Connect with us

சினிமா

அலெக்ஸ் இன் ஒண்டர்லாண்ட் விமர்சனம்… இசையை வைத்து ஒரு வெடி வெடித்து இருக்கிறார் அலெக்ஸ்… எப்படி..?

Published

on

நீண்ட நாள் காத்திருப்பிற்குப் பின இன்று ‘அலெக்ஸ் இன் ஒண்டர்லேண்ட்’ பார்த்து முடித்தாகிவிட்டது. கிட்டத்தட்ட 2.13மணி நேர ஸ்டேண்ட் அப் காமெடி நிகழ்ச்சி… அலெக்சாண்டர் பாடி… நடித்து… இசைத்து அசத்தியிருக்கிறார்.

ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட தன்மை தங்களுடைய நடவடிக்கையில் திரும்ப திரும்ப வந்திருக்கும். அதை அவர்கள் தெரிந்தெல்லாம் செய்ய மாட்டார்கள். இயல்பாக வரும். பேசும் போது சிலர் ஒரே வார்த்தையை பயன்படுத்துவது… எழுதும்போது ஒரு குறிப்பிட்ட சொல்ல பயன்படுத்துவது என்று. சினிமாவிலும் அதற்கு விதிவிலக்கு இல்லை. மணிரத்னம் புராண கதைகளை நவீனமாக்குவது… கதாபாத்திரங்கள் எல்லாம் மெதுவாக பேசுவது… சங்கர் பிரமாண்டம், சுந்தர் சி. நகைச்சுவை, ஹரி வேகம்… சுமோ பறப்பது… இப்படி. அதேபோலத்தான் இசையிலும் இருக்கும். இல்லையா? அப்படி தமிழ் இசை அமைப்பாளர்கள்… பாடலாசிரியர்கள் ஒரே வகைக்குள் மாட்டிக்கொண்டிருப்பார்கள் இல்லையா அதை பிடித்துக்கொண்டு தன்னுடைய முழு நகைச்சுவை நிகழ்ச்சியையும் கொடுத்துள்ளார். எப்படி… பார்க்கலாம்… இல்லை இல்லை… வாசிக்கலாம்… பிறகு பார்க்கலாம்…

உலகம் முழுவதும் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார். அந்த நிகழ்ச்சியின் வீடியோ அமேசான் ப்ரைமில் வெளியிடப்பட்டுள்ளது. பெரும்பாலான வரவேற்பை பெற்றுள்ளது அந்த வீடியோ.

அலெக்சாண்டர், ராமநாதபுரத்து இஞ்சினியர். படித்த படிப்பிற்கு ஏற்ற வேலையை எனக்குத் தெரிந்து எந்த இஞ்சினியரும் செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அலெக்சுக்கும் அது பொருந்தும். 15ஆண்டுகளுக்கும் மேலாக சாப்ட்வேர் இஞ்சினியராக இருந்தவர் தன் குழந்தை பருவ விருப்பமான கலையை தேர்ந்தெடுத்து வேலையை விட்டு விலகி உள்ளார். சின்ன சின்ன காமெடி ஷோக்களை நடத்திய அலெக்ஸ் தனக்காக தேர்ந்தெடுத்துக்கொண்ட வழி பாடலோடு காமெடி செய்வது. தமிழ் பாடல்கள், கர்நாடக இசை என அனைத்தும் கலந்து கட்டி காமெடி செய்து பெரிய வரவேற்பை பெற்றார்.

இந்த அலெக்ஸ் இன் ஒண்டர்லேண்ட் நிகழ்ச்சி அப்படி ஒரு நிகழ்ச்சிதான். இளையராஜா, எம்எஸ்வி, ஏ.ஆர்.ரஹ்மான் என இசை அமைப்பாளர்களையும் ரஜினி, கமல் என நடிகர்களையும் கலந்து இறங்கி அடித்து ஆடியிருக்கிறார். பாடியும் இருக்கிறார். பாடர்களில் சீர்காழி, எஸ்பிபி, யேசுதாஸ், கமல், மலேசியா வாசுதேவன் என எல்லோரையும் கலந்துகட்டி அடித்திருக்கிறார். ச்சே…ச்சே… பாடியிருக்கிறார்…

மலேசியா வாசுதேவனுக்கு கிடைக்காத இடம்… எஸ்பிபி பாடலின் வெரைட்டி, யேசுதாஸ் பாடல்கள் ஒரே மாதிரியாக இருக்கும் தன்மை என அனைத்தையும் விமர்சனம் செய்து பாராட்டியும் இருக்கிறார். அதாவது ஈயம் பூசினா மாதிரியும் இருக்கிறது… பூசாத மாதிரியும் இருக்கிறது அலெக்ஸின் கலாய்… இதே பார்மேட்டைத்தான் இசை அமைப்பாளர்களுக்கும் பயன்படுத்தியிருக்கிறார்.

