விஷயங்களை இந்தப் படத்தில் தவிர்த்திருக்கிறார்க் ஜாக் ஸ்னைடர். நான்கு மணி நேரமும் ரசிகர்களுக்கு விசுவல் ட்ரீட் தான். அதுவும் அந்தக் கடைசி ஒரு மணி நேரக் காட்சி அட்டகாசம்.

முந்தைய படத்துல ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பின்கதை இவ்வளவு அழுத்தமா இருக்காது குறிப்பா சைபோர்க் அதாவது விக்டர் ஸ்டோனுடைய கதை கொஞ்சம் செண்டிமெண்ட்டா அழுத்தமாவே கொடுத்துருக்காங்க. ஆனால், அது கொஞ்சம் கூடுதலாக இருப்பது கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. அதைவிடுத்து அக்வாமேனுக்கான பின்னணி கதையை கொஞ்சம் கூடுதலாக சேர்த்திருக்கலாம். அதேபோல பிளாஸ் கொடுக்கும் மார்வெல் லெவல் காமெடிகளைத் தவிர்த்தது இந்தப் படத்தின் மற்றொரு பிளஸ். அதே நேரத்தில் சூப்பர்மேனுக்கு கறுப்பு டிரஸ் ஏன் கொடுத்தார்கள் என்று விளக்காமல் விட்டது ஒரு மைனஸ். அட்டகாசமான ஆக்சன் காட்சிகள் இதன் பிளஸ் என்றால் சுணங்க வைக்கும் ஸ்லோமோசன் காட்சிகள் இதன் மிகப்பெரிய மைனஸ். அந்த ஸ்லோமோசன் காட்சிகளை எல்லாம் தவிர்த்திருந்தால் நிச்சயம் இந்தப்படம் இன்னும் ஒரு அரைமணி நேரம் குறைந்திருக்கும். தவிர்த்திருக்கலாம் தானே. புதிய வில்லன் டார்க்ஸீட் வைத்து டிசி-யின் அடுத்தடுத்த படங்களுக்கு அடித்தளம் கொடுத்திருக்கிறார் ஸ்னைடர். கிட்டத்தட்ட அவென்சர்ஸ் எண்ட் கேம் வரிசை படங்களைப் போலத்தான் இனி வரும் பகுதிகள் இருக்கும் என்று கிண்ட் வேறு கொடுத்திருக்கிறார்.
முந்தைய படத்தைவிட நிச்சயம் இது ஒரு புல் மீல்ஸ் ட்ரீட் தான் என்றாலும் ஸ்லோமோசன் காட்சிகளைத் தவிர்த்திருந்தால் இன்னும் அட்டகாசம்… அமர்க்களமாக இருந்திருக்கும்…

Advertisement

விமர்சனம்

அழகான, அதிர்ச்சியான அனுபவத்தைப் பெறக் காத்திருங்கள்… கர்ணன் விமர்சனம்!

Published

on

திருநெல்வேலி பொடியன்குளம் கிராமம் மெயின் ரோட்டில் இருந்து 1.5 கி.மீ தூரத்தில் இருக்கும் கிராமம். அந்த ஊருக்கு பேருந்து வசதி இல்லை என்பதால் அருகில் இருக்கும் மேலூருக்குச் சென்றுதான் பஸ் ஏற வேண்டிய சூழல் அக்கிராம மக்களுக்கு. அப்படிப் போகும் போது அங்கிருக்கும் மக்களுடன் அடிக்கடி சண்டை ஏற்படுவதால் தங்கள் ஊர் அருகிலேயே ஏதாவது லாரி, வேன், டிராக்டர் போன்ற வாகனங்களை மறைத்து அருகில் இருக்கும் ஊருக்கு போவார்கள். இதுதான் மையம். பேருந்து வசதி கிடைப்பதற்காக அந்த ஊர் இளைஞர் ஒருவன் போராடுகிறான். ஊர் மக்கள் அவனுக்கு துணை நிற்கிறார்கள். ஊரின் உதவியுடன் பேருந்து வசதி கிடைத்ததா இல்லையா என்பதை அழகான திரைமொழியில் சொல்லியிருக்கும் படம் தான் கர்ணன்.

