Connect with us

விமர்சனம்

நிறைய காமெடி… இடை இடையே கருத்துக்கள்… கோமாளி என்ன சொல்கிறார்… #comali_review

Published

on

1999ல் எதிர்பாராத விதமாக நடக்கும் விபத்தில் சிக்கிய ரவி கோமாவில் செல்கிறார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழித்து 2016ல் நினைவு திரும்பி மீண்டு வருகிறார். அதே 1999 ரவியாக. அதாவது 17 வயது ரவியாக. அந்த 16 வருஷத்துல இங்க ஐடி… செல்போன்… காசு… காதல்… ஊருன்னு எல்லா விதத்துலயும் ஏகப்பட்ட வளர்ச்சிகள். 16 ஆண்டு பின் தங்கிய ரவி இந்த வளர்ச்சியையும், மாற்றங்களையும் எப்படி எதிர்கொண்டார்… என்ன ஆனார் என்பதை கிச்சு…கிச்சு… முட்டி இடை இடையே மனிதம், சமூகம், அரசியல், காதல்னு எல்லா கருத்துகளையும் ஆங்கே ஆங்கே தேவைக்கு ஏற்ப சில இடங்களில் அதிகமாக குழைத்தும் சொல்லியிருக்கிறார் இந்த கோமாளி…

ரவியாக ஜெயம் ரவி. 16 ஆண்டுகளை இழந்துவிட்டோம், தன்னால் எந்த பயனும் இல்லை என்ற இயலாமையை காட்டும் போதும், அதே 17வயது பையனாக வெகுளியாக இருக்கும்போதும் என பல உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார். பள்ளி கால ரவி கொஞ்சம் ஒட்டாமல் இருந்தாலும் வெகுளியான கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளார். சிறு இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவிக்கு இது ஒரு வெற்றி படம்.

ஜெயம் ரவியின் நண்பராக வரும் யோகி பாபுவின் காமெடிக்கு தியேட்டர்களில் பயங்கர ரெஸ்பான்ஸ். ஆனால், இன்னுமா பெண்களை மட்டம் செய்து காமெடி செய்ய வேண்டும். கொஞ்சம் இந்த டைப் காமெடிகளை மாற்றிக்கொள்ளலாமே பாஸ். ஆனால், என்ன கொடுமை என்றால் இந்த டைப் காமெடிக்கு பெண்களும் வரவேற்பு கொடுப்பதுதான். மற்றபடி யோகி பாபு இந்த படத்துக்கு ஒரு பெரிய பலமாகவே இருக்கிறார்.

வில்லனாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். ஆரம்பத்தில் செய்யும் ஒரு கொலையை தவிர வில்லனாக அவருக்கும் பெரிய அளவில் இதில் வேலை இல்லை என்றே சொல்லலாம்.

வழக்கமான தமிழ் சினிமா நாயகியாக காஜல், நாயகனின் சகோதரியாக ஆர்.ஜே.ஆனந்தி அவர்கள் வேலையை சரியாகவே செய்துள்ளனர். சின்ன வயது காதலியாக வரும் சம்யுக்தா ஹெக்டே தான் இந்தப்படத்தின் முக்கிய திருப்பத்திற்கே காரணம். இங்கிருந்துதான் கதை வேறு எங்கையோ நகர்ந்து செல்லும்.( என்ன எப்படி என்று தியேட்டரில் பார்த்துக்கோங்க) காதை பதம் பார்க்கும் ஹிப்ஆப் ஆதி நாட்கள் ஆக ஆக இன்னும் அதிகமாகவே காதுகளை பதம் பார்க்க தொடக்கிவிட்டார். பாடல்களும் பெரிய அளவில் மனதில் ஒட்டவில்லை.