இளையராஜாவின் கோரசில் இருப்பவர்கள் தொடர்ந்து கோரசிலேயே இருப்பவர்களாகவே இருக்கிறார். திறமைசாலிகளை கண்டுகொள்வதில்லை. கண்டுகொண்டாலும் அவர்களுக்கான அடையாலம் கொடுப்பதில்லை எனக் கூறுகிறார் அலெக்ஸ். மேலும், இளையராஜா பாடலின் பிளஸ் மைனஸ் எல்லாமே அந்த கோரஸ்தான் எனக் கூறும் அலெக்ஸ் இளையராஜாவின் அட்டகாச பாடல்களையும் பாராட்டத் தவறவில்லை. அதே நேரத்தில் விஸ்வநாதன் ஒரே தாளத்தை எல்லா எமோசனுக்கும் பயன்படுத்தியுள்ளார் எனக் கூறும் அலெக்ஸ் உள்ளத்தில் நல்ல உள்ளம் போன்ற பல பாடல்களை சுட்டிக்காட்டி பாடியுள்ளார். ரஹ்மான் இசையையும் அவர் பாடும் விதத்தையும் கேலி செய்துள்ள அலெக்ஸ் அதிகமாக அவரை சீண்டவில்லை என்றுதான் கூறவேண்டும். பாடல்களில் ரஜினி,  கமலின் நடன அசைவுகளை கேளி செய்கிறார் அலெக்ஸ்.

அலெக்சின் மிகப்பெரிய பலம் அவரது இசை ஞானம். எல்லா கருவிகளையும் அவரே இசைக்கிறார். அவரது குரல்… எல்லோரைப் போலவும் அவர் மிமிக்கிரியும் செய்கிறார். இரண்டு மணி நேரமும் ரசிகர்களை உட்கார வைக்க முடியாத பல சினிமாக்கள் வெளிவரும் சூழலில் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். பல இடங்களில் ரசிகர்கள் ஆரவாரம் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. இரண்டாம் பாதியில் ஒரு தொய்வு இருக்கிறது என்றாலும் ஒட்டுமொத்த நிகழ்ச்சியும் உண்மையில் பெரிய வெற்றிதான்.

இளையராஜாவை அதிகமாக விமர்சிக்கும் அலெக்ஸ் ரஹ்மான் எனும்போது கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கிறார். இதை குறை என்று பார்த்தாலும் அது அவரது வழிமுறை என்றும் சொல்லலாம். நிச்சயம் இப்படி நிகழ்ச்சிக்குச் செல்வோர் பெரும்பாலும்பாலனவர்கள் 2கே கிட்ஸாகத்தான் இருப்பார்கள். அவர்களில் பெரும்பாலும் ரஹ்மான் ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களிடம் போய் ரஹ்மானை கேளி செய்தால் எப்படி இருக்கும்.

மூன்று ஆண்டுகால உழைப்பு ஓரிடத்தில் கூட தொய்வில்லை. பாடல்கள் அனைத்தும் பிரபலமானவை. அதெல்லாம் கூட இந்த நிகழ்ச்சியின் வெற்றிதான். தன் ஆடியன்ஸ் யார் என்று தெரிந்து வைத்திருப்பதால் அவரால் இந்தப் பெரிய வெற்றியை சாத்தியமாக்க முடிந்துள்ளது. ஒரு விடுமுறை நாளில் தன் இணையருடன் (காதலன், காதலி, மனைவி, கணவன்) அமர்ந்து 2மணி நேரத்தை உற்சாகமாக போக்க நிச்சயம் இந்த அலெக்ஸ் இன் ஒண்டர்லாண்ட் உதவும்…

பி.கு. இது கொஞ்சம் எலைட் ரசிக மனோபாவம் உடையவர்களுக்கான நிகழ்ச்சி…

கேலரி

ஐஷ்வர்யா ராஜேஷ் – போட்டோ கேலரி

Published

on

Continue Reading

சினிமா செய்திகள்

என் ரசிகர்களை பெண்கள் தைரியமாக காதலிக்கலாம்: சிம்பு

Published

on

நடிகர் சிம்பு நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு கல்லூரியின் விழாவில் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

“அப்போது அவர் கல்லூரி மாணவர்களைப் பாட்டுப் பாடியும், நடனமாடியும் உற்சாகப்படுத்திய சிம்பு, தனது ரசிகர்களைப் பெண்கள் தைரியமாகக் காதலிக்கலாம்.