மேலே சொன்னது போல பேருந்து நிறுத்தம் என்பது ஒரு காரணம் தான். ஆனால், இப்படத்தின் மையம் 1995-இல் நடந்த கொடியன்குளம் கலவரம். தேவேந்திரகுல வேளாள சமூகத்திற்கும், தேவர் சமூகத்திற்கும் நடந்த பிரச்சினையில் கொடியன் குளத்தில் 18 பேர் கொலை செய்யப்பட்டுள்ளன. அக்கிராம மக்களின் சொத்து, குடிநீர் எல்லாம் அழிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய கலவரத்தை மையப்படுத்தி தற்போது அதை பேசு பொருள் ஆக்கியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். அதற்கு தனுஷ் எனும் விற்பனை நட்சத்திரம் பயன்பட்டிருக்கிறது.

எப்போதும் ஒடுக்கப்படும் மக்கள் ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்தால் அதன் முன் எதுவும் நிற்காது அழிந்து போகும். இதில் இருக்கும் அரசியல் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம். புரிதலுக்காகவே இவை இங்கே சொல்லப்பட்டுள்ளன
கர்ணனாக நடிகர் தனுஷ்… அட்டகாசம் பண்ணியிருக்கிறார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றார்போல தன்னை மாற்றிக்கொண்டு உடல் மொழி, குரல் என அப்படியே அந்த பாத்திரத்திற்குத் தேவையானதைக் கொடுத்துவிட்டுப் போகிறார். இதிலும் அப்படியே கர்ணனாக. பல இடங்களில் மெய் சிலிர்க்க வைக்கிறார். இப்படத்தின் இரண்டாவது ஹீரோ என்று சொல்லும் அளவிற்கு ஏமராஜாவாக நடிக்கும் மலையாள நடிகர் லாலின் பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் கோபம், அதனால் சில பிரச்சினைகள் என்று இருக்கும் ஹீரோ பாத்திரத்தை ஆசுவாசப்படுத்தி அதற்கு சப்போர்ட்டாக இருக்கிறார் ஏமராஜா. தேவையான நேரத்தில் அந்தப் பாத்திரம் எடுக்கும் முடிவின் போது ஒரு எமோஷன்ஸை அட்டகாசகாம கடத்தியிருப்பார். யோகி பாபு, குதிரை மேய்க்கும் சிறுவன், தனுஷின் சகோதரியாக வரும் லட்சுமி ஆகிய பாத்திரங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகிக்கு முக்கியப் பாத்திரம் கொடுத்துவிட்டு இங்கு கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார். தேவைக்கு ஏற்ற அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார் தமிழுக்கு அறிமுக நடிகை ரஜிஷா விஜயன். மற்றபடி இதில் வரும் பாத்திரங்கள் எல்லாம் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கின்றன.

படத்தின் மிகப்பெரிய பலம் இசை… அது பின்னணி இசை என்று தெரியாத அளவிற்கு சந்தோஷ் நாராயணம் அமைத்த விதம் எல்லாம் அட்டகாசம். தான் தேர்ந்தெடுக்கும் இயக்குநர்களிடம் இருந்து அரசியலை கற்றுக்கொண்டு அதை நன்றாகப் புரிந்து கொண்டு அந்தந்த கதைக்களத்திற்கு ஏற்ற இசையைக் கொடுக்கிறார். பாடல்கள் எல்லாம் ஏற்கெனவே ஹிட் என்ற போதும் படத்தோடு பார்க்கும் போது அது காட்சியாக்கப்பட்ட விதத்திலும் மேலும் கவர்கின்றன. தியேட்டரை விட்டு வந்த பின்னரும் கண்டா வர சொல்லுங்க பாடலை விட வுட்ராதீங்க யம்மோ பாடல் உங்கள் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கும்.

படத்தின் அடுத்த மிகப்பெரிய பலம் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு… முதல் காட்சியில் தொடங்கி இறுதிக் காட்சி வரை ஒத்து பாத்திரத்தின் உணர்வுகளை அட்டகாசமாகப் பதிவு செய்திருக்கிறார். காட்சிக்கு காட்சி அழகு ஏற்றிக்கொண்டே செல்கிறார் தேனி ஈஸ்வர். கதையின் அழுத்தத்தைப் புரிந்து கொண்டு அதற்கு மேலும் அழுத்தம் கொடுக்கிறது ஒளிப்பதிவு. படத்தை மியூட்டில் பார்த்தாலும் படம் நன்றாக புரியும். அந்த அளவிற்கு ஒளிப்பதிவு இருக்கிறது.