இந்த படத்தின் பெரிய பலமே காமெடி தான். அதை ரவியும் யோகிபாபுமே தங்கள் தலைகளில் தூக்கி சுமக்கின்றனர். அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். மேலே சொன்னதுபோல இரண்டாம் பாதி கதை வேறெங்கோ செல்கிறது. கொஞ்சம் இழுவையகாவே இருக்கிறது. பல காமெடிகள் பெண்களை இழிவுபடுத்துவதாகவே இருக்கிறது. ஆனால், அதையும் ரசிக்கவே செய்கிறார்கள் என்பதால் இந்த ட்ரென்டில் மாற்றம் நிச்சயம் எதிர்பார்க்க முடியாது போல. இவை எல்லாவற்றையும் சேர்த்து 2016 சென்னை வெள்ளம், மனிதாபிமானம், சமூக வலைத்தளங்களில் மாட்டி அருகில் இருக்கும் மனிதர்களுடன் பேசாத மக்கள், குழந்தைகளுடன் பேசாமல் மொபைல் கொடுத்து தனிமைப்படுத்துவது, சமூகம் பழைய விளையாட்டு மரபுகளை எல்லாம் இழந்து தவிப்பது, நிலா சோறு, விவசாயம், மீத்தேன், இடை இடையே அரசியல் என அதிகமான கருத்துகளை சமூகத்திற்கு சொல்ல நினைத்த இயக்குநர் அதை கொஞ்சம் ஓவராகவே கொடுத்துள்ளார்.

இதெல்லாம் இப்போ பேஸ்புக் ட்விட்டரிலேயே கிடைக்கின்றன எனும் போது கூடுதல் சலிப்பாகவே இருக்கிறது. ஏம்பா இந்தக் கருத்தெல்லாம் தேவை தானே என சொல்பவர்கள் மட்டுமல்ல என்னடா ஓவரா போறாங்களே என நினைக்கும் ரசிகர்களுக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தையே இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் கொடுத்துள்ளார்.

கோமாளி நல்ல பொழுதுபோக்கு காமெடி படம்… சில கருத்துகளுடன் காசுக்கு பங்கம் இல்லாமல் இருக்கிறது… குழந்தைகள், குடும்பங்களை பெரிதாக கவர்ந்துள்ளது என்பது கடந்த ஒருவாரத்தில் 25 கோடி வசூல் செய்துள்ளது என்பதன்மூலமே தெரிகிறது. அப்போ இந்தக் கோமாளி வெற்றிப்படம் தானே…

எழுத்து: ச.அழகுசுப்பையா

சினிமா செய்திகள்

நிறைய கருத்து… கொஞ்சம் பில்ட் அப்… நேர்கொண்ட பார்வை எப்படி இருக்கிறது…

Published

on

வசதியான மூன்று ஆண் நண்பர்களுடன் செல்லும் மூன்று நடுத்தர குடும்ப பெண்கள் அந்த ஆண்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர். அப்போது அவர்களிடம் இருந்து தப்பிக்க அவர்களில் ஒருவனை பலமாக தாக்கி விடுகிறார் அப்பெண்களில் ஒருவர். தாக்கப்பட்டவன் எம்எல்ஏ.வின் வருங்கால மருமகன்… சொல்லவா வேண்டும்… அதிகாரமும்… பணமும்… பெண்களிடம் அடி வாங்கி விட்டோமே என்ற ஆணாதிக்க மனநிலையும் அந்த பெண்களுக்கு மேலும் தொல்லை கொடுக்க வைக்கிறது. அவர்களின் தொல்லைகளில் இருந்து தப்பிக்க அந்த பெண்கள் என்ன செய்தார்கள்… அல்லது அஜித்தின் உதவியுடன் அதிலிருந்து எப்படி வெளியே வந்தார்கள் என்பதை சொல்லும் படம் தான் ‘நேர்கொண்ட பார்வை’யின் கதை…

