Connect with us

சினிமா

மெலேபிசென்ட் – 1 விமர்சனம்… பழக்கப்பட்ட அழகான தேவதைக் கதை…

Published

on

மெலேபிசென்ட். காட்டில் வாழும் ஒரு தேவதைக்கும் எதார்த்தமாக சந்திக்கும் ஒரு சிறுவனுக்கு நட்பு உண்டாகிறது. அப்போ காட்டில் வாழும் அந்த தேவதையால் நாட்டிற்கு ஆபத்து ஏற்படும் எனக் கருதி அந்த தேவதையை கொல்ல முயல்கிறான் அந்த மன்னன். ஆனால், முடியவில்லை. அந்த தேவதையை கொலை செய்பவர்களுக்கு தன் மகளை திருமணம் செய்து வைப்பதுடன் நாட்டையும் தருவதாக அந்த மன்னன் அறிவிக்கிறான். இதற்கிடையில் அந்த சிறுவனுக்கும் தேவதைக்கும் இடையேயான நட்பு காதலாகிறது. நாட்டிற்காக ஆசைப்பட்டு தேவதையைக் கொல்லாமல் அவளது இறக்கைகளை மட்டும் வெட்டி விடுகிறான். மன்னன் மகளையும் திருமணம் செய்து, நாட்டின் ராஜாவும் ஆகிவிடுகிறான். சில நாட்களில் அவனுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. துரோகத்தின் துயரத்தில் இருக்கும் தேவதை மெலேபிசென்ட் குழந்தைக்கு ஒரு சாபம் விடுகிறார். அந்த சாபத்தில் இருந்து அந்தப் பெண் எப்படி மீள்கிறார். மெலிபிசெண்ட் தன்னுடைய பழியை எப்படித் தீர்த்துக்கொள்கிறார் என்பதை அழகான பேன்சி கதையாக சொல்லும் படம் தான் 2014ல் வெளியான மெலிபிசெண்ட்.

 

மெலேபிசென்ட்டாக ஏஞ்சலினா ஜோலி. எப்போதும் தேவதைபோல காட்சி தரும் அவர் படம் முழுவதும் அழகு தேவதையாகவே வலம் வருகிறார். காதலில் உருகுவதாகட்டும், ஏமாற்றப்பட்டு வருந்துவதாகட்டும், மன்னனின் குழந்தைமீது பாசம் கொண்டு அதை காட்டியும் காட்டாமலும் இருப்பதாகட்டும் நடிப்பிலும் தான் ஒரு தேவதை என்பதை நிரூபித்திருக்கிறார் ஏஞ்சலினா ஜோலி.

மன்னனின் மகளாக வரும் எல்லே பேன்னிங் குட்டி தேவதையாக ஆங்காங்கே கவனம் ஈர்க்கிறார். உண்மை தெரிந்து மெலேபிசெண்ட் மீது கோவம் கொள்ளும் போதும் அவருக்கு நடந்த துரோகம் தெரிந்து தன் அப்பாவை எதிர்க்கும்போது அழகாக தெரிகிறார்.

பேசும் மரங்கள், குட்டி குட்டியாக பறக்கும் தேவதைகள், காக்கையாகவும் இளைஞனாகவும் உரு மாறும் ஒருவன், அழகழகான பூக்கள் என படம் முழுவதும் பேன்சி கொட்டிக் கிடக்கிறது. ஹாலிவுட் மூவிக்களில் இருக்கும் தொழில்நுட்ப நேர்த்தி இந்தப் படத்திற்கு ஒரு மிகப்பெரிய பலம். மற்றபடி வழக்கமான ஒரு பேன்சி மூவி தான். என்றாலும் காட்சி அமைப்பு, ஏஞ்சலினா நடிப்பு என படம் அட்டகாச அனுபவத்தை தருகிறது.

தற்போது இதன் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. இதைப் படித்துவிட்டு பார்த்துவிடுங்கள். இரண்டாம் பாகத்தையும் பார்த்துவிடுங்கள். 3டியில் நிச்சயமாக நல்ல அனுபவமாக இருக்கும்… ஏஞ்சலினாவை 3டியில் பார்ப்பதும் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.

முக்கியமான ஒரு விஷயம். இந்தப் படம் சிறந்த ஆடை வடிவமைப்பிற்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், விருதுதான் கிடைக்கவில்லை. பெரும் சோகம் தான்… பார்க்கலாம் இந்த முறை…

Advertisement

சினிமா செய்திகள்

தளபதி 65-ஐ இயக்கப்போவது இவர்களில் யார்?

Published

on

பிகில் படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். ஆனால் அதற்குத் தளபதி 64 என்று தற்போதைக்கு கூறப்பட்டு வருகிறது.