அடுத்த ஹீரோ கலை இயக்குநர் டி.ராமலிங்கம். செவக்காட்டு பூமியில் ஒரு அழகான கிராமத்தை அட்டகாசமாக உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு சுவரும் கதை சொல்கிறது. நாட்டார் தெய்வங்களின் அமைப்பு. ஊரின் தெரு, வீடுகளின் கூரை, சுவர், கடை என அனைத்தையும் அவ்ளோ அழகாக அமைத்திருக்கிறார். இப்படி ஒவ்வொரு தொழில்நுட்ப வல்லுநர்களையும் தேர்ந்தெடுத்துத் தான் எடுக்கப்போகும் கதை இதுதான் என புரிய வைத்து தான் நினைத்ததை சமரசம் இல்லாமல் கொடுத்திருக்கிறார் மாரி செல்வராஜ். இதில் இருக்கும் அரசியலை பேச இன்னொரு கட்டுரை வேண்டும். ஆனால், கொடியன்குளம் கலவரம் என்று கூகுளில் போட்டால் அந்த கலவரம் தொடர்பான செய்திகள் கிடைக்கப்பெறும்.

படத்தில் குறைகளே இல்லையா என்றால், ஒட்டாத காதல் காட்சியைச் சொல்லலாம். அவைகளை அப்படியே நீக்கிவிட்டாலும் படத்தில் எந்த பாதிப்பும் இருக்காது. சினிமா தனமான கிளைமேக்ஸ். ஆனால், இந்தக் கலவரத்தின் முடிவு அப்படித்தான் இருந்தது என்று சொன்னாலும் தனுஷ்-க்காக சில சமரசங்களைச் செய்திருக்கலாம் தான்.

தான் சொல்லவந்த கதையை அழகாக, எந்த சமரசமும் இல்லாமல் சமூகத்தின் முன் வைத்திருக்கிறார் மாரி செல்வராஜ். வசனங்கள் மூலம், காட்சிகளின் மூலம் இன்னும் பெரிய அரசியல் பேசியிருக்கிறான் இந்த கர்ணன். நிச்சயம் திரையில் பார்க்க வேண்டிய படம். அழகான, அதிர்ச்சியான அனுபவம் கொடுக்க காத்திருக்கிறான்…

Continue Reading

விமர்சனம்

முற்போக்கு போர்வை போர்த்தி வந்திருக்கும் தேர்தல் ஆணைய ஏஜெண்ட் – மண்டேலா விமர்சனம்!

Published

on

செக் திருநெல்வேலி மாவட்டத்தில் சூரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கூர், தெற்கூர் என்ற இரண்டு கிராமம் சாதியால் இரண்டாகவே இருக்கிறது. இப்படி இரண்டாக இருக்கும் ஊரில் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் இருவருக்கும் சம ஓட்டுகள் இருக்கும் நிலையில் அங்கே இருக்கும் ஊர்ப்பெரியவர் (சங்கிலி முருகன்), மற்றும் முடித்திருத்தும் தொழிலாளி ஸ்மைல் @ நெல்சன் மண்டேலா (யோகி பாபு) ஆகியோரின் வாக்குகள் தான் வெற்றியை தீர்மானிப்பவை. இதில் பெரியவர் வாக்களிக்க வரமாட்டார் என்ற நிலையில் ஸ்மைலியின் வாக்கு மட்டுமே வெற்றி உறுதி செய்கிறது. இருவரில் அவர் யாருக்கு வாக்களித்தார்? ஸ்மைலி யார்? இறுதியில் என்ன நடந்தது என்பதை நகைச்சுவையாக ஆங்காங்கே தேவையான அளவு முற்போக்கு கருத்துகளை இட்டு நிறப்பி சொல்லியிருக்கும் படம் தான் மண்டேலா…

