சினிமா
இதுவும் கடந்து போகும் – ரஜினி காந்த் கொரோனா குறித்து டிவிட்டரில் பதிவு


நேற்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில் நடிகர் ரஜினி காந்த் ட்விட்டரில் வீடியோ மூலம் வாழ்த்து கூறியதுடன் வெளிநாட்டில் இருக்கும் தமிழக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
”வெளிநாடுகளில் வாழும் தமிழக மக்களுக்கு இந்த புதிய ஆண்டு ஒரு இனிதான ஆண்டாக அமைய வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். கொரோனா வைரசால் முழு உலகமே பாதிப்பு அடைஞ்சிருக்கு… இதுக்கு இந்தியாவும், தமிழ்நாடும் விதி விலக்கல்ல. உங்களைப் பிரிந்து வாழும் உங்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எப்போதும் உங்களைப் பற்றித்தான் சிந்தனை உள்ளது.
https://twitter.com/rajinikanth/status/1250016486174818307?s=20
நீங்கள் எந்த நாட்டில் வாழ்கிறீர்களோ அந்த நாடு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடித்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இதுதான் நீங்கள் உங்கள் உறவினர்களுக்கும், குடும்பத்தாருக்கும் நீங்க கொடுக்குற இந்த ஆண்டின் மிகப்பெரிய பரிசு. நலமுடன் வாழுங்க. கவலைப்படாதீங்க… இதுவும் கடந்து போகும்.”
இவ்வாறு ரஜினிகாந்த் தனது வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
இந்திய சினிமாவை உலக மேடையில் தூக்கி நிறுத்திய ஏ.ஆர்.ரஹ்மான்..!


கலை, அறிவியல், சுயதொழில் ஆகிய தளங்களில் திறமை மிகுந்த திறனாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஒரு மேடையை உலக அளவில் அமைத்துக் கொடுப்பதற்காக Futureproof என்னும் தளத்தை அறிமுகம் செய்துள்ளார்.
முதல் கட்டமாக இந்திய சினிமாவை உலக மேடையில் தூக்கி நிறுத்துவதற்கான முயற்சியை ஏஆர் ரஹ்மான் ஆரம்பித்துள்ளார். இதில் இந்திய சினிமாவின் முக்கிய முன்னணி பிரபலங்களான அனுராக் கஷ்யப், ஜோயா அக்தர், நந்திதா தாஸ், அனுபவ் சின்ஹா, லிஜோ ஜோஸ், ஹன்சல் மேத்தா, நீரஜ், கீது மோகந்தாஸ் ஆகிய பிரபலங்கள் இந்த மையத்தில் உதவ ஒன்றிணைந்துள்ளனர்.
மேலும், இசை, இசை சார்ந்த தொழில்நுட்பம், பாப் கலாச்சாரம் ஆகியவற்றில் உலக அளவில் சிறந்து விளங்கும் பல முன்னணிப் பிரபலங்களை Futureproof மையத்தில் புதிய திறன்களைக் கண்டறிந்து உதவ இணைந்துள்ளனர்.
டிவி
ஹேம்நாத் சந்தேகத்தால் மட்டுமே விஜே சித்ரா தற்கொலை… உறுதியாய்ச் சொல்லும் காவல் ஆய்வாளர்


ஹேம்நாத்தின் சந்தேகத்தால் மட்டுமே விஜே சித்ரா தற்கொலை முடிவை எடுத்துள்ளார் என காவல்துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
விஜே சித்ரா மற்றும் அவரது கணவர் ஹேம்நாத் இடையே நடந்த மோதல்கள் குறித்தும் அதற்குத் தன்னிடம் உள்ள ஆடியோ ஆதரத்தையும் சமார்ப்பித்தார் ஹேம்நாத் நண்பர் ரோகித். ரோகித் கூறுகையில், ‘நானும் என் மனைவியும் சித்ரா- ஹேமந்த் உடன் தங்கியிருந்த போது பல சண்டைகள் நடந்துள்ளது. அப்போது எல்லாம் ரத்தம் வரும் வரை எல்லாம் ஹேமந்த் அடித்துள்ளார். நானும் என் மனைவியும் தான் தடுத்து விலக்கிவிடுவோம். சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பின்னர் கூட என்னிடம் வாட்ஸ்அப் மூலம் பேசினான். அந்த ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளேன்’ என்றுள்ளார்.
இத்தகைய சூழலில் சித்ரா தற்கொலை நாள் அன்று நடந்த வாக்குவாதம் குறித்து போலீஸ் ஆய்வாளர் கூறுகையில், “தற்கொலை செய்து கொண்ட நாளிலும் சித்ரா உடன் ஹேம்நாத் சண்டை இட்டுள்ளார். எனக்கு சத்தியம் செய்து கொடுத்த பின்னரும் வேறு யாருடன் நடனம் ஆடிவிட்டு வந்தாய் எனக் கேட்டு சண்டையிட்டுள்ளார். ஹேம்நாத்தின் சந்தேகத்தின் காரணமாகவே மன உளைச்சலுக்கு ஆளாகி சித்ரா தற்கொலை முடிவை எடுத்துள்ளார்” என்றார்.
சினிமா செய்திகள்
‘அண்ணாத்த’ ஒத்திவைப்பு… சூர்யா 39 மீது கவனம் செலுத்தத் தொடங்கிய ‘சிறுத்தை’ சிவா..!


இயக்குநர் சிறுத்தை சிவா நடிகர் சூர்யா-வின் 39-வது திரைப் படத்தை இயக்க உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி தான்.
ஆனால், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை நிறைவு செய்த பின்னர் தான் சூர்யா படத்தைத் தொடங்குவதாக இருந்தார் சிறுத்தை சிவா. ஆனால், ரஜினியின் உடல்நிலை காரணத்தாலும் கொரோனா தொற்று பதட்டம் இன்னும் நிலவுவதால் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது சூர்யா படத்துக்கான பணிகளைத் தொடங்கிவிட்டாராம் சிவா. விரைவில் நாயகி மற்றும் இதர நடிகர்கள், இசை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
இயக்குநர் சிவா முதன் முதலாக நடிகர் கார்த்தியின் சிறுத்தை படத்தின் மூலமாகத் தான் அறிமுகமாகி பிரபலமானார். கார்த்தி உடனான படப்பிடிப்பின் போதே சூர்யா உடன் ஒரு படம் என சூர்யா- சிவா இருவரும் பேசி முடிவு செய்து விட்டனராம். 2011-ம் ஆண்டு எடுத்த முடிவை தற்போது தான் நிகழ்த்த உள்ளனர் இந்தக் கூட்டணியினர். சூர்யா தனது 39-வது படப்பிடிப்புகளின் நடுவிலேயே சூர்யா 40 படத்துக்கான படப்பிடிப்புகளிலும் கலந்து கொள்ள உள்ளாராம்.
சூர்யா 40 திரைப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்க உள்ளது.