ஊரே என்னைக் கழுவி ஊற்றும் போது, என் தலைவன் திரும்பி வருவான் என்று எனக்கு ஆதரவாக நின்றார்கள். அப்ப கட்டின பொண்டாட்டிக்கும் லவ் பன்ற பெண்ணுக்காகவும் எப்பாடி நிற்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள்.

எனக்குப் படங்கள் கிடைப்பதைத் தடுக்க கூட்டமே வேலை செய்கிறது. இப்படி ஆதரவு அளிப்பது அவர்களை காண்டாகிறது. இப்படி எனது ரசிகர்கள் எனக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி.” என்று சிம்பு உருக்கமாகப் பேசினார்.

Continue Reading

சினிமா செய்திகள்

‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..!

#அண்ணாத்த #Annaatthe

Published

on

ரஜினியின் 168வது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது. ட்விட்டரில் அதகளம் செய்யும் ரஜினியின் ரசிகர்கள்.

முருகதாஸின் தர்பார் படத்தை அடுத்து,இயக்குநர் சிவா இயக்கத்தில் தனது 168வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதில், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ் என கோலிவுட் நட்சத்திர பட்டாளங்களே இணைந்து நடிக்கின்றனர்.

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து சிவாவின் இந்தப் படத்துக்கும் டி.இமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி விருந்தாக படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த சமயத்தில், சிவா, படத்தின் வேலைகளை வேகமாகவும், விவேகமாகவும் நடத்தி வருவதால், இந்த ஆண்டின் ஆயுத பூஜைக்கு ரஜினி 168 படத்தை வெளியிட அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது.

இது குறித்த எந்த தகவலும் வராத நிலையில், திடீரென படத்தின் தலைப்பை ‘அண்ணாத்த’ என அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ். இந்த டைட்டிலை போஸ்டரோடு மட்டுமில்லாமல் மோஷன் போஸ்டராகவும் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து உற்சாகமடைந்த ரசிகர்கள் #Annaatthe #அண்ணாத்த ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Continue Reading
வணிகம்2 hours ago

அதிர்ச்சி.. இனி இதற்கும் காலாவதி தேதி கட்டாயம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்! (26/02/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்6 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/02/2020)

பர்சனல் ஃபினாஸ்15 hours ago

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!

பங்கு சந்தை15 hours ago

எஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு? எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா?

வணிகம்16 hours ago

தங்கம் விலை இன்று (25/02/2020) சரிவு!

கேலரி17 hours ago

ஐஷ்வர்யா ராஜேஷ் – போட்டோ கேலரி

வேலை வாய்ப்பு20 hours ago

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை!

வேலை வாய்ப்பு20 hours ago

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை!நாளைக்கு கடைசி நாள்

வீடியோ செய்திகள்21 hours ago

ஆண்டீஸ் மலைத்தொடரில் கடுமையான நிலச்சரிவு

வேலை வாய்ப்பு4 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா7 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா6 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு6 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா7 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

வேலை வாய்ப்பு6 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு6 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்6 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்7 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

வீடியோ செய்திகள்21 hours ago

ஆண்டீஸ் மலைத்தொடரில் கடுமையான நிலச்சரிவு

வீடியோ செய்திகள்21 hours ago

நித்தி சிஷ்யைகள் எல்லாம் ஜுஜுபி…! கண்களை கட்டி கலக்கும் மாணவி

வீடியோ செய்திகள்21 hours ago

கட்டுமான நிறுவனத்திற்குள் புகுந்து தகராறு- CCTV காட்சிகள் வெளியீடு

வீடியோ செய்திகள்21 hours ago

டான்ஸ் ஆடி மெலனியா டிரம்ப் கவனத்தை ஈர்த்த சிறுவன்

வீடியோ செய்திகள்21 hours ago

மாணவர்களுடன் விளையாடி மகிழ்ந்த மெலனியா ட்ரம்ப்..!

வீடியோ செய்திகள்22 hours ago

வீர தமிழச்சி! இந்தியாவின் முதல் திருநங்கை Police Prithika Yashini அம்மாவுடன்! கண் கலங்கிய பிரபலங்கள்

வீடியோ செய்திகள்22 hours ago

வாட்ஸ் ஆப் மூலம் சமையல் சிலிண்டர் முன்பதிவு

வீடியோ செய்திகள்22 hours ago

டிரம்ப்புக்கு ஷாருக்கான் ரசிகர்கள் டிவிட்டரில் நன்றி

வீடியோ செய்திகள்22 hours ago

கொஞ்சம் காதலன் , கொஞ்சம் காதலி மொத்தம் கௌதம் மேனன்

வீடியோ செய்திகள்22 hours ago

மெலனியாவுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற அரசுப்பள்ளி சிறுமிகள்!

Trending