ஸ்மைல் @ மண்டேலாவாக யோகி பாபு சிறப்பாக நடித்திருக்கிறார். தன்னை மதிக்காமல் புறவாசல் வழியாக வரச்சொல்லும் போதும், தனக்கு இருக்கும் மதிப்பு தெரிந்து அதைப் பயன்படுத்திக்கொள்ளும் இடத்தில் ஆள் மிளிர்கிறார். பரியேறும் பெருமாள் படத்திற்குப் பிறகு யோகிபாபுவுக்கு நல்ல கேரக்டர் ரோல் அதை உணர்ந்து நடித்திருக்கிறார். பெரிய அய்யா என்னும் ‘கருணாகரன் பெரியாராக’ சங்கிலி முருகன். ஸ்மைலை ஊரையே உற்றுநோக்க வைக்கும் நெல்சன் மண்டேலாவாக மாற்றும் நபராக ஷீலா ராஜ்குமார். `கிருதா’வாக முகேஷ், பெரிய அய்யாவின் மூத்த மகனாக GM சுந்தர், இளைய மகனாக கண்ணா ரவி, வேண்டாம் மட்டுமே சொல்லும் கல்கி, செருப்பு சர்ச்சை செய்யும் குமாரமூர்த்தி என படத்தில் சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் வரும் ஒவ்வொருவரும் நம் மனதில் நிற்கிறார்கள்.

இப்போவெல்லாம் யாருப்பா சாதி பாக்குறாங்க என்ற வசனமும் ஒன்லி பார் வெஜிடேரின் என்ற டூலெட் போர்டும் இப்போதும் வளர்ந்த நகரங்களிலேயே காணப்படும் போது திருநெல்வேலியின் கடைக்கோடி கிராமத்தில் அது எவ்வளவு தீவிரமாக சொல்ல வேண்டுமோ அவ்வளவு தீவிரமாகச் சொல்லியிருக்கிறார். கிடைக்கும் இடத்தில் எல்லாம் சாதி மேலாதிக்க மனநிலையை, சமூக அவலத்தை அடித்து நொறுக்குச் செல்கிறார் இயக்குநர் அஷ்வின். எல்லா நேரத்திலும் பார்க்கப்படும் சாதி தேர்தல் நேரத்தில் காணாமல் போகிறது என்ற செய்தியுடன் தேர்தல் நேரத்தில் வெளியாகி இருக்கிறது மண்டேலா. அதுவும் பாராட்டுக்கு உரிய விசயம் தான். காமெடி காட்சிகள், சோகக் காட்சிகள் என இரண்டுக்குமான தனித்துமான பின்னணி இசையை வழங்கியிருக்கிறார் பரத் ஷங்கர். யுகபாரதி, அறிவு ஆகியோரின் பாடல்களின் வரிகளும் படத்தில் அரசியல் பேசுகின்றன.

நல்ல படம் தான். ஆனால், முற்போக்கு போர்வைக்குள் ஒழிந்துகொண்ட எல்லாவற்றிற்கும் தேர்தல் ஜனநாயகம் தான் தீர்வு, ஓட்டுக்காக வாங்கும் இலவசங்கள் மோசமானவை என்று தமிழகத்தின் திராவிட அரசுகள் செய்த பல நன்மைகளை கவுத்துவிட்டுச் செல்கிறார் இயக்குநர் அஷ்வின். சர்கார் போன்று இந்தப் படமும் தேர்தல் கமிஷனின் ஏஜெண்டாகவே செயல்படுகிறது ஒரு கட்டத்திற்கு மேல். யோகி பாபுவுக்கு வாக்கு இருக்கிறது என்று தெரிந்தவுடன் அவருக்கு கிடைக்கும் மரியாதையும் அவர் அந்த மரியாதை வைத்துச் செய்யும் சில செயல்களும் பார்வையாளருடன் ஒட்டாமல் அந்தரத்தில் நிற்கிறது. இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இந்த முற்போக்கு போர்வைக்குள் நுழைந்து திராவிடத்திற்கு எதிரான கருத்துகளுடன் இயக்குநர் நுழைவார்களோ தெரியவில்லை. ஆகா, படம் நல்லா இருக்கே. ஆனால், என்று யோசிக்கும் போது இந்தப் படம் ஏற்படுத்தும் அசைவுகள் மிக மோசமாக இருக்கும் என்ற உண்மை நமக்கு தெரிய வருகிறது. முருகதாஸ், சங்கர்களிடம் இல்லை, இந்த முற்போக்கு போர்வை போர்த்திய புலிகளிடம் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும்…

Continue Reading

விமர்சனம்

தெலுங்கு படத்தை நேரடியா தமிழில் எடுத்தால் எப்படியிருக்கும் – கார்த்தியின் சுல்தான் – விமர்சனம்!