2015ம் ஆண்டு வெளியான ‘பிங்க்’ என்ற இந்தி படத்தின் அதிகாரபூர்வ தமிழாக்கம் தான் நேர்கொண்ட பார்வை. தமிழுக்கு ஏற்ற மாதிரி சின்ன சின்ன மாற்றங்களும் அஜித் ரசிகர்களுக்காக சின்னதாக ஒரு பில்டப்பும் சேர்த்து உருவாக்கியிருக்கிறார்கள். பெரும்பாலும் வசனங்கள் பெண் சுதந்திரம் பற்றி… ஆண் பெண் உறவு பற்றியே இருக்கின்றன. படத்தின் பலமே இந்த வசனங்கள் தான். இந்தியில் இருந்த வசனங்கள் அப்படியே தமிழில் சில மாற்றங்களோடும் சில பழமொழிகளோடும் இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள். வசனங்கள் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் பெண்கள் கைதட்டலும்… சில இடங்களில் ஆண்களின் கைதட்டலும் தியேட்டரில் கேட்டது. (வசனங்கள் என்ன எப்படி இருந்தன என்று தியேட்டரில் பாருங்கள்).

ஒளிப்பதிவு நீரவ் ஷா. பெரிய அளவில் ஒளிப்பதிவுக்கு வேலை இல்லாத இந்தப்படத்திற்கு நீரவ் ஷாவின் தேவை என்ன என்று தெரியவில்லை.

இசை யுவன் சங்கர் ராஜா… பிஜிஎம்… பின்னணி இசை என மீண்டு வர முயற்சி செய்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். இடைவேளையின்போது அஜித்துக்கு ஒரு சண்டைக்காட்சியில் பிஜிஎம் அட்டகாசம். ஆனால், பாடல்களில் இன்னும் உங்கட்ட நிறைய எதிர்பார்க்கிறோம் ராஜா என்றுதான் சொல்ல தோன்றுகிறது…

சதுரங்க வேட்டை… தீரன் அதிகாரம் ஒன்று என அட்டகாசமான திரைக்கதையில் படம் பண்ணும் ஹெச்.வினோத் இந்தப் படத்துக்கு தேவையா என்ன? இந்தியில் உள்ளதை அப்படியே எடுத்திருக்கிறார். பெரிதாக மெனக்கேடாமல் இந்தியில் உள்ள ஜீவனை கெடுத்துவிடாமல் அப்படியே எடுத்துள்ளார் வினோத். முற்பாதியில் ஒரு டென்ஷன்… மிகை இல்லாத பிற்பாதி கோர்ட் ஜீன் பரபரப்புகள்… அஜித்துக்கான பில்டப்கள் என எல்லாம் கழ்ந்துகட்டி கொடுத்துள்ளார்.

வீரம்… வேதாளம்… விவேகம்… விஸ்வாசம் என மாட்டிக்கொண்ட அஜித் இந்த படத்தின் மூலம் மீண்டும் நடிக்க முயற்சி செய்திருக்கிறார் என்றே சொல்லலாம்… படம் ஆரம்பித்து 20 நிமிடம் கழித்தே பேசுகிறார். அதுவரை கொஞ்சம் பில்டப் ஏற்றிக்கொண்டே வந்து முதல் வார்த்தை பேசும் போது தியேட்டரில் இருந்த ரசிகர்கள் இதுக்காக தானே காத்திருந்தோம் என்று விசில் பறக்க விட்டனர்… பெரிய அளவில் முக்கியமில்லாத இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட அஜித்தை பாராட்டலாம். பெண்கள் பற்றிய வசனங்கள் எல்லாம் தமிழகத்தில் பெரும் ரசிகர் பட்டாளம் வைத்துள்ள அஜித் மூலம் சொல்லப்படுவதால் அது இன்னும் அதிகம் பேரை சென்று சேரும் என்று சொல்லலாம் (ஆனால் படத்தின் முக்கிய வசனமான “பெண் சொல்லும் நோ.வுக்கு அர்த்தம் நோ தான் என்பதை மையமிட்ட No means No என்ற வசனம் வழக்கம் போல சமூக வலைதளங்களில் கேலி செய்யப்படுகிறது. இது அந்த வசனத்தின் தீவிரத்தை வழக்கம் போல அழித்துவிடும் என்பதுதான் உண்மை)அடுத்த படத்தில் நிச்சயம் வினோத் ஒரு அட்டகாசமான படத்தை அஜித்தை வைத்து கொடுப்பார் என நம்பலாம்.

