சினிமா
பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!


பாட்ஷா படத்தில் ஆட்டோ டிரைவர் மாணிக்கம் கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி, பல வருடங்களுக்குப் பிறகு தனது பேரனுக்காக மீண்டும் ஆட்டோ பயணம் மேற்கொண்டார்.
பேட்ட படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், தீவிர அரசியலில் ரஜினி ஈடுபடவுள்ளார். இந்நிலையில், போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இருந்து, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது மகள் ஐஸ்வர்யா தனுஷ் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார் ரஜினி.
ஐஸ்வர்யா தனுஷ் மகன் மற்றும் ரஜினியின் பேரனின் ஆசைக்காக, ஆட்டோவில் அவனது வீடு வரை சென்ற ரஜினி, சற்று நேரம் மகள் வீட்டில் இளைப்பாறி விட்டு, மீண்டும் தனது வீட்டிற்கு காரில் திரும்பினார்.
அந்த ஆட்டோ ஓட்டுநருக்கும் வழியில் ரஜினியின் எளிமையை பார்த்த ரசிகர்களுக்கும் நேற்று உற்சாக கொண்டாட்டம் தான்.
சினிமா செய்திகள்
ஹீரோ ஆகும் நடிகர் முரளியின் இளைய மகன்..!- தளபதி விஜய் குடும்பத்தில் இன்னொரு நாயகன்


நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆக உள்ளார்.
நடிகர் அதர்வா கடைசியாக 100 என்னும் படத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பில் அடுத்தடுத்து குருதி ஆட்டம், பத்ரி வெங்கடேஷ் ஒரு பெயர் அறிவிக்கப்படாத மற்றொரு படம் என படங்கள் வெளியாக உள்ளன. தமிழ் சினிமாவில் இளைய நடிகர்களுள் முன்னணியில் இருக்கும் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியும் தற்போது நாயகன் ஆக சினிமாவில் அறிமுகம் ஆக உள்ளார்.
ஆகாஷ் சமீபத்தில் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள் ஸ்நேகா ப்ரிட்டோவை திருமணம் செய்துள்ளார். சேவியர் பிரிட்டோ தளபதி விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரின் அக்காள் மகன். இதன் மூலம் நடிகர் அதர்வா குடும்பத்துடன் சம்பந்தம் வைத்து அவர்களின் உறவினர் ஆகிவிட்டார் நடிகர் விஜய்.
மாஸ்டர் படத்துக்குப் பின்னர் சேவியர் பிரிட்டோ தனது தயாரிப்பில் மருமகனை நாயகன் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிவி
ரசிகர்களைக் குஷிபடுத்த ஞாயிற்றுக்கிழமையில் 3 மணி நேர ஷோ-வாக ‘குக்கு வித் கோமாளி’!


தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சி உள்ளது.
குக்கு வித் கோமாளி சீசன் 2 தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சமைக்கும் குக்கு-களை விட உடன் இருக்கும் கோமாளிகளான புகழ், சிவாங்கி, பாலா, மணிமேகலை ஆகியோருக்குத் தான் ரசிகர்களும், ஆர்மிகளும் அதிகம். கடந்த இரு ஞாயிற்றுக்கிழமைகளாக குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை.
பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சி என்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமையும் சூப்பர் சிங்கர் தொடக்க விழா என அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தடைபட்டது. இதனால் விஜய் டிவி நிர்வாகத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ட்விட்டரில் ரசிகர்கள் கொந்தளிக்கத் தொடங்கினர்.
இந்த சூழலில் ரசிகர்களை மகிழ்வ்விக்க கடந்த இரு வாரங்களாக ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை சேர்த்து வைத்து 3 மணி நேர நிகழ்ச்சியாக வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியில் இருந்து ஒளிபரப்புவதாக விஜய் டிவி ப்ரோமோ வெளியிட்டுள்ளது. புது ஷோ 3 மணி நேரம் தொடர்ச்சியாக என்றால் மகிழ்ச்சி ஆனால் ஏற்கெனவே ஒளிபரப்பான நிகழ்ச்சியை ஏன் டிவி-யில் போட வேண்டும்? என ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.
சினிமா செய்திகள்
பிக் பாஸ் லாஸ்லியா – தர்ஷன் இணைந்து நடிக்கும் புதிய காமெடி படம் – டைட்டில் இதுதான்!


பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகியோர் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடக்க இருக்கின்றனர்.
மலையாளத்தில் ‘ஆண்டிராய்டு குஞ்சப்பன்’ என்ற பெயரில் வெளி வந்த படத்தின் ரீமேக்கில் தான் இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழில் இந்தப் படத்துக்கு ‘கூகுள் குட்டப்பன்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Director & Producer #KSRavikumar, #Tharshan & #Losliya at #GoogleKuttappan pooja. pic.twitter.com/YHfoY4mEFl
— Sathish Kumar M (@sathishmsk) January 28, 2021
லாஸ்லியா, தர்ஷனைத் தவிர இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை சபரி சரவணன் இயக்குகிறார். பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான், இதற்கு இசையமைக்கிறார்.
Today #Googlekuttappan Poojai pics #Losliya ❤️ pic.twitter.com/6EpEae1Nmr
— Liya Girl Fanᶠʳᶦᵉⁿᵈˢʰᶦᵖ (@Liya_Girl_Fan) January 28, 2021
காமெடி கலந்த அறிவியல் புனை கதை பாணியில் இந்தப் படம் மலையாளத்தில் எடுக்கப்பட்டிருக்கும். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மலையாள ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது ஆண்டிராய்டு குஞ்சப்பன். அந்தப் படத்தில் சுபின் ஷாகிர் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடிப்பில் பிண்ணி எடுத்திருப்பார்கள். என்ன தான் காமெடி படமாக இருந்தாலும், இந்த தொழில்நுட்ப காலத்தில் தேவைப்படும் முக்கியமான மெஸேஜும் படத்தில் இருக்கும். ஒரிஜினல் வெர்ஷன் அளவுக்கு ரீமேக் வெர்ஷன் இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.