Published

on

சென்னைக்கு ஒரே ஒரு ரவுடியாக இருக்கும் நெப்போலியனிடம் ‘தங்கள் ஊரில் விவசாயம் செய்யவிடாமல் ஒரு ரவுடி கும்பல் மிரட்டுகிறது. அதன் தலைவனை கொலை செய்து எங்களை விவசாயம் பாக்க உதவ வேண்டும்’ என்று கேட்டு வருகிறார்கள் ஐந்து விவசாயிகள். அதற்கு நெப்போலியனும் எப்போதாவதுதான் நல்லது செய்ய வாய்ப்பு கிடைக்கது. நிச்சயம் நாங்க வந்து அந்த ரவுடி கும்பலை விரட்டி அடித்து உங்களை விவசாயம் பாக்க வைப்போம். இது சத்தியம்னு ஒரு சத்தியம் பண்ணிடுறார்.

இதற்கு முன்னாள் அதாவது 1987-இல் நெப்போலியனின் நிறைமாத கற்பிணி மனைவி வீட்டில் இருக்கும் ரவுடி கும்பல்களுக்கு எல்லாம் சோறு போட்டுக்கொண்டிருக்கும் போது உங்களைப் போல என் மகன் ரவுடியாக வரமாட்டான். படிச்சு பெரிய ஆள் ஆகி உங்களையும் ரவுடித் தொழில் செய்யவிடமாட்டான் என்று வயித்தில் இருக்கும் குழந்தையிடம் சத்தியம் வாங்கிவிட்டு அந்தக் குழந்தை பிறந்ததும் இறந்து விடுகிறார்.

பிறந்த குழந்தை (அவர் தான் கார்த்தி) அம்மா ஆசைப்படி படித்து பெரிய ஆள் ஆகி ஜப்பான் போய் ரோபோ செய்யும் கடை வைக்கும் அளவுக்கு பெரிய படிப்பு எல்லாம் படிச்சு ஊருக்கு வரும் போது நெப்போலியன் எதிர்பாராத விதமாக இறந்து போக (அம்மா சத்தியம் தான் முதல் சத்தியம்) அப்போது சென்னைக்கு புதிதாக வந்த கமிஷ்னர் இருக்கும் ரவுடிகளை சுட்டுக்கொன்று சென்னையை புனித பூமியாக மாற்ற நினைப்பதை தெரிந்து கொண்டு அவரிடம் சென்று ஒரு ஆறு மாசம் டைம் கொடுங்க. நான் இவங்களை எல்லாம் நல்லவங்களா மாத்துறேன். இல்லைன்னா இவங்களை கொன்றுடுங்கனு ஒரு சத்தியம் செய்கிறார்.

இப்படி பல்வேறு சத்தியத்துக்கு மத்தியில் தன்னுடைய அப்பா செய்த முதல் சத்தியத்தை நிறைவேற்ற சேலத்தில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு செல்லும் கார்த்தி தன் அப்பா சத்தியம், அம்மா சத்தியம், தன்னுடைய சத்தியம், நாயகி ரஷ்மிகா மந்தனா சத்தியம் (இருக்கு பின்னாடி சொல்றேன்) இப்படி ஒரு ஆறு ஏழு சத்தியங்களை நாலு சண்டை, நாலு பாடல், கொஞ்சூண்டு காதல், ஆங்காங்கே தேவைக்கு ஏற்ப செண்டிமெண்ட், தேவைக்கு அதிகமாகவே விவசாயம் பற்றிய பரப்புரைன்னு கலந்து கட்டி அடித்திருக்கிறார் இந்த சுல்தான்… கதை இதுதான். புரிஞ்சா?