கதையின் மைய பாத்திரங்களில் மீராவாக ஷ்ரதா ஸ்ரீநாத், பமிதாவாக பிக்பாஸ் அபிராமி, ஆண்ட்ரியாவாக ஆண்ட்ரியா டைரங் கச்சிதமாக நடித்துள்ளனர். படம் முழுவதும் இவர்களை சுற்றிதான் நகர்கிறது என்றாலும் தமிழகத்தில் அஜித் படம் என்றுதான் இது விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், இந்தியில் டாப்ஸிக்குதான் முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது. இவர்கள் தவிர வித்யா பாலன், டெல்லி கணேஷ், வில்லன்களாக வரும் அந்த மூவர் என ஓரளவு தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர். முக்கியமாக எதிர்க்கட்சி வக்கீலா ரங்கராஜ் பாண்டே. நன்றாக நடித்துள்ளார் என்றாலும் பல இட்டங்களில் கேள்விக்கு என்ன பதில் பார்க்கும் உணர்வையே அவரது நடிப்பு கொடுத்தது. எதிர்காலத்தில் அவரிடம் இன்னும் எதிர்பார்க்கலாம்…

இந்த படத்தின் ஜீவனே வசனமும் அந்த கோர்ட் காட்சிகளும் தான்… மிக முக்கியமான கருத்தை சொல்லும் படம். ஆனால் இந்த கருத்துகள் எல்லாம் இந்தியில் சொல்லப்பட்டு கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து தான் நமக்கு வந்துள்ளன. அது மட்டும் அல்ல விதி படத்துக்கு பிறகு மிக நீண்ட கோர்ட் காட்சிகள் கொஞ்சம் போரடிக்கவே செய்கிறது. அஜித் ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய ஏமாற்றத்தை தரும் படம் தான்… இப்படியான படங்கள் தேவைதான் என்றாலும் அறிவுரை சொல்வது போல அமைந்து விடக் கூடாது. சொல்லப்போனால் இந்தப் படத்தின் பலம் பலவீனம் இரண்டும் அந்த கருத்து சொல்லும் வசனங்கள் தான்…

மிக முக்கியமான விசயத்தை எடுத்துசொல்லும் இந்தப்படத்தை பெண் நண்பர்களோடு சென்று ஒரு முறை பார்த்துவிடலாம். நிச்சயம் காசுக்கு இழப்பு இருக்காது… அஜித் ரசிகர்கள் கொஞ்சம் காமன் ஆடியன்ஸுக்கு வழிவிட்டு நிற்கலாம். இந்தப் படத்திற்கு மட்டும்…

— ச.அழகுசுப்பையா

Continue Reading

சினிமா செய்திகள்

ஜோதிகாவுக்கு ஜாக்பாட் அடித்ததா? இல்லையா?

Published

on

ஜோதிகா, ரேவதி நடிப்பில் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜாக்பாட் படம் ரசிகர்களுக்கு செம காமெடி விருந்தாக மாறியுள்ளது. சமீபத்தில் வந்த ஏ1 சந்தானம் படத்தை விட ஜோதிகாவின் ஜாக்பாட் படத்தில் தான் வொர்க்கவுட் ஆகும் காமெடி காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளன.

குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் ஜோதிகாவை வைத்து ஜாக்பாட் அடித்துள்ளார் என்றே சொல்லலாம். பிரபுதேவா, ஹன்சிகா நடிப்பில் வெளியான குலேபகாவலி படத்திலும் நல்ல காமெடி காட்சிகள் இருந்தாலும், படம் படுதோல்வியையே சந்தித்தது.