அதற்கு இடையில் தளபதி 65 படத்தை மீகாமன், தடம் படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்குகிறார் என்று சமுக வலைத்தளங்களில் இன்று செய்தி உலாவியது.

மறுபக்கம் தளபதி 65வது படத்தை விஜயின் தந்தை மற்றும் தாய் தயாரிக்க ஜெயம் ராஜா இயக்க உள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் லோகேஷ் கனகராஜின் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் தான் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Continue Reading

சினிமா செய்திகள்

2019-ல் தேர்தல் இருந்தும் மோடியையே மிஞ்சிய அஜித்தின் விஸ்வாசம்!

Published

on

டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் 2019-ம் ஆண்டு அதிகளவில் டிரெண்டான தலைப்புகளில் தமிழகத்தில், அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் பிடித்துள்ளது.

அஜித் – சிவா கூட்டணியில் விவேகம், வீரம், வேதாளம் படங்களை தொடர்ந்து நான்காவது படமாக வெளியான திரைப்படம் விஸ்வாசம். குடும்பங்களுடன் பார்க்கும் கூடிய படமாக வெளியான விஸ்வாசம் தான் 2019-ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூலை செய்துள்ள படமாகவும் உள்ளது.

இந்நிலையில் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் 2019, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி போன்றவை இருந்த போதிலும், டிவிட்டரில் தமிழகத்தில் அதிகளவில் பகிரப்பட்ட ஒரு தலைப்பாக விஸ்வாசம் வந்துள்ளது அஜித் ரசிகர்களுக்குப் பெறும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் இடத்தில் மக்களவை தேர்தல் 2019 இடம்பெற்றுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியும், 4வது இடத்தில் மகேஷ் பாபுவின் தெலுங்கு திரைப்படமான மஹரிஷியும், 5வது இடத்தில் ஹாப்பி தீபாவளி ஹேஷ்டேக்குகளும் இடம்பெற்றுள்ளன.

மேலும் முழுமையான பட்டியல் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

சினிமா செய்திகள்

பிகில் வசூலை முந்திய கைதி; அதிகாரப்பூர்வமாக அறிவித்த தியேட்டர் உரிமையாளர்!

Published

on

தீபாவளிக்கு வெளியான பிகில் மற்றும் கைதி திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று இரண்டுவாரங்களைக் கடந்து திரை அரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில், முதல் வாரத்தில் பிகில் திரைப்படத்தின் வசூலில் 25 சதவீதத்தைத் தான் கைதி பெற்று இருந்தது.

ஆனால் இரண்டாம் வாரத்தில் கைதி திரைப்படம் பிகில் திரைப்படத்தை விட 5 சதவீதம் கூடுதல் வசூலை செய்துள்ளது என்று ரோஹினி தியேட்டர் உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா தெரிவித்துள்ளார்.

Continue Reading




Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (16/11/2019)

வணிகம்18 hours ago

இனி அமேசானில் விற்க மாட்டோம்; நைக் அதிரடி முடிவு!

Vodafone Idea
வணிகம்18 hours ago

3 மாதத்தில் ரூ.50,922 கோடி நட்டம் அடைந்த வோடாஃபோன் ஐடியா சோகம்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/11/2019)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (15/11/2019)

வேலை வாய்ப்பு1 day ago

பொதுத்துறை வங்கிகளில் வேலை!

இந்தியா2 days ago

இன்று வெளியாக உள்ள 3 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (14/11/2019)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/11/2019)

இந்தியா2 days ago

‘Where is my Train’ செயலியை பயன்படுத்தி ரயிலில் திருடிய கும்பல் கைது!

வேலை வாய்ப்பு4 days ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா4 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா3 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

இந்தியா4 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

தமிழ்நாடு3 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வேலை வாய்ப்பு2 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு3 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு4 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்3 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்4 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

Uncategorized1 month ago

பெரிசு தனியா சிக்கிடுச்சு, செஞ்சிடலாமா? ‘பிகில் டிரெய்லர்’ வெறித்தனம்!!!

வீடியோ1 month ago

ஒரே நாளில் 26 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற கைதி டிரெய்லர்!

வீடியோ2 months ago

விஜய் சேதுபதி, சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா டிரெயலர்-2!

வீடியோ2 months ago

பிகில் ‘உனக்காக’ பாடல்!

வீடியோ2 months ago

பிகில் – வெறித்தனம் பாடல்!

Sangathamizhan Official Teaser | Vijay Sethupathi, Raashi Khanna | Vivek-Mervin | Vijay Chandar
வீடியோ3 months ago

சுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்!

வீடியோ4 months ago

நேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்!

வீடியோ5 months ago

அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்!

வீடியோ5 months ago

தனுஷுடன் மோதும் விஜய்சேதுபதி!

வீடியோ5 months ago

கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்!

Trending