முழு மசாலாப்படம்… தெலுங்கு படம் போல இல்லை… அதற்கு டப் பைட் கொடுக்கும் ஒரு மசாலா பாடத்தை கொடுக்கத் திட்டமிட்டே தான் பாக்கியராஜ் கண்ணன் இந்தப் படத்திற்கு பிள்ளையார் சுழியே போட்டிருப்பார் போல. அது அப்படியே படமாக்கியிருக்கிறார். பாக்கும் நாம் தான் ஐயோ பாவம் என்றாகிவிடுகிறோம். அம்மா, அக்கா, தங்கச்சி, ஒட்டு மொத்த குடும்ப செண்டிமெண்ட் என்று முன்னெல்லாம் கமர்சியல் சினிமாக்களுக்கு ஒரு ஒன்லைன் இருக்கும் இல்லையா? இப்போ அது விவசாய செண்டிமெண்ட் என்று வைத்துக்கொண்டார்கள் போல. யப்பா சாமிகளா நாங்க மட்டுமில்ல விவசாயமே பாவம் தான். ப்ளீஸ் விட்டுடுங்க. ஒட்டுமொத்தமா திரை முழுக்க ஒரு நூறு பேர் வந்துட்டு போறாங்க. அவங்களை கையாண்ட விதம், சண்டைக்காட்சிகள் இவை மட்டும் தான் இந்தப் படத்தில் இயக்குநர் சிறப்பா பண்ணியிருக்கிறார். படத்தை இயக்கும் போதே இதை மட்டும் சரியா செய்துட்டா போதும்னு நினைத்திருப்பார் போல. அதனால் தான் அதை மட்டும் சரியா செய்துட்டார். இதேபோல கொஞ்சம் டைம் எடுத்துக்கூட மற்ற விஷயங்களிலும் கவனம் வைத்திருக்கலாம்.

கடைகுட்டி சிங்கம் படத்திற்குப் பிறகு விவசாயத்தை வைத்து ஒரு படம். அதில் குடும்பம், இங்கே கும்பல் அவ்வளவு தான். படம் முழுக்க கார்த்தி விவசாயம், நல்லவங்களா வாழனும்னு வந்து பேசிட்டே இருக்கிறார். இந்த பாத்திரத்தில் கார்த்தி ஒட்டவே இல்லை. சண்டை காட்சிகள், ரஷ்மிகா உடன் உருகும் சில காட்சிகளில் மட்டும் கவர்ந்துள்ளார் கார்த்தி. வழக்கம்போல நல்ல கதையை இந்த இடைவெளியை பயன்படுத்து தேர்வு செய்து நமக்கு கொடுப்பார் என கார்த்தியை நம்புவோம்.

ரஷ்மிகாவுக்கு முதல் தமிழ் படம். அவங்க இடையை காட்டிய அளவு கூட நடிப்பில் கொஞ்சம் கவனம் காட்டவில்லை. நடிப்பில் காட்டிய கவனத்தை கூட இதழ் அசைவில் காட்டவில்லை. தமிழில் படம் நடிக்கிறோம், அதுவும் கார்த்தியுடன் என்றதும் வந்துவிட்டு சென்றுவிட்டார் போல. நடிக்க வாய்ப்பு இருந்தும் அவரது முகம் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறது. எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருக்கிறார். உங்களுக்கே இவ்ளோ ரசிகரா என்ற சந்தேகம் வருகிறது.

இசை பாடல்கள் எல்லாம் விவேக் மெர்வின், பின்னணி இசை யுவன்சங்கர் ராஜா… இங்கையும் போய் நாம ஒரு தெலுங்குப்படம் மாதிரி ஒரு படம் எடுக்கப் போகிறோம்’ என்று சொல்லியிருப்பார் போல. தேவி ஸ்ரீபிரசாத் மாதிரி பின்னி எடுத்துவிட்டார்கள். காது இப்போதுவரை கொய்ங்ங்னு சொல்லுது. யுவன் நீங்களுமா என்று சொல்லும் அளவுக்கு பின்னணியை கிழித்துவிட்டார். முடியலை ரகம் தான்.