ஆனால், இதில் ஜோதிகாவை ஆக்‌ஷன் ஹீரோயினாக மாற்றி படத்தை சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறார்.

அக்‌ஷய பாத்திரம் ஒன்றை எடுக்க, ஜோதிகாவும், ரேவதியும் செய்யும் காமெடி தேடுதல் வேட்டை தான் இந்த ஜாக்பாட்.

ஆனந்த்ராஜ் மீண்டும் ஒரு காமெடி வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார். அதிலும், அந்த லேடி கெட்டப். டே டே ஒருகாலத்துல பாட்ஷாவையே புரட்டி எடுத்தவர்டான்னு சொல்ல தோன்றுகிறது.

அழுத்தம் இல்லாத திரைக்கதை மற்றும் பாடல்கள் தான் படத்திற்கான மைனஸ் பாயிண்டாகிறது.

ஜோதிகா, ரேவதி செய்யும் சேட்டைகள், சின்ன சின்ன திருட்டுகள், யோகி பாபு, மொட்டை ராஜேந்தர், பழைய ஜோக் தங்கதுரை செய்யும் காமெடிகள் ரசிக்கும் படியாகவும், தியேட்டரே சிரிப்பொலியில் அலறும் படியாகவும் இருந்தது.

மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் செய்யும் நக்கல் வில்லத்தனங்களும் படத்திற்கு பலமாகவே அமைந்துள்ளன.

ஸ்கெட்ச் படத்தில் வரும் பிஜிஎம்மை எப்படி அப்படியே ஜோதிகாவுக்கு வைத்தீர்கள் விஷால் சந்திரசேகர் என இசையமைப்பாளரை கேட்க தூண்டுகிறது.

மொத்தத்தில், ராட்சசி படத்திற்கு பிறகு ஒரே மாதத்தில் மீண்டும் தனது ரசிகர்களுக்கு ஒரு கலக்கல் காமெடி விருந்தை வைத்துள்ளார் ஜோதிகா என்றே தான் சொல்ல வேண்டும்.

மூவி ரேட்டிங்: 3/5.

Continue Reading

சினிமா செய்திகள்

விமர்சனம்: அப்ளாஸ் அள்ளும் அமலாபாலின் ஆடை!

Published

on

ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், டிரைலர் என படம் குறித்து வெளியான எல்லா தகவல்களும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், வெள்ளிக்கிழமை காலை படம் வெளியாவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

மாலை அல்லது இரவு காட்சிகள் தான் நேற்று சில தியேட்டர்களில் வெளியான இன்று தமிழகமெங்கும் அமலா பாலின் ஆடை படம் தடைகளை தாண்டி திரையிடப்பட்டுள்ளது.

அமலாபாலின் நிர்வாண நடிப்பு படத்திற்கு எந்தளவுக்கு பலத்தை கொடுத்துள்ளத்து என்பதை பார்ப்போம்.

மேயாத மான் படத்தை இயக்கி பலரது உள்ளங்களை கவர்ந்த ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படம் உருவாகி உள்ளது.

படத்தின் துவக்கத்திலையே திரைச்சீலை சட்டம் குறித்த கதையுடன் படத்திற்கு தேவையான பெண்களுக்கு மார்பகங்களை மறைக்க வரி கட்ட வேண்டிய நிலை இருந்ததை குறிப்பிட்டு ஆடையின் முக்கியத்துவத்தோடு படம் துவங்குகிறது.

காமினி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அமலா பால் தொப்பி எனும் பிராங்க் ஷோவை நடத்தி வருகிறார். எதிலும் சவால் எப்போதும் சவால் என விளையாட்டுத் தனமாக வாழ்ந்து வரும் அமலா பால், ஆடை இல்லாமல் ஒரு நாள் அலுவலகத்தில் தனியாக இருக்கிறேன் என்ற சவாலை ஏற்பதால், அவருக்கு நடக்கும் விளைவுகளும் அதில் இருந்து எப்படி தப்பினார் என்பதையும் ஆபாசம் இன்றி சுவாரஸ்யத்துடன் கொடுத்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார்.

அமலா பாலின் இந்த போல்டான நடிப்புக்கு நிச்சயம் பல விருதுகள் கதவை தட்டும். டீசரில் வரும் அந்த ஒரு ஷாட் மட்டும் ஆடை இல்லாமல் அமலா பால் நடிக்கவில்லை. படத்தில் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் அமலா பால் ஆடை இல்லாமல் நிர்வாணமாக நடித்துள்ளார்.

படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணா மற்றும் படத்தொகுப்பாளர் ஷபிக் முகமது அலியின் பங்களிப்பு படத்திற்கு எவ்வளவு பெரிய துணையாக உள்ளது என்பதை படத்தை பார்க்கும் போது ரசிகர்களுக்கு தெளிவாக புரிந்துவிடும்.

சமூகத்தில் பெண் உடல் மீது வைத்துள்ள ஒருவித மன சிந்தனையை உடைக்கவும் அதுவும் ஒரு உடல் தான் என்பதை உணர்த்த ரத்னகுமார் எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்.

மூவி ரேட்டிங்: 3.5/5.

Continue Reading
சினிமா செய்திகள்3 hours ago

பாண்டியன் ஸ்டோர் முல்லைக்கு அடித்த ஜாக்பாட்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய (19/09/2019) பலன்கள்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்3 hours ago

இன்றைய (19/09/2019) தமிழ் பஞ்சாங்கம்!

வீடியோ18 hours ago

பிகில் ‘உனக்காக’ பாடல்!

சினிமா செய்திகள்1 day ago

புதிய கட்டுப்பாடுகளுக்கு பிறகும், கேரளாவில் 155+ திரையரங்குகளில் வெளியாகும் காப்பான்!

சினிமா செய்திகள்1 day ago

பிகில் படம் எப்போது ரிலீஸ்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

சினிமா செய்திகள்1 day ago

சர்ச்சை காட்சி… சன் டிவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்த பிசிசிசி!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய (18/09/2019) பலன்கள்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய (18/09/2019) தமிழ் பஞ்சாங்கம்!

சினிமா2 days ago

பிகில் பட ஆடியோ வெளியீட்டுக்கு புதிய போஸ்டர் வெளியீடு…

சினிமா2 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா3 weeks ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

இந்தியா2 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

தமிழ்நாடு1 month ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வேலை வாய்ப்பு1 month ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு2 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

வேலை வாய்ப்பு2 weeks ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்3 weeks ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா1 month ago

பிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்3 months ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)

வீடியோ18 hours ago

பிகில் ‘உனக்காக’ பாடல்!

வீடியோ2 weeks ago

பிகில் – வெறித்தனம் பாடல்!

Sangathamizhan Official Teaser | Vijay Sethupathi, Raashi Khanna | Vivek-Mervin | Vijay Chandar
வீடியோ1 month ago

சுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்!

வீடியோ2 months ago

நேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்!

வீடியோ3 months ago

அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்!

வீடியோ3 months ago

தனுஷுடன் மோதும் விஜய்சேதுபதி!

வீடியோ3 months ago

கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்!

வீடியோ3 months ago

12 மணி நேரத்தில் 4 கோடி வியூஸ்; சாதனை படைத்த சாஹோ டீசர்!

வீடியோ3 months ago

சத்தமே இல்லாமல் வெளியான ஜகஜால கில்லாடி டிரைலர்!

வீடியோ3 months ago

வைரலாகும் கோமாளி படத்தின் க்ளிம்ஸ்!

Trending