நகைச்சுவைக்காக சதீஷ், யோகி பாபுன்னு யோசிச்சுருப்பார் போல. ஒர்க் அவுட் ஆகாத சதீஷை முதல் பாதியின் தொடக்கத்தில் கழட்டிவிட்ட இயக்குநர் யோகி பாபுவை மட்டும் கடைசி வரை வைத்து நமக்கு கடும் சோதனை காட்டுவிட்டார். யோகி பாபு அடிப்பதெல்லாம் காமெடி என்று நம்புவதை எப்போதுதான் கைவிட்டு வெளியில் வருவாரோ தெரியவில்லை.

படத்தின் ஒரே ஆறுதல் சத்யம் சூரியனின் ஒளிப்பதிவு. அத்தனை பேரையும் ஒரு திரைக்குள் ஒரு பிரேமுக்குள் அட்டகாசமாக கொண்டு வந்திருக்கிறார். சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும், காய்ஞ்சு போன அந்த கிராமமும் அழகாக அவரது கேமரா மூலம் கடத்தப்பட்டு நமக்கு வந்திருக்கு.

வழக்கமான கமர்சியல் படம் தான். யூகிக்க கூடிய காட்சிகள் தன். அதே விவசாய செண்டிமெண்ட் தான் என்றாலும் சண்டைக் காட்சி, ஆங்காங்கே சில காதல் காட்சிகள் என மொத்தம் 2 மணி நேரம் 15 நிமிடம் நம்மை உக்கார வைத்திருக்கிறார். டிக்கெட் வாங்கிவிட்டோமே என்று உக்காந்திருந்தாலும் அந்த விவசாயி அப்படின்ற செண்டிமெண்ட் அறுவையை பொறுத்துக்கொண்டால் நமக்கு ஒரு நல்ல தெலுங்கு பாணியிலான சண்டை படம் பார்க்கக் கிடைக்கும்…

அலோ ரஷ்மிகா என்ன சத்தியம் பண்ணுனாங்கனு போய் படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். எல்லாத்தையும் சொல்லிட்டு இருப்பாங்க. அது சஸ்பெண்ஸ். ஆனால், படத்தில் சஸ்பெண்ஸ் என்பது எல்லாம் ஏதும் இல்லை. ஒரு பத்து நிமிடம் படம் பார்த்ததுமே அடுத்து என்ன அடுத்து என்னன்னு நீங்களே சொல்லிடுவிங்க. அந்த பத்து நிமிடத்திற்காக படத்தை பார்க்கணுமா என்னன்னு நீங்களே யோசிச்சுக்கோங்க…

Continue Reading
சினிமா செய்திகள்3 mins ago

அந்நியன் இந்தி ரீமேக்: ஷங்கருக்கு ஆஸ்கார் ரவிச்சந்திரன் நோட்டீஸ்?

தமிழ்நாடு32 mins ago

குவார்ட்டர் பாட்டிலில் குட்டி பாம்பு: அதிர்ச்சியில் குடிமகன்!

இந்தியா47 mins ago

சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உபி அரசின் நிபந்தனை!

தமிழ்நாடு2 hours ago

கொரோனா இரண்டாவது அலை கையை மீறி போய்விட்டது: நீதிமன்றத்தில் தமிழக அரசு

தமிழ்நாடு2 hours ago

அரியர் தேர்வுகள் குறித்து அதிரடி முடிவெடுத்த தமிழக அரசு: சென்னை ஐகோர்ட்டில் தகவல்!

தமிழ்நாடு3 hours ago

கொடியேற்றத்துடன் தொடங்கியது சித்திரை திருவிழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் பதட்டம்!

சினிமா செய்திகள்3 hours ago

’இந்தியன் 2’ வழக்கு: லைகா நிறுவனத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அனுமதி!

சினிமா செய்திகள்4 hours ago

ஒரே படத்தில் நடிக்க்கும் ‘குக் வித் கோமாளி’ அஸ்வின், புகழ்: இயக்குனர் இவர்தான்!

இந்தியா4 hours ago

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா5 hours ago

அதிகரிக்கும் கொரோனா: மேலும் ஒரு மாநிலத்தில் இரவுநேர ஊரடங்கு!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ3 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ3 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ3 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ3 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ3 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ3 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்3 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